நல்வரவு

வணக்கம் !

Showing posts with label மின்னிதழ். Show all posts
Showing posts with label மின்னிதழ். Show all posts

Friday, 17 July 2020

குழந்தைகளுக்காகவே பூஞ்சிட்டு மின்னிதழ் உதயம்!




15/07/2020 கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்கள் பிறந்த நாள். அன்று மாலை பூஞ்சிட்டு வெற்றிகரமாகக் கூட்டை விட்டு, வெளிவந்து, சிறகடித்துப் பறந்துவிட்டது. தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாற்றில் பூஞ்சிட்டு சிறப்பான தடம் பதிக்கும் என்று நம்புகிறோம்.
அண்ணா நினைவு சிறார் சிறுகதைப் போட்டியில், பங்குப் பெற்ற எழுத்தாளர்கள் கூடி, குழுவாக இணைந்து, மிகக் குறுகிய காலத்தில், இந்த மின்னிதழைத் துவக்கியுள்ளோம். இதில் பெரும்பான்மையானவர்கள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும், அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால், முதல் இதழே அருமையாகவும், சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், வீட்டில் அடைபட்டிருக்கும் வாண்டுகள், வாசிப்பதற்குச் சுவையான கதைகள், இதில் உள்ளன. எளிமையான அறிவியல் சோதனை பக்கம், புதிர்ப்பக்கம், இயற்கை பற்றிய புரிதலை, அறிமுகப்படுத்தும், நம் தோழன் பக்கம் எனக் குழந்தைகளுக்குச் சுவாரசியமூட்டக்கூடிய பகுதிகள், இதில் சேர்க்கப்பட்டுள்ளன.