![]() |
மைனா |
தமிழகத்தில் பரவலாகக் காணப்படுவதால், எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான பறவை மைனா - MYNA
(STARLING) (Acridotheres tristis).
மைனா (Mynah) என்ற
ஹிந்தி பெயரின் மூலம் சம்ஸ்கிருதம்(Madana). நாகணவாய்ப்புள் என்ற பெயரில், நம் இலக்கியங்களில்
இடம் பெற்றிருக்கும் பறவை இதுவே.
இதன் உடல் காப்பிக்கொட்டை
நிறம்; தலை கறுப்பு; கண்ணைச் சுற்றி மஞ்சளாகவும், வாலுக்கடியில் வெண்மையாயும் இருக்கும். புறா, காகம், சிட்டுக்குருவி போல, மனிதர்கள் வசிக்குமிடங்களில்
வாழும். காலத்துக்கேற்றாற் போல் கிராமங்களில்
மட்டுமின்றி, பெரிய நகரங்களிலும் வாழ்வதற்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட பறவை.
பூச்சி, புழு,
பழம், தேன் என எல்லாமும் தின்பதால், இது ஓர் அனைத்துண்ணி.
மரப்பொந்து, கட்டிட
ஓட்டைகள், பாறை இடுக்குகள் ஆகியவற்றில் கூடு கட்டும். பழைய தாள், வைக்கோல், துணி ஆகியவை இவை கூடுகட்டப்
பயன்படுத்தும் பொருட்கள்.
ஆஸ்திரேலியாவில்
தெரியாத்தனமாய் இதனை அறிமுகப்படுத்தப் போய், அசுர வேகத்தில் வளர்ந்து, அக்கண்டத்தையே
நடுங்க வைத்துள்ளதாம். அங்குள்ள உள்ளூர் பறவையினங்களை
ஒடுக்கிவிட்டு, குறுகிய காலத்தில் பன்மடங்கு பெருகி ஆக்கிரமிப்பு நடத்தும் அழிவு சக்திகளில்
மிக முக்கிய இடத்தை இது பெற்றிருக்கிறது.
நம்மூரில் கரிச்சான்,
கழுகு, பருந்து போன்ற ஜாம்பவான்கள் இருப்பதால், இதன் ஜம்பம் இங்குப் பலிக்கவில்லை போலும்! ஒண்டப்போன ஆஸ்திரேலியாவில் இது ஆக்கிரமிப்பு நடத்தும்
விதத்தைச் சுவாரசியமாகப் பகிர்ந்திருக்கிறார் கீதா, ஒண்ட வந்த பிடாரிகள் - மைனாக்கள் என்ற இக்கட்டுரையில்.
தென்னிந்தியாவில்
ஏழு வகை மைனாக்கள் இருக்கின்றனவாம்.
கருந்தலை மைனா
(Brahminy Starling)
உச்சந்தலை, பிடரி
கறுப்பாகவும் வயிறும் நெஞ்சும் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். பெரும்பாலும் ஜோடியாகவே காட்சி தருகின்றது.
எதிர் வீட்டு மாடியில்
இரண்டு ஆண்டுகளாகக் குடியிருக்கிறது. யாருக்கும்
இதன் பெயர் தெரியவில்லை. ஜெகநாதன் எழுதிய பறவைகள்
அறிமுகக் கையேட்டில் இடம் பெற்றுள்ள படம் மூலம் இதை அறிந்துகொண்டேன்.
இது குடித்தனம்
நடத்தும் இடம் எது தெரியுமா? சிருஷ்டி கழிக்க
வைப்பார்கள் அல்லவா பொம்மை, அதனுள் தான்.
பொம்மையின் கொம்புகள்
இரண்டும் உடைந்துவிட, அதனைத் தம் வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்து விட்டது. எனவே உயரமான கட்டிடங்களில் வைக்கும் திருஷ்டி பொம்மையின்
கொம்புகளை மட்டும் உடைத்து வைத்து விட்டால், திருஷ்டியும் கழியும்; ஒரு பறவை குடும்பத்துக்கு
வாழ்விடம் கொடுத்த புண்ணியமும் கிடைக்கும்!
நன்றி:- பறவைகள்
அறிமுகக் கையேடு – ப.ஜெகநாதன் & ஆசை
முதல் மைனா படம் – நன்றி
இணையம்
வணக்கம் சகோ..,
ReplyDeleteவழக்கம் போலவே தெளிவான விளக்கத்துடன் கூடிய பதிவு.
மைனாதான் நாகணவாய்ப்புள் என்பதை உங்களின் பதிவு மூலமாகத்தான் அறிந்து கொண்டேன்.
சகோ. கீதமஞ்சரி அவர்களின் தளத்தையும் காட்டி இருப்பது இது குறித்த மேலதிகத தகவல்களை அறியத் துணைசெய்யும்.
த ம 1
நன்றி
தங்களின் முதல் கருத்துரைக்கும் த ம வாக்குக்கும் மிகவும் நன்றி சகோ!
Deleteமைனாக்கள் பற்றிய இன்றைய அறிமுகங்கள் + சுவாரஸ்யமான செய்திகள்.மைனா போலவே அழகாக உள்ளன.
ReplyDelete//எனவே உயரமான கட்டிடங்களில் வைக்கும் திருஷ்டி பொம்மையின் கொம்புகளை மட்டும் நாம் உடைத்து வைத்து விட்டால், திருஷ்டியும் கழியும்; ஒரு பறவை குடும்பத்துக்கு வாழ்விடம் கொடுத்த புண்ணியமும் கிடைக்கும்!//
மிகச்சுலபமாகப் புண்ணியம் தேடித் தரும் தகவல்களுக்குப் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
தங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி கோபு சார்!
Delete//ஒண்டப்போன ஆஸ்திரேலியாவில் இது ஆக்கிரமிப்பு நடத்தும் விதத்தைச் சுவாரசியமாகப் பகிர்ந்திருக்கிறார் கீதா, ஒண்ட வந்த பிடாரிகள் - மைனாக்கள் என்ற இக்கட்டுரையில். //
ReplyDeleteஅங்கும் படித்தோம். ரசித்தோம். வியந்து போனோம். அதை இங்கு சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் நன்று.
மிகவும் நன்று எனப்பாராட்டியமைக்கும் படித்து ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார்!
Delete//தென்னிந்தியாவில் ஏழு வகை மைனாக்கள் இருக்கின்றனவாம். //
ReplyDeleteஆச்சர்யமான பல தகவல்கள். அற்புதமான பறவைகள் பற்றிய பகிர்வு. தங்களின் இதுபோன்ற ‘கூர்நோக்கல்’ தொடரட்டும். வாழ்த்துகள்.
தங்களின் தொடர் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி கோபு சார்!
Deleteபுண்ணியம் கிடைப்பதற்குரிய காரணியாக
ReplyDelete"மைனா" திகழ்வது சிறப்பு.
பறவை கூர்நோக்கல் பதிவு வெகு சிறப்பு!
அனைவரும் அறிய வேண்டியதொரு அற்புதமான
பதிவினை தந்தமைக்கு பாராட்டுக்கள்.
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு
இப்பதிவு வெகு சிறப்பு எனப்பாராட்டியமைக்கும், த ம வாக்குக்கும் மிகவும் நன்றி வேலு சார்!
Deleteஒண்ட வந்த பிடாரிகள் ஏற்க்கெனவேபடித்திருக்கிறேன்.
ReplyDeleteசுவாரஸ்யமான தகவல்கள். எங்கள் ஏரியாவில் மரங்கள் நிறைய இருப்பதால் இவை காணக் கிடைக்கின்றன.
சுவாரஸ்யமான தகவல்கள் என்ற கருத்துக்கும், தொடர் வருகைக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்!
Deleteஅருமை... புண்ணியம் சேர்ப்போம்....
ReplyDeleteஅருமை எனப்பாராட்டியமைக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!
Deleteவணக்கம்
ReplyDeleteஅறிந்து கொண்டேன் .... வாழ்விடம் கொடுப்போம் பகிர்வுக்கு நன்றி த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்விடம் கொடுப்போம் என்று நம்பிக்கையூட்டும் கருத்துக்கும் த ம வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன்!
Deleteமைனாவின் படம் அழகு!.. மைனாக்கள் வெகு உரிமையுடன் நம்மிடம் பழக வல்லவை..
ReplyDeleteஆனாலும் ரொம்பவே உஷார்.. இதற்குக் கோபம் வந்து பார்த்திருக்கின்றீர்களா!...
கருத்துக்கு மிகவும் நன்றி துரை சார்! மைனாவை அடிக்கடிப் பார்த்திருக்கிறேனேயொழிய இதன் கோபத்தைக் கவனித்ததில்லையே! நீங்கள் கவனித்ததைப் பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் நாங்களும் அது பற்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். தங்களின் தொடர்வருகைக்கு மீண்டும் நன்றி சார்!
Deleteஅன்பு சகோதரி
ReplyDeleteவணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!
நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!
மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!
தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு
அழகான கவிதை மூலம் புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கும் தங்களுக்கு என் நன்றி உரித்தாகுக! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன். மிகவும் நன்றி வேலு சார்!
Deleteஇலங்கையில் தாங்கள் இட்ட முதல் படத்திலுள்ளது போல் தான் இந்த மைனா, பட்ட பனை, தென்னையுடன் மரப்பொந்துகளிலும் கூடு கட்டி வாழுகின்றன. சிலர் இதை வீட்டில் வளர்ப்பதையும் கண்டுள்ளேன். மனித ஒலிகளுடன் வீட்டு விலங்குகளின் குரல்களையும் வீட்டில் வளர்ப்பவை திரும்பச் சொல்லும் இயல்புடையவை.
ReplyDeleteஇந்தோனேசியக் காடுகளை அண்டிய நாடுகளில் வாழ்பவை அளவு, நிற வேறுபாடுடையவை.
அமேசன் காடுகளை அண்டிய நாடுகளிலும் இதைப் போல் ஒரு பறவை உள்ளது.
பொதுவாக அனைத்து மைனா இனமும் காகம், பருந்து போன்றவற்றை விரட்டி எதிர்க்கும் துணிவுடையவை என்பதை பல விபரணப் படங்களில் பார்த்துள்ளேன்.
அவுஸ்ரேலியாவுக்குக் கொண்டு சென்ற ஒட்டகம், முயல் , தானே படகில் சென்ற எலி பெருந்தொல்லை என்பது தெரியும், மைனாவும் பிரச்சனை என்பது உங்கள் பதிவு வாயிலாக அறிந்தேன்.
பூச்சி புழுக்களை விரும்பி உண்பதால் இது விவசாயியின் தோழன்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தொடர் வருகைக்கு நன்றி யோகன்! இலங்கையிலும் இதனை மைனா என்று தான் சொல்கிறார்களா என்றறிய ஆவல். சில இடங்களில் இதனை வீட்டில் வளர்ப்பதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். கிளியைப் போல இவை திரும்பச் சொல்லும் இயல்புடையவை என்பது எனக்குப் புதிய செய்தி. பூச்சிப் புழுக்களை உண்பதால் இது விவசாயியின் தோழன் என்பது மிகவும் சரி. உங்கள் விரிவான கருத்துப்பகிர்வுக்கு மீண்டும் நன்றி யோகன்!
Deleteமைனாவைப் பற்றி நுண்ணிய தகவல்கள் கலையரசி. அருமை. :)
ReplyDeleteவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)
தங்கள் வருகைக்கும், அருமை எனப்பாராட்டியதற்கும் மிகவும் நன்றி தேன்!
Deleteசித்திரைத் திருநாள் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்து சொல்வதில் மகிழ்கின்றேன்.
Deleteமைனாக்கள் பற்றிய பகிர்வுக்கும் கருந்தலை மைனாக்கள் பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றி அக்கா. என்னுடைய பதிவின் சுட்டியை இங்கு சுட்டியமைக்கும் மிகுந்த நன்றி. கருந்தலை மைனாக்களை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். பாப்பார மைனா என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். Brahminy Starling - ஐ அப்படியே யாரோ தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள் போலும். கருந்தலை மைனா மிகவும் பொருத்தமான பெயர். அவை குடியிருக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் வியப்பளிக்கிறது. கோடைக்கேற்ற குளுகுளு வாசஸ்தலம் மட்டுமல்ல மிகவும் பாதுகாப்பான இடமும் அல்லவா? புத்திசாலிப் பறவைகள்.
ReplyDeleteபாப்பார மைனா என ஆங்கிலத்திலிருந்து அப்படியே தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். நான் இப்பறவையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தான் முதல் தடவையாகப் பார்த்தேன். மைனா இனம் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வதால் தான் உயிர் பிழைத்திருக்கின்றன. மர்ங்கள் இல்லை எனக் கவலைப்படாமல் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கின்றன. கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா!
Deleteநாகணவாய்ப்புள் என்பதை என் தாத்தா நார்த்தாம்பிள்ளை என்பார். நார்த்தை மரத்துக்கும் இந்த மைனாவுக்கும் என்ன தொடர்பு என்று வியந்திருக்கிறேன். பிறகுதான் புரிந்து தெளிந்தேன்.
ReplyDeleteதவிட்டுக்குருவியைத் தான் என் அம்மா நார்த்தம் பிள்ளை என்று சொல்வார். நார்த்த மரங்களில் இருப்பதால் அப்படிச் சொல்கிறார் என நினைத்துக்கொள்வேன். உன் தாத்தா மைனாவை இப்படிச் சொல்வார் என்பது வியப்பாய் இருக்கிறது. நாகணவாய்ப்புள் தான் நார்த்தம் பிள்ளையாக மாறியதா என நிச்சயமாகத் தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி கீதா!
Deleteமைனாக்கள் பற்றிய தங்கள் பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமை எனப்பாராட்டியதற்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி!
Deleteமைனாவை வீட்டில் வளர்ப்பதுண்டு . கூண்டு மைனா வொன்று சில தமிழ்ச் சொற்களைக் கூறக் கேட்டிருக்கிறேன் .
ReplyDeleteமைனாவை வீட்டில் வளர்ப்பார்கள் என்றும் கிளிப்பிள்ளை போல் சொல்வதைத் திரும்பச் சொல்லும் ஆற்றல் பெற்றவை என்றும் பாரீஸ் யோகன் & உங்கள் பின்னூட்டங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். அறியாச் செய்திகளைத் தெரிவிப்பதற்கு என் நன்றி!
Deleteஎமது பகுதிகளில் இதை "அளுகவண்னானகுருவி "-என கூறுகிறார்கள் ஏனெனத்தெரியவி்ல்லை , நாகனவாய் என்பதே சரி என நினைக்கிறேன்
ReplyDeleteஎமது பகுதிகளில் இதை "அளுகவண்னானகுருவி "-என கூறுகிறார்கள் ஏனெனத்தெரியவி்ல்லை , நாகனவாய் என்பதே சரி என நினைக்கிறேன்
ReplyDeleteவாங்க சிவா சார்! நாகணவாய் என்பது தான் பேச்சுவழக்கில் இப்படி மருவியிருக்கும் என நினைக்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி!
Deleteமைனாக்கள் பற்றிய தகவல்கள் அருமை!!!
ReplyDelete