நல்வரவு

வணக்கம் !

Wednesday 5 November 2014

மறக்க மனம் கூடுதில்லையே - சிறுகதை விமர்சனம் - 4

திரு கோபு சார் அவர்கள் நடத்திய விமர்சனப்போட்டியின் நிறைவு விழாவில் நான்காவதாக ஸ்ரீராஜராஜேஸ்வரி விருது ஏற்படுத்தப்பட்டு, மிக அதிகளவில் ஹாட் டிரிக் பரிசு வென்று சாதனை படைத்த நால்வருக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.  இப்பரிசு வென்ற சாதனையாளர்க்குப் பாராட்டுக்கள்! 

மறக்க மனம் கூடுதில்லையே – (ஆசிரியர்:- வை.கோபாலகிருஷ்ணன்)
கதைக்கான இணைப்பு:-



இனி என் விமர்சனம்:-
வாழ்க்கை என்றுமே ஒரு புதிர் தான்.  அனுபவம் தான் நமக்குப் பாடம் கற்பிக்கும் ஆசான்.  ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்துத் தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  கிட்டத்தட்ட வாழ்நாளில் பாதிக்கு மேல் கழித்த பின்னரே, நமக்குக் கிடைத்த பட்டறிவின் மூலம் வாழ்க்கை ஓரளவு நமக்குப் புரிபடத் துவங்குகிறது.

இளமையில் நம்மைக் கவரும் முக்கிய அம்சம் அழகு தான்; ஆனால் முதுமையில் தான், அழகும் இளமையும் ஆரோக்கியமும் சாசுவதமில்லை என்ற உண்மை நமக்கு உறைக்கின்றது.

பெற்றோர் ஏற்கெனவே நம் வயதில் வாழ்ந்து பார்த்தவர்கள் என்பதால் அவர்கள் இந்த உண்மையை அனுபவம் மூலம் உணர்ந்திருக்கிறார்கள்.  அதனால் தான் அழகை விட, நம் குடும்பத்துக்கேற்ற குத்துவிளக்காக பெண் இருக்க வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.  பெண்ணின் பெற்றோர், சமூகத்தில் அவர்கள் குடும்பம் சம்பாதித்துள்ள நல்ல பெயர், பெண்ணின் ஒழுக்கம், வளர்ப்பு முறை இவற்றைப் பார்த்துத் தம் பிள்ளைகளுக்கு முடிவு செய்கின்றனர்.  இளமையில் உடலை மட்டும் அடிப்படையாக வைத்து எழுப்பப்படும் காதல் கோட்டைக்குப் பெரும்பாலான பெற்றோர் எதிரிகளாய் இருப்பது, இக்காரணத்தினால் தான். 

அழகு தேவதையின் அலங்கோல நிலைபற்றியறியும் போது மனம் மிக வருந்தவே செய்கிறது.  அவளது தற்போதைய நிலைமைக்குக் காரணம் என்ன?  ஏன் புத்தி பேதலித்தது என்பதை ஆசிரியர், நம் யூகத்துக்கு விட்டுவிட்டார்.  எல்லாவற்றையும் விலாவாரியாக விவரிக்காமல் சிலவற்றை, வாசகர் யூகத்துக்கு விடுவது தானே, தற்போதைய பாணி!

சாதாரண கார் புரோக்கர் பெண்ணை, அவளது அழகைப் பார்த்துத் தான் பணக்கார கணவன் திருமணம் செய்திருக்க வேண்டும்.  அவளது மனதைப் புரிந்து கொள்ளாமல், புற அழகைப் பார்த்துத் திருமணம் செய்தவன் மோகம் தீர்ந்த பின் அவளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினானோ? 

மிகவும் அழகான மனைவி வாய்க்கப்பெற்ற கணவன்மார்களில் பெரும்பாலோருக்குச் சந்தேகம் கூடப் பிறந்த வியாதியாக இருக்கும்.  பெற்றோர் வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு கார் என்று சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த செல்லக்கிளியைக் காசு கொடுத்து வாங்கி வெளியே யார் கண்ணிலும் படவிடாமல் கூட்டுக்குள் அடைத்தது தான், அவளது புத்தி பேதலிக்கக் காரணமோ?  இப்படியெல்லாம் கதை வாசிப்பவரைச் சிந்திக்க வைப்பதில் வெற்றி பெறுகிறார் ஆசிரியர்.

அவளை இந்த நிலைமையில் பார்த்த பிறகு, நம் மனைவி நல்ல ஆரோக்கியமாக அழகாக இருக்கிறாள்; நம் பெற்றோர் நமக்கு நல்லது தான் செய்திருக்கிறார்கள்; அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்; நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும் எண்ணமே, இக்கதைசொல்லிக்கும் ஏற்படுவதாகக் காட்டியிருப்பது மிகவும் யதார்த்தம்.
தான் விரும்பியவனை மணந்திருந்தால், வறுமையில் உழலாமல் செல்வச்செழிப்பில் மிதந்திருக்கலாம் என்று எண்ணாமல், நல்லவேளை  தன்னைத் திருமணம் செய்திருந்தால் தன் துரதிஷ்டம், இவனைச் சுகப்பட வைக்காமல் கஷ்டப்பட வைத்திருக்கும்; இவன் நன்றாக வாழ வேண்டும்  என்று எண்ணும் ஈரோட்டுக்காரியின் பாத்திரப்படைப்பு தான் எல்லாவற்றையும் விட மிகவும் உன்னதமானது. 
அம்மாவின் மனநிலையைக் காரணம் காட்டிப் பெண்ணை நிராகரிக்காமல் மகனுக்கு மணம் முடிக்க நினைப்பவனாக கதைசொல்லியைப் படைத்திருப்பதில் ஆசிரியரின் மனித நேயம் வெளிப்படுகிறது.   

சிகிச்சையில் அவள் நிச்சயம் குணமடைவாள் என்று நம்பிக்கையுடன் நேர்மறையாக சொல்லிக் கதையை முடித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. 

ஈரோட்டுக்காரி கதை சொல்லியையும்,  மதராஸ்காரியைக் கதாநாயகனும்,  அவளது மகளை இவன் மகனும்,  இவர்களது வாழ்க்கை அனுபவங்களை உணர்வு பூர்வமாக விவரிக்கும் இக்கதையை நாமும், மறக்க மனம் கூடுதில்லை!. 

(வை.கோபு சார் அவர்கள் நடத்திய விமர்சனப்போட்டியில் நடுவர் ஜீ.வீ. அவர்களால் மூன்றாம் பரிசுக்குத் தகுதி பெற்றது)


12 comments:

  1. வணக்கம்
    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்ள்.. மேலும் வெற்றிகள் கிடைக்கட்டும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்!

      Delete
  2. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.

    இந்தத்தங்களின் இன்றைய பதிவு தங்களின் வலைத்தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    நன்றியுடன் கோபு [VGK]

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நிறைவு விழா வேலைகள் தலைக்கு மேல் இருந்தும் தவறாமல் வந்து பின்னூட்டம் இட்டு வாழ்த்துவதற்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  3. //தான் விரும்பியவனை மணந்திருந்தால், வறுமையில் உழலாமல் செல்வச்செழிப்பில் மிதந்திருக்கலாம் என்று எண்ணாமல், நல்லவேளை தன்னைத் திருமணம் செய்திருந்தால் தன் துரதிஷ்டம், இவனைச் சுகப்பட வைக்காமல் கஷ்டப்பட வைத்திருக்கும்; இவன் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணும் ஈரோட்டுக்காரியின் பாத்திரப்படைப்பு தான் எல்லாவற்றையும் விட மிகவும் உன்னதமானது. //

    இவை எனக்கும் பிடித்த, மிக உன்னதமான, மிக உண்மையான. மிகவும் உணர்வு பூர்வமான வரிகள்.

    என் இந்தக்கதையில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் 80% உண்மைச் சம்பவங்களே. என்னால் மிகவும் அனுபவித்து, மிக நுணுக்கமாக எழுதப்பட்டதோர் கதை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கிய நான், இந்த ஈரோட்டுக்காரியை மிக அழகாகச் செதுக்கி விட்டதாகவே பலரும் என்னை என் பழைய பதிவினில் பாராட்டியிருந்தனர்.

    அதனைத் தாங்களும் இங்கு தங்களின் விமர்சனத்தில் ஸ்பெஷலாக எடுத்துச் சொல்லியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் உண்மையாக இருந்ததால் தான், மனதைத் தொட்ட கதாபாத்திரங்களைத் தங்களால் செதுக்க முடிந்தது என்று நினைக்கிறேன். உணர்வு பூர்வமான மனதை நெகிழ வைக்கும் கதை!

      Delete
  4. //அம்மாவின் மனநிலையைக் காரணம் காட்டிப் பெண்ணை நிராகரிக்காமல் மகனுக்கு மணம் முடிக்க நினைப்பவனாக கதைசொல்லியைப் படைத்திருப்பதில் ஆசிரியரின் மனித நேயம் வெளிப்படுகிறது. //

    :)))))

    //சிகிச்சையில் அவள் நிச்சயம் குணமடைவாள் என்று நம்பிக்கையுடன் நேர்மறையாக சொல்லிக் கதையை முடித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.//

    :)))))

    //ஈரோட்டுக்காரி கதை சொல்லியையும், மதராஸ்காரியைக் கதாநாயகனும், அவளது மகளை இவன் மகனும், இவர்களது வாழ்க்கை அனுபவங்களை உணர்வு பூர்வமாக விவரிக்கும் இக்கதையை நாமும், மறக்க மனம் கூடுதில்லை!. //

    :))))) சந்தோஷமான நிறைவான முடிவுடன் விமர்சனத்தை நிறைவு செய்துள்ளீர்கள்.
    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். :)))))

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இங்கு விமர்சனத்தை வெளியிடுவதன் மூலம் கதையைப் பற்றியும் விமர்சனத்தைப் பற்றியும் தங்களின் (கதாசிரியரின்) நேரடி வாக்குமூலத்தைத் தெரிந்து கொள்ள முடிவது பெரிய நன்மை! பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க் நன்றி சார்!

      Delete
  5. //திரு கோபு சார் அவர்கள் நடத்திய விமர்சனப்போட்டியின் நிறைவு விழாவில் நான்காவதாக ஸ்ரீராஜராஜேஸ்வரி விருது ஏற்படுத்தப்பட்டு, மிக அதிகளவில் ஹாட் டிரிக் பரிசு வென்று சாதனை படைத்த நால்வருக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. இப்பரிசு வென்ற சாதனையாளர்க்குப் பாராட்டுக்கள்!
    http://gopu1949.blogspot.in/2014/11/part-4-of-4.html//

    இன்றைய என் பதிவுக்கு நல்லதொரு விளம்பரம் செய்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    நன்றியுடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. பதிவுலகின் பிதாமகன் என்று எல்லோரும் உங்களைப் பாராட்டும் போது என் மூலம் கிடைக்கும் விளம்பரத்துக்குத்(!?) தாங்கள் நன்றி கூறுவது, உங்களது தன்னடக்கத்தையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. மிகவும் நன்றி சார்!

      Delete
  6. சிறப்பான விமர்சனம்.பரிசுகள் வென்றதற்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. தங்களது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மேடம்!

      Delete