உடலெனும்
வெளி- (பெண்ணும்
மொழியும், வெளிப்பாடும்) –அம்பை
கிழக்குப்
பதிப்பகம் - விலை – ரூ 140/-
தமிழில்
பெண்ணெழுத்து பற்றியும், பெண்ணியம் எப்படி வெளிப்பட்டது அதற்கு
எதிர்வினை எப்படியிருந்தது என்பதைப் பற்றியும், பெங்களூரில் உள்ள
கூவேம்பு பாஷா பாரதி பிரதிகாரா எனும் அமைப்பு, ஒரு புத்தகம் வெளியிட
விரும்பி, எழுத்தாளர் அம்பையிடம் கேட்க, அதற்காக அவர் எழுதிய நீண்ட கட்டுரை, ‘உடலெனும் வெளி,’
என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
