நல்வரவு

வணக்கம் !

Sunday 1 January 2012

’என் வீட்டுத் தோட்டத்தில்’

              என் வீட்டுத் தோட்டத்தில் அவ்வப்போது எடுத்த 
    புகைப்படங்களின் தொகுப்பு


<       தங்க மஞ்சள் அரளியில்

செடி முழுக்க கொத்து கொத்தாகப்

பூத்து  மஞ்சள் காடோ என

அதிசயிக்க வைக்கும் காட்சி!







அதில் ஒரே ஒரு கொத்து


          மட்டும்     >









<  இரங்கூன் கிரீப்பர் என்று சொல்லப்

படும் இக்கொடி மேலிருந்து சரம்

சரமாகக் கீழே தொங்கும் இரகம்!

வாசலுக்கு அழகு சேர்க்கும்!



                                                                           
இரவில் மலரும் போது                          >

வெண்மையாகவும் பகலில் ரோஸ்

நிறமாகவும் மாறும்.  >                                               







< மரமாக வளரக்கூடிய இதன் பெயர்

தெரியவில்லை ;போன்சாய் போல

தொட்டியில் வளர்த்த போது

மலர்ந்தது இது:








இதில் வெண்ணிறத்தில்

பூக்கும் வகையும் உண்டு.>





>கிறிஸ்துமஸ் மலர் என்று சொல்லப்

படும் இச்செடியைக் கொடைக்

கானலிருந்து கொண்டு வந்தேன்.

டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்

சமயத்தில் மலர்வதால் இப்பெயர்

போலும்!  


இதன் தாவரவியல் பெயர்
EUPHORBIA PULCHERRIMA          

செந்நிற இலைகளுக்கு மத்தியில்  >
 இருப்பது தான் இதன் பூவாம். 
 அழகில்லாத இதன் மலர்களுக்கு
 மகரந்தசேர்க்கை நடைபெற
 வேண்டும் என்பதற்காக செடி பூக்கும் மாதத்தில் பூவைச்  சுற்றியுள்ள இலைகள் மட்டும்  பச்சை நிறத்தை மாற்றிக் கொண்டு இது போல் கண்ணைக்  கவரும்  அழகிய வர்ணங்கள் பூண்டு, வண்டுகளை ஈர்க்குமாம்! என்னே இயற்கையின் விந்தை!

                 

    
<அதிக நீர் தேவைப் படாத கள்ளிச்

செடி வகையைச் சேர்ந்தது இது.



                                                                           > 

பூக்கும் காலத்தில் இச்செடிகளை 
 
வரிசையாக வைத்தால் கண்

கொள்ளாக் காட்சியாயிருக்கும்.

25 comments:

  1. பார்க்கவே ஆனந்தமா இருக்கிறது.
    பூக்கள் வளர்ப்பது ஒரு கலை
    படங்கள் அழகாக இருக்கிறது சகோதரி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கண்ணைக்கவரும் அழகுப் பூங்கொத்துக்கள். படங்களே பார்க்க அற்புதமாயிருக்கின்றனவே... நேரில் எவ்வளவு பிரமாதமாயிருக்கும்? பாராட்டுகள்.

    மூன்றாவது வகைப்பூ ஆஸ்திரேலியத் தாவர வகையைச் சார்ந்தது. Frangipani என்பார்கள். Plumeria Quandamooka என்பது இதன் தாவரவியல் பெயர் என்று அறிகிறேன்.

    நான்காவது வகைச் செடிகளை இங்கு கிறிஸ்துமஸ் சமயங்களில் கடைகளில் சிறிய சட்டிகளில் விற்கிறார்கள். உணவு மேசைகளில் வைக்க ஏதுவானது என்ற விளம்பரத்துடன்! பார்க்கவே கொள்ளை அழகு.

    பகிர்வுக்கு மிகவும் நன்றி..

    ReplyDelete
  3. "பார்க்கவே ஆனந்தமா இருக்கிறது.
    பூக்கள் வளர்ப்பது ஒரு கலை
    படங்கள் அழகாக இருக்கிறது சகோதரி.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"
    என் மலர்களை ரசித்தமைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கும் மிக்க நன்றி மகேந்திரன் சார்.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

    ReplyDelete
  4. அன்பு கீதா,
    மூன்றாவது வகைப்பூவின் தாயகத்தையும் தாவரவியல் பெயரையும் தெரிவித்ததற்கு மிக்க நன்றி.
    பாராட்டுக்கு நன்றி கீதா!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்து!

    ReplyDelete
  6. Thanks for sending me the link Akka. Arun has done a great job !!! I have just started reading through the posts - enjoying your experiences overseas greatly :) The latest one on flowers has got some really nice pictures - I am glad you are able to showcase your passion for gardening and plants as well through your posts. Looking forward to reading more.

    Once again hope this year brings you the peace and happiness you deserve.

    Anbudan,
    Suja.

    ReplyDelete
  7. பூக்கள் என்றாலே ஒரு ஆனந்தம்தான்.பக்கத்திலிருந்து தொட்டு ரசிக்கும்போது எத்தனை சந்தோஷம் !

    ReplyDelete
  8. டியர் சுஜா,

    பின்னூட்டத்திற்கும், புத்தாண்டு வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. ஆம் ஹேமா. பூக்கள் என்றாலே ஆனந்தம் தான். அதிலும் நாம் வைத்து வளர்த்த செடியில் பூ என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஹேமா.

    ReplyDelete
  10. புன்னகைபூக்கும் பூக்கள் பக்கத்தில்போகும்போதே தொற்றிக்கொள்ளும் பூரிப்பு உதட்டிலும் உள்ளத்திலும்..

    அருமையான படங்கள். வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மலிக்கா.

      Delete
  11. பசுமையே இல்லப் பனிமலர்களே
    அழகும் மலர்ச்சியும் ஆனந்தம் சேர்க்கட்டும்..

    ReplyDelete
    Replies
    1. ஆம் மேடம். சோர்வுறும் மனதிற்கு அவ்வப்போது உற்சாகமும் ஆனந்தமும் அளிப்பது இம்மலர்களே. தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

      Delete
  12. உள்ளம் கொள்ளை கொண்ட மலர்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete
  13. அணிவகுக்கும் மலர்கள் கண்காட்சி அழகு!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் உளம் நிறைந்த நன்றி!

      Delete
  14. முதல் பூவை இலங்கையில் பொன்னரளி என்பர். கோவில்கள் தோறும் இருக்கும். எங்கள் ஊர்க் கோவிலில் உள்ளமரம் சுமார் 80 வருடம் ஆகிறது. மஞ்சள் அரளியும் உண்டு. அரளியை விட அதன் மரமும் பூவும் வித்தியாசமானது. ஒடித்தால் பால் வடியும்.
    இந்த 3 படத்திலுள்ள பூவை இலங்கையில் தேமா என்போம். மஞ்சள்,வெள்ளை, ரோஸ், கிறீம் நிறங்களில் உள்ளது. பொலினேசியாவில் இம்மலர் மிகப் பிரபலம். அங்குள்ள மக்கள்
    நாளாந்தம் கொண்டையில், காதில், மாலையாகத் தொடுத்து அணியும் பழக்கமுடையவர்கள். நறு மணம் மிக்கது. வாசனைத் திரவிய உற்பத்தியில் இதன் எண்ணை பெரும் பங்கு வகுக்கிறது. இப்பூவை தேங்காய் எண்ணையில் காச்சிய வாசனை எண்ணை , பொலினேசியத் தீவுகளில் நாம் எள் நெய்யை தலை, உடலுக்குப் பூசப் பயன்படுத்துவதுபோல், பயன் படுத்துவதை ஓர் விபரணச் சித்திரத்தில் பார்த்தேன்.
    இது பெரிய மரமாக வளரும் இப்போ பொன்சாயாகவும் கிடைக்கிறது. இதன் ஆங்கிலப் பெயர்- frangipani.
    நத்தார் காலங்களில் அடுத்த மரம் அந்தச் செந்நிற இலைக்காக விற்பார்கள். அந்த மாதத்தில் தான் அதன் இளமிலை சிவப்பாகவிருக்கும்.
    கடைசிப்பூ, பல நிறங்களில் உண்டு. கள்ளி வகையே! உங்கள் செடி அழகாகப் பூத்துள்ளது.
    என்னிடமுள்ளது. அசையுதேயில்லை.
    எனக்கும் பூக்கள் பிடிக்கும். என் மாடம் இப்போ கூத்துக்குலுங்குகிறது. கோடையெனில்
    மாடம் நிறைந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. மலரின் பெயர் தேமா என்றறிந்து வியப்பு. யாப்பிலக்கணத்தில் தேமா, புளிமா என்று படித்திருக்கிறேன். தேமா என்றால் இனிப்பான மாங்காய் என்று பொருள் என நினைக்கிறேன். இது ஒரு பூவின் பெயராகவும் பயன்படுதலை இன்று தான் தெரிந்து கொண்டேன். இதன் எண்ணெயை வாசனை மிக்கது; தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பயன்படுத்துவார்கள் என்பது எனக்குப் புது செய்தி. பிரான்கிபானி என்று அதன் ஆங்கிலப் பெயரைக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி. நத்தார் காலங்களில் என்றால் என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியவில்லை. குளிர் காலமா? உங்கள் தோட்டத்திலும் மலர்கள் உண்டு என்று தெரிந்தவுடன் உங்கள் வலைப்பூவுக்குப் போய் மலர்கள் பற்றிய பதிவினைப் பார்த்தேன். இன்னும் பதிவுகள் இருந்தால் இணைப்புக் கொடுங்கள். பூக்கள் என்றால் எனக்குப் பிரியம் அதிகம். பொன்னரளி என்ற சொல்லும் மிகவும் அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது. மிகவும் நன்றி யோகன்!

      Delete
  15. தங்கள் வீட்டில் பூத்த பூக்களின் புகைப்படங்கள் அத்துனையும் அருமை.
    தங்க நிற அரலிப்பூ சாமிக்கு வைத்தால் நல்லா படிப்பு வரும் என்பார்கள்,
    முன்றாவதா உள்ள பூக்கு பெயர் தெரியாது எங்கள் வீட்டில் வெள்ளைக் கலர் உள்ளது, மரம் போல் வளரும். தங்கள் பதிவில் பார்த்ததும் பெயர் தெரியலாம் என நினைத்தேன். அப்புறம் அந்த இலைப்பூ அருமை. உண்மைதான் இயற்கை விந்தை நிறைந்ததது. சூப்பர்ம்மா.

    ReplyDelete
    Replies
    1. மூன்றாவது பூவின் பெயர் ஆங்கிலத்தில் பிராங்கிபானி (Frangipani) யோகன் (பாரீஸ்) அவர்கள் மூலம் தெரிந்து கொண்ட விபரமிது. இலங்கையில் தேமா என்பார்களாம். வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மகேஸ்வரி!

      Delete
  16. நத்தார் காலம் என்பது கிருஸ்மஸ் காலம், நத்தல் என்றால் பிறப்பு - இந்த நத்தல் எனும் சொல் , போத்துக்கேயரோடு கிருஸ்தவத்துடன் இலங்கையுள் புகுந்து, இலங்கைச் சிங்கள, தமிழ் மொழியுள் வாழ்கிறது..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மீள்வருகைக்கும் நத்தார் பற்றிய விளக்கத்துக்கும் நன்றி யோகன்!

      Delete
  17. மலர்கள் அத்தனையும் அருமை ... கணினியில் சேமித்துக் கொண்டேன்...

    ReplyDelete