நல்வரவு

வணக்கம் !

Saturday, 25 February 2017

என் பார்வையில் - வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் (சிறுகதைத் தொகுப்பு)ஆசிரியர்:- திரு. வை.கோபாலகிருஷ்ணன்
வெளியீடு:- திருவரசு புத்தக நிலையம்

திரு வை.கோபு சாரின் இரண்டாவது தொகுப்பான இதில், 14 சிறுகதைகள் உள்ளன.

நகைச்சுவை இழையோடக் கதை சொல்வது, ஆசிரியரின் தனித்திறமை என்று முந்தைய பகுதியில் எழுதினேன் அல்லவா, அதை இத்தொகுப்பில் உறுதிப்படுத்தும் கதை, “பல்லெல்லாம், பஞ்சாமியின் பல்லாகுமா?”

அதிலிருந்து கொஞ்சம், நீங்களும் சுவைக்க:-

பஞ்சாமி வாயைத் திறக்காமலேயே, நாம் அவரின் பற்களைத் தரிஸிக்க முடியும்பற்களின் வளர்ச்சியில், அவ்வளவு ஒரு அபரிமிதமான முன்னேற்றம்! அவரின் மேல் வரிசைப் பற்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ, அதில் தேங்காய் திருவ வேண்டும் போல், ஒரு எழுச்சி ஏற்படும். அவருடைய மிகப்பெரிய பற்கள், சில துணி துவைக்கும் பாறாங்கற்களை நினைவு படுத்தும்ஒன்றில் துணியைக் கசக்கிப் பிழிந்து வைக்கலாம்மற்றொன்றில், துணியையே அடித்துத் துவைக்கலாம் போல அருமையாகவும், சொர சொரப்பாகவும் இருக்கும்………….”.


“……………… பஞ்சாமியின் வாய் வெற்றிலை பாக்குப் போடாமலேயே, நல்ல சிவப்பாகிப் போனது, இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கை போலவிடுதலை விரும்பிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதப்பட்ட கறைகளும், காரைகளும், அடக்கி ஒடுக்கி, அகற்றப்பட்ட்தால், தங்கள் சொத்தை இழந்த, அப்பாவி மக்கள் போல, பற்கள் யாவும் பலகீனமாகி ஒருவித பாதுகாப்போ, ஒற்றுமையோ, பலமோ, அரவணைப்போ இல்லாமல், அகதிகள் போல ஒருவித ஆட்டத்துடனும், நடுக்கத்துடனும் விளங்கின…………….”.கோபு சாரின் கதை மாந்தர்களில் பெரும்பாலோர், பத்துப்பாத்திரம் தேய்க்கும், காய்கறி விற்கும், வறுமையில் உழலும், ஏழை எளியவர்கள்; எகிறும் விலைவாசியினால், வரவுக்குள் செலவை அடக்க வழியின்றித் தவிக்கும், அலுவலகங்களில் வேலை பார்க்கும், நடுத்தர வர்க்கத்தினர், ஆகியோர் தாம்எனவே அன்றாட வாழ்க்கையில், இவர்கள் படும் அல்லல்களும், போராட்டங்களும், மட்டுமின்றி, அவர்களுக்கிடையே அரும்பும் காதலும், கதைகளில் யதார்த்தத்துடன் விவரிக்கப்படுகின்றன.

மாதங்களில் அவள் மார்கழி’, ‘சொந்தம்’, ஆகிய இரு கதைகளின் நாயக, நாயகிகள் காய்கறி விற்பவர்கள்பத்துப்பாத்திரம் தேய்க்கும் பார்வதியின் சிரமங்களைச் சொல்வதுநம்பிக்கை’.

'மனிதனைத் தரிஸிக்க,' என்றொரு கதை:-

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாராயணனுக்குத் திடீரென்று சிறுநீரகப்பிரச்சினையால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர வேண்டியதாகிறதுதிட்டமிட்டு வரவுக்குள் செலவு செய்து வந்த அவராலும், எதிர்பாராத இந்த அறுவைச்சிகிச்சைக்குப் பணம் திரட்ட முடியவில்லைஇன்றைக்கும், நடுத்தரக் குடும்பங்களின் நிலை இது தானே?

கடவுள், கோயில் போன்ற ஆன்மீக  விஷயங்களுக்கு, எந்த நன்கொடையும் தராத, அலுவலக நண்பர் தமிழ்மணி தாம், ஆபத்து சமயத்தில், நாராயணனுக்கு உதவி செய்கிறார்மனிதனை, மனிதன் நேசிக்க வேண்டும்; மனித நேயம் மலர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் இக்கதை, என்னை மிகவும் கவர்ந்தது.     

முதியோரிடம் ஆசிரியர் வைத்திருக்கும் அன்பும், அக்கறையும், மரியாதையும் இவர் கதைகளில் வெளிப்படுகின்றன.  ‘நகரப்பேருந்தில் ஒரு கிழவி’, ‘நாங்களும் குழந்தைகளே,’ என்ற இரு கதைகளும், இதற்கு எடுத்துக்காட்டுகள்.

மனத்தில் ஊனம் இல்லாதவரை, உடல் ஊனம் ஒரு பிரச்சினையில்லை என்ற கருத்தை, வலியுறுத்தும் விதமாகப் பேசும் திறனற்ற, மாற்றுத் திறனாளிகளைக் கதாநாயகிகளாகப் படைத்து, அவர்களை இளைஞர்கள் திருமணம் செய்ய விழைவதாகக் காட்டியிருப்பது, வரவேற்கத்தக்கது;-
அக்கதைகள்:- 'மனோவின் கனவு,' & 'வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்'.

சிறுவயதில் நாம் ஆசைப்பட்டு, வறுமையினால் நிறைவேறாத ஆசையைச் சொல்லும் கதை, ‘காலம் மாறிப்போச்சு’.  இது ஆசிரியரின் சொந்த அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது என்பதால், மனதை நெகிழச் செய்கிறது.

நாம் எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், சமயத்தில்     முட்டாளாகிவிடுவோம் என்பதை, 'முன்னெச்சரிக்கை முகுந்தன்,' கதையின் எதிர்பாராத முடிவு விளக்குகிறது.  முடிவு தெரியும் போது, நாமும் ஏமாந்தது போல், ஓர் உணர்வு!

இந்நூல் திருச்சி மாவட்ட பொது நலப்பணி நிதிக்குழு அமைப்பின் 2009 ஆம் ஆண்டுக்கான, இரண்டாம் பரிசைப் பெற்றதுடன் ஆசிரியருக்குச்   ‘சிந்தனைப் பேரொளி,' விருதும், பொற்கிழியும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரால் அளிக்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம்!
(தொடரும்)

38 comments:

 1. 1)

  ’என் பார்வையில் - வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் – பகுதி 2’ என்ற தலைப்பினில் என்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு நூலான ‘வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்’ பற்றி தங்களின் தனிப்பாணியில், தனிப்பதிவாக எழுதி வெளியிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.

  இந்த நூலை நான் வெளியிட்டு சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மேல் [August 2009] ஆகிவிட்டதால், நான் ஒரு பிரதியினை இப்போது என்னிடம் கைவசம் வைத்துக்கொண்டு, தாங்கள் எழுதியுள்ள ஒருசில கதாபாத்திரங்களின் பெயர்களை [உதாரணமாக ‘நம்பிக்கை’யில் வரும் ’பார்வதி’] நானே மறந்துவிட்டதால், இப்போது ஒப்பிட்டுப்பார்த்து மகிழ்ந்து கொண்டேன்.

  என் எழுத்துக்களைப் பாராட்டி, தங்களின் வலைத்தளத்தில் எழுதி பெருமைப்படுத்தியுள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிக் கருத்துரைத்திருப்பதற்கும் நன்றி கோபு சார்!

   Delete
 2. 2)

  //இந்நூல் திருச்சி மாவட்ட பொது நலப்பணி நிதிக்குழு அமைப்பின் 2009 ஆம் ஆண்டுக்கான, இரண்டாம் பரிசைப் பெற்றதுடன் ஆசிரியருக்குச் ‘சிந்தனைப் பேரொளி' விருதும், பொற்கிழியும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரால் அளிக்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம்!//

  ஆமாம் மேடம். 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. தா. சவுண்டையா I.A.S., அவர்கள், தமிழ் இலக்கியங்களில் தானே மிகவும் ஈடுபாடு கொண்டவராகவும், திருச்சி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து அவ்வப்போது ஊக்கமும் உற்சாகமும் தருபவராகவும், அவரே திருச்சி மாவட்ட பொது நலப்பணி நிதிக்குழுவின் தலைவராகவும் இருந்து அரும்பணியாற்றியுள்ளார்கள்.

  இந்த விழாவில் நான் 17.01.2010 அன்று, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் (DISTRICT COLLECTOR) மூலம் கெளரவிக்கப்பட்ட விஷயம் மறுநாள், ‘THE HINDU' உள்பட பல பிரபல தினசரி நாளிதழ்களில் முக்கியச் செய்தியாக வெளிவந்திருந்தது, மேலும் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக இருந்தது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஹிந்து நாளிதழ் உட்பட பிரபல நாளிதழ்களில் தாங்கள் கெளரவிக்கப்பட்டது முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டதறிந்து மகிழ்ந்தேன். இத்தகவலைத் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி சார்!

   Delete
  2. Reference Link:

   http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Tamil-scholars-writers-honoured/article15963971.ece

   'THE HINDU' - JANUARY 19, 2010

   TAMIL NADU Tamil scholars, writers honoured

   TIRUCHI: Transport Minister K.N. Nehru honoured Tamil scholars A.V. Rajagopalan and S. Sathiyaseelan with Tamil Mamamani Awards for lifetime achievement.

   He appreciated the district welfare committee for selecting the best Tamil books published during the year 2009 and for providing them with cash awards to the writers of these books. He also praised the works of the writers in bringing out good books in Tamil.

   Mr. Rajagopalan, Mr.S.Sathiyaseelan, Bharathidasan University Vice-Chancellor M.Ponnavaikko, Tiruchi Mayor S.Sujatha, Tiruchi Corporation Commissioner T.T.Balsamy and others spoke.

   Cultural programmes, including ‘thappattam,’ ‘karagaattam,’ ‘kolattam,’ ‘oyilattam’ and other folk dances, were organised.

   The following Tamil books were selected by the district welfare committee as the best books published during the year 2009 and the writers were given cash awards in five categories at the function:

   1) Kavidai Thoguppugal category:

   First prize: Pulavar M.Selvarasu for Thaazhisayil Tamizhmarai;

   Second prize: P.Sethumadhavan for Pulan Vizhippu.

   2) Katturai Thoguppugal category:

   First prize: Dr.M.Arunachalam for Tamizhpudu Kavidaigalil Sutruchoozhal Vizhippunarvu;

   Second prize: A.Savarimuthu for Vidiyalai Nokki Kalappirar Varalaru.

   3) Sirukathai Thoguppugal category:

   First prize: Indrajith for Sevala Kaalai;

   Second prize: Vai.Gopalakrishnan for Varnam Theettapadaatha Oviyangal.

   4) Natakam category:

   First prize Muthu Velazhagan for Janma;

   Second prize: Tiruchi George for Pandavi.

   5) Maruthuva Ariviyal category:

   First prize: Bhooma Ponnavaikko for ‘Samayal Ulagam’;

   Second prize: Manoj for `Moolai Mudhal Mooladhaaram Varai.’

   Besides, 19 other Tamil writers were given special certificates for their works.

   Delete
  3. 3) Sirukathai Thoguppugal category:

   First prize: Indrajith for Sevala Kaalai;

   Second prize: Vai.Gopalakrishnan for Varnam Theettapadaatha Oviyangal. ஹிந்துவில் வந்த செய்தியைத் தேடிப்பிடித்து இங்குக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்! பரிசுக்குப் பாராட்டுகள்!

   Delete
 3. 3)

  என் மேற்படி இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள மொத்தக்கதைகள்: 14.

  அவற்றில் என் வலைத்தளத்தினில் இதுவரை வெளியிடப்பட்டுள்ளவைகளுக்கான இணைப்புகளை மட்டும் இங்கு கீழே வரிசையாகக் காட்டியுள்ளேன் ..... ஆர்வத்துடன் படிக்க விரும்புவோரின் வசதிகளுக்காக மட்டுமே.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. கதைகளுக்கான இணைப்புகளைச் சிரமம் பாராமல் எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி சார்! படிக்க விரும்புவோர்க்கு இது நிச்சயம் உதவி செய்யும். நன்றி சார்!

   Delete
 4. 5)

  மேலே சொல்லியுள்ள இவற்றில் Sl. Nos: 01, 03, 04, 06 & 12 ஆகிய ஐந்து சிறுகதைகள் மட்டும் 2014-ம் ஆண்டு நான் என் வலைத்தளத்தினில் நடத்திய ‘சிறுகதை விமர்சனப் போட்டி’யில் இடம்பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  இவற்றில் Sl. No: 04 (காதலாவது கத்திரிக்காயாவது) & Sl. No: 12 (மனசுக்குள் மத்தாப்பூ) ஆகிய இரு ’சிறுகதை விமர்சனப் போட்டி’களிலும் கலந்துகொண்ட தங்களின் விமர்சனங்கள் பரிசுக்குத் தேர்வாகி இருந்தன என்பதை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

  தங்களின் வெற்றி அறிவிப்புக்கான எனது இணைப்புகள் இதோ:

  http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html

  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-02-03-second-prize-winners.html

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. என் விமர்சனம் பரிசுக்குத் தேர்வானதை நினைவுபடுத்தியதுடன், அதற்கான இணைப்புகளையும் தேடிக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!

   Delete
 5. 6)

  //'மனிதனைத் தரிஸிக்க,' என்றொரு கதை:- மனிதனை, மனிதன் நேசிக்க வேண்டும்; மனித நேயம் மலர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் இக்கதை, என்னை மிகவும் கவர்ந்தது. //

  தங்களை மிகவும் கவர்ந்ததாகச் சொல்லும் இந்தக்கதை, சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தமிழ் சிறுகதைப் போட்டி ஒன்றில் பங்குபெற்று, இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ளதாகும்.

  இந்த சிறுகதைப்போட்டிக்கு அவர்கள் கொடுத்திருந்த நிபந்தனைகளில் ’ஆன்மிகமும், மனித நேயமும் சேர்ந்த கதைக்கருவாக இருக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தனர்.

  இருப்பினும் நம் நிதர்சன வாழ்க்கையில் உண்மையில் மனித நேயம் மலராததால், சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகியும் பரிசுப்பணம் எனக்கு இதுவரை அளிக்கப்படாமல் நடுவில் ஒரு இடைத்தரகரால் (அதுவும் தமிழ்ச் சிற்றிதழ் ஆசிரியர் ஒருவரால்) அபேஸ் செய்யப்பட்டுள்ளது.

  இதுபற்றிய மேலும் விரிவான விபரங்கள் இதோ இந்தத் தங்களின் நேயர் கடிதப் பதிவின் பின்னூட்டப்பகுதியில் என் பதில்களில் நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

  http://gopu1949.blogspot.in/2014/10/3.html

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இக்கதை தான் சர்வதேச அளவில் இரண்டாம் பரிசுக்குத் தேர்வானது என்ற விபரமறிந்து மகழ்ந்தேன். ஆனால் பரிசுப்பணத்தை இடைத்தரகம் அபேஸ் பண்ணிவிட்டார் என்றறிந்து வருத்தமேற்பட்டது. இப்படியும் சிலர்! விபரத்துக்கு நன்றி சார்!

   Delete
 6. 7)

  இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள மொத்தக்கதைகளான 14 இல் 11 கதைகள் வரைத் தாங்கள் தொட்டுச் சென்று, தங்கள் பாணியில் சுருக்கமாகவும் சுவையாகவும் விவரித்துள்ளதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

  oooOooo

  ReplyDelete
  Replies
  1. இத்தொகுப்பில் பெரும்பாலானவை விமர்சனப்போட்டியின் போது நான் வாசிக்காதவை என்பதால் 11 கதைகள் பற்றி இப்பதிவில் குறிப்பிட்டேன். என் பதிவு சுவையாகவும் சுருக்கமாகவும் இருந்தது அறிந்து மகிழ்ச்சி சார்! பாராட்டுக்கு நன்றி சார்!

   Delete
 7. முதல் தொகுப்பு பற்றிய மதப்புரையைக் கடந்த பதிவில் படித்த நினைவு. நூலைப் பற்றிய பகிர்வும், அது விருது பற்றிய செய்தியும் பகிர்ந்த விதம் அருமை. நூலாசிரியருக்கு பாராட்டுகள். உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பகிர்ந்த விபரம் அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி முனைவர் ஐயா!

   Delete
 8. வணக்கம்

  கோபு ஐயாவின் சிறுகதைகளை நான் வலைப்பூவில்படித்துள்ளேன் அவரின் திறமை வியக்க தக்கது விமர்சனம் மிக இரசனையாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரசனையாக உள்ளது என்ற பாராட்டுக்கு நன்றி ரூபன்!

   Delete
 9. பஞ்சாமியின் பல் பற்றிய சிறுகதை படித்துள்ளேன். மற்ற சிறுகதைகளும் படித்திருப்பேன். நல்ல முறையில் புத்தகத்தைப் பற்றி பகிர்கிறீர்கள். நன்றி.

  //இந்நூல் திருச்சி மாவட்ட பொது நலப்பணி நிதிக்குழு அமைப்பின் 2009 ஆம் ஆண்டுக்கான, இரண்டாம் பரிசைப் பெற்றதுடன் ஆசிரியருக்குச் ‘சிந்தனைப் பேரொளி,' விருதும், பொற்கிழியும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரால் அளிக்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம்!//

  நிச்சயம். திரு வைகோ அவர்கள் பல்துறை வித்தகர். திறமைசாலி. அவருக்கு இந்த விருதுகள் பொருத்தமே.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக படித்திருப்பீர்கள். இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகளை நான் இப்போது தான் படித்தேன். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்!

   Delete
 10. ஒவ்வொரு விமர்சனமும் ரசனையாக சொல்லி உள்ளீர்கள்... திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. ரசனையாக உள்ளது என்ற தங்கள் கருத்தறிந்து மகிழ்கிறேன். மிக்க நன்றி தனபாலன் சார்!

   Delete
 11. Replies
  1. தங்கள் வருகைக்கும், நன்றிக்கும் நன்றி சகோதரரே!

   Delete
 12. வை. கோபாலகிருஷ்ணன்

  4)

  இந்த சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள கதைகளின் வலைப்பதிவு இணைப்புகள்:-

  01) தை வெள்ளிக்கிழமை
  http://gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html

  02) நகரப்பேருந்தில் ஒரு கிழவி
  http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_09.html
  or
  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_9351.html

  03) பல்லெல்லாம் ’பஞ்சாமி’யின் பல்லாகுமா?
  http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html

  04) மாதங்களில் அவள் மார்கழி
  [காதலாவது .... கத்திரிக்காயாவது]
  http://gopu1949.blogspot.in/2014/02/vgk-05.html

  05) மனிதனை தரிஸிக்க ......
  இது சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தமிழ் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள கதை. அதற்கான வெற்றி அறிவிப்பு மட்டும் என்னால் 08.02.2012 அன்று இதோ இந்த http://gopu1949.blogspot.in/2012/02/hattrick-award-of-this-february-first.html இணைப்பினில் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக்கதை எனது வலைத்தளத்தில் இதுவரை வெளியிடப்படவில்லை

  06) முன்னெச்சரிக்கை முகுந்தன்
  http://gopu1949.blogspot.in/2014/05/vgk-20_30.html

  07) காலம் மாறிப்போச்சு
  http://gopu1949.blogspot.in/2011/08/1-of-2.html &
  http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2_31.html

  08) நள்ளிரவில் கற்ற தொழில் ரகசியம்
  இது எனது வலைத்தளத்தில் இதுவரை வெளியிடப்படவில்லை

  09) சொந்தம்
  இது எனது வலைத்தளத்தில் இதுவரை வெளியிடப்படவில்லை

  10) நம்பிக்கை
  இது எனது வலைத்தளத்தில் இதுவரை வெளியிடப்படவில்லை

  11) நாங்களும் குழந்தைகளே
  (இனி துயரம் இல்லை)
  http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_15.html
  http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html

  12) மனோவின் கனவு
  [மனசுக்குள் மத்தாப்பூ]
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-2-of-4.html
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-3-of-4.html
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-4-of-4.html

  13) வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்
  இது எனது வலைத்தளத்தில் இதுவரை வெளியிடப்படவில்லை

  14) கொட்டாவி
  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
  or
  http://gopu1949.blogspot.in/2011/09/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. சிரமம் பாராமல், கதைகளின் இணைப்பைத் தேடிக் கொடுத்ததற்கு நன்றி கோபு சார்! வாசிக்க நினைப்பவர்க்கு இது நிச்சயம் உதவி செய்யும்!

   Delete
 13. கோபு சார் அறிவித்து மிகச் சிறப்புடன் நடத்திக் காட்டியதோடு அல்லாமல் கறராக சொன்னது சொன்னபடி பரிசுகளையும் வழங்கி விமர்சகர்களை கெளரவித்த பதிவுலகில் நிகரில்லா அந்த விமரிசன்ப் போட்டி உங்களின் இந்தத் தொடரை வாசிக்கும் பொழுது நினைவுத் திரையில் வலம் வருகிறது.

  பல்லெல்லலாம் பஞ்சாமியின் கதைக்கு போட்டிருந்த படமும் அது தொடர்பான பின்னூட்டங்களும் கூட நினைவுக்கு வருகின்றன. விமரிசனப் போட்டிக்கு நடுவர் யாரென்று லேசில் ஊகிக்க முடியாதவாறு என் பங்கிற்கு நானும் பின்னூட்டங்களைப் போட்டு கலந்து கொண்டது மறக்க முடியாத பசுமை நிறைந்த நினைவுகள்.

  இந்தத் தொடரை தனித்ததொரு ஆர்வத்துடன் நீங்கள் எழுதி வருவதும் பாங்கு மேலோட்டமாக பார்ப்போருக்கும் புரிபடும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ஜீவி சார்! பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுத் தனக்கு அளிக்கப்படாதினால் ஏற்பட்ட ஏமாற்றம், தம் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் முதலிலிருந்தே அதிக கவனத்துடன் இருந்தார் கோபு சார்! அதனால் தான் போட்டி முடியும் வரைப் பொறுத்திருக்காமல், இடையிடையே அதற்கான பரிசுத்தொகையை் சுடச்சுட அனுப்பி வைத்து விட்டார். அதற்கான அவர் உழைப்பு பிரமிக்க வைத்த ஒன்று! போட்டி பற்றிய உங்கள் பசுமை நிறைந்த நினைவுகளை இங்குப் பகிர்ந்து கொண்டமைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி ஜீவி சார்!

   Delete
 14. சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்
  பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி!

   Delete
 15. இத்தொகுப்பில் உள்ள சில கதைகளை எப்படி வாசிக்கத் தவறவிட்டோம் என்று நினைத்திருந்தேன். ஐந்து கதைகள் வலையில் வெளியாகாதவை என்று பின்னூட்டம் வாயிலாய் அறிந்துகொண்டேன்..

  சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நாட்கள் இப்போதும் மனக்கண்ணில் ஓடி மகிழ்விக்கின்றன. நகைச்சுவையெல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல.. அப்படி வார்த்தைக்கு வார்த்தை வழுக்கிக்கொண்டு வருகின்றன. அதை பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா கதையிலிருந்து சில பத்திகளைக் கொடுத்து அழகாக விமர்சனம் மூலம் தாங்களும் இங்கே அறியப்படுத்தியுள்ளீர்கள். மனிதநேயம் கோபு சாரின் பல கதைகளின் மையமாயிருப்பதை இங்கு சுட்டியுள்ளது சிறப்பு. நல்லதொரு விமர்சனம்.

  \\இந்நூல் திருச்சி மாவட்ட பொது நலப்பணி நிதிக்குழு அமைப்பின் 2009 ஆம் ஆண்டுக்கான, இரண்டாம் பரிசைப் பெற்றதுடன் ஆசிரியருக்குச் ‘சிந்தனைப் பேரொளி' விருதும், பொற்கிழியும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரால் அளிக்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம்!\\ பாராட்டுகள் கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் கீதா! இவற்றில் 5 கதைகள் வலைத்தளத்தில் வெளியிடப்படவில்லை. இப்போது தான் புத்தகத்தில் வாசித்தேன். நகைச்சுவையுடன் எழுதுவது லேசுபட்ட காரியமில்லை. அக்கலை இவருக்குக் கைவரப்பெற்றிருப்பது பெரிய வரமே! வெளியிட்ட மூன்று நூல்களுமே பரிசுக்குரியதாய்த் தேர்வு பெற்றதும் பாராட்டுக்குரியது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா!

   Delete

 16. ஜீவி சார் குறிப்பிட்டுள்ளது போல போட்டிகளுக்கான பரிசுத்தொகையை உடனுக்குடன் அனுப்பிவைத்த பெருந்தன்மை கோபு சாருடையது. என் படைப்புகளுக்காக நான் பெற்ற முதல் சன்மானமே கோபு சார் அளித்ததுதான். அதற்கு முன் என்னுடைய படைப்புகள் சில ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தாலும் சொன்னபடி சன்மானம் தரப்படவில்லை.. இழுத்தடித்து கடைசிவரை தராமலேயே ஏமாற்றிவிட்டார்கள். இன்னும் சிலர்.. படைப்பு வெளியான பிரதியைக் கூட அனுப்பாமல் ஏய்த்துவிட்டார்கள்..

  ReplyDelete
  Replies
  1. நீ ஏமாந்தது போலவே கோபு சாரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அதனால் தான் உடனுக்குடன் பரிசுத்தொகையை அனுப்பிவைத்ததுடன். அது போய்ச் சேர்ந்ததா என்று தெரிந்து கொள்வதிலும் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டார். கோபு சார் அளித்தது தான் நீ பெற்ற முதல் சன்மானம் என்றறிந்து மகிழ்ச்சி. விமர்சனத்துக்கு மட்டுமின்றி இன்னும் பல்வேறு பெயர்களில் விருதுகளைப் புதிது புதிதாக அறிவித்துச் சன்மானம் கொடுத்ததில் பெரு மகிழ்ச்சி கொண்டார் கோபு சார்! எனக்கும், அது போல் ஒரு பரிசு அதிகப்படியாகக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தேன். கருத்துக்கு நன்றி கீதா!

   Delete
  2. திருமதி. ஞா. கலையரசி >>>>> கீத மஞ்சரி

   //விமர்சனத்துக்கு மட்டுமின்றி இன்னும் பல்வேறு பெயர்களில் விருதுகளைப் புதிது புதிதாக அறிவித்துச் சன்மானம் கொடுத்ததில் பெரு மகிழ்ச்சி கொண்டார் கோபு சார்! எனக்கும், அது போல் ஒரு பரிசு அதிகப்படியாகக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.//

   தங்களுக்கு அந்த 2014-ம் ஆண்டு நேர்ந்து விட்ட பல்வேறு நிர்பந்தப் பணிகளாலும், நேர நெருக்கடிகளாலும், (Both Official Life & Personal Life) தாங்கள் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் போட்டிகளில் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. இருப்பினும் தாங்கள் கலந்துகொண்ட அவ்வாறான போட்டிகளில், பெரும்பானவைகளில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

   தாங்கள் கலந்துகொண்ட VGK-5, VGK-6, VGK-9, VGK-10, VGK-37, VGK-38, VGK-39 and VGK-40 ஆகிய எட்டு விமர்சனப்போட்டிகளிலும், தங்களின் விமர்சனங்கள் பரிசுக்குத் தேர்வாகி, பரிசும் பெற்றுள்ளீர்கள்.

   VGK-37 to VGK-40 தொடர் வெற்றிகளுக்கான, நான்கு சுற்று HAT-TRICK பரிசும் பெற்றுள்ளீர்கள்.

   VGK-10, VGK-13 and VGK-24 ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டதற்கான SPECIAL BONUS பரிசும் கிடைக்கப்பெற்றுள்ளீர்கள்.

   சிறப்பு விருதுகளான (1) ’ஜீவீ-வீஜீ விருது’ம், (2) ’கீதா விருது’ம் பெற்றுள்ளீர்கள்.

   ஒவ்வொரு பத்து கதைகளுக்கான விமர்சனப்போட்டிகள் நிறைவு பெற்றதும், போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும், அவ்வப்போது உடனுக்குடன் பரிசுத்தொகைகளை அவரவர்களின் வங்கிக்கணக்கினில் சுடச்சுட வரவு வைக்க மின்னல் வேகத்தில் செயல்பட்டு, எனக்குப் பேருதவி செய்து மகிழ்வித்துள்ளீர்கள்.

   தங்களின் இந்த உதவிகளை என்னால் என்றுமே மறக்கவே முடியாது. மீண்டும் தங்களுக்கு என் இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், மேடம்.

   நன்றியுடன் கோபு

   Delete
  3. விமர்சனப்போட்டியில் நானும் சிலவற்றில் பங்குக்கொண்டு பரிசு பெற்றது மகிழ்ச்சியான விஷயம். நான் செய்த மிகச் சாதாரண உதவியை நீங்கள் பெரிய அளவில் பாராட்டி நன்றி கூறுவது, உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. உங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சியே. தங்கள் மீள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்!

   Delete
 17. வை.கோ. அவர்களின் சிறுகதைகள் சில குறித்து சுவையாய் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி .நூலாசிரியரின் திறமை பற்றித் தெரிந்து மகிழ்கிறேன் . அவரின் தமிழ்ப் பணி தொடர நெஞ்சம் நிறை வாழ்த்து !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

   Delete