நல்வரவு

வணக்கம் !

Friday, 11 September 2015

புதுக்கோட்டையில் கோலாகலத் திருவிழா!புதுக்கோட்டையில் 11/10/2015 பதிவர் விழா என்ற அறிவிப்பை அண்ணன்  நா.முத்துநிலவன் அவர்கள் வெளியிட்ட போது, பதிவர் பலர் நேரில் சந்திக்கும் சாதாரண நிகழ்வென்று தான் முதலில்  நினைத்தேன். 

ஆனால் விழாவைப் பற்றித் தொடர்ச்சியாக வந்த அறிவிப்புகளின் மூலம் இது சாதாரண சந்திப்பல்ல என்பது புரிந்தது.  விழாவின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் நான் சொல்வது உண்மையெனப் புரியும்:-
 1)    கவிதை ஓவியக் கண்காட்சி
(2)    பதிவர்களின் அறிமுகம்
(3)    தமிழிசைப் பாடல்கள்
(4)    நூல்வெளியீடுகள்
(5)    குறும்பட வெளியீடுகள்
(6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8)    பதிவர்களுக்கான போட்டிகள் – பரிசுகள்
(9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரை
(10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சிவிற்பனை       

புதுகை சகோதர சகோதரிகள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் போல் இணைந்து கவிஞர் தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து செயல்படும் விதமே விழா பிரும்மாண்டமாக இருக்கப் போகிறது என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது.

திட்டமிடலை இவர்களிடத்தில் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
விழாவுக்கான செயல்திட்டக் கூட்டம் போட்டு இவர்கள் அமைத்துள்ள குழுக்களின் பட்டியல் கீழே:-
1)    நிதி விளம்பரக் குழு
(2)    கவிதை-கண்காட்சிக் குழு
(3)    உணவுக் குழு
(4)    வலைப்பதிவர் கையேட்டுக் குழு
(5)    பங்கேற்போர் பட்டியல் தயாரிப்புக்குழு
(6)    விழா அன்று வருவோர் பதிவுக்குழு
(7)    நூல்-குறும்பட வெளியீட்டுக் குழு
(8)    மேடை நிர்வாகக் குழு
(9)    தங்குமிடம் வாகன உதவிக் குழு
(10)நேரலை ஒளிபரப்புக் குழு
(11)அழைப்பிதழ் தயாரித்து அனுப்பும் குழு
(12)நினைவுப்பரிசுக் குழு

வலையுலகில் தமிழில் எழுதும் பதிவர்களின் விபரங்களை ஒன்று திரட்டித் ‘தமிழ் வலைப்பதிவர் கையேடு 2015’ தயாரித்து உலகமுழுக்க பலரும் அறிய வேண்டும் என்ற உயரிய நோக்கில், அனைவருக்கும் வழங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். 

எனவே நீங்கள் வலைப்பதிவராக இருந்து, இவ்விழாவில் பங்கு பெற விரும்பினால், கீழே கொடுத்திருக்கும் இரு இணைப்புகளில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று வருகை படிவத்தை உடனே நிரப்பி அனுப்ப வேண்டும். 

நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லாதவர்கள் கூடத் தங்கள் வலைப்பூ விபரங்களை  கையேட்டிற்காக பதிவு செய்யலாம்.  உங்கள் வலைப்பூவின் பெயர், சாதனைகள், வெளியிட்டிருக்கும் நூல்கள், குறும்படங்கள், சிறப்பான பதிவுகள் உள்ளிட்ட விபரங்களைக் கொடுக்கலாம்.       
அதற்கான இணைப்புகள்:-  http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html#more

இவ்விழாவைப் பற்றி மேலும் விபரங்கள் அறிய:- வலைப்பதிவர் சந்திப்பு 2015

தங்குமிடம், சாப்பாடு, வாகன ஏற்பாடு என விழாவுக்கு எக்கச்சக்கமாக செலவாகும்.  எனவே நம்மால் முடிந்த நன்கொடைகளை அளித்து,  விழா சிறப்பாக நடைபெற உதவுவோம்!  

வலைப்பதிவர் திருவிழா-2015 நிகழ்விற்கென,
தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
அந்தக் கணக்கு விவரம் வருமாறு -
----------------------------------------------------------------------
NAME - MUTHU BASKARAN  N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
(படங்கள் - நன்றி இணையம்)


21 comments:

 1. அன்புச் சகோதரிக்கு வணக்கம். விழா அறிவிப்பு வந்தவுடன் விழாக்குழுவினர் மறக்க முடியாதபடி, வெளியூரிலிருந்து வந்த முதல் நன்கொடையே உங்களுடையதுதான். நன்றி சகோதரி. இப்போது விழாப் பற்றியும் விரிவாக எழுதியிருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தங்களை விழாவில் வரவேற்கக் காத்திருக்கிறோம். . இதுபோல நம் பதிவர்கள் விழாப்பற்றி எழுதிய பதிவுகளைத் தொகுத்து அந்த விழாத்தளத்திலேயே போடத் துவங்கி இதுவரை சுமார் 25பேர் எழுதியிருக்கிறார்கள். தங்கள் பதிவையும் அதில் நன்றியுடன் இணைக்கிறோம். நன்றி வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது படம் சேருங்கள்... அப்போதுதான் ஈர்ப்புடன் கவனிக்கப்படும்...இது உளவியல்தானே? இப்போது கூட இந்தப் பதவில் கூடச் சேர்க்கலாம். முயலுங்கள். நன்றி

   Delete
  2. அன்பு அண்ணனுக்கு வணக்கம். இந்தளவுக்கு எல்லோரையும் ஒரு குடும்பமாக ஒருங்கிணைத்துப் பதிவர் விழாவுக்குப் பாடுபடும் தங்களுக்கு மிகுந்த நன்றி. வெளியூரிலிருந்து என் தொகை முதலில் கிடைத்தது என்றறிய மகிழ்ச்சி. விழாவில் எல்லோரையும் சந்திக்க எனக்கும் ஆவல். என் பதிவையும் இணைப்பதற்கு மிக்க நன்றி. தாங்கள் கூறியபடி படங்களை இணைத்துவிட்டேன். மீண்டும் தங்களுக்கு என் நன்றி!

   Delete
 2. பதிவு அருமை சகோ வாழ்த்துகள்
  தமிழ் மணம்1

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி சார்! வாழ்த்துக்கும் அருமை எனப்பாராட்டியமைக்கும் மிக்க நன்றி!

   Delete
 3. அறிஞர்கள் அணி திரண்டால் - அதில்
  அணி அணியாகப் பதிவர்கள் பங்கெடுத்தால்
  புதுக்கோட்டை புகழ் உலகறிய
  உலகத்தார் தமிழறிய
  விழாச் சிறப்புற இடம்பெற
  எனது வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

   Delete
 4. தங்களின் தளத்திலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கடின உழைப்புக்கு முன் இதெல்லாம் சாதாரணம்; இதற்கெல்லாம் எதற்கு நன்றி தனபாலன் சார்!

   Delete
 5. விழா சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம்! உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி!

   Delete
 6. பகிர்வறிந்து மகிழ்ச்சி. அனைவருடைய ஈடுபாட்டோடும் புதுக்கோட்டை காத்திருக்கிறது என்பதை அறிவோம். சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா! உங்களைச் சந்திப்பதில் எனக்கும் மகிழ்ச்சி! கருத்துக்கு மிகவும் நன்றி!

   Delete
 7. தங்கள் அறிமுகம் அருமைம்மா,,,,,,,,,,
  விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி மகி!

   Delete
 8. ஆமாம் சகோதரி!
  பெரிய மாநாடு போல மனதுக்குள் கற்பனை விரிகிறது எனக்கு இங்கு!
  சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் இளமதி! பெரிய மாநாடு போலத் தான்! உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி!

   Delete
 9. புதுக்கோட்டையில் நிகழ இருக்கும் கோலாகலத் திருவிழாவினை முன்னதாகவே நேர்முகம் செய்ததைப் போல இருக்கின்றது..

  வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துவோம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை சார்! நேர்முகம் போல இருக்கின்றது என்ற பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

   Delete
 10. மிக அருமையான விபரங்கள் கலையரசி. :) நன்றி பகிர்வுக்கு :)

  ReplyDelete
  Replies
  1. மிக அருமையான விபரங்கள் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி தேனம்மை! புதுகையில் சந்திப்போம்!

   Delete