நல்வரவு

வணக்கம் !

Friday, 7 November 2014

‘எங்கெங்கும்.... எப்போதும்... என்னோடு!,’ சிறுகதை விமர்சனம்திரு. கோபு சார் நடத்திய விமர்சனப்போட்டி நிறைவுவிழாவின் ஆறாம் நாளான நேற்று, போட்டியில் வெற்றிபெற்றோர் பற்றிய புள்ளிவிபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.  இப்பட்டியலில் திருமதி கீதா மதிவாணன் 32 பரிசுகள் பெற்று முதலிடத்திலும், திருமதி இராஜேஸ்வரி மேடம் 28 பரிசுகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.  இருவருக்கும் என் பாராட்டுக்கள்!

மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் வெற்றியாளர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இணைப்பு:-

என் பெயரும் இப்பட்டியலில் இடம்பெறக் காரணமான திரு கோபு சார் அவர்களுக்கும் நடுவர் அவர்களுக்கும் என் நன்றி.
 
எங்கெங்கும்...எப்போதும்…. என்னோடு!’ கதைக்கான இணைப்பு:-
(ஆசிரியர்:- திரு வை.கோபாலகிருஷ்ணன்)

இனி என் விமர்சனம்:-
மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் எடையைக் குறைக்க எண்ணி நடை பயிலத்துவங்கும் மூத்தகுடிமகன் ஒருவரின் அனுபவங்கள் நகைச்சுவை இழையோடச் சொல்லப்பட்டு சட்டென்று இறுதியில் சோகத்தில் முடிந்த கதை.  துன்பத்தில் முடிந்தாலும் கைத்தடியைப் பயன்படுத்தி நேர்மறையாக முடித்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது!

நொறுக்குத்தீனிகளுடன் கரமுராவென்று உறவாடுவது, ‘வேகமாக நடக்க ஒட்டடை குச்சியோ ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா?’, ‘நடக்கச் சொல்கிறார், நடக்கற காரியமா அது?’ போன்றவை ஆசிரியரின் நகைச்சுவை உணர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்! 
 
வாழ்க்கைப் பயணத்தில் சிலரைப் பார்த்த மாத்திரத்தில் நமக்குப் பிடித்துவிடும்.  காலங்காலமாய்ப் பழகியது போன்ற அந்நியோன்யம் ஏற்படும்.  அது போல் வேறு சிலரைக் கண்டால், முதல் சந்திப்பிலேயே அவரை வெறுப்போம்.  “என்னன்னு தெரியலை; அவரைப் பார்த்தாலே எனக்குப் புடிக்கல,” என்போம்.  இதற்கு அறிவியல் ரீதியான காரணம் சொல்ல முடியாது. உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம்.

இக்கதையிலும் அப்படித்தான், முதல் சந்திப்பிலேயே 88 வயது முதியவருக்கும் 61 வயது நாயகனுக்கும் சிநேகம் ஏற்பட்டு இருவருமே நீண்ட நாட்கள் பழகியவர்கள் போல் உரையாடி மகிழ்கின்றனர்.   இரயில் சிநேகம் போலன்றி, தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்ற ஆவல், இருவருக்குள்ளும் ஏற்படுகின்றது.

மற்ற நாட்களில் நடைபயிற்சி செய்யாமல் நொண்டிக்காரணம் சொல்லிவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கும் கதாநாயகன், முதியவரின் இறுதி ஊர்வலம் நடக்கும் நாளில்,  சரியான நேரத்தில் எதிரே செல்ல என்ன காரணம்?  இது யதேச்சையாக நடந்ததா?  அல்லது அவரது உள்ளுணர்வு அவரைச்  சந்திக்க உந்திற்றா?  நிஜ வாழ்விலும் இது போன்ற உள்ளுணர்வு சம்பவங்கள், சில சமயம் எதிர்பாராமல் நிகழ்ந்து, நம்மை வியக்க வைப்பதுண்டு.

தள்ளாத வயதிலும் நாளிதழ்கள் வாசித்து நாட்டுநடப்பை விரல் நுனியில் வைத்திருக்கும் முதியவர், கதை நாயகனை மட்டுமல்ல, வாசகராகிய நம்மையும் கவர்ந்திழுப்பதில் வியப்பொன்றுமில்லை.  மரணத்தையும் அமைதியாக சிரித்த முகத்துடன் எதிர் கொள்கிறார்!

88 வயதிலும் தம் வாழ்வின் இறுதிநாள் பற்றி எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால், சாகப்போகும் தறுவாயில் வேலைப்பாடுள்ள அழகிய புது கைத்தடியை விலை கொடுத்து வாங்கியிருப்பார்? அவரின் அந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான், அவரது கைத்தடி மூலம் சோம்பேறியான நம் கதை நாயகனையும் நடக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அளித்து தொடர்ந்து நடக்க வைக்கிறது.   எங்கேயும், எப்போதும் அவருடன் தொடர்ந்து பயணம் செய்து புத்துணர்வு அளிக்கிறது.

எந்த வயதிலும் மனமிருந்தால் மார்க்கமுண்டு, தளர்ச்சி உடலுக்குத் தானே தவிர மனதுக்கில்லை, மனதை இளமையாக வைத்திருந்தால் முதுமையிலும் சுறுசுறுப்பாக இயங்கலாம் என்கிற உண்மையை இக்கதாபாத்திரத்தின் மூலம் வாசகர் மனதில் பதிய வைத்து, தன்னம்பிக்கையளித்துப் புத்துணர்வு ஊட்டுவதில் கதாசிரியர் வெற்றி பெறுகிறார்..  

அக்காலத்தில் திண்ணையில் வழிப்போக்கர்கள் அமர்ந்து ஓய்வெடுத்ததையும், சுமைதூக்குவோர் சுமையை இறக்கிவைத்து  இளைப்பாறியதையும், இக்காலத்தில் தெருவில் நடைபயிலுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோடு ஒப்பிடுவது மட்டுமின்றி ,  முதியவர்களின் உடல்+மனம் சார்ந்த பிரச்சினைகளையும் கோடிட்டுக் காட்டி வாசகர்களின் பாராட்டைப் பெறுகிறார் வை.கோபு சார்!

(நடுவர் ஜீ.வீ அவர்களால் இரண்டாம் பரிசுக்குத் தேர்வானது)


19 comments:

 1. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.

  இந்தத்தங்களின் இன்றைய பதிவு தங்களின் வலைத்தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

  தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

  நன்றியுடன் கோபு [VGK]

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வழக்கம் போல உடனே வந்து பாராட்டும் வாழ்த்தும் சொன்ன உங்களுக்கு நன்றி சார்!

   Delete
 2. //திரு. கோபு சார் நடத்திய விமர்சனப்போட்டியின் ஐந்தாம் நாளான நேற்று, போட்டியில் வெற்றிபெற்றோர் பற்றிய புள்ளிவிபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. //

  நிறைவுத் திருவிழாவின் ஆறாம் நாள் கொண்டாட்டங்கள் பற்றி அழகாக இங்கு எடுத்துச் சொல்லியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  //இப்பட்டியலில் திருமதி கீதா மதிவாணன் 32 பரிசுகள் பெற்று முதலிடத்திலும், திருமதி இராஜேஸ்வரி மேடம் 28 பரிசுகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இருவருக்கும் என் பாராட்டுக்கள்!//

  இருவரும் மிகக்கடுமையாக உழைத்து, இந்த முதல் இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். தங்களுடன் சேர்ந்து நானும் இங்கு அவர்கள் இருவரையும் மீண்டும் பாராட்டிக்கொள்கிறேன். :)

  அதுவும் திருமதி கீதா மேடம் அவர்கள் நடுவில் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டும்கூட, தொடர் வெற்றிகளாக வென்று குவித்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கதும் பாராட்டத்தக்கதும்தான்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. நிறைவு விழாவின் ஐந்தாம் நாள் என முதல் பத்தியில் தவறுதலாகச் சொல்லியிருந்தேன். உங்கள் பதிலின் மூலம் அதையும் ஆறாம் நாள் என சரிசெய்துவிட்டேன். தொடர் வெற்றிகள் பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. உற்சாகத்துடன் கலந்துகொண்டு பரிசுகளை வென்ற இருவருக்கும் மீண்டும் என் பாராட்டுக்கள்!

   Delete
 3. //என் பெயரும் இப்பட்டியலில் இடம்பெறக் காரணமான திரு கோபு சார் அவர்களுக்கும் நடுவர் அவர்களுக்கும் என் நன்றி.//

  அடடா, இதெல்லாம் தங்களின் மிக அருமையான எழுத்துக்களுக்குக் கிடைத்ததோர் அங்கீகாரங்கள் மட்டுமே. JUST ஒரு சின்னத் தூண்டுதலாக இருந்தது மட்டுமே இதில் என் வேலையாகும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தொடர்ச்சியாக நீங்கள் கொடுத்த உற்சாகமும் தூண்டுகோலும் இல்லாதிருந்தால் நான் எழுதியிருப்பேனா என்பது சந்தேகம் தான். அதனால் உங்களுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும்.

   Delete
 4. //நொறுக்குத்தீனிகளுடன் கரமுராவென்று உறவாடுவது, ‘வேகமாக நடக்க ஒட்டடை குச்சியோ ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா?’, ‘நடக்கச் சொல்கிறார், நடக்கற காரியமா அது?’ போன்றவை ஆசிரியரின் நகைச்சுவை உணர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்! //

  நகைச்சுவை உணர்வுடன் கூடிய வரிகளை ரஸித்துக் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையாக எழுதுவது கடினம். ஆனால் இந்தத் திறமை உங்களுக்கு நன்கு கைவரப்பெற்றிருக்கிறது. இக்கதை துவக்கத்தில் நகைச்சுவை இழையோட நடைபயிற்சி மேற்கொள்ளும் கதாநாயகனின் அனுபவங்களை விவரித்திருப்பீர்கள். நான் மிகவும் ரசித்துப்படித்தேன். ஆனால் விரிவஞ்சி ஒன்றிரண்டு இடங்களை மட்டுமே என் விமர்சனத்தில் சுட்டிக்காட்டினேன்.

   Delete
  2. Kalayarassy G 7 November 2014 09:17

   //நகைச்சுவையாக எழுதுவது கடினம். ஆனால் இந்தத் திறமை உங்களுக்கு நன்கு கைவரப்பெற்றிருக்கிறது.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //இக்கதை துவக்கத்தில் நகைச்சுவை இழையோட நடைபயிற்சி மேற்கொள்ளும் கதாநாயகனின் அனுபவங்களை விவரித்திருப்பீர்கள். நான் மிகவும் ரசித்துப்படித்தேன்.//

   Thanks a Lot, Madam.

   Delete
 5. //வாழ்க்கைப் பயணத்தில் சிலரைப் பார்த்த மாத்திரத்தில் நமக்குப் பிடித்துவிடும். காலங்காலமாய்ப் பழகியது போன்ற அந்நியோன்யம் ஏற்படும். அது போல் வேறு சிலரைக் கண்டால், முதல் சந்திப்பிலேயே அவரை வெறுப்போம். “என்னன்னு தெரியலை; அவரைப் பார்த்தாலே எனக்குப் புடிக்கல,” என்போம். //

  மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

  அதுபோலவே சிலரை நேரில் பார்க்காவிட்டாலும்கூட அவர்களின் எழுத்துக்கள் மூலம், தரமான படைப்புகள் மூலம் காந்தம்போல கவரப்பட்டு எனக்கு அவர்கள் மேல் ஓர் Special Attachment ஏற்பட்டு விடுவதும் உண்டு. சிலரின் ஆக்கங்களைப் பார்த்தாலோ படித்தாலோ ஏனோ பிடிக்காமல் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுப்போவதும் உண்டு.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள் என்ற கருத்துக்கு மிக்க நன்றி சார். . நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒருவரது எழுத்தை வைத்து அவர் மீது அன்பு உண்டாவதும் வெறுப்பு ஏற்படுவதும் நடக்க கூடியதே.

   Delete
 6. //88 வயதிலும் தம் வாழ்வின் இறுதிநாள் பற்றி எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால், சாகப்போகும் தறுவாயில் வேலைப்பாடுள்ள அழகிய புது கைத்தடியை விலை கொடுத்து வாங்கியிருப்பார்?//

  :)))))

  //அவரின் அந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான், அவரது கைத்தடி மூலம் சோம்பேறியான நம் கதை நாயகனையும் நடக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அளித்து தொடர்ந்து நடக்க வைக்கிறது. //

  அருமை.

  //எந்த வயதிலும் மனமிருந்தால் மார்க்கமுண்டு, தளர்ச்சி உடலுக்குத் தானே தவிர மனதுக்கில்லை, மனதை இளமையாக வைத்திருந்தால் முதுமையிலும் சுறுசுறுப்பாக இயங்கலாம் என்கிற உண்மையை இக்கதாபாத்திரத்தின் மூலம் வாசகர் மனதில் பதிய வைத்து, தன்னம்பிக்கையளித்துப் புத்துணர்வு ஊட்டுவதில் கதாசிரியர் வெற்றி பெறுகிறார்.. //

  சந்தோஷம்.

  //அக்காலத்தில் திண்ணையில் வழிப்போக்கர்கள் அமர்ந்து ஓய்வெடுத்ததையும், சுமைதூக்குவோர் சுமையை இறக்கிவைத்து இளைப்பாறியதையும், இக்காலத்தில் தெருவில் நடைபயிலுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோடு ஒப்பிடுவது மட்டுமின்றி , முதியவர்களின் உடல்+மனம் சார்ந்த பிரச்சினைகளையும் கோடிட்டுக் காட்டி வாசகர்களின் பாராட்டைப் பெறுகிறார் வை.கோபு சார்!//

  மிக்க மகிழ்ச்சி, மேடம்.

  நன்றியுடன் கோபு

  ReplyDelete
  Replies
  1. எந்த வயதிலும் மனமிருந்தால் மார்க்கமுண்டு, தளர்ச்சி உடலுக்குத் தானே தவிர மனதுக்கில்லை, மனதை இளமையாக வைத்திருந்தால் முதுமையிலும் சுறுசுறுப்பாக இயங்கலாம் என்கிற உண்மையை இக்கதாபாத்திரத்தின் மூலம் வாசகர் மனதில் பதிய வைத்து, தன்னம்பிக்கையளித்துப் புத்துணர்வு ஊட்டுவதில் கதாசிரியர் வெற்றி பெறுகிறார்.. //
   இக்கதை மூலமாக மட்டுமின்றி விமர்சனப்போட்டியை வெற்றிகரமாக நடத்திக் காட்டி மற்றவர்க்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியதன் மூலமும் மேலே குறிப்பிட்டுள்ள உண்மைகளை எல்லோர் மனதிலும் பதிய வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கோபு சார்!

   Delete
  2. //இக்கதை மூலமாக மட்டுமின்றி விமர்சனப்போட்டியை வெற்றிகரமாக நடத்திக் காட்டி மற்றவர்க்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியதன் மூலமும் மேலே குறிப்பிட்டுள்ள உண்மைகளை எல்லோர் மனதிலும் பதிய வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கோபு சார்!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   - கோபு

   Delete
 7. உள்ளுணர்வின் உந்தலைக் குறிப்பிட்டு முதியவர்கள் இருவருக்குமான சிநேகத்தின் ஆழத்தை வெளிப்படுத்திய அழகான விமர்சனம் என்று கோபு சாரின் வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தேன். அதையே இங்கும் குறிப்பிடுகிறேன். நகைச்சுவையான வரிகளையும் அழகாக மேற்கோள் காட்டி விமர்சனத்தை சிறப்பாக எழுதியுள்ளீர்கள். பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த பாராட்டுகள் அக்கா.

  ReplyDelete
  Replies
  1. விமர்சன வித்தகி என்ற பட்டப்பெயருக்கு ஏற்ப 32 பரிசுகள் பெற்றுச் சாதனை படைத்திருக்கும் உனக்கு என் பாராட்டுக்கள் கீதா! உன் பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

   Delete