நல்வரவு

வணக்கம் !

Thursday, 13 October 2016

தீபாவளி உடை –தலைமுறை இடைவெளி - சிறுகதை

மனைவி:-
என்னங்க!  ஒங்கப் பையனுக்குச் சட்டை பேண்ட் எடுக்க ஆயிரம் ரூபா போதாதாம். என்னமோ  புது பிராண்ட் ஜீன்ஸ் பேண்டாமே, அதுமட்டுமே ரெண்டாயிரம் ரூபா வுமாம்அதனா மேற்கொண்டு,  ரெண்டாயிரம் கேட்கிறான்.

போன வருஷம் இவன் வாங்கிட்டு வந்த ஜீன்ஸெல்லாம் கிழிஞ்சிருந்திச்சு. தீபாவளிக்கு வைச்சுப் படைக்கிற துணியாச்சே, இப்பிடிக் கிழிஞ்சதைப் போயி வாங்கிட்டு வந்திருக்கியேன்னு அப்பா திட்டறார்னு சொன்னேன்அப்பாவுக்கெல்லாம் ஜீன்ஸைப் பத்தி என்ன தெரியும்னு திருப்பிக் கேட்கிறான்நெறைய கிழிஞ்சிருந்தாத் தான் அதிக விலையாம்!  அது தான் இப்ப பேஷனாம்! 

என்ன பேஷனோ, என்ன கர்மமோ?


அப்பா:-
இவரு ரெண்டாயிரம் ரூபாய்ல தான் ஜீன்ஸ் எடுப்பாரோஇருநூறு ரூபாயிலேர்ந்து ஜீன்ஸ் கிடைக்குதுஎன்னை என்ன ஒன்னும் தெரியாத மடையன்னு நினைச்சிக்கிட்டானா ஒம் மவன்எல்லாம் அவரு வேலைக்குப் போயி சம்பாதிக்கிற காலத்துல வாங்கிப் போட்டுக்கச் சொல்லுகஷ்டப்பட்டு சம்பாதிச்சாத் தான் காசோட அருமை புரியும்

அந்தக் காலத்துல, எங்கப்பா என்ன எடுத்தாந்து கொடுப்பாரோ,  அது தான் தீபாவளித் துணிகடை கண்ணிக்கு அவரு போயி தான், எல்லாருக்கும் வாங்கிட்டு வருவாரு  என்னையெல்லாம் ஒரு நாள் கூட அழைச்சிட்டுப் போய் சட்டை எடுத்துக் கொடுத்ததில்லேஎதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருப்னா?  

நீலக்கலர் பேண்ட்டுக்கு, ரோஸ் கலர் சட்டை வாங்கியாந்து கொடுத்து, த்தான் போட்டுக்கணும்னு சொல்வாருமறு வார்த்தை பேசாம, போட்டுக்கிட்டுப் போவேன்

அப்ப பெல்பாட்டம் பேண்ட் தான் பேஷன்அந்த மாதிரி தைச்சுக்கலாம்னு ஆசைப்பட்டு, தையல்காரன்கிட்டச் சொல்லிட்டு வந்து, அது தைச்சப்புறம் பார்த்தா, இறுக்கமா மேலே தூக்கிக்கிட்டு, முக்கா பேண்ட்டா இருக்கும்.    

என்னய்யா இப்பிடி தைச்சிருக்கியேன்னு கேட்டா, ஒங்கம்மா தான் தொள தொளன்னு  ரொம்ப இறக்கமா இருந்தா, தெருவெல்லாம் கூட்டிக்கிட்டு வரும்நுனியெல்லாம் தண்ணி, மண்ணு பட்டு ரொம்ப சீக்கிரம் இத்துப்போயிடும்அதனா கொஞ்சம் தூக்கியே தையுன்னு சொன்னாங்கஅதனால தான் இப்பிடித் தைச்சேன்னு சொல்வாரு தையக்காரரு.   

அதைப் போட முடியாதுன்னு, அம்மாக்கிட்ட சண்டை போட்டு, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, அதுக்கப்புறம் வேற வழியில்லாம அதைப் பிரிச்சித் தைச்சிக் கொஞ்சம் இறக்கிப் போட்டுக்கிட்டுப் போனேன்.    

ஒனக்கு மட்டும் எங்கேர்ந்துடா, இவ்ளோ சூப்பரான கலரெல்லாம் கிடைக்குது?”ன்னு என் நண்பனுங்க கிண்டல் பண்ணுவானுங்க

நம்மளை மாதிரி இவன் கஷ்டப்படக் கூடாது; தானாப் போயி புடிச்சதை எடுத்துக்கட்டும்னு பணம் கொடுத்தா, இவ்ளோ பணத்தைக் கொட்டிக் கிழிஞ்சி நார் நாராத் தொங்கறதைப் போயி வாங்கிட்டு வந்துருக்கான்.. 

இப்பக் காலம் எவ்ளோ மாறிப்போயிடுச்சி!!!!!!?

தாத்தா:-
எங்க காலத்துல தீபாவளியோட தீபாவளியாத் தான் புதுத் துணி கிடைக்கும்அதனால பண்டிகை எப்ப வரும்னு ஆவலாக் காத்திருப்போம்.

அப்பா மட்டும் தான் கடைக்குப் போய் துணிமணி வாங்கிட்டு வருவாருஒரு வயசு வரைக்கும் கால்சட்டைநல்லா வளர்ந்துட்டா வேட்டி தான்.

பேண்ட் பத்தியெல்லாம் மூச்சு விடமுடியாதுஇந்தக் காலம் மாதிரி, அம்மால்லாம் கடை கண்ணிக்குப் போக மாட்டாங்கஅப்பாருக்கிட்ட போயி, நம்ம விருப்பம் எதையும் சொல்லப் பயமாயிருக்கும்.
அப்பாரு வந்த பெறவு, ஆசையா ஓடிப்போய் பார்த்தா, கால்சட்டையும், சட்டையும் காக்கி கலர்ல இருக்கும்.

அது தான் அழுக்குப் பட்டாத் தெரியாதாம்!  அடுத்த வருஷத்துக்கும் அதே கலர்தான்அதைப் போட மாட்டோம்னு, அம்மாக்கிட்ட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாலும், வேற வழியில்லைகடைசியில அதைத் தான் உடுத்தணும்.

இப்போக் காலம் எவ்ளோ மாறிப் போயிடுச்சி!!!!!!!!?
  
   

(படம் – நன்றி இணையம்)

29 comments:

 1. ஆகா.. நிதர்சனமான பதிவு!..

  இன்றைய இளவட்டங்களின் உடையலங்(கோலத்தை)காரத்தைக் கண்டால் மனம் திடுக்கிடுகின்றது..

  ஏதாவது கேட்டால் - நம்மைப் பைத்தியம் என்கின்றார்கள்..

  அதுசரி.. தீபாவளி நெருங்கி விட்டது அல்லவா!..

  இனிமேல் ரசனையான பதிவுகளை எதிர்பார்க்கலாம்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும், நிதர்சனமான பதிவு என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி துரை சார்!

   Delete
 2. தலைமுறை இடைவெளி எதிர்கொள்ளும் நிலையைப் பகிர்ந்தவிதம் அருமை. என் கல்லூரி நினைவு வந்துவிட்டது. அப்போது நான் கேட்டதை தற்போது என் மகன்கள் கேட்கும்போது நினைத்துப் பார்க்கிறேன். குற்ற உணர்வே மேலிடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. இந்தத் தலைமுறை இடைவெளியை நம்மால் இட்டு நிரப்பவே முடியாது. காலமும் சூழலும் மாற மாற, ஒவ்வொரு தலைமுறையிலும் இது போன்ற இடைவெளி இருக்கவே செய்யும். உங்கள் கருத்துக்கும் வருகைக்கும், மிகவும் நன்றி முனைவர் ஐயா!

   Delete
 3. வணக்கம் சகோ உண்மைதான் பேஷன் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் போடுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ! நம்மால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது தான். தற்காலச் சூழலுகேற்ப உடையணிய வேண்டும் என்ற அவர்களுடைய விருப்பத்தைப் புலம்பிக்கொண்டாவது பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறதே! இதைத் தான் தலைமுறை இடைவெளி என்று நாம் சொல்கிறோம்! தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ!

   Delete
 4. //அப்பாவுக்கெல்லாம் ஜீன்ஸைப் பத்தி என்ன தெரியும்னு திருப்பிக் கேட்கிறான். நெறைய கிழிஞ்சிருந்தாத் தான் அதிக விலையாம்! அது தான் இப்ப பேஷனாம்!

  என்ன பேஷனோ, என்ன கர்மமோ?”//

  ஆரம்பத்திலேயே நகைச்சுவை வெடியைக் கொளுத்திப் போட்டு விட்டீர்கள். :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு சார்! வணக்கம்! ' என்ன பேஷனோ என்ன கர்மமோ!' ஏதோ ஒரு சமயத்தில் நாம் ஒவ்வொருவரும் உதிர்க்கும் சொற்கள் தாம் இவை! நகைச்சுவை இழையோடுகிறது என்றறிந்து மகிழ்ச்சி சார்! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

   Delete
 5. //நம்மளை மாதிரி இவன் கஷ்டப்படக் கூடாது; தானாப் போயி புடிச்சதை எடுத்துக்கட்டும்னு பணம் கொடுத்தா, இவ்ளோ பணத்தைக் கொட்டிக் கிழிஞ்சி நார் நாராத் தொங்கறதைப் போயி வாங்கிட்டு வந்துருக்கான்.. //

  அந்தக்காலத்தில் தன் பெற்றோரிடம் தன் ஆசைகளைச் சொல்லிப் புரிய வைக்க முடியாத நிலையில் இருந்துள்ள அவர், இன்று இதுபோல நினைப்பதும் மிகச் சரியே.

  அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்!

   Delete
 6. //ஆசையா ஓடிப்போய் பார்த்தா, கால்சட்டையும், சட்டையும் காக்கி கலர்ல இருக்கும். அது தான் அழுக்குப் பட்டாத் தெரியாதாம்! அடுத்த வருஷத்துக்கும் அதே கலர்தான். அதைப் போட மாட்டோம்னு, அம்மாக்கிட்ட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாலும், வேற வழியில்லை. கடைசியில அதைத் தான் உடுத்தணும்.//

  இவர் காலக்கட்டத்தைப்பற்றி இவர் (தாத்தா) சொல்லுவதும் முழுக்க முழுக்க 100% உண்மையே.

  இந்த மூன்று காலக்கட்டங்களிலும் நான் வாழ நேர்ந்துள்ளதாலும், இவையெல்லாம் நானே என் சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ளதாலும், தாத்தாவாகவோ பேரனாகவோ இல்லாமல் ‘அப்பா’ ஸ்தானத்தில் இருந்து, என்னால் இந்தக் கதையை மிகவும் ரஸிக்க முடிகிறது.

  தலைமுறை இடைவெளிகள் பற்றி நன்கு யோசித்து, இன்றைய நாட்டு நடப்பினை மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. எழுத்து மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருப்பதறிந்து மகிழ்ச்சி சார்! உங்கள் பாராட்டும், வாழ்த்தும் என் எழுத்தை இன்னும் மேம்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மீள்வருகைக்கும், வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி சார்!

   Delete
 7. இதைப்படித்ததும், ’காலம் மாறிப்போச்சு’ என்ற தலைப்பினில் நான் இரு பகுதிகளாக எழுதியிருந்த சிறுகதையொன்று இப்போது என் நினைவுக்கு வந்தது.

  இது ’தீபாவளி’ பற்றியது .... ஆனால் அது ’பிள்ளையார் சதுர்த்தி’ பற்றியது.

  http://gopu1949.blogspot.in/2011/08/1-of-2.html

  http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2_31.html

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? காலம் எவ்ளோ மாறிப் போச்சு என்று தலைப்பிடத் தான் முதலில் யோசித்தேன். பிறகு தலைமுறை இடைவெளி என்று மாற்றினேன். விரைவில் உங்கள் கதையைப் படித்து என் கருத்துக்களைப் பகிர்வேன். இணைப்புக் கொடுத்தமைக்கு நன்றி சார்! மீள்வருகைக்கு மீண்டும் என் நன்றி!

   Delete
  2. உங்கள் கதையை வாசித்தேன் சார்! சிறு வயதில் கலர் பிள்ளையார் சிலை கிடைக்காததன் ஏக்கம் எழுத்தில் அப்படியே வெளிப்படுகின்றது. தலைமுறை இடைவெளி பற்றியும் இக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றியும் இக்கதை வெளிப்படுத்தும் அதே கருத்தை உங்கள் கதையும் வெளிப்படுத்துவதறிந்து வியப்பு! நல்லதொரு கதையை வாசிக்க இணைப்புக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி சார்!

   Delete
  3. //உங்கள் கதையை வாசித்தேன் சார்!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //சிறு வயதில் கலர் பிள்ளையார் சிலை கிடைக்காததன் ஏக்கம் எழுத்தில் அப்படியே வெளிப்படுகின்றது.//

   மிகச்சரியாகப் புரிந்துகொண்டு சொல்லியுள்ளீர்கள். என் சிறு வயதில் எனக்கு இதுபோன்ற ஏக்கங்கள் பலவும் உண்டு. அவைகளையே என் கதைகளில் ஆங்காங்கே கொஞ்சமாக நான் வெளிப்படுத்துவதும் உண்டு.

   //தலைமுறை இடைவெளி பற்றியும் இக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றியும் இக்கதை வெளிப்படுத்தும் அதே கருத்தை உங்கள் கதையும் வெளிப்படுத்துவதறிந்து வியப்பு!//

   எனக்கும் இது மிகவும் வியப்பாக இருந்ததனால் மட்டுமே, அந்த என் கதையின் இணைப்பினை தங்களின் பார்வைக்கும் கொடுக்கும்படியாக நேர்ந்தது.

   //நல்லதொரு கதையை வாசிக்க இணைப்புக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி சார்!//

   தங்களுக்குள்ள எவ்வளவோ அன்றாட பொறுப்பான பணிகளுக்கு இடையேயும், கொஞ்சம் நேரம் ஒதுக்கி, சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்டுள்ள, என் பழைய கதைகளை இன்று வாசித்துக் கருத்தளித்துள்ள தங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

   என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
 8. தலைமுறை இடைவெளி.....

  நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்... பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட்! தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

   Delete
 9. தலைமுறை இடைவெளியை அற்புதமாக மூன்று தலைமுறையை வைத்து சொல்லிவிட்டிர்கள். அருமை! ரசித்தேன்!
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. வாங்க செந்தில்! ரசித்தமைக்கும், அருமை என்று பாராட்டியதற்கும் என் நன்றி!

   Delete
 10. தீபாவளிக் கொண்டாட்டங்களுள் மிக முக்கியமானது உடைத்தேர்வு. அப்போதெல்லாம் தீபாவளிக்குத் தீபாவளிதான் புதிய உடை கிடைக்கும். இப்போதோ... நினைத்தால் துணிக்கடை வாசலில்தான் நிற்கிறோம்.. அதனால் புதிய உடைகளுக்கான அந்த ஆனந்தம் முற்றிலுமாய் கிடைப்பதில்லை.. அன்று முனகிக்கொண்டே அணிந்த உடைகளின் பின்னணியில் இருந்த அம்மாவின் கரிசனம், அப்பாவின் அன்பு, பொருளாதாரப் பிரச்சனைகளை நம்மால் உணரமுடியவில்லை.. இன்று நம் பிள்ளைகளுக்கு சகல வசதிகள் செய்துகொடுத்தும் அவர்கள் அதை முறையாக அனுபவிப்பதில்லையே என்ற ஆதங்கம் நமக்கு.. அவர்கள் புரிந்துகொள்ளும் நாளொன்றும் வரும்...

  இந்த சிறுகதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று தலைமுறைகளில்தான் எப்படியெப்படி சிந்தனாவோட்டங்கள்... தாத்தாவின் மனவோட்டம் மனத்தை மிகவும் நெகிழ்த்துகிறது. வருடாவருடம் காக்கி உடை... மனத்தைக் கசக்கிப்பிழியும் நினைவுகள்.. நேரடி வர்ணனையாய் எழுத்து மனம் தொடுகிறது. தீபாவளி நேரத்தில் வீட்டுக்கு வீடு உருவாகும் சங்கடத்தை மிக அழகாக எழுத்தில் காட்டிவிட்டீர்கள்.

  நம்முடைய பேரப்பிள்ளைகளின் காலத்தில் என்னென்ன மாறுதல்களைக் காணவேண்டுமோ... மனத்தை இப்போதே திடப்படுத்திக்கொள்ளவேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. அன்று முணுமுணுத்த நாம், காலங்கடந்த பிறகு இன்று நம் பெற்றோரின் அருமையை உணர்கிறோம். அவர்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகளை இப்போது நம்மால் உணரமுடிகின்றது. அதே போல் தான் நம் பிள்ளைகளும். அவர்கள் பெற்றோராகும் காலத்தில் நம் அருமையை உணர்வார்கள். இது காலந்தோறும் இருக்கக் கூடிய இடைவெளியே. நாம் எவ்வளவும் தான் வசதிகள் செய்து கொடுத்தாலும், அவர்களுடைய எதிர்பார்ப்பு அதைத் தாண்டியதாகத் தான் இருக்கும். அருமையான பின்னூட்டத்துக்கும், பாராட்டியமைக்கும் நன்றி கீதா!

   Delete
 11. தலைமுறை மாற, மாற மாறும் வழக்கங்கள்! எங்களுக்குக் கூட சில வருடங்கள் தீபாவளிக்கு சீருடைதான் புதுத்துணி!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் சில வருடங்கள் சீருடை, தீபாவளிக்குக் கிடைத்ததை வெளிப்படையாக இங்குப் பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்! ஒவ்வொருவருக்கும் இது போல் தீபாவளி உடைக்கான மலரும் நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்!

   Delete
 12. Replies
  1. தங்கள் வருகைக்கும் அருமையான பதிவு என்ற கருத்துக்கும் நன்றி யாழ்பாவாணன் அவர்களே!

   Delete
 13. வணக்கம்.

  எனக்கு வேறொரு பண்டிகை. அவ்வளவுதான் வித்தியாசம்.

  தன்னனுபவங்களில் உணர்விழைகளைச் சொற்கள் தொடும்பொது படைப்பு வெற்றிபெறுகிறது.

  வாழ்த்துக்கள்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

   Delete
 14. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete