என் வீட்டுத் தோட்டத்தில் அவ்வப்போது எடுத்த
புகைப்படங்களின் தொகுப்பு
< தங்க மஞ்சள் அரளியில்
செடி முழுக்க கொத்து கொத்தாகப்
பூத்து மஞ்சள் காடோ என
அதிசயிக்க வைக்கும் காட்சி!
அதில் ஒரே ஒரு கொத்து
மட்டும் >
< இரங்கூன் கிரீப்பர் என்று சொல்லப்
படும் இக்கொடி மேலிருந்து சரம்
சரமாகக் கீழே தொங்கும் இரகம்!
வாசலுக்கு அழகு சேர்க்கும்!
இரவில் மலரும் போது >
வெண்மையாகவும் பகலில் ரோஸ்
நிறமாகவும் மாறும். >
< மரமாக வளரக்கூடிய இதன் பெயர்
தெரியவில்லை ;போன்சாய் போல
தொட்டியில் வளர்த்த போது
மலர்ந்தது இது:
இதில் வெண்ணிறத்தில்
பூக்கும் வகையும் உண்டு.>
>கிறிஸ்துமஸ் மலர் என்று சொல்லப்
படும் இச்செடியைக் கொடைக்
கானலிருந்து கொண்டு வந்தேன்.
டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்
சமயத்தில் மலர்வதால் இப்பெயர்
போலும்!
இதன் தாவரவியல் பெயர்
EUPHORBIA PULCHERRIMA
இருப்பது தான் இதன் பூவாம்.
அழகில்லாத இதன் மலர்களுக்கு
மகரந்தசேர்க்கை நடைபெற
வேண்டும் என்பதற்காக செடி பூக்கும் மாதத்தில் பூவைச் சுற்றியுள்ள இலைகள் மட்டும் பச்சை நிறத்தை மாற்றிக் கொண்டு இது போல் கண்ணைக் கவரும் அழகிய வர்ணங்கள் பூண்டு, வண்டுகளை ஈர்க்குமாம்! என்னே இயற்கையின் விந்தை!
<அதிக நீர் தேவைப் படாத கள்ளிச்
செடி வகையைச் சேர்ந்தது இது.
>
பூக்கும் காலத்தில் இச்செடிகளை
வரிசையாக வைத்தால் கண்
கொள்ளாக் காட்சியாயிருக்கும்.