நல்வரவு

வணக்கம் !

Sunday, 22 November 2020

அம்மாச்சியும் மகிழம்பூக்களும் – சிறுகதைத் தொகுப்பு

 


ஆசிரியர்: கீதா மதிவாணன்

கோதை பதிப்பகம், திருச்சி.  செல் 91-9080870936. விலை ரூ200/-

திருச்சியில் பிறந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசிக்கும் கீதா மதிவாணன் அவர்களின், முதல் சிறுகதைத் தொகுப்பு இது.  ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசனின் சிறுகதைகளை, ‘என்றாவது ஒரு நாள்,’ என்ற தலைப்பில், ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.

இத்தொகுப்பில் 28 சிறுகதைகள் உள்ளன.  பத்தாண்டுகளுக்கு முன்னரே  எழுதப்பட்ட இக்கதைகள், ஏற்கெனவே பெங்களூர் புஸ்தகாவில் மின்னூலாக வெளிவந்திருந்தாலும், அச்சில் இப்போது தான், தொகுப்பாக வெளியாகியுள்ளது.  இக்கதைகளில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பாத்திரங்கள்,  அக்கம்பக்கத்திலும், நம்மூரிலும் அடிக்கடி நாம் சந்திக்கும் மாந்தர்களே.  இது அவருடைய முதல் தொகுப்பு என்பதால், சிறு வயது முதல் தாம் கண்டு, கேட்டு வளர்ந்த மாந்தர்களின் வாழ்க்கையைக் கதைகளாகப் படைத்துள்ளார்.  

இத்தொகுப்பில் என் மனதைத் தொட்ட கதை, ‘அம்மாச்சியும் மகிழம்பூக்களும்’.  இதுவே இத்தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.