“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப்
போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு
மூன்று பரிசுகள்!
முதல்
பரிசு ரூ.5,000
இரண்டாம்
பரிசு ரூ.3,000
மூன்றாம்
பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக ஐந்து
போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1) கணினியில்
தமிழ்வளர்ச்சி- கட்டுரைப்
போட்டி-கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள் -ஏ4 பக்க அளவில் 4பக்கம். இலக்கிய நயமான
தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2) சுற்றுச்சூழல்
விழிப்புணர்வு - கட்டுரைப்
போட்டி -சுற்றுச்சூழல்
அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு
ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல்
வேண்டும்
வகை-(3) பெண்கள்
முன்னேற்றம் - கட்டுரைப்
போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4
பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல்
வேண்டும்
வகை-(4) புதுக்கவிதைப்
போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின்
தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5) மரபுக்கவிதைப்
போட்டி- இளைய
சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி.அழகொளிரும்
தலைப்போடு.
போட்டிகளின் விதிகள்
பற்றியறிய:- வலைப்பதிவர் சந்திப்பு 2015
போட்டியில் பங்கு
பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தங்களின் பங்களிப்பு அருமை சகோ
ReplyDeleteதமிழ் மணம் 1
பதிவிட்டவுடன் சுடச்சுட பின்னூட்டம் தந்தமைக்கு மிகவும் நன்றி கில்லர்ஜி சார்!
Deleteவாக்கு ஏன் விழவில்லை
ReplyDeleteஓகே ஆகி விட்டது
Deleteகலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும், வெற்றி பெறப் போகிறவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
ReplyDeleteதம+
வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!
Deleteபரிசு மழையில் நனைவோம்.
ReplyDeleteஆமாம் ஐயா! தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி!
Deleteதங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
ReplyDeleteமிகவும் நன்றி தனபாலன் சார்!
Deleteஉலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டிகளின் விவரங்களைத் தங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி..
ReplyDeleteமகிழ்ச்சியில் பங்கு கொண்டமைக்கு மிகவும் நன்றி துரை சார்!
Deleteஆஹா தங்களின் பகிர்வும் அருமை சகோ,
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமை எனப்பாராட்டியமைக்கு நன்றி மகி! நீங்கள் வருகிறீர்கள் தானே?
Deleteபுதுகை பதிவர் சந்திப்புத் திருவிழா பற்றிய உடனுக்குடன் தகவல்களுடன் வலைத்தளம் களைகட்டிநிற்கிறது. ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஒத்துழைப்பாளர்களுக்கும் இனிய பாராட்டுகள். விழா சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கீதா!
DeleteWhat a great heart
ReplyDeletePranam for great gesture.. Pondy sivam