நல்வரவு

வணக்கம் !

Wednesday, 1 January 2014

கொற்கை நாவலுக்கு விருது

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஜோ.டி.குருஸ் எழுதிய ‘கொற்கை,’ நாவலுக்குக் கிடைத்துள்ளது.  இது இவர் எழுதிய இரண்டாவது நாவல். 
2004 ஆம் ஆண்டு ஆழி சூழ் உலகு எனும் தமது முதல் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்தார்.  அது தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.  திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமமான உவரியைச் சேர்ந்த இவர், தாம் பிறந்த கிராமத்து மீனவர்களின் வாழ்வை அடிப்படையாக வைத்து முதல் நாவலை எழுதினார்.
இவ்விருதுக்குத் தேர்வானது குறித்து இவரிடம் கேட்கப்பட்ட போது, “கடற்கரை சமுதாயத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்.  இதன் மூலம் சமவெளி சமுதாய மக்களின் பார்வை நீர் தேவதையின் மீது படும் என நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
ஹிந்து நாளேட்டிற்கு அவர் அளித்த பேட்டியில் அவரது அடுத்த நாவல் பற்றிய கேள்விக்கு, “முதல் நாவல் கட்டுமரத்தை மையப்படுத்தியது.  இரண்டாவது நாவல் பாய்மரக்கப்பலோடு தொடர்புடையது.  அடுத்து நான் பெரிய கப்பலில் பயணிக்க விரும்புகிறேன்.  குறிப்பாக என் தொழில் சார்ந்த வணிகக்கப்பல்கள் மற்றும் அவைகளுடன் தொடர்புடைய மனிதர்களைப் பற்றியதாக அது இருக்கும்,” என்று சொல்லியிருக்கிறார். 
கடந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் ‘ஆழ் சூழ் உலகு,’ வாங்கி வைத்திருக்கிறேன்.  ஓராண்டு கழிந்த பின்னும் அதை இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை.  அதை முடித்த பிறகு தான் கொற்கை வாங்க வேண்டும்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள கொற்கை’  1174 பக்கங்களைக் கொண்டது.  நெய்தல் நில மக்களின் நூற்றாண்டு கால வாழ்க்கை வரலாற்றை அலசும் நாவல். 
எந்தவொரு இலக்கிய பின்புலமும் இன்றி, சாதாரண ஒரு கிராமத்தில் தோன்றி மிக உயர்ந்த இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது பெற்று தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கும் ஜோ டி குருஸை பாராட்டி வாழ்த்துவோம்!     


6 comments:

 1. ஜோ.டி.குருஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்!

   Delete
 3. சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் ஜோ.டி.குருஸ் அவர்களுக்கு தமிழ்ச்சமுதாயத்தின் சார்பில் நம் அனைவரின் பாராட்டுகளும் உரித்தாகட்டும். தான் வாழும் கடற்கரை சமுதாயத்தின் வாழ்வியலை அடிப்படையாய்க் கொண்டு எழுதிய நாவல்களை வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன். சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி அக்கா.

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்திற்கு நன்றி கீதா! அடுத்த முறை நீ தமிழகம் வருவதற்குள் அநேகமாக நான் புத்தகத்தை முடித்து உன்னிடம் கொடுத்து விட எண்ணியிருக்கிறேன். முடிந்தால் கொற்கையையும் வாங்கி வைக்கிறேன்.

   Delete
 4. அழகான அருமையான பயனுள்ள கட்டுரை. பாராட்டுக்கள்.

  ReplyDelete