நல்வரவு

வணக்கம் !

Sunday 24 October 2021

மந்திரக்குடை – சிறுவர் குறுநாவல் வெளியீடு

 


என் சிறார் குறுநாவல் ‘மந்திரக்குடை’ சென்னை பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் அண்மையில் வெளியிட்டுள்ளது.  ஏற்கெனவே அமேசானில் சிறார் நூல்களை மின்னூல்களாக வெளியிட்டிருந்தாலும், என் சிறுவர் நூல் அச்சில் வருவது இதுவே முதல் முறை.

எழுத்தாளர் உதயசங்கர் அவர்களும் சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களும் நூலைக் குறித்து மதிப்புரை எழுதியுள்ளார்கள்.  அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Tuesday 5 October 2021

சிறுவர்க்கான கதைப்போட்டி

 

சுட்டி உலகம் துவங்கப்பட்டதன்  முக்கிய நோக்கம், சிறுவர்களின் தமிழ் வாசிப்பை மேம்படுத்துவதே ஆகும்.  குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நவம்பர் 7 ஆம் தேதி துவங்குகிறது. 

அவரது நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சிறுவர்க்கான கதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என முடிவெடுத்துள்ளோம்..  வாசிக்க வாசிக்கத் தான் எழுத்து வசப்படும் என்பதால், பரிசுத் தொகையில் பாதி புத்தகமாகக் கொடுக்கப்படும்.

இப்போட்டியில் வயது 7 முதல் 15 வரையிலுள்ள குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  தமிழில் மட்டுமே கதை எழுத வேண்டும்.

சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்காற்றி வரும் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் ‘லாலிபாப் உலக’த்துடன் இணைந்து இப்போட்டியை நடத்தவுள்ளோம்.  கன்னிக்கோவில் இராஜா அவர்கள் ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ என்ற காணொளியைத் துவங்கிக் குழந்தைகளுக்குக் கதை எழுத சிறப்பான பயிற்சி கொடுத்து வருகிறார். 

இவரிடம் பயிற்சி பெற்ற ஹரிவர்த்தினி ராஜேஷ் என்ற நான்காம் வகுப்பு மாணவி, அண்மையில் தம் 9 வது பிறந்த நாளில், 9 கதைப்புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.  அவருக்கு எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்! சுட்டி உலகத்தில் அவருடைய ‘குகைக்குள் பூதம்’ என்ற புத்தக அறிமுகமும் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வாழ்த்துகிறோம்!  உங்கள் படைப்புகளை team@chuttiulagam.com   என்ற மெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.

மேலும் விபரங்களைச் சுட்டி உலகத்தில்  தெரிந்து கொள்ளலாம்:-