![]() |
தவிட்டுக்குருவி |
தவிட்டுக்குருவி - Yellow-billed Babbler (Turdoides affinis)
தோட்டங்களிலும்
புதர்ச்செடிகளிலும் அடிக்கடிக் காட்சி தரும் தவிட்டுக்குருவி, பெரும்பாலோர்க்குத் தெரிந்த
பறவை. உடலின் மேற்பகுதியும், தொண்டையும் சாம்பல்
நிறத்தில் இருக்கும், அலகு வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும். இதற்குக் கல்குருவி,
சிலம்பன் என்ற பெயர்களும் உண்டு.
பெரும்பாலும் நான்கு
அல்லது ஐந்து குருவிகள் சேர்ந்து கூட்டமாகக் காட்சியளிப்பதோடு, ஓயாமல் கத்திக் கொண்டே
இருக்கும். சமயத்தில் அணில் குரலுக்கும், இதன் ஓசைக்கும் எனக்குக் குழப்பம் ஏற்படுவதுண்டு.
பூச்சிகளையும் தானியத்தையும் உணவாகக் கொள்ளும்.
குறிப்பிட்ட உயரத்திற்கு
மேலோ, தொலை தூரத்துக்கோ தொடர்ச்சியாக பறக்க இயலாது என்பதால் வலசை செல்லாத பறவை. தரையில் தத்தித் தத்தி நடக்கும். அடர்த்தியான மரங்களில் கூடு கட்டும். எங்கள் மாமரத்தில் ஒரு முறை கூடு கட்டியது.
எங்கள் வீட்டு ஜன்னல்
கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து விட்டு வேறு குருவி என நினைத்துப் பறந்து பறந்து,
அடிக்கடிக் கண்ணாடியைக் கொத்திக்கொண்டே இருக்கும்.
அக்காக்குயில்(Common Hawk-Cuckoo)
இதற்கு அக்காகுருவி,
அக்கக்கா குருவி என்ற பெயர்களும் உண்டு. உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலும், வயிறு வெண்மையாகவும் இருக்கும். இக்குயிலை நான் பார்த்ததில்லை என்றாலும், இது பற்றி இப்பதிவில் சொல்லக் காரணமிருக்கிறது.
குயிலினத்தைச்
சேர்ந்த பறவை என்பதால் அடைகாத்துக் குஞ்சு பொரிக்காது. காக்கையின் கூட்டில் குயில் முட்டையிடுவது போல்,
தவிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்த பறவைகளின் கூட்டில் இந்த அக்காக்குயில் முட்டையிட்டுவிடுமாம். தவிட்டுக்குருவி தான் அதன் குஞ்சுகளை வளர்க்குமாம்.
இது சம்பந்தமாக
அருமையான இரு காணொளிகளைப் பார்த்து ரசித்தேன். அவசியம் நீங்களும் பாருங்கள்:-
இணைப்பு:- 1 https://www.youtube.com/watch?v=JtNHLtHbwxs
இணைப்பு:-
2 https://www.youtube.com/watch?v=SO1WccH2_YM
காணொளியில் நாணல்
கதிர்க்குருவி (Reed warbler) கூடு கட்டி முட்டை
யிட்டிருக்கிறது. அது வெளியே சென்றிருக்கும்
சமயம், குயில் வந்து ஒரு முட்டையை விழுங்கி ஏப்பம் விடுகின்றது. இன்னொன்றை அலகில் எடுத்துக்கொண்டு, தன் முட்டையைக்
கூட்டில் இட்டு விட்டுப் பறந்துவிடுகின்றது.
இந்த வேலையை ஓரிரு நிமிடங்களில் முடித்து விடுகின்றது!
முட்டை மாற்றப்பட்ட உண்மை அறியாத கதிர்க்குருவி
அடைகாக்கின்றது. மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே முட்டையிலிருந்து
வெளிவரும் குயில் குஞ்சு, பொரிக்காத மற்ற முட்டைகளைக் கூட்டிலிருந்து தன் முதுகால் அனாயாசமாகத் தூக்கி
வெளியே தள்ளிவிட்டுத் தான் மட்டும், மொத்த தீனியைத் தின்று வளர்கின்றது.
ஒண்ட வந்ததுமின்றிச் சொந்த குஞ்சுகளை வஞ்சகமாகக்
கொன்ற இந்தச் சாத்தானின் உண்மை ரூபம் அறியாத கதிர்க்குருவிகள், ஓடி
ஓடி உழைத்து உணவூட்டுகின்றன. பாவம் இந்தப்
பெற்றோர்!
(நன்றி:- பறவைகள்
அறிமுகக் கையேடு – ப.ஜெகநாதன் & ஆசை) (படங்கள் - நன்றி இணையம்) இதன் அடுத்த பகுதிக்குச் செல்ல
//எங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து விட்டு வேறு குருவி என நினைத்துப் பறந்து பறந்து, அடிக்கடிக் கண்ணாடியைக் கொத்திக்கொண்டே இருக்கும்.//
ReplyDeleteஇதைப்பார்க்க நமக்கு மிகவும் வேடிக்கையாகத்தான் இருக்கும். இதை வர்ணித்து எழுதியுள்ளதைப் படிக்கும் போதே சிரிப்பு வருகிறது.
>>>>>
முதல் பின்னூட்டத்துக்கும் கருத்து பகிர்வுக்கும் மிகவும் நன்றி கோபு சார்! எழுத்தை ரசித்தமைக்கு மிகவும் நன்றி!
Deleteஅக்காக்குயில் .... தவிட்டுக்குருவி .... பெயர்களே ஜோராக உள்ளன. படங்களும் ஜோர் ஜோர்.
ReplyDelete//ஒண்ட வந்ததுமின்றிச் சொந்த குஞ்சுகளை வஞ்சகமாகக் கொன்ற இந்தச் சாத்தானின் உண்மை ரூபம் அறியாத கதிர்க்குருவிகள், ஓடி ஓடி உழைத்து உணவூட்டுகின்றன.//
மிகவும் பாவம் தான் அந்தக் கதிர்க்குருவிகள்.
>>>>>
ஆமாம் சார்! சொந்தக் குஞ்சுகளை இழந்ததுமின்றி, கொன்ற குயில் குஞ்சுக்குச் சோறூட்டி வளர்க்கும் கதிர்க்குருவியைப் பார்க்கும் போது மிகவும் பாவமாய்த் தான் இருக்கிறது. கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி சார்!
Delete//அது வெளியே சென்றிருக்கும் சமயம், குயில் வந்து ஒரு முட்டையை விழுங்கி ஏப்பம் விடுகின்றது. இன்னொன்றை அலகில் எடுத்துக்கொண்டு, தன் முட்டையைக் கூட்டில் இட்டு விட்டுப் பறந்துவிடுகின்றது. இந்த வேலையை ஓரிரு நிமிடங்களில் முடித்து விடுகின்றது! //
ReplyDeleteஎன்னவொரு சாமர்த்தியம் பாருங்கோ !
பறவைகளை கூர்நோக்க சந்தர்ப்பங்கள் கிட்டாவிட்டாலும், தங்களின் இதுபோன்ற பதிவுகளையாவது கூர்நோக்கிப்படிப்பதில் ஓர் தனி மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள்.
பறவை கூர்நோக்கல் பதிவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன என்பதைப் படிக்க எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிகவும் நன்றி சார்!
Deleteதவிட்டுக் குருவியைப் பற்றியும் அக்கா குருவியைப் பற்றியும் - அழகான செய்திகள்..
ReplyDeleteஇந்த அக்கா குருவியின் குரலில் ஒருவித சோகம் கலந்திருக்கும். ஆறோரங்களில் மாலை வேளைகளில் கேட்கலாம்.. தவிரவும் இந்த அக்கா குருவிகள் கத்திக் கொண்டிருந்தால் மழை வரும் என்றும் சொல்வார்கள்!..
சொந்தம் இல்லை.. பந்தம் இல்லை..
வாடுது ஒரு பறவை..
அது தேடுது தன் உறவை!..
அன்னக்கிளி திரைப்படத்தில் - அன்னக்கிளி தனது சோகத்தைச் சொல்வது அக்கா குருவியின் வாயிலாகத்தான்..
அக்காக் குருவி பற்றிய செய்திகளை அறிந்தேன். மிகவும் நன்றி சார்! அன்னக்கிளியில் இந்தக் குருவி பற்றிய செய்தி நிறைய வரும். அந்தப்பாடலையும் நினைவுப்படுத்தி இங்குக் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி சார்!
Deleteகதிர்க்குருவியை- நாணற்காடுகளில் பார்த்திருக்கின்றேன்..
ReplyDeleteநம்மூரில் - கதிர்க்குருவியிடம் இத்தகைய கொடுஞ்செயல் செய்யும் குக்கூ குருவிகள் உள்ளனவா என்பது தெரியவில்லை..
குக்கூ - குஞ்சாக இருக்கும் போதே என்ன ஒரு வக்கிரம்!..
இப்படி முட்டைகள் பறிபோன பின்னும் கதிர்க்குருவிகளின் இனம் தழைக்கின்றதே அது எப்படி!..
வேறு ஏதேனும் வாழ்வியல் இருக்கும் போல!.. இயற்கையின் விசித்திரம்!..
குயிலினங்கள் எல்லாமே இப்படித்தான் மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றை நாம் பார்க்க முடியாது. பல மணி நேரம் காத்திருந்து வீடியோ எடுத்து இணையத்தில் இம்மாதிரியான காணொலிகளை உலவவிடுவதால் நம்மால் இது போன்ற அரிய நிகழ்வுகளைக் காண முடிகின்றது. குயில் முட்டையிடும் காலத்தில் இப்படி ஏதாவது ஒரு கதிர்க்குருவியின் கூட்டைத் தேடி இடும். அது இடாத காலங்களில் கதிர்க்குருவியின் முட்டைகள் பொரிக்கும் இல்லையா? அப்படித்தான் அந்த இனம் தழைக்கும் என நினைக்கிறேன். மீண்டும் என் நன்றி!
Deleteஇப்படி எல்லாம் நடக்கிறதா...?
ReplyDeleteஆமாம் சார்! குயில் குஞ்சு இப்படிச் செய்யும் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்தது இப்போது தான். இயற்கையின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று. மனிதர்களில் அழிவு சக்தி இருப்பது போல இயற்கையிலும் இருக்கிறது. நன்றி தனபாலன் சார்!
Deleteதங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை. இந்த அக்கக்கா குருவி கதைச்சொல்கிறேன் என்று தங்கள் பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன்.
ReplyDeleteஅந்தகதை
கோடைக்காலங்களில் ஆற்றுமணல் பரப்புகளில் தானியங்கள்,மிளகாய்,மல்லி போன்ற பொருட்களை காய வைப்பார்களாம். மாலை அவற்றை அள்ளிச்சென்ற பின் கீழே சிந்தியிருக்கும் பொருட்களை இக்குவிகள் கொத்தி தின்னவருமாம். அது தினமும் நடக்கும் நிகழ்ச்சி.
ஒருநாள் அக்கா குருவியும், தங்கை குருவியும் இவைகளைக் கொத்தி தின்றுகொண்டு இருக்கும்போது ஆற்றில் நீண்ட தூரம் அக்கா குருவி சென்று விட்டது. அதே நேரம் ஆற்றில் நீர் வரத்தொடங்கிவிட்டது. தங்கைக்குருவி மேலே பறக்கத்தொடக்கி, அக்காவைத் தெடத்தொடங்கியது,
ஆனால் பாருங்கள் அக்கா குருவி நீர் வந்ததைக் கவனிக்காமல் இருந்ததால், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. ஆனால் தங்கைக் குருவியோ, அக்காவைக் காணாமல் தேடிக்கோண்டே இன்னமும் ,,,,,,,,
இன்றும் ஆற்றின் கரையோரங்களில் இக்குருவியின் கத்தல் கேட்டால் ஆற்றில் தண்ணீர் வரும் என்பது நம்பிக்கை, அது தான் அய்யா துரை அவர்கள் சொன்னது
இந்த அக்கா குருவிகள் கத்திக் கொண்டிருக்கும்,
சொந்தம் இல்லை.. பந்தம் இல்லை..
வாடுது ஒரு பறவை..
அது தேடுது தன் உறவை!..
இது கதை, உண்மை பொய் இவைகளுக்கு ஏற்பு இல்லை.மக்களின் வாய்மொழிக் கதைகளுள் இதுவும் ஒன்று. நன்றி.
மனதில் இன்னமும் நிற்கின்ற கதை..
Deleteகாலையில் சோகம் வேண்டாமே.. என்று தான் - இந்தக் கதையைச் சொல்லவில்லை..
தஞ்சையில் இருக்கும் போது வடவாற்றின் கரைகளிலும் வெண்ணாற்றின் கரைகளிலும் -
அக்காவ்.. அக்காவ்!.. - என சோகம் ததும்பும் குரலைக் கேட்கும் போதெல்லாம் மனம் நெகிழ்ந்து பரிதவிக்கும்..
ஏனெனில் என் நெஞ்சமும் அக்காவைத் தேடுகின்றது..
மௌனமாகப் பாடுகின்றது!..
வாருங்கள் மகி! அக்கக்கா குருவியின் கதை சோகமயமாய் இருக்கின்றது. கதையே என்றாலும் உண்மையில் நடந்தது போல ஒரு சோகம். இன்று தான் இந்தக் கதையைத் தெரிந்து கொண்டென். கதையுடன் கூடிய பின்னூட்டத்துக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மகி!
Delete"அக்காவ்.. அக்காவ்!.. - என சோகம் ததும்பும் குரலைக் கேட்கும் போதெல்லாம் மனம் நெகிழ்ந்து பரிதவிக்கும்..ஏனெனில் என் நெஞ்சமும் அக்காவைத் தேடுகின்றது.."..மௌனமாகப் பாடுகின்றது!. .வாருங்கள் துரை சார்! உங்கள் மீள்வருகைக்கு என் நன்றி! அக்கா குருவியின் சோகத்தை விட உங்கள் அக்காவின் சோகம் மனதைக் கனக்கச் செய்கின்றது சோகத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி!
Deleteவணக்கம் அய்யா, இதனைத் தனியே ஒரு பதிவிடனும் என்று இருந்தேன். ஏற்கவே இவர்கள் பின்னூட்டத்தில் சொல்லிருந்தேன். எனக்கு பெரிதாக பறவைகள் பற்றியெல்லாம் தெரியாது. ஆயினும் எனக்கு இந்த குருவியைப் பிடிக்கும் கதையின் வழி. தங்களுக்கு நிறைவு கிடைக்கட்டும். நன்றியம்மா தங்களுக்கும்.
Deleteகதிர்க்குருவி பற்றிய பகிர்வு இனிமை கலை.. மேலதிகச் செய்திகளும் பின்னூட்டத்தில் அறிந்தேன் :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தேன்! இனிமை எனப்பாராட்டியதற்கு மீண்டும் என் நன்றி!
Deleteதவிட்டுக்குருவி பற்றி அறிவேன். அக்காக்குயில் பற்றி இப்போதுதான் அறிகிறேன். தவிட்டுக்குருவிகள் கூட்டத்துடன் அணில்களையும் எப்போதும் பார்த்திருக்கிறேன். கூர்ந்து கவனித்தால் அவற்றிடையே அழகான ஒரு நட்பிழை இருப்பதை உணரமுடியும்.
ReplyDeleteதவிட்டுக்குருவிகளின் கல்குருவி, சிலம்பன் எனும் மற்றப் பெயர்கள் நான் இதுவரை அறியாதவை. ஆங்கிலத்தில் இவற்றை seven sisters என்பதால் தமிழிலும் சிலர் ஏழு சகோதரிக் குருவிகள் என்று குறிப்பிடுகிறார்கள்.
அக்காக்குயில் பற்றியும் இப்போதுதான் அறிகிறேன். கூடு கட்டத் தெரியாவிட்டாலும் தந்திரமாய் பிற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டு அந்தப் பறவையினத்தின் சந்ததியை ஒழித்து தன் இனத்தைப் பெருக்கும் தந்திரம் அறிந்த இப்பறவைகளின் செயல் கண்டு வியப்புதான் மேலிடுகிறது.
பறவைகளின் அறிமுகத்துக்கும் சுவாரசியமான தகவல்களின் பகிர்வுக்கு நன்றி அக்கா.
தவிட்டுக்குருவிக்கும் அணிலுக்கும் உள்ள சிநேகத்தை இதுவரை நான் கவனித்ததில்லை. ஒரே சமயத்தில் இரண்டும் கத்தும் போது இது எதன் குரல் என்பதில் குழப்பமேற்படும். ஏழு சகோதரிகள் என்பது இதன் பெயரல்ல. தவிட்டுக்குருவி போலவே இன்னொரு குருவி இருக்கிறது. அதன் பெயர் தான் ஏழு சகோதரிகள். ஆங்கிலத்தில் Jungle babbler (Turdoides striata) பார்ப்பதற்குத் தவிட்டுக்குருவியைப் போலவே இருக்குமாம். காடுகளில் எப்போதும் கூட்டமாக வசிப்பதால் இப்பெயர். இதையும் எழுத நினைத்து விடுபட விட்டது. விளக்கமான பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி கீதா!
Deleteஅக்கா குருவி கதை பள்ளி நாள்களிலிருந்தே நாங்கள் ரசித்தது. கும்பகோணத்தில் நண்பர்களுடன் காவிரியில் தண்ணீர் வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போதே யார் முதலில் அக்கா குருவி சத்தம் போட்டதைக் கேட்டார்கள் என்று எங்களுக்குள் போட்டி வரும். மறு நாள் அந்தந்த இடங்களுக்குச் சென்று பார்ப்போம். ஏதோ ஒருவிதமான சோகத்தை அதனுடன் பகிர்ந்துகொள்வதுபோல எங்களுக்கு இருக்கும்.
ReplyDeleteநேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html
அக்கா குருவிக்கு இப்படிக் கதையிருப்பதை நான் பின்னூட்டங்களின் வாயிலாகவே அறிந்து கொண்டேன். நம் வாழ்வோடு சம்பந்தப்பட்ட இக்குருவியை அவசியம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. உங்கள் நினைவலைகளைப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. விரைவில் நேர்காணல் வாசிக்க வருவேன். மிகவும் நன்றி ஐயா!
Deleteவணக்கம் சகோ.
ReplyDeleteவழமைபோல பல புதிய தகவல்களுடன் இம்முறை காணொளிக்காட்சிகளையும் இணைத்து மிக அருமையாகக் கொண்டு சென்று இருக்கிறீர்கள்.
பார்த்தேன். பார்த்தோம்.
எப்படி அந்தப் பறவைக்குக் கண்விரியும் முன்பே, இவ்வளவு சுயநலம்..!
வாழ்தலுக்கான போராட்டம்தான்.
பதட்டமாகவும் வருத்தமாகவும்தான் இருந்தது காணொளி காண!
இயற்கையை நாம் ஒன்றுமே செய்ய முடியாது என்றபோதும்.!
செய்ந்நன்றி கொன்றலுக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு இருக்கமுடியுமா என்ன..!!
த ம 2
ரொம்ப வேதனையாகவும் இருந்தது. குயில் குரல் மட்டும் தான் இனிமை போல . குஞ்சுக்கே இவ்வளவு கல்மிஷம்
Deleteவணக்கம் சகோ. நீங்கள் சொன்னது போல் செய்ந்நன்றி கொன்றலுக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. கண் கூடத் திறக்காத அந்தக் குஞ்சு என்னமாய் முட்டைகளை வெளியே தள்ளுகிறது! தாய்க்குருவி செய்வதறியாது சோகத்துடன் முட்டையைத் தொடர்ந்து ஓடி ஓடிப் பார்த்த காட்சி மனதை வருத்தியது. ஒரு வேண்டுகோள் சகோ! உங்கள் கற்பனை குதிரையை ஓட விட்டு நீங்கள் பதைத்த இந்தக் காட்சியை விளக்கி ஒரு கவிதை எழுதித் தாருங்களேன்! கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி சகோ!
ReplyDeleteமானிடர்களுள் இருப்பதுபோல் பறவைகளிலும் தன்னலம் , சூழ்ச்சி , வஞ்சகம் , ஏமாற்று முதலானவை காணப்படுவது வியப்பு தருகிறது . ஏமாளிகளும் அங்கிருக்கின்றன .
ReplyDeleteசரியாய்ச் சொன்னீர்கள். காணொளியைப் பார்த்த போது மிகவும் வியப்பாயிருந்தது. கூடவே குயில் குஞ்சு முட்டைகளை வெளியே தள்ளும் போது நமக்குக் கோபமாக வருகிறது. பாவம் அந்தக் கதிர்க்குருவி! கருத்துக்கு மிகவும் நன்றி!
ReplyDeleteஅன்புள்ள சகோதரி அவர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் தளத்தின் ஒரு சில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (04.06.15) அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2015/06/4.html
வலைச்சரத்தில் என் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தியைத் தெரிவித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! தங்கள் வருகைக்கும், பாராட்டு+வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
Deleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/4.html#comment-form
திருமதி. கலையரசி அவர்கள்
வலைத்தளம்: ஊஞ்சல்
http://unjal.blogspot.com/2011/12/blog-post_27.html
ஐரோப்பா பயண அனுபவங்கள்
’மூன்றாம் கோணம்’ மின் இதழ் போட்டியில்
பரிசுபெற்ற மிக அருமையான கட்டுரை
http://unjal.blogspot.com/2015/04/blog-post.html
சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க
நாம் என்ன செய்ய வேண்டும்?
http://unjal.blogspot.com/2014/02/blog-post_9.html
எதிர் வீட்டுத் தோட்டத்தில்
http://unjal.blogspot.com/2014/01/blog-post_14.html
http://unjal.blogspot.com/2014/01/ii_5057.html
http://unjal.blogspot.com/2014/01/iii.html
கோலங்கள்
http://unjal.blogspot.com/2012/03/blog-post_12.html
பெண் என்னும் இயந்திரம்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
வாங்க வேலு சார்! வலைச்சர அறிமுகம் பற்றிய செய்தியை அறிவித்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் சிரந்தாழ்ந்த நன்றி!
Deleteஅட கடவுளே பிஞ்சிலேயே நஞ்சா.அக்கா குருவி தாயும் பிழை சேயும் பிழை. மற்ற முட்டைகளை தள்ளி விடும் போது கோபம் தான் வருகிறேது.எத்தனை வில்லத்தனம் நிறைந்தது என்று. நன்றி நன்றி !பதிவுக்கு. வாழ்த்துக்கள் தொடர ..!
ReplyDeleteபிஞ்சிலேயே நஞ்சு; தாயும் பிழை சேயும் பிழை என்ற உங்கள் கருத்தைப் பெரிதும் ரசித்தேன். வாழ்த்துக்கு மிகவும் நன்றி இனியா!
Deleteசகோதரி...
ReplyDeleteஊமைக்கனவுகள் தளம் மூலம் உங்கள் தளம் கண்டேன்...
பால்ய நினைவுகள் தூண்டிய பதிவு !
சிறுபிரயத்தில் எங்கள் வீட்டு தோட்டம் முழுவதும் தத்தித்தாவிய இந்த குருவிகள் இன்று அரிதாகிவிட்டன... தோட்டங்களை போலவே !!!
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
அன்புச் சகோதரருக்கு வணக்கம். முதல் வருகைக்கு என் நன்றி. உங்கள் எழுத்தை நான் ஏற்கெனவே சுவைத்திருக்கிறேன். தமிழன் என்று சொல்லடா, தமிழில் பேசடா என்னை மிகவும் கவர்ந்த பதிவு. நான் வலைச்சர ஆசிரியராயிருந்த போது அந்தப் பதிவை அறிமுகப்படுத்தினேன். இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_30.html
ReplyDeleteஎன் பதிவு உங்கள் இளம்பருவ நினைவலைகளைத் தூண்டிவிட்டது அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது போல இப்போது பறவைகளும் தோட்டங்களும் அருகித் தான் போய்விட்டன. உங்கள் பதிவுக்கு விரைவில் வந்து கருத்திடுவேன். மீண்டும் உங்களுக்கு என் நன்றி.
மைனா அளவை ஒத்திருக்கும்
ReplyDeleteமங்கிய சாம்பல் நிறமிருக்கும் - உறவும்
மனிதர் போலக் கொண்டெங்கும்
மகிழ்வுடன் வாழும் தவிட்டுக்குருவி !
கூட்டமாக மரங்களின் மேலே
கூடிக் குலாவிக் களித்திருக்கும் - தினம்
கும்பலாகவே நிலத்தில் இறங்கிக்
குப்பைகள் கிளறிப்புழு பூச்சுண்ணும் !
மறைவாய் மரத்தில் ஆண்குருவி
மனைவாழ் கூட்டினை அமைத்துவிடும் - பெண்
நீலநிறத்தில் முட்டைகள் இட்டு
நித்தம் அடைதனைக் காத்துவரும் !
இளங்குஞ்சுகள் கூட்டில் பொரித்தவுடன்
இரையினை உறவுகள் ஊட்டுவதால் - தினம்
ஏழு சகோதரிகள் என்னும் பெயரால்
எங்கும் அழைப்பர் ஆங்கிலத்தில்.!
உறவுகள் இன்றி வாழ்வில்லை
உணர்ந்தால் எமக்கும் தாழ்வில்லை - இந்தப்
பறவைகள் போல இருந்திட்டால்
பாரில் அனாதைகள் எங்குமில்லை !
பறவைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் அருமை அருமை தொடர வாழ்த்துக்கள்
வாங்க சீராளன்! உங்கள் வருகைக்கு என் நன்றி! அருமையான கவிதையே உங்கல் முதல் பின்னூட்டமாய் அமைந்தது கண்டு மகிழ்ச்சி. உங்கள் தளத்தில் சில கவிதைகளும் வாசித்தேன். அருமையாய் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் கலையரசி !
Deleteஎன் ஒரு வலைப்பக்கம்தானே வந்திருக்கிறீர்கள் இன்னொன்றும் இருக்கு வந்து பாருங்கள் நன்றி !
http://soumiyathesam.blogspot.com/