நல்வரவு

வணக்கம் !

Friday 23 October 2015

என் பார்வையில் புதுகை பதிவர் விழா - 1



நான் கலந்து கொண்ட முதல் பதிவர் விழா இதுவே.  இவ்விழா அறிவிப்பை அண்ணன் முத்துநிலவன் அவர்கள் வெளியிட்டவுடனே, இதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கேற்பட்டது. 

பதிவர் விழா பற்றித் தினந்தினம் வெளியான புதுப்புது அறிவிப்புகள் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தின.  புதுகை பதிவர் விழாவும் தமிழ்நாடு அரசு தமிழக இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய மின் இலக்கியப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.  பெண்ணைச் சமூகம் நடத்தும் விதம் குறித்து கட்டுரை ஒன்றும் சுற்றுச்சுழல் வகைமையில் இரண்டும் எழுதியனுப்பினேன்.  குறுகிய காலத்தில் பதிவர்களிடமிருந்து மளமளவென பதிவுகள் வந்து குவிந்ததை  இவ்விழாவின் முக்கிய சாதனையாக கருதுகிறேன்.  இப்போட்டியின் பயனால் நல்ல பல ஆக்கங்கள் தமிழுக்குக் கிடைத்திருக்கின்றன.  இவை மின்னூலாகத் தொகுக்கப்படுவது கூடுதல் சிறப்பு!

இறுதியாக விமர்சனப்போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது.  இதற்கான பரிசுத் தொகையைக் கொடுத்தவர், தம் பெயரைக் கூட வெளியிட விரும்பவில்லை. இக்காலத்திலும் இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்! 

இதன் பெயர் விமர்சனப்போட்டி என்றிருக்கக் கூடாது; பரிசு கணிப்புப் போட்டி என்றிருக்கவேண்டும்; ஏனெனில் இதில் கலந்து கொள்கிறவர்கள் விமர்சனம் ஏதும் செய்யவில்லை; முடிவைத் தான் கணித்து எழுதுகிறார்கள் என்று சிலர் எழுதியது சரி என்பது தான் என் கருத்தும்.  எல்லாரையும் எல்லாப்பதிவுகளையும் வாசிக்க ஊக்குவிக்க வேண்டும் என்பது தான் இப்போட்டியின் முக்கிய நோக்கம்.  ஆனால் இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, எதிர்பார்த்த அளவு இல்லை. 

என் கட்டுரைகளுக்குப் பரிசு கிடைக்காவிட்டாலும், இப்போட்டியில் எனக்கு இரண்டாமிடம் கிடைத்தது.  என்னைப் பொறுத்தவரை இது எளிதாக  இல்லை.  அத்தனை பதிவுகளையும் ஒன்று விடாமல் வாசித்து ஒவ்வொன்றிலும் மூன்றை மட்டும் வடிகட்டித் தேர்ந்தெடுப்பது, மிகவும் சிரமமாக இருந்தது.  இப்போட்டியில் கலந்து கொண்டதற்கும், நடுநிலைமையிலிருந்து பதிவுகளின் சாதக பாதகங்களை அலசுவதற்கும் திரு வை.கோபு சார் நடத்திய விமர்சனப்போட்டி பயிற்சிப்பட்டறை மூலம் கிடைத்த அனுபவம் மிகவும் உதவியது என்பதை மறுப்பதற்கில்லை.  மேலும் பல புதிய எழுத்தாளுமைகளை அறிந்து கொள்ள இப்போட்டி எனக்கு உதவியது. 

இப்போட்டியில் யாருமே வெற்றி பெற முடியாது; இதில் இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு எப்படிக் கொடுக்கலாம்? இதற்குப் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் என்னென்ன என்றெல்லாம் கேட்டுச் சிலர் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மாதத்துக்கு மேல் ஊண் உறக்கமின்றி உழைத்துப் பதிவர் விழா நடத்தியதோடல்லாமல், இவர்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தலைவலி விழாக்குழுவினர்க்கு!   இதே நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் விழா நடத்துபவர்கள், இது போல போட்டிகளை நடத்தவே யோசிப்பார்கள்!  அவ்வளவு ஏன்?  பதிவர் விழா நடத்தவே யாரும் முன்வருவார்களா என்பது சந்தேகம் தான்.


இவ்விழாவின் அடுத்த முக்கிய சாதனையாக நான் கருதுவது உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு.  முதல்முறையாக 331 பதிவர்களின் வலைப்பூ முகவரிகளைக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.  இதற்காக வலைப்பூ குறிப்புகளை அனுப்பச் சொல்லி பலமுறை வேண்டுகோள் விடுத்தார்கள்; தேதி நீட்டிப்புச் செய்தார்கள். 

பின்னர் மிகக்குறுகிய காலத்தில் இது வடிவமைக்கப்பட்டு அழகான அட்டைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.  சிலர் நான்கு பக்க அளவில் குறிப்பெழுதியனுப்ப, வேறு சிலரோ ஒரு வரி கூட எழுதாமல் வலைப்பூ பெயரை மட்டும் அனுப்பினார்களாம்.  எனவே விபரங்களை ஒரே மாதிரியாகத் தொகுக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாகச் சிலர் தந்த குறிப்புகளை மிகவும் சுருக்கி வெளியிட நேர்ந்தமைக்காக விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் முத்துநிலவன் அவர்கள் முன்னுரையில் வருத்தம் வேறு வெளியிட்டிருக்கிறார். அப்படியிருந்தும் பதிவர் பெயரை வரிசையில் கொடுத்திருக்கலாம்; இப்படிச் செய்திருக்கலாம்; அப்படி வெளியிட்டிருக்கலாம் என்று குறைகள் சொல்லப்படுகின்றன. 

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
என்ற குறள் தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

பதிவர் விபரங்களைத் தொகுக்கும் முதல் முயற்சி இது; இதில் சில குறைகள் இருக்கலாம்.  அடுத்தடுத்துக் தொகுக்கப்பெறும் கையேட்டுக்கு இது முன்னோடி என்ற வகையில், இது மாபெரும் சாதனை என்பதில் சந்தேகமில்லை.    

நான் சந்தித்த பதிவர்கள் பற்றி அடுத்த பதிவில்,

நன்றியுடன்
ஞா.கலையரசி
(படம் நன்றி இணையம்)


64 comments:

  1. அன்புச் சகோதரிக்கு வணக்கம். உங்களுக்கும் புதுக்கோட்டைக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்கும்போல..தங்கையே மகிழ்ச்சி மிகுதியில் இப்படி நகைச்சுவை கருதிக்குறிப்பிட்டேன்.மகாகவி பாரதியை வீட்டு முகப்பில் மட்டுமின்றி, நெஞ்சாங்கூட்டின் நினைவுகளிலும் ஏந்தியிருக்கும் எனக்கு இந்த ஜென்மத்தில் மட்டும்தான் நம்பிக்கை! அப்படிக் குறிப்பிட்டது ஏனெனில், புதுகை விழாதான் நீங்கள் கலந்துகொண்ட முதல் விழா என்பது மட்டுமல்ல.. விழாப்பற்றிய அறிவிப்பு வ்ந்த உடனே வெளியூரிலிருந்து வங்கிவழி வந்த முதல் தொகை உங்களுடையதுதான். பிறகும் பலநண்பர்களிடம் வாங்கிவாங்கி (நீங்கள் வங்கியில் இருப்பதால் வ ங்கியில் இருந்துகொண்டே “கால்“வாங்கி வாங்கி) தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தீர்கள். பிறகு நூல்விற்பனைக்கும் தொகை அனுப்பினீர்கள் அதுமட்டுமின்றி அவ்வப்போது போட்டிகள், பதிவுகளில் பங்குகொண்டும் உற்சாகப்படுத்தினீர்கள்.
    இப்போது, நாங்கள் (விழாக்குழுவினர்) சிலசெய்திகளை எப்படி அணுகி, இதுபோலும் வினாக்களுக்கு விடைதருவோமோ அப்படியே பதில் தந்திருக்கிறீர்களே! என்று நன்றியுடனும் மிகுந்த வியப்புடனும் பார்க்கிறோம். உங்களின் சரியான புரிதல் அதற்கேற்ப அசராது செயல்படுதல் எனும் உணர்வு ஒற்றுமையால் எங்கள் விழாக்குழு சார்பாக நன்றியை அல்ல,அன்பான தோழமைத்தொடர்பைத் தெரிவித்து மகிழ்கிறோம் சகோதரி. உங்களுக்கு எங்கள் சகோதர வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு அண்ணனுக்கு வணக்கம். இணையத் தமிழ்ப்பதிவர்களை ஒருங்கிணைக்க நீங்கள் செய்த மகத்தான சேவையில் நான் செய்தது மிகச் சாதாரணமான உதவியே. ஆனால் அதை ஒவ்வொரு முறையும் நீங்கள் சிலாகித்து நன்றி சொல்வது உங்கள் பெருந்தன்மையையும் உயர்ந்த குணத்தையும் காட்டுகிறது. பொது நலனுக்காக உழைத்தவர்களின் உழைப்பைப் பாராட்டாமல் சிலர் குறை கூறும் போது என்னால் வாய் மூடி மெளனமாக இருக்க முடியவில்லை. உங்கள் தோழமைத் தொடர்புக்கு மிகவும் நன்றி அண்ணா.

      Delete
  2. //பின்னர் மிகக்குறுகிய காலத்தில் இது வடிவமைக்கப்பட்டு அழகான அட்டைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. //

    இதன் அச்சு பிரதி /மின் நூல் பிரதி கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி முருகேசன். இதன் அச்சுப் பிரதி கிடைக்கும். விலை ரூ 150/-. அதிக பிரதிகள் வாங்கும் போது விலையில் தள்ளுபடி செய்கிறார்கள். வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-
      NAME - MUTHU BASKARAN N
      SB A/c Number - 35154810782
      CIF No. - 80731458645
      BANK NAME - STATE BANK OF INDIA,
      PUDUKKOTTAI TOWN BRANCH
      BRANCH CODE - 16320
      IFSC - SBIN0016320
      இந்தக் கணக்கின் வழி தொகை செலுத்துவோர், அவர்தம் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை
      கையேடு அனுப்பவேண்டிய முகவரிகள்
      முதலான விவரங்களை
      +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கு (குறுஞ்செய்தி) எத்தனை நூல்கள் தேவை எனத் தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது பற்றி மேலும் விபரங்கள் அறிய இணைப்பு:- http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_15.html

      Delete
  3. நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி இளங்கோ சார்!

      Delete
  4. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  5. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
    ஆக்கப் பூர்வமான எழுத்துகள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
    Feed Burner இணைத்து விட்டால் மின்னஞ்சல் முகவரியைப் பதிய முடியும். அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவுகள் சென்று விடும். முன்பு Bloggers இல் Dash Board என ஒரு Gadget இருந்தது, இப்போது இல்லையென நினைக்கிறேன். அதில் பதிந்து விட்டால் பதிவுகள் அதில் வந்திருக்கும், நேரம் இருக்கும் போது படிக்கலாம். டாஷ் போர்டு இல்லாதது பதிவுகள் படிக்கப்படாததற்கு ஒரு காரணம் எனலாம். எனது மின்னஞ்சல் முகவரி கொடுக்கிறேன். பதிவுகள் வெளியிடும் போது அனுப்புங்கள். முகநூலில் இருந்தால் எனது inbox க்கு அனுப்புங்கள்.
    rathnavel.natarajan@gmail.com
    https://www.facebook.com/n.rathna.vel
    உங்கள் ஆக்கப்பூர்வமான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துகள் ஞா. கலையரசி

    ReplyDelete
    Replies
    1. அருமை எனப்பாராட்டியமைக்கு மிகவும் நன்றி ஐயா! உங்கள் ஈமெயில் முகவரிக்குப் புதுப் பதிவு இணைப்பைக் கட்டாயம் இணைப்பேன். உங்கள் பக்கத்தில் பகிர்வதற்கும் மீண்டும் என் நன்றி ஐயா!

      Delete
  6. அற்புதமான ஆக்கப் பூர்வமான
    ஒரு விமர்சனப்பகிர்வு எப்படி இருக்கவேண்டும்
    என்பதற்கு உதாரணமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்! உங்களைப் பதிவர் விழாவில் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

      Delete
  7. அல்லதை நீக்கி
    நல்லதை நாடும்
    அன்னம் போல

    அழகாக, அமைதியாக, இனிமையாக,
    அகந்தை அற்ற அறிவு என்ன என்பதை
    ஆரவாரம் இல்லாத
    சொற்களில்
    செதுக்கி இருக்கிறீர்கள் .

    வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் ஐயா!

      Delete
  8. தலைவலி என்று யாரும் இதுவரை நினைத்ததில்லை... வெறுப்பான கேள்விகளுக்கும், பதில்கள் பொறுப்போடு தான் சொல்லப்படுகின்றன...

    தங்களின் புரிதலுக்கு நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. வெறுப்பான கேள்விகளுக்கும் பொறுப்போடு பதில் சொல்ல மிகவும் பொறுமை வேண்டும் தனபாலன் சார். அது உங்களிடமிருப்பதறிந்து மகிழ்ச்சி. விழாவில் உங்களின் பங்களிப்பு மிகவும் போற்றுதலுக்குரியது. உங்களை விழாவில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

      Delete
    2. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

      Delete
    3. உண்மை தான். பொருத்தமான உவமை. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ!

      Delete
  9. நல்ல புரிதலோடு அமைதியாக எல்லாவற்றையும் நியாயப் படுத்தியுள்ளீர்கள்.
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இனியா! வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி!

      Delete
  10. Replies
    1. தங்கள் வருகைக்கும் அருமை எனப்பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி பாரதி சார்!

      Delete
  11. நிகழ்வின் நியாயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார்! என் மனதுக்குப் பட்டதைச் சொன்னேன். சொந்த வேலைகளைப் புறந்தள்ளிவிட்டுப் பொது நலனுக்காக உழைக்கும் போது அதைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை; குறை சொல்லக்கூடாது என்பது என் கருத்து. உங்கள் கருத்துரைக்கு என் நன்றி!

      Delete
  12. விழா குறித்த அருமையான விமர்சனம். எனது எண்ணமும் கூட உங்கள் பதிவில் பிரதிபலித்திருக்கிறது. விழாவில் தங்களை நேரில் சந்தித்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது.
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. வாங்க செந்தில்! உங்களை நேரில் சநதிக்க முடி்ந்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி. என்னுடன் உங்கள் கருத்தும் ஒத்துப்போகிறது என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி. அருமை எனப்பாராட்டியமைக்கு மிகவும்நன்றி!

      Delete
  13. விழாவில் கடைசி நேரத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. விழா பற்றி எப்போதும் சிலர் குறைகூறிக்கொண்டேதான் இருப்பார்கள். அது உலக வழக்கு! அதை பொருட்படுத்தவேண்டாமல் அடுத்த என்ன? என்று முன்னேறிக் கொண்டே இருக்கவேண்டும். நியாயமான குறைகளை களையலாம்? குற்றம் என்று கண்டுபிடித்து குட்டிக் கொண்டே இருப்பவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் உங்களால் முடிந்தால் தட்டிக் கொடுங்கள்! இல்லையேல் தள்ளி நிள்ளுங்கள் என்பதுதான்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ்! கடைசி நேரத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதை அறிந்து வருத்தமேற்பட்டது. என் கருத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள், மிகவும் மகிழ்ச்சி. மிகவும் நன்றி!

      Delete
  14. தளத்தில் இணைத்தமைக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

    ReplyDelete
  15. Muthu Nilavan 23 October 2015 at 11:24

    // விழாப்பற்றிய அறிவிப்பு வந்த உடனே வெளியூரிலிருந்து வங்கிவழி வந்த முதல் தொகை உங்களுடையதுதான். பிறகும் பலநண்பர்களிடம் வாங்கிவாங்கி (நீங்கள் வங்கியில் இருப்பதால் வங்கியில் இருந்துகொண்டே “கால்“வாங்கி வாங்கி) தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தீர்கள். //

    என் நன்கொடைத் தொகையை என் சார்பில் புதுக்கோட்டைத் திருவிழாவுக்கு அனுப்பி வைத்து உதவிகள் செய்ததும் இவர்கள்தான் என்பதை மிகப்பெருமையுடனும், நன்றியுடனும் இங்கு தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் நான் சென்ற ஆண்டு (2014) என் வலைத்தளத்தினில் 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடத்திய மெகா போட்டியான ‘சிறுகதை விமர்சனப் போட்டி’யின் வெற்றியாளர்கள் (சுமார் 255 நபர்களுக்கும் மேல்) அனைவருக்கும் உடனுக்குடன் பரிசுத்தொகைகளை அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பி வைக்கும் மாபெரும் உதவியினைத் தானே முன்வந்து செய்தவர்களும் இவர்கள் மட்டுமே என மனம் நிறைந்த நன்றிகளுடன், இங்கு தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    Please refer these 2 Links: (1) http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html (2) http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

    //இப்போது, நாங்கள் (விழாக்குழுவினர்) சிலசெய்திகளை எப்படி அணுகி, இதுபோலும் வினாக்களுக்கு விடைதருவோமோ அப்படியே பதில் தந்திருக்கிறீர்களே! என்று நன்றியுடனும் மிகுந்த வியப்புடனும் பார்க்கிறோம்.//

    மிகவும் பொறுமையாகவும், அழகாகவும், அற்புதமாகவும் சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லி அசத்தியுள்ளார்கள். நானும் தங்களைப்போலவே நன்றியுடனும் மிகுந்த வியப்புடனும் மட்டுமே இந்தப்பதிவினைப் படித்து மகிழ்ந்தேன். என் சார்பிலும் தங்களுடன் சேர்ந்து என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளை இவர்களுக்கு இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நான் செய்த சிறு உதவிக்கு நீங்களும் விமர்சனப்போட்டி நடந்த போதே மாபெரும் உதவியாகச் சிலாகித்துப் பல முறை நன்றி சொல்லிவிட்டீர்கள். இப்போது மீண்டும் அந்த இணைப்புக்களைத் தந்து நன்றியைத் தெரிவித்துள்ள உங்களுக்கு என் அன்பு நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். சிறு உதவியை அடிக்கடி நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் உங்களைப் போன்ற மேன்மக்களுக்கு உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்ததை நான் பெரிய பேறாக எண்ணி மகிழ்கின்றேன். மிகவும் நன்றி கோபு சார்! உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி!

      Delete
    2. ஆம் சகோதரி, தங்களின் வழி விஜிகே அய்யாவின் தொகை வந்தது ஒருபக்கம் இருக்க, அவர்களிடம் தொலைபேசி வழியே பேசி ஆலோசனைகள் கேட்டதன் அடிப்படை்யே அவர்கள் நூற்றுக்கணக்கான பதிவர்களை அறிமுகப்படுத்திய “பதிவுலக வல்லிக்கண்ணன்“ என்பதால்தான். பிறகும் அவ்வப்போது பேசி அய்யா அவர்கள் தந்த உற்சாக மொழிகள் விழாக்குழுவிற்குப் பெரிதும் பயன்பட்டன. அவர்கள் விழாவிற்கு வராவிடடாலும், வந்த பழனி கந்தசாமி அய்யா அவர்களின் பதிவுகள் வழி பல அன்புப் பரிமாறல்களை அறிந்து நெகிழ்ந்தோம். மிக்க நன்றி அய்யா. தங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொண்டு, இளைய பதிவர்களை உற்சாகப்படுத்தும் பணியைத் தொடர வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அய்யா விஜிகே அவர்களுக்கும், தங்கை கலையரசிக்கும் இந்தப் பின்னூட்ட வழியாக நன்றிசொல்வதில் பெரிதும் மகிழ்கிறேன். வணக்கம்

      Delete
    3. Muthu Nilavan 31 October 2015 at 02:06

      வாங்கோ Sir, வணக்கம் Sir.

      //ஆம் சகோதரி, தங்களின் வழி விஜிகே அய்யாவின் தொகை வந்தது ஒருபக்கம் இருக்க, அவர்களிடம் தொலைபேசி வழியே பேசி ஆலோசனைகள் கேட்டதன் அடிப்படை்யே அவர்கள் நூற்றுக்கணக்கான பதிவர்களை அறிமுகப்படுத்திய “பதிவுலக வல்லிக்கண்ணன்“ என்பதால்தான்.//

      அடடா .... இப்படி ரொம்பப் புகழாதீங்க. எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது. http://gopu1949.blogspot.in/2015/07/35.html என்ற இந்தப்பதிவினில் என்னால் அடையாளம் காட்டப்பட்டுள்ள 100 பெண் பதிவர்கள் + 70 ஆண் பதிவர்கள் பட்டியலைப்பார்த்துவிட்டு, எனக்கு ஃபோன் செய்வதாகச் சொன்னீர்கள். புரிய வேண்டியவர்களுக்குப் புரியாவிட்டாலும், தாங்கள் இதனை நன்கு புரிந்துகொண்டு பாராட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி, Sir.

      //பிறகும் அவ்வப்போது பேசி அய்யா அவர்கள் தந்த உற்சாக மொழிகள் விழாக்குழுவிற்குப் பெரிதும் பயன்பட்டன. அவர்கள் விழாவிற்கு வராவிடடாலும், வந்த பழனி கந்தசாமி அய்யா அவர்களின் பதிவுகள் வழி பல அன்புப் பரிமாறல்களை அறிந்து நெகிழ்ந்தோம். மிக்க நன்றி அய்யா. தங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொண்டு, இளைய பதிவர்களை உற்சாகப்படுத்தும் பணியைத் தொடர வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அய்யா //

      ஓரளவு நன்றாக எழுதும் பதிவர்களை மேலும் மேலும் உற்சாகப்படுத்துவது ஒன்றுதான் என் வேலையாகவே வைத்துக்கொண்டுள்ளேன். அப்படியும் உடல்நலம் + நேரமின்மை + சோம்பலால் பல புதிய பதிவர்கள் பக்கம் என்னால் போக இயலாமல் உள்ளது என்பதும் உண்மையே.

      //விஜிகே அவர்களுக்கும், தங்கை கலையரசிக்கும் இந்தப் பின்னூட்ட வழியாக நன்றி சொல்வதில் பெரிதும் மகிழ்கிறேன். வணக்கம்.//

      தங்களுக்கும் என் (எங்கள்) நன்றிகள், Sir.

      அன்புடன் VGK

      Delete
  16. //இதன் பெயர் விமர்சனப்போட்டி என்றிருக்கக் கூடாது; பரிசு கணிப்புப் போட்டி என்றிருக்கவேண்டும்; ஏனெனில் இதில் கலந்து கொள்கிறவர்கள் விமர்சனம் ஏதும் செய்யவில்லை; முடிவைத் தான் கணித்து எழுதுகிறார்கள் என்று சிலர் எழுதியது சரி என்பது தான் என் கருத்தும்.//

    என் கருத்தும் இதுவேதான். அதனையே தாங்களும் இங்கு வலியுறுத்திச் சொல்லியுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக தங்களுக்கு என் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தும் இதுவே என்றறிந்து மகிழ்ச்சி சார். உங்கள் தொடர்ந்த பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மீண்டும் என் நன்றி!

      Delete
  17. //என் கட்டுரைகளுக்குப் பரிசு கிடைக்காவிட்டாலும், இப்போட்டியில் எனக்கு இரண்டாமிடம் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை இது எளிதாக இல்லை. அத்தனை பதிவுகளையும் ஒன்று விடாமல் வாசித்து ஒவ்வொன்றிலும் மூன்றை மட்டும் வடிகட்டித் தேர்ந்தெடுப்பது, மிகவும் சிரமமாக இருந்தது.//

    மிகவும் சிரமமான காரியமே என்பதை நானும் நன்கு உணர்ந்துகொண்டேன். அப்படியும் ஏதோ ஓரளவுக்கு தங்களின் கணிப்புகள், நடுவர் குழுவினரின் தீர்ப்புக்களுடன் ஓரளவாவது ஒத்துப்போய் வந்துள்ளதும் அதனால் தங்களுக்கு இந்தப்போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்ததும், எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும் அதேசமயம் ஆனந்தமாகவும் இருந்தது.

    தங்களுக்கு இந்த பெருமைக்குரிய பரிசு கிடைத்தது, எனக்கே கிடைத்தது போல மிக மிக நான் எனக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எனக்குப் பரிசு கிடைத்ததை உங்களுக்குக் கிடைத்ததாக நீங்கள் கருதி மகிழ்ச்சியடைந்ததை நினைத்து அகம் மிக மகிழ்கின்றேன். உங்கள் வாழ்த்து என்னை, என் எழுத்தை மேன்மையுறச்செய்யும். என்றும் உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் ஆசிகளும் எனக்குக் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை.

      Delete
  18. //இப்போட்டியில் கலந்து கொண்டதற்கும், நடுநிலைமையிலிருந்து பதிவுகளின் சாதக பாதகங்களை அலசுவதற்கும் திரு வை.கோபு சார் நடத்திய விமர்சனப்போட்டி பயிற்சிப்பட்டறை மூலம் கிடைத்த அனுபவம் மிகவும் உதவியது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் பல புதிய எழுத்தாளுமைகளை அறிந்து கொள்ள இப்போட்டி எனக்கு உதவியது. //

    தங்களின் இந்தச்சொற்களைக் கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் தங்களின் இனிய பதிவின் இணைப்பினை, நம் ”சிறுகதை விமர்சனப் போட்டி’களில், விமர்சனம் எழுதியவர் யார் என்றே தனக்குத் தெரியாத நிலையிலும், விமர்சனங்களில் உள்ள தரத்தினை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொண்டு, மிகச்சரியாக எடைபோட்டு, பல்வேறு பரிசுகளுக்குப் பரிந்துரைத்து உதவியவரும், இறுதிவரை நியாயமான பாரபட்சமற்ற நடுவராக இருந்து செயல்பட்டவருமான திரு. ஜீவி ஐயா அவர்களின் கவனத்திற்கும் நான் கொண்டு சென்றுள்ளேன்.

    நம் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம், நம் நடுவர் திரு. ஜீவி ஐயா அவர்கள் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருந்த, விமர்சன எழுத்தாளர்களுக்கான பல்வேறு ஆலோசனைகளும், தங்களுக்கு இந்தப்போட்டியில் இப்போது வெற்றிபெற உதவியிருக்கக்கூடும் என நான் நம்புகிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தாங்கள் நடத்திய விமர்சனப்போட்டியின் மூலம் கிடைத்த பயிற்சி ஒரு படைப்பின் நிறைகுறைகளைப் பட்டியலிட எனக்கு உதவுகிறது. இது மிகையில்லை. இதனை நடுவர் ஜீ.வீ ஐயா அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றதறிந்து மகிழ்ச்சி. தொடர்ச்சியாக அத்தனை மாதங்கள் நடுவர் பொறுப்பு வகித்தது மிகப்பெரிய சாதனை. அவர் அவ்வப்போது கொடுத்த ஆலோசனைகள் நிச்சயமாக எல்லோருக்குமே பயன்படக்கூடியவை. போட்டியைத் தளர்வின்றி பத்து மாதங்கள் நடத்திய உங்களுக்கும் நடுவர் ஐயா அவர்களுக்கும் என் நன்றி. உங்களுக்கு மீண்டும் என் நன்றி.

      Delete
  19. //உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு. பதிவர் விபரங்களைத் தொகுக்கும் முதல் முயற்சி இது; இதில் சில குறைகள் இருக்கலாம்.//

    அவர்கள் கேட்டிருந்த படிவத்தில், குறித்த நேரத்தில் தகவல்களை மிகத் தெளிவாக எழுதி அனுப்பியுள்ள பலருக்கும் இதில் மிகுந்த ஏமாற்றம் மட்டுமே என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.

    இருப்பினும் தாங்கள் சொல்வதுபோல, அடுத்தடுத்துக் தொகுக்கப்பெறும் கையேட்டுக்கு இது முன்னோடி என்ற வகையில், முதன் முயற்சியில் நேர்ந்துள்ள இந்த மிகச்சிறிய குறையினை நாம் பெரிதாகச் சுட்டிக்காட்டாமல் பொறுத்துக்கொள்ளலாம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார். நீங்கள் சொல்வது சரிதான். பொறுமையாக எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்துத் தொகுக்க போதுமான கால அவகாசம் இல்லாமல் போனது தான் கையேட்டில் காணப்படும் குறைகளுக்குக் காரணம். அடுத்து வரும் கையேடுகள் இதனை அடிப்படையாகக் கொண்டு சாவகாசமாகத் தொகுக்கப்படும் போது இக்குறைகள் நிச்சயம் களையப்படும் என நம்புவோம். உங்கள் மனக்குறையைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகுந்த நன்றி கோபு சார்!

      Delete
  20. நல்லாச் சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. நல்லாச் சொல்லியிருக்கீங்க என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி குமார்!

      Delete
  21. அன்பின் சகோதரிக்கு...
    நானும் வலைப்பதிவர் மாநாடு குறித்து எழுதியிருந்தேன்... விரிவாக இல்லை... சுருக்கமாக...

    தாங்கள் வாசித்தீர்களா என்று தெரியவில்லை....

    குறைகளைச் சொல்லாதீர்கள்... இப்படிச் செய்தால் குறைகள் வரலாம் என்று சொல்லியிருந்ததை பலர் நிறைவாய் எடுத்தாலும் சிலர் அதில் குறை கூறியிருப்பதாக கருதிவிட்டார்கள்....

    தாங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள் என்று தெரியவில்லை....

    வீட்டு விசேசங்களில் கூட நம்மால் நிறைவாய் செய்ய முடியாது... குறைகள் வரத்தான் செய்யும்...

    குறைகளை சொல்பவர்களைப் பற்றி கருத்தில் கொள்ள வேண்டாம்... நம் மனசு சுத்தம் என்பதை நாமும் நம்மின் நிறைகளை சுமக்கும் இதயங்களும் அறியும்...

    அதற்காக குறைகளைச் சொல்லாதீர்கள் என்றும் சொல்ல முடியாது... நமக்கு நிறைவாய்த் தெரிவது மற்றவர்களுக்கு குறையாய்த் தெரியலாம்.... இங்கு பகிர்வு சுதந்திரம் இருக்கிறது....

    விழாவிற்கு வந்து சந்தோஷித்து அருமையான விழா என்று பதிந்தவர்கள்தான் நிறையோடு குறைகளையும் சொல்கிறார்கள்... குறைகளையும் ஏற்றுக் கொள்வோம்... இனி வரும் விழாக்களில் குறைகளை குறைக்கும் வழிமுறைகளை இன்னும் அதிகமாக்குவோம்...

    அருமையான பகிர்வு... இதைச் சொல்ல வேண்டாம் என்றுதான் முதலில் வாசித்து நல்லாச் சொன்னீங்கன்னு சொல்லிட்டுப் போனேன் பின்னர் சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் மீண்டும் வந்தேன்...

    தவறாய் இருப்பின் தாங்கள் மட்டுமல்ல புதுகை நண்பர்களும் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்....

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவை வாசிக்கவில்லை குமார். விரைவில் வாசித்துக் கருத்திடுவேன். அருமையான பகிர்வு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி!

      Delete
    2. நாங்கள் வாசித்து, தங்களின் அன்பான கருத்துகளைச் சரியாகவே எடுத்துக் கொண்டுதான் பதில் தந்திருந்தோம் நண்பர் குமார் அவர்களே! இதில் மன்னிக்க என்ன இருக்கிறது? சரியான கேள்விகள்தான் கேட்டிருந்தீர்கள். எங்களை மீறிநடந்த சில பிழைகளுக்கு நாங்கள் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். தங்களுக்கும் தங்களைப் போலவே ( வெற்றுப்பாராட்டுரை சொல்லாமல் சரியான கருத்துகளையும் முன்வைத்த) தங்கை கலையரசி அய்யா விஜிகே முதலான பலரின் கருத்துகளை நெஞ்சார ஏற்கிறோம். நாங்களோ அடுத்து நடத்தும் விழாக்குழுவினரோ தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொண்டால்தான் அடுத்தடுத்த முயற்சிகள் இன்னும் சிறப்பாக நடக்கும் என்பதாக எடுத்துக் கொள்கிறோம். நன்றி வணக்கம்.

      Delete
    3. //தங்கை கலையரசி அய்யா விஜிகே முதலான பலரின் கருத்துகளை நெஞ்சார ஏற்கிறோம்.//

      Thanks a Lot Mr. Muthu Nilavan Sir.

      Delete
  22. குறையோ நிறையோ ......

    அவரவர்களில் பார்வையையும்,

    பரந்து விரிந்த அல்லது மிகக்குறுகிய மனப்பான்மையையும்,

    அவரவர்களின் ஏதோவொரு உள்நோக்கத்தையும்,

    அவரவர்களின் பிரத்யேக ஒருசில எதிர்பார்ப்புகளையும்

    பிறரின் ஈடுபாட்டுடன் கூடிய பொதுச்சேவைகள், தொண்டுகள் + கடும் உழைப்பினை புரிந்துகொள்வதையும்

    அல்லது

    இது எதிலுமே சரியான புரிதல் இல்லாததையும்

    பொறுத்ததே.

    ஊர் ஒன்றாகக் கூடி ஒன்றுமையாக செயல்பட்டால் மட்டுமேதான் ஓர் மிகப்பெரிய தேரினை நகர்த்த முடியும். தேர்த்திருவிழா வெற்றிகரமாக நடைபெறவும் முடியும்.

    ’என் பார்வையில் புதுகை பதிவர் விழா - 1’ என்ற தங்களின் இந்தப்பதிவு, எதையுமே தாங்கள் அழகாக ரஸித்துப் பார்த்து, நிறைகளையே, நிறைவாகவும், நிறையவாகவும் சொல்லும் இனியதோர் அன்புப் பார்வை உடையவர்கள் என்பதை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.

    தங்களின் மிக அழகான இந்தப்பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    நன்றியுடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. ஊர் ஒன்றாகக் கூடி ஒன்றுமையாக செயல்பட்டால் மட்டுமேதான் ஓர் மிகப்பெரிய தேரினை நகர்த்த முடியும். தேர்த்திருவிழா வெற்றிகரமாக நடைபெறவும் முடியும்.
      மிகவும் அழகாக அருமையாக் சொல்லிவிட்டீர்கள் கோபு சார். இதற்கு மேல் நான் என்ன சொல்ல? தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  23. அருமையான கண்ணோட்டம்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. அருமையான கண்ணோட்டம் என்ற உங்கள் பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!

      Delete
  24. வீட்டைக் கட்டிப் பார்
    கல்யாணம் பன்னிப் பார்
    என்பார்கள்
    அதுபோலத்தான் இதுவும்
    உறவினர்களை மட்டுமே அழைத்து செய்யும் திருமணத்திலேயே
    ஆயிரம் வருத்தங்கள் வரத்தான் செய்கின்றன
    பொது நிகழ்வு என்றால் கேட்க வேண்டுமா
    பொருட்படுத்தாமல் செயலாற்றத்தான் வேண்டும்
    பதிவு அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். மிகவும் அழகாய்ச் சொன்னீர்கள். உங்கள் முதல் வருகைக்கும் பதிவு அருமை என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி சகோ! உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

      Delete
  25. புதுக்கோட்டையில் தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. பதிவில் அனைத்தையும் நல்ல முறையில் விவாதித்துள்ள விதம் அருமையாக இருந்தது. அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவும், பேசவும் நல்ல வாய்ப்பு. இருந்தபோதிலும் அனைவரிடமும் முழுமையாகப் பேசமுடியவில்லையே என்ற குறை. அவ்வாறான சில குறைகளை இவ்வாறான பதிவுகள் சரிசெய்துவிடுகின்றன என்பதே உண்மை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா! உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அருமை எனப்பாராட்டியமைக்கு மிகவும் நன்றி. விழா மேடையில் தாங்கள் கெளரவிக்கப்பட்டதை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன். பாராட்டுக்கள் ஐயா!

      Delete
  26. புதுகை பதிவர் விழா குறித்த தங்களுடைய பதிவின் சாரம் மிகவும் அருமை அக்கா.. பொருத்தமான குறள் மேற்கோளோடு அழகாக விவரங்களைத் தொகுத்தளித்துள்ளீர்கள். குறை இல்லாத விழா எதுவும் இருக்காது. ஆனால் குறைகளையே மையப்படுத்திப் பேசிக்கொண்டிராமல் நிறைகளை முழுமனத்துடன் பாராட்டிவிட்டு பிறகு குறைகளை சுட்டிக்காட்டுவதுதான் முறை. அவையும் பெருங்குறையாக இருந்தால் மாத்திரமே.. பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் பார்ப்பதெல்லாம் பூதாகரமாகத்தானே தெரியும்... மாதக்கணக்காக ஊண் உறக்கம் தொலைத்து உடலுழைப்பைக் கொட்டி... அசுர முயற்சியோடு ஒரு அற்புதமான பதிவர் திருவிழாவை நடத்தியுள்ள புதுகைப் பதிவர்களுக்கு நம் அன்பும் பாராட்டுகளும் எப்போதும் உரிதாகட்டும்.. பதிவர் திருவிழாவில் நேரில் கலந்துகொண்ட தங்களுடைய அனுபவத்தை அடுத்துத் தொடரும் பதிவுகளில் அறியக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அருமை எனப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கீதா! என் அனுபவத்தை விரைவில் தொடர்வேன்!

      Delete
  27. பதிவர்கள் தொழில்நுட்பத்தை கையாளுவதில் எங்கோ போய்விட்டார்கள் என்பதை கையேட்டிலுள்ள QR Code வசதி சொல்லியது. என் அலுவலக நண்பர்களிடம் காண்பித்தவுடன் தம் புருவம் உயர்த்தினர்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ராஜ்குமார் ரவி! நீங்கள் சொன்னது போல் கையேட்டில் QR CODE (QUICK RESPONSE CODE) வசதி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  28. நிறைவான தொகுப்பு. பதிவர்களின் உழைப்பை பாராட்டுவோம்.. உற்சாகத்தோடு ஒருங்கிணைப்பை முன்னெடுக்க அனைவர் ஒத்துழைப்பும் அவசியம் இருக்கும்.. வாழ்த்துக்கள் மேடம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மோகன்ஜி!

      Delete
  29. தீபாவளி நல்வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஐயா!

    ReplyDelete
  30. தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும் மா...அழகாக எழுதியுள்ளீர்கள்...மிக்கநன்றி..மா

    ReplyDelete
  31. மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை கீதா. நீங்கள் வந்து கருத்து எழுதியதற்கு என் முதல் நன்றி. விழாவைச் சிறப்பாக நடத்தியமைக்கு நாங்கள் தான் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். அழகாக எழுதியுள்ளீர்கள் என்ற பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி கீதா!

    ReplyDelete