நல்வரவு

வணக்கம் !

Thursday, 1 October 2015

வேருக்கு நீரூற்ற வாங்க வாங்க!




வேருக்கு நீருற்றும் திருவிழாவுக்கு வாங்க வாங்க! தங்கள் வரவு நல்வரவாகுக! 

தமிழனின் அடையாளம் தமிழ்! 

ஆங்கில மோகம் கொண்டு தமிங்கிலீஷ் என்ற பெயரில் அச்சு ஊடகங்களிலும், பேச்சு வழக்கிலும் நம் வேரை  பெரும்பான்மையான மக்கள் சின்னாபின்னமாக சிதைத்தழித்துக் கொண்டிருக்க, நமக்கு அடையாளம் தந்த மொழியையும், அதன் தொன்மையான சிறப்புக்களையும் அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடனும், அக்கறையுடனும் இணையத்தில் இணைந்து செயல்படும்  தமிழ்ப்பதிவர்களாகிய நாமனைவரும் அண்ணன் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து, புதுகையில் ஒன்று கூடும் திருவிழா!

வரலாறு காணாத இத்தமிழ்த் திருவிழாவுக்குத் தங்களை விழாக்குழுவினர் சார்பாக வருக வருக என வரவேற்பதில் மகிழ்கின்றேன்! 

என்ன திகைக்கிறீர்கள்?  புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவள் எப்போது புதுகை மாவட்டத்து விழாக்குழுவில் சேர்ந்தாள் என்று தானே?  இது நம் குடும்பத் திருவிழா அல்லவா?  இதில் புதுவை, புதுகை எல்லாம் ஒன்று தானே?

இவ்விழாவுக்குத் தற்கால எழுத்தாளர்களில் மிக முக்கிய ஆளுமையான எஸ்.ரா கலந்து கொள்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. 

இன்னும் யார் யாரெல்லாம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள….




 புதுகையில் சந்திப்போம் சகோதர சகோதரிகளே! 

38 comments:

  1. மனமார்ந்த அழைப்பினுக்கு மகிழ்ச்சி..

    விழா சிறப்புடன் நிகழ நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. முதல் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி துரை சார்!

      Delete
  2. சகோதரியின் அழைப்பிதழுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. என் அழைப்பை ஏற்றுக் கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி இளங்கோ சார்!

      Delete
  3. அழைப்பிற்க்கு நன்றி வருகிறேன்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வாக்குக்கும் மிகவும் நன்றி கில்லர்ஜி சார்!

      Delete
  4. அழைப்பு அருமை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.
      நிகழ்வில் எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் அறிமுகம் ஆகிறது.. வேண்டி படித்து விமர்சனம் எழுதுங்கள்...
      எனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் காண வாருங்கள் த.ம4
      Jரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
    2. @ மகேஸ்வரி - அழைப்பு அருமை என வாழ்த்தியதற்கு நன்றி மகி!

      @ரூபன் – நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக வாசித்து எழுதுவேன்.

      Delete
  5. //வேருக்கு நீரூற்ற வாங்க வாங்க!//

    தலைப்பும் படமும் மிகவும் அழகு + அருமை.

    //என்ன திகைக்கிறீர்கள்? புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவள் எப்போது புதுகை மாவட்டத்து விழாக்குழுவில் சேர்ந்தாள் என்று தானே? இது நம் குடும்பத் திருவிழா அல்லவா? இதில் புதுவை, புதுகை எல்லாம் ஒன்று தானே?//

    புதுவை .... புதுகை .... ! புன்னகைக்க வைத்தது .....
    இந்தத்தங்களின் இனிய சொல்லாடல்.:)

    விழா ஒருங்கிணைப்பாளர் அவர்களின் நேற்றைய வேண்டுகோளின்படி மின்னஞ்சல் மூலம் எனக்குத் தாங்கள் தனி அழைப்பிதழ் அனுப்பி வைத்ததும், விழாவுக்கு வருகை தருமாறு தனி அழைப்பு விடுத்ததும், மிகவும் மகிழ்ச்சியளித்தது. மிக்க நன்றி.

    நன்றியுடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு சார்! வணக்கம்! அழைப்பு விடுத்தமுறையைப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கோபு சார்! விரிவாக என் எழுத்தைப் பாராட்டி ரசித்தமைக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  6. அன்பான அழைப்பிதழுக்கு நன்றி அக்கா...

    \\புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவள் எப்போது புதுகை மாவட்டத்து விழாக்குழுவில் சேர்ந்தாள் என்று தானே? இது நம் குடும்பத் திருவிழா அல்லவா? இதில் புதுவை, புதுகை எல்லாம் ஒன்று தானே?\\

    இந்தப் புரிதலும் ஒற்றுமையும் பதிவர்களுக்குள் மிக அவசியம் என்பதை அழகாக உணர்த்திய வரிகள்... விழா சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி கீதா!

      Delete
  7. அடேங்கப்பா எல்லோரும் ரெடியா இட்டாங்கப்பா ம்..ம் கலங்குங்க கலங்குங்க !

    ஓ நீரூற்றி வளர்க்கிறீர்க்ளா உறவையும் தமிழையும் அருமையான வரவேற்பு ! நன்றி நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி இனியா!

      Delete
  8. அழைப்பு அருமை!
    விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அழைப்பு அருமை எனப் பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இளமதி!

      Delete
  9. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி குமார்!

      Delete
  10. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி ஸ்ரீராம்!

      Delete
  11. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

    பணம்அறம்

    நன்றி

    ReplyDelete
  12. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பு இன்னும் முடிவு பெறவில்லை; முடிந்தவுடன் போட்டியில் பங்கேற்பேன். நினைவூட்டலுக்கு நன்றி தனபாலன் சார்!

      Delete
  13. அழைப்பு உவப்பு!



    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! அவசியம் அழைப்பு உவப்பு என்று சொல்வதுடன் அவசியம் விழாவில் தாங்கள் பங்கேற்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்!

      Delete
  14. வாழ்த்துக்கள் சகோதரி!

    மின் இலக்கியப் போட்டி முடிவுகள்!

    விமரிசனப் போட்டி

    இரண்டாம் இடம்
    திருமிகு கலையரசி ஞா - புதுச்சேரி

    போட்டியில் வெற்றி பெற்றமைக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி! உங்கள் வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

      Delete
  15. போட்டியில் இரண்டாமிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளங்கோ சார்! உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  16. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி!

      Delete
  17. முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

    புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

    முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. வரப் போகும் விழாக்களுக்குப் புதுகை விழா ஒரு முன்னோடியாக விளங்கப்போகிறது! அதற்காக அண்ணன் முத்துநிலவன் தலைமையில் உழைக்கும் விழாக்குழுவினர்க்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

      Delete
  18. I wanted to see u Madam yesterday
    5 from Puduvai came yesterday. But we missed to see u. We all like your blogspot. Sivan

    ReplyDelete
    Replies
    1. புதுவையிலிருந்து ஐந்து பேர் கலந்துகொண்டது எனக்குத் தெரியாமல் போயிற்று. தெரிந்திருந்தால் நேற்று சந்தித்திருக்கலாம். என் வலைப்பூ உங்களுக்குப் பிடித்திருப்பதறிந்து மகிழ்ச்சி. வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம். மிகவும் நன்றி!

      Delete
  19. விமரிசனப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றமைக்கு நல்வாழ்த்துக்கள்!..

    போட்டி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்து உடன் கருத்துரைகளைப் பதிவு செய்தேன்.. தங்களது தளத்தில் பதிவு செய்வதற்குள் - இணைய இணைப்பில் சிக்கல் ஏற்பட்டு விட்டது..

    மேலும் அன்றைய தினத்தில் இணைய இணைப்பினை துண்டித்து விட்டு ஊருக்குப் புறப்பட வேண்டிய சூழ்நிலை..

    அதனால் தான் - தங்களுக்கு நல்வாழ்த்து கூற இயலாமற் போனது..

    ஏதொன்றும் எண்ண வேண்டாம்..

    தற்போது - அபுதாபியில் இருந்து பதிவிடுகின்றேன்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  20. உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி துரை சார்! தாமதத்துக்குப் பரவாயில்லை, இடையில் இணையம் இப்படித்தான் நம்மைக் காலை வாரிவிட்டுவிடும். தங்கள் வாழ்த்து எனக்கு என்றுமே உண்டு என்பது எனக்குத் தெரியும். உங்கள் நல்வாழ்த்துக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றி!

    ReplyDelete