நல்வரவு

வணக்கம் !

Sunday 25 January 2015

இன்று முதல் ஒரு வாரம் வலைச்சர ஆசிரியையாக நான்!

எல்லோருக்கும் வணக்கம்! 26/01/2015 முதல் 01/02/2015 வரை வலைச்சரம் ஆசிரியப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன்! 

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வலையுலகுக்குத்
தெரிந்தும் தெரியாத பதிவர் நான்….

இருந்தும் வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்புக்கு என்னைப் பரிந்துரை செய்த திரு.கோபு சாருக்கும், அதையேற்று நியமனம் செய்த திரு. சீனா சாருக்கும், திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

வலைப்பூ துவங்கிய புதிதில்,  விருதுகள் கொடுத்து ஊக்கப்படுத்திய கீத மஞ்சரிக்கும், யுவராணி தமிழரசனுக்கும் இச்சமயத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

என் சாதனை என்று பெருமையாகச் சொல்லக்கூடிய செய்தி எதுவுமில்லை.  அரசு வங்கியொன்றில் சீனியர் எழுத்தராகப் பணியாற்றும் எனக்குப் பிடித்த விஷயங்கள், வாசிப்பும் எழுத்தும். 

வாசிப்புப் பழக்கத்துக்கு ஆசான் அப்பா.  சிறுவயதிலிருந்தே எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், பிரபலமான வார இதழ்களுக்குக் கதைகள் எழுதியனுப்புவேன்.  ஆனால் அவை எல்லாமே ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்,’ என்ற முத்திரையுடன், போன வேகத்தில் திரும்பி வந்தன.

என் தம்பி ‘முத்துச்சிப்பி’ என்ற பெயரில், சில மாதங்கள் கையெழுத்து இதழ் நடத்தினான்.  அதில் கதை, கவிதை, நகைச்சுவை துணுக்கு என எல்லாமும் எழுதி, அதற்கேற்ற படங்களையும் அவனே வரைவான். நானும் அதில் எழுதினேன்.  எங்களது படைப்புக்களைப் பற்றி, ‘ஆகா பிரமாதம்!’ என்று நாங்களே வாசகர் கடிதமும் எழுதிக் கொள்வோம்!

பெரியவர்களானதும், அப்பாவை ஆசிரியராகப் போட்டு வார இதழ் துவங்கி நடத்த வேண்டும் என்பது எங்கள் கனவாக இருந்தது.  அப்போது தானே நம் எழுத்து முழுவதையும் பிரசுரிக்க முடியும்?  அக்கனவு காலங்கடந்து  தற்காலத்தில் இணையம் மூலம் மெய்ப்பட்டிருக்கிறது!

12 comments:

  1. அசத்துங்கள்....

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. குடியரசு தின வாழ்த்துக்கு நன்றி தனபாலன் சார்!

      Delete
  2. ஆஹா ! வலைச்சரத்திற்கு வரவேற்கிறோம் அக்கா ! தங்களின் வாசகர் கடிதம் மேட்டர் நல்லா இருக்கே ! இனிமே நானும் அதையே பாலோவ் பண்ணிடவேண்டியதுதான் .

    இனிய குடியரசுத்திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதல் வருகைக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. வணக்கம்
    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்...
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வாங்க ரூபன்! தங்களது வாழ்த்துக்கு இனிய நன்றி!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அம்மா...
    வலைச்சரத்தில் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி குமார்!

      Delete
  6. தங்களின் வலைதள ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துகள். மலர்ந்தும் மலராத பாதி மலர் போல, அழகான வரிகள். நாங்கள் இப்போ அறிந்துக்கொண்டோம் அல்லவா?.இனி வருகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி!

      Delete
  7. வாரம் முழுதும் வலைச்சரத்தினை வண்ணமயமாகத் தொகுத்து வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..

    வாழ்க நலம்!

    ReplyDelete
    Replies
    1. வாரமுழுதும் தொடர்ந்து வந்து தாங்கள் அளித்த ஊக்கத்துக்கு மனம் நிறைந்த நன்றி சார்!

      Delete