நல்வரவு

வணக்கம் !

Sunday, 29 December 2019

கடித இலக்கியத்தில் கி.ரா.வின் பங்களிப்பு - கட்டுரைதமிழின் மூத்த படைப்பாளியான கி.ராஜநாராயணன் அவர்கள், தமிழிலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.  சிறுகதை மற்றும்  நாவலாசிரியர், கட்டுரையாளர், நாட்டுப்புறக்கதை மற்றும் கரிசல் வட்டார வழக்கு அகராதியின் தொகுப்பாளர், பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர் என்ற பன்முகங்கொண்ட கி.ரா, கடித இலக்கியத்திலும், தம் முத்திரையைப் பதித்துள்ளார்.

ரோலக்ஸ் வாட்ச் நாவல் - வாசிப்பனுபவம்
ரோலக்ஸ் வாட்ச் நாவல் -  வாசிப்பனுபவம்
ஆசிரியர் - திரு சரவணன் சந்திரன்

2016 ஆம் ஆண்டு உயிர்மை வெளியிட்டுள்ள ரோலக்ஸ் வாட்ச் திரு சரவணன் சந்திரன் என்கிற சரவணக்குமார் எழுதிய இரண்டாவது நாவல்.  இவரது முதல் நாவல், ஐந்து முதலைகளின் கதை, பரவலான வாசக கவனத்தைப் பெற்றது.

நூல் அறிமுகம் - ’மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்’ -


நூல் அறிமுகம் - மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்’ -
(பழந்தமிழர் வாழ்வியல் பதிவுகள்)
ஆசிரியர்:-திரு.ந.முருகேசபாண்டியன்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்
சென்னை 044-26251968

செவ்வியல் இலக்கியம் குறித்து, அறிய விழைவோர்க்குப் பயனுள்ள புத்தகமிது.  மரபு ரீதியிலான விமர்சனத்துக்கு மாற்றாக, பின் நவீனத்துவ விமர்சன அணுகுமுறையில் அமைந்த 13 கட்டுரைகள், இதில் இடம்பெற்றிருக்கின்றன.

உடலெனும் வெளி- (பெண்ணும் மொழியும், வெளிப்பாடும்) –அம்பை
உடலெனும் வெளி- (பெண்ணும் மொழியும், வெளிப்பாடும்) –அம்பை
கிழக்குப் பதிப்பகம் - விலைரூ 140/-

தமிழில் பெண்ணெழுத்து பற்றியும், பெண்ணியம் எப்படி வெளிப்பட்டது அதற்கு எதிர்வினை எப்படியிருந்தது என்பதைப் பற்றியும், பெங்களூரில் உள்ள கூவேம்பு பாஷா பாரதி பிரதிகாரா எனும் அமைப்பு, ஒரு புத்தகம் வெளியிட விரும்பி, எழுத்தாளர் அம்பையிடம் கேட்க, அதற்காக அவர் எழுதிய நீண்ட கட்டுரை, ‘உடலெனும் வெளி,’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

‘துயில்’ நாவல் - வாசிப்பனுபவம்


துயில்நாவல்ஆசிரியர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன்
முதல் பதிப்பு டிசம்பர் 2010
உயிர்மை பதிப்பகம்

ஒரு மாதகாலம் மருத்துவமனையில், தாம் தங்கியிருந்த போது, நோயாளியின் படுக்கை எவ்வளவு வலி நிரம்பியது என்பதைப் பூரணமாக உணர்ந்ததாக முன்னுரையில் குறிப்பிடும் திரு எஸ்.ரா அவர்கள், நோய்மையுறுதலின் நினைவுகளையும், அதன் விசித்திர அனுபவங்களையும், தமது புனைகளமாகக் கொண்டிருப்பதாகவும்; வாழ்வனுபவங்களும்., புனைவும் இணைந்து உருவானதே இந்நாவல் என்றும் கூறுகிறார்.

Saturday, 7 December 2019

மழைப்பாடல்


வானம் பார்த்த வறண்ட நம் மண்ணில், நம் குழந்தைகள் “ரெயின் ரெயின் கோ அவே,” என்று மழையைப் போகச் சொல்லிப் பாடுவது, எவ்வளவு அபத்தம்? 
மழையை வா வாவெனப் வரவேற்றுப் பாடும் என்னுடைய இந்தப் பாடல் (14/07/2019 வாசகசாலை இணைய இதழில் வெளியானது..வான் மழையே ஓடி வா!
விண்ணமுதைப் பொழிய வா!
முகிலின் கொடையே ஓடி வா!
மகிழ்ந்தே உலகம் சிரிக்க வா! (வான்)

Wednesday, 4 December 2019

கி.ரா. எழுத்தில் நகைச்சுவையுணர்வுதமிழிலக்கியத்தில் நகைச்சுவை எழுத்து, மிகவும் குறைவே.  ஆனால் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன், கி.ராஜநாராயணன் அவர்களுக்கு நகைச்சுவை கலந்து எழுதுவது, கைவந்த கலை!

மெல்லிய நகைச்சுவை இழையோட, அவர் எழுத்தில் ஆங்காங்கே வெளிப்படும் கிண்டல், கேலி, நையாண்டி சில இடங்களில் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது.  அவர் மொழியில் சொல்வதானால், ‘சிரிப்பாணி அள்ளிக் கொண்டு போகும்!’

இயல்பிலேயே, அவர் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் என்பதை நண்பர்களுக்கு, அவர் எழுதிய கடிதங்கள் மெய்ப்பிக்கின்றன.