நல்வரவு

வணக்கம் !

Saturday, 17 December 2011

தீர்ப்பு

அவசரமாகக் கிளம்பிக் கொண்டு இருந்த நீதிபதி கணேசனை, மகனுடைய அலறல் 'டென்ஷன்'படுத்தியது. தன் அக்காவின் கையிலிருந்த பொம்மை தான் வேண்டும் எனறு அடம் பிடித்து அழுது கொண்டு இருந்தான் அவன்.

"தம்பிக்கு அந்தப் பொம்மையைக் கொடுத்துத் தொலைச்சா தான் என்ன?"
என்று தம் பெண்ணின் முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்தார் அவர்.

"அந்தப் பொம்மை ஒடைஞ்சிருக்குப்பா! ஆணி, தம்பி கையைக் கிழிச்சுடும்னு தான் கொடுக்கலே. அதைப் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க. பரவாயில்ல...கோர்ட்டிலேயும் இது மாதிரி என்ன ஏதுன்னு விசாரிக்காம, யாராவது நல்லவருக்குத் தண்டனை கொடுத்திடாதீங்க!" என்று விசும்பினாள் அவள்.

தம் பெண் முன் குற்றவாளியாகத் தலைகுனிந்து நின்றார் நீதிபதி கணேசன்!
(ஆனந்த விகடனில் எழுதியது)

5 comments:

 1. நீதிபதியாயிருந்தாலும் நிதானம் தவறினால் நல்லவரையும் குற்றவாளியாகக் கருதக்கூடும் என்பதை ஒரு நிமிடத்தில் உணர்த்திய அவருடைய மகளுக்கும், அழகிய கதையாக்கிய தங்களுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 2. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. நன்றாக இருந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் நன்றாக இருந்தது என்ற பாராட்டிற்கும் மிக்க நன்றி சீனு சார்!

   Delete