நல்வரவு

வணக்கம் !

Saturday, 15 May 2021

'சுட்டி உலகம்' சிறார் வாசிப்புக்கான வழிகாட்டி!


சுட்டி உலகம் சிறார் வாசிப்புக்கான வழிகாட்டி!   

என் 10 வயது குழந்தைக்கு, என்ன புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம் என்பது போன்ற கேள்வி, முகநூலில் அடிக்கடி கண்ணில் படுகின்றது.  இப்போது பெற்றோரிடம் வாங்கும் சக்தி இருக்கின்றது.  குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்பைப் பழக்க வேண்டும்  என்ற எண்ணமும் அதிகரித்திருக்கின்றது,

ஆனால் தமிழில் என்னென்ன சிறார் நூல்கள் சந்தையில் கிடைக்கின்றன?  எந்தெந்த பதிப்பகங்கள், சிறார் நூல்களை வெளியிடுகின்றன? என்பது போன்ற விபரங்கள் பலருக்கும் தெரியாததால், சிறுவர்களிடம் சரியான நூல்கள் சென்று சேர்வதில்லை. எனவே இதற்கு வழிகாட்டக்கூடிய இணையதளம் ஒன்று துவங்கிப் பெற்றோர், பதிப்பகங்கள், சிறார் எழுத்தாளர்கள் ஆகியோருக்கு உதவலாம் என்ற எண்ணத்தில், 2021 ஆம் துவக்கத்தில், நானும் கீதமஞ்சரி கீதா மதிவாணனும் சேர்ந்து, அதற்கான வேலைகளைச் செய்யத் துவங்கினோம்.  ஆனால் இடையில் குடும்பத்தில் ஏற்பட்ட இரண்டு நெருங்கிய உறவுகளின் இழப்புகளால், மனம் சோர்ந்து மூன்று மாதம், வேலை தள்ளிப்போயிற்று. 

இதோ, 10/05/2021 அன்று சுட்டி உலகம் வெற்றிகரமாகப் பிறந்து விட்டது.  இணைய தளத்துக்குச் சென்று பார்த்து, உங்கள் ஆக்கப்பூர்வ கருத்துக்களையும், ஆலோசனைகளையும்,  பதிவு செய்யுங்கள், நண்பர்களே! சுட்டி உலகம் சிறப்பாகச் செயல்பட, உங்கள் ஆதரவு என்றென்றும் தேவை.

உங்கள் ஆலோசனைகளைப் பதிவு செய்ய வேண்டிய மெயில் முகவரி:-

team@chuttiulagam.com

நன்றியுடன்,

ஞா.கலையரசி