(படம் - நன்றி இணையம்) |
தம் எழுத்தை அச்சில் பார்ப்பதை விட, எழுதுபவருக்கு
மகிழ்ச்சி தரும் செய்தி வேறுண்டா?.
சொந்தக் காசைச் செலவழித்துப் புத்தகங்கள் வெளியிட்ட பிறகு, அவற்றை
விற்க முடியாமலும், வீட்டில் வைத்துப் பாதுகாக்க இடமின்றியும், பழைய பத்திரிக்கை
கடையில், எடைக்கு எடை போட்டவர்களை நானறிவேன். அதனால் புத்தகம் வெளியிடும் ஆசை இருந்தும், இதுவரை
அதற்கான முயற்சியில், நான் இறங்கவில்லை.
என் முதல் மின்னூல்
'நிலவினில் என் நினைவோடை’ என்ற தலைப்பில், முப்பது
வாரங்கள் நான் எழுதிய தொடரை நிலாச்சாரல் 2011 ஆம் ஆண்டு, மின்னூலாக வெளியிட்டது. அது தான் என் முதல் மின்னூல்.
2012 நவம்பரில், நூலுக்கான ராயல்டியாக, ஐயாயிரம் ரூபாய் கிடைத்த
போது, எதிர்பாராத இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன்!
அதற்குப் பிறகு, வேறு எதையும்
மின்னூலாக, வெளியிடும் உத்தேசம் இல்லாமலிருந்தேன்.
அண்மையில் அண்ணன் முத்துநிலவன் அவர்கள் தலைமையில், புதுக்கோட்டையில் கணிணித் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த மின்னூல் முகாம் நடந்த போது தான், இதுவரை என் வலைப்பூவில் எழுதியவற்றைத் தொகுத்து, மின்னூல்களாக
வெளியிடலாமே என்ற எண்ணம் துளிர்விட்டது. .
அச்சுப் புத்தகங்கள் போல், இதற்குச் செலவு
கிடையாது; எழுதியவற்றைத் தொகுத்துச் சேமித்துக்கொள்ளலாம் என்பவை, முக்கிய காரணங்கள்.
பலதரப்பட்ட வாசகர்களைக் கொண்டிருக்கும் புஸ்தகா டிஜிட்டல் மீடியா நிறுவனம்
மூலம் நம் எழுத்து, உலகமுழுக்க
மலிவான விலையில் பலரை எளிதில் சென்றடையும்
என்பது இன்னொரு காரணம்.
புஸ்தகா மூலம் அண்மையில் வெளிவந்திருக்கும் என் மின்னூல்கள்: ஒவ்வொரு படத்தையும் சொடுக்கி, புஸ்தகா இணைப்புக்குச் செல்லவும்.
'புதிய வேர்கள்,' - பத்துச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
'புதைக்கப்படும் உண்மைகள்,' - பத்துச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
"ஐரோப்பா - சுவையான பயண அனுபவங்கள்," கட்டுரைத்தொடர்.
'போன்சாய் வளர்ப்பு - ஓர் அறிமுகம்,' - கட்டுரைத் தொடர்
'சூழல் காப்போம்,' -சுற்றுச்சூழல், பறவைகள், இயற்கை ஆகியவை, குறித்து எழுதிய 12 கட்டுரைகளின் தொகுப்பு.
என் மின்னூல்கள் வெளிவரக் காரணமாயிருந்த, புதுகை
கணிணித் தமிழ்ச்சங்கத்துக்கும், ஆக்கமும், ஊக்கமும் கொடுத்த
அண்ணன் முத்துநிலவன் அவர்களுக்கும், புஸ்தகா டிஜிட்டல் மீடியாவுக்கும் என் நன்றி உரித்தாகுக!
நம் சக பதிவர்களின் மின்னூல்களும், ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சி தரும் செய்தி! எல்லோருக்கும் என் பாராட்டும், வாழ்த்தும்!
,...இன்னும் ஏராளமான புத்தகங்கள வெளியாகி அள்ள அள்ளக் குறையாத ராயல்டி பெற்று எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்திட வாழ்த்துகிறேன். இராய செல்லப்பா, நியூஜெர்சி.
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கு என் நன்றி. உங்கள் தளத்துக்கு இன்று தான் வந்தேன். ஏற்கெனவே அகநாழிகை பதிப்பகம் மூலம் சிறுகதை நூல் வெளியிட்டிருக்கும் உங்களுக்கு நான் வழிகாட்டியா? நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும். ஏராளமான புத்தகங்கள் வெளியிடச் சொல்லி நீங்கள் தெரிவித்த வாழ்த்து, நெஞ்சைக் குளிர்விக்கிறது. ராயல்டியை விட உங்கள் வாழ்த்தையும், பாராட்டையும் பெரிதாக மதிக்கிறேன். மிகவும் நன்றி சகோதரரே!
Delete,...இன்னும் ஏராளமான புத்தகங்கள வெளியாகி அள்ள அள்ளக் குறையாத ராயல்டி பெற்று எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்திட வாழ்த்துகிறேன். இராய செல்லப்பா, நியூஜெர்சி.
ReplyDeleteஇன்னும் பல மின்னூல் வெளிவரட்டும்! நானும் மின்னூல் சில வெளியிட்டும் ஒரு ஈரோகூட பெறவில்லை ஆனால் 5000 ருப்பி பெற்ற உங்களின் எழுத்து திறமைக்கு வாழ்த்துக்கள்§ மின் நூல் தரயிறக்கம் செய்து அதன் பற்றிய கருத்தினை என் தனிமரம்.கொம்மில் விரைவில் பேசுவேன்!
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கு என் முதல் நன்றி! இன்னும் பல மின்னூல் வெளிவர நீங்கள் தெரிவித்திருக்கும் வாழ்த்துக்கண்டு அகம் மகிழ்கின்றேன். மின்னூல் வாசித்துக் கருத்துத் தெரிவிப்பேன் என்று நீங்கள் சொல்லியிருப்பதற்கு மிகவும் நன்றி! உங்களின் கருத்துப்பகிர்வு என் எழுத்தை மேலும் ஊக்குவிக்கும். மீண்டும் நன்றி!
Deleteவாழ்த்துகளும்,பாராட்டுகளும்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி!
Deleteமின்னூல் வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா... நூல்களை அச்சாக்குவது குறித்த உங்கள் கருத்து சரியே என்றாலும் அச்சில் பார்ப்பதிலும் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது. உங்களது அடுத்த முயற்சியாக அச்சுநூல் வெளியிடவேண்டும் என்பது என் விருப்பம். தங்கள் மின்னூல்கள் அனைத்தையும் வாசித்துவிட்டேன். மூன்றுக்கு கருத்திட்டிருக்கிறேன் மற்றவற்றுக்கும் விரைவில் கருத்திடுவேன்.
ReplyDeleteவாழ்த்துக்கு மிகவும் நன்றி கீதா! மூன்று நூல்களுக்குக் கருத்து எழுதியிருப்பதற்கு மிகவும் நன்றி! அச்சு நூல் வெளியிடுவது ஆனந்தம் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் நூல் விற்பனை பற்றிக் கவலைப்படாமல், நம் ஆசைக்குக் குறைந்த பிரதிகளாக ஒரு புத்தகம் போட்டு நண்பர்களுக்குப் பரிசளிக்கலாம் என்பது என் கருத்து. மற்றவற்றிற்கும் விரைவில் கருத்திட இருப்பதறிந்து மகிழ்ச்சி! நன்றி கீதா!
Deleteஅட...! இத்தனை மின்னூல்கள்...! தொடரட்டும்... பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...
ReplyDeleteஒவ்வொரு படத்தை சொடுக்கினால். அந்தந்த புஸ்தகா இணைப்பிற்கு செல்கிறது...
// புஸ்தகா மூலம் அண்மையில் வெளிவந்திருக்கும் என் மின்னூல்கள்:- //
இதற்கு கீழ் ஒரு வரியை சேர்த்து விடுங்கள்... அது :-
ஒவ்வொரு படத்தையும் சொடுக்கி, புஸ்தகா இணைப்பிற்கு செல்லவும்...
எழுதியவற்றை ஐந்து தலைப்புகளில் தொகுத்து விட்டேன் தனபாலன் சார்! நீங்கள் சொல்லியிருப்பது போல், ஒரு வரியைச் சேர்த்து விட்டேன். உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி. தளத்தின் தொழில்நுட்ப தரத்தை மேம்படுத்த சிரமம் பாராமல், அவ்வப்போது நீங்கள் செய்யும் கணக்கிலா உதவிகளுக்கு மீண்டும் என் நன்றி!
Delete(1)
ReplyDelete//'நிலவினில் என் நினைவோடை’ என்ற தலைப்பில், முப்பது வாரங்கள் நான் எழுதிய தொடரை நிலாச்சாரல் 2011 ஆம் ஆண்டு, மின்னூலாக வெளியிட்டது. அது தான் என் முதல் மின்னூல்.
ஆஹா, 2011-ம் ஆண்டிலேயே தங்களின் தொடர், நிலாச்சாரல் மூலம், மின்னூலாக்கப்பட்டுள்ளது கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
2007-2008 ஆண்டுகளில் என்னுடைய நிறைய படைப்புகள் நிலாச்சாரலில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தன.
நான் ‘பவழம்’ என்ற தலைப்பினில் எழுதியிருந்த என் சிறுகதை www.nilacharal.com என்ற இணைய தளத்தில் March 2007 க்கான மிகச்சிறந்த சிறுகதையாக தேர்வு செய்யப்பட்டு, கெளரவிக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டது, இப்போது என் நினைவில் வந்து நிழலாடுகிறது.
https://gopu1949.blogspot.in/2011/01/blog-post_30.html
>>>>>
வாங்க கோபு சார்! வணக்கம். பவழம் சிறுகதையை வாசித்தேன். பலவீடுகளில் நடக்கும் நிகழ்வை நகைச்சுவை கலந்து சுவையான கதையாக்கிவிட்டீர்கள். அது மார்ச் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை என்ற பரிசைப் பெற்றது, பாராட்டுக்குரிய விஷயம். நன்றி கோபு சார்!
Delete(2)
ReplyDelete//2012 நவம்பரில், நூலுக்கான ராயல்டியாக, ஐயாயிரம் ரூபாய் கிடைத்த போது, எதிர்பாராத இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன்!//
மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
You are very well deserved for it, Madam. :)
>>>>>
உங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கும், அன்பான இனிய வாழ்த்துக்கும் நன்றி கோபு சார்!
Delete(3)
ReplyDelete//இதுவரை என் வலைப்பூவில் எழுதியவற்றைத் தொகுத்து, மின்னூல்களாக வெளியிடலாமே என்ற எண்ணம் துளிர்விட்டது.//
தங்களுக்கு இந்த எண்ணம் துளிர்விட்டதோடு மட்டும் அல்லாமல், எனக்கும் அதே எண்ணத்தைத் துளிர்விடச் செய்ய, தாங்கள் மட்டுமேதான், ஓர் மிகப்பெரிய தூண்டுகோலாக செயல் பட்டுள்ளீர்கள்.
அதற்கு என் மனம் நிறைந்த ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.
இதற்கு முந்திய தங்களின் பதிவினில் https://unjal.blogspot.com/2017/03/blog-post.html என்னுடைய பின்னூட்ட எண் 14-க்கான உங்கள் பதிலில் நீங்கள் கூறியிருப்பது ......
“வலைத்தளத்தில் உள்ளவற்றையே மின்னூலாக்குங்கள். வாசிப்பவர்களுக்குச் சுவை கூடுதலாக இருக்கும்.” .
எவ்வளவு ஒரு அக்கறையுடன் இதனை எனக்குத் தக்க நேரத்தில், தங்கமாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள் ! மிக்க மகிழ்ச்சி, மேடம்.
>>>>>
உங்கள் படைப்புகளை மின்னூலாக்க நான் ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கிறேன் என்றறிய மிகவும் மகிழ்ச்சி சார்! உங்கள் கதைகள் அச்சில் வெளிவந்த போது பக்க எண்ணிக்கைக்காக மிகவும் சுருக்கியிருக்கிறார்கள். அவற்றை நீங்கள் இன்னும் செம்மைப்படுத்தி உங்கள் தளத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள். எனவே தான் இந்த மேம்பட்ட படைப்புகளை மின்னூலாக்கினால், வாசிப்போர்க்குச் சுவை கூடுதலாய்க் கிடைக்கும் என்று சொன்னேன். உங்கள் எழுத்துப் பரவலாக வாசிக்கப்பட வேண்டும் என்பதில் பதிவர்கள் எல்லோருக்குமே அக்கறை உள்ளது. விரைவில் உங்கள் மின்னூல்கள் வெளிவர உள்ளது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. அட்வான்ஸ் பாராட்டுகள் கோபு சார்!
Delete(4)
ReplyDelete//அச்சுப் புத்தகங்கள் போல், இதற்குச் செலவு கிடையாது; எழுதியவற்றைத் தொகுத்துச் சேமித்துக்கொள்ளலாம் என்பவை, முக்கிய காரணங்கள்.//
ஆமாம் மேடம். அச்சுப்புத்தங்கள் போல் செலவுகள் இல்லை என்பதுடன், அச்சிடப்படும் நூல்களை நம்மிடம் சேமிப்பதும், அவற்றை பல காலங்கள் பாதுகாப்பதும், கையாள்வதும், இட வசதியின்மை + பூச்சித்தொல்லைகள் போன்றவற்றால் மிகவும் கஷ்டமாகிவிடும்.
மேலும் நம்மால் தனிப்பட்ட முறையில் நம் எழுத்துக்களை உலகிலுள்ள பல வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவும் இயலாது என்பதே உண்மையாகும்.
இவ்வாறு பலவற்றையும் யோசிக்கும்போது, இன்றைய காலக் கட்டத்தில், நமது படைப்புகளை மின்னூலாக மாற்றுவது ஒன்றே மிகச் சிறப்பான வழியாக இருக்க முடியும்.
>>>>>
“அச்சுப்புத்தங்கள் போல் செலவுகள் இல்லை என்பதுடன், அச்சிடப்படும் நூல்களை நம்மிடம் சேமிப்பதும், அவற்றை பல காலங்கள் பாதுகாப்பதும், கையாள்வதும், இட வசதியின்மை + பூச்சித்தொல்லைகள் போன்றவற்றால் மிகவும் கஷ்டமாகிவிடும்.
Deleteமேலும் நம்மால் தனிப்பட்ட முறையில் நம் எழுத்துக்களை உலகிலுள்ள பல வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவும் இயலாது என்பதே உண்மையாகும்.
இவ்வாறு பலவற்றையும் யோசிக்கும்போது, இன்றைய காலக் கட்டத்தில், நமது படைப்புகளை மின்னூலாக மாற்றுவது ஒன்றே மிகச் சிறப்பான வழியாக இருக்க முடியும்”
மின்னூல் பற்றிய மிகச்சரியான கருத்துக்களை மிகவும் அருமையாக இங்குச் சொல்லியிருக்கிறீர்கள். வருங்காலத்தில் அச்சுப்புத்தகங்கள் குறைந்து, மின்னூல்கள் பெருகும் நிலை வரும். மிகவும் நன்றி கோபு சார்!
(5)
ReplyDelete//பலதரப்பட்ட வாசகர்களைக் கொண்டிருக்கும் புஸ்தகா டிஜிட்டல் மீடியா நிறுவனம் மூலம் நம் எழுத்து, உலகமுழுக்க மலிவான விலையில் பலரை எளிதில் சென்றடையும் என்பது இன்னொரு காரணம்.//
’புஸ்தகா டிஜிட்டல் மீடியா நிறுவனம்’ இதனை நன்கு திட்டமிட்டு, ஆக்கபூர்வமாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
இதனால் எழுத்தாளர்களுக்கும் ஓர் தனிப்பெருமையும், அங்கீகாரமும் ஏற்படக்கூடும்.
இன்று உலகம் பூராவும் வியாபித்திருக்கும் வாசகர்களுக்கும், மிகச் சுலபமாக, அவர்கள் விரும்பும் நூல்கள், கையடக்கமான முறையில், மலிவு விலையில் வாசிக்கக்கிடைக்கக்கூடும்.
நமது படைப்புகளுக்கு மிகப்பெரிய அளவில் உலகளாவிய விளம்பரம் + வியாபரச் சந்தை உருவாக்கித்தர நன்கு திட்டமிட்டு செயல்பட இருக்கிறார்கள், இந்த புஸ்தகா மின்னூல் நிறுவனம்.
இந்த புஸ்தகா மின்னூல் நிறுவனத்திற்கும், எழுத்தாளர்களாகிய நமக்கும் ஓர் ஏழாண்டுகளுக்குச் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தப்பத்திரத்தினை வாசித்தாலே எல்லாம் தெள்ளத்தெளிவாகவும், ஒப்பந்தப்பத்திரமும் அதிலுள்ள வரிகளுமே மிகத் தரமாகவும், நல்லதொரு நம்பிக்கையளிக்கும் முயற்சிகளாகவும் என்னால் நினைத்துப் பார்த்து மகிழ முடிகிறது.
இந்த நவீன காலத்திற்கு ஏற்றாற்போல வடிவமைத்துள்ள இந்த அவர்களின் மிகவும் திட்டமிட்ட முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயலாகும்.
>>>>>
Deleteஇன்று உலகம் பூராவும் வியாபித்திருக்கும் வாசகர்களுக்கும், மிகச் சுலபமாக, அவர்கள் விரும்பும் நூல்கள், கையடக்கமான முறையில், மலிவு விலையில் வாசிக்கக்கிடைக்கக்கூடும்.
நமது படைப்புகளுக்கு மிகப்பெரிய அளவில் உலகளாவிய விளம்பரம் + வியாபரச் சந்தை உருவாக்கித்தர நன்கு திட்டமிட்டு செயல்பட இருக்கிறார்கள், இந்த புஸ்தகா மின்னூல் நிறுவனம்.
ஆமாம் சார்! புஸ்தகா நிறுவனம் நல்ல முறையில், நம் எழுத்தைப் பலருக்குக் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ,சரியான கருத்துக்கு மிகவும் நன்றி கோபு சார்!
(6)
ReplyDeleteபுஸ்தகா மூலம் அண்மையில் வெளிவந்திருக்கும் தங்களின் (இரு சிறுகதைத் தொகுப்புகள் + மூன்று கட்டுரைத் தொகுப்புகள்) ஐந்து மின்னூல்களான
(1) 'புதிய வேர்கள்’,
(2) 'புதைக்கப்படும் உண்மைகள்’,
(3) ’ஐரோப்பா - சுவையான பயண அனுபவங்கள்’,
(4) 'போன்சாய் வளர்ப்பு - ஓர் அறிமுகம்’,
(5) 'சூழல் காப்போம்'
ஆகியவற்றை தங்களின் படத்துடன் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.
தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள்.
தாங்கள் மேலும் மேலும் இதுபோல பல மின்னூல்கள் வெளியிட்டு, எழுத்துலகில் ஜொலிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன் கோபு
உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள் கண்டு மனம் மிக மகிழ்கின்றேன் கோபு சார்! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்களின் வாழ்த்தும் ஆசியும் என் எழுத்தை மேலும் செம்மைப்படுத்தும். மிகவும் நன்றி கோபு சார்!
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
Deleteமனம் நிறைந்த வாழ்த்துகள்
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா! உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கு அகமார்ந்த நன்றி!
Deleteமகிழ்கிறேன் . பாராட்டுகிறேன் . மேன்மேலும் எழுதிப் புகழ் பெற வாழ்த்துகிறேன் .முத்துநிலவன் அவர்களுக்கும் புஸ்தகா மின்னூல் நிறுவனத்துக்கும் பாராட்டு .
ReplyDeleteஉங்கள் பாராட்டும், வாழ்த்தும் கண்டு அகம் மிக மகிழ்கின்றேன். மிகவும் நன்றி!
Deleteவாழ்த்துக்கள், சகோதரி!
ReplyDeleteபுத்தக அச்சு வெளியீடுகளுக்கு அடுத்த கட்டம், மின்நூல்கள் வெளியீடா? நல்ல மாற்றம் தான். அதற்கும் இதற்கும் வெளியிடுதல், வாசகர்கள், விற்பனை இவற்றில் என்ன்ன்ன வித்தியாசங்கள் என்பதைத் தெரியப்படுத்துங்களேன்.
'என்ன இருந்தாலும் புத்தக வெளியீடு மாதிரி போலாகுமா?' என்பது மாதிரியான
குறைபாடு ஏதும் இருப்பதற்கில்லை என்று நினைக்கிறேன்.
புஸ்தகா டிஜிட்டல் மீடியா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.
“வாழ்த்துக்கள், சகோதரி!
Deleteபுத்தக அச்சு வெளியீடுகளுக்கு அடுத்த கட்டம், மின்நூல்கள் வெளியீடா? நல்ல மாற்றம் தான். அதற்கும் இதற்கும் வெளியிடுதல், வாசகர்கள், விற்பனை இவற்றில் என்ன்ன்ன வித்தியாசங்கள் என்பதைத் தெரியப்படுத்துங்களேன்.”
வணக்கம் ஜீவி சார்! உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
மின்னூல் வெளியீடு பற்றி எனக்குத் தெரிந்த விபரங்கள்:-
புஸ்தகா நிறுவனம் நம் படைப்புகளை மின்னூலாக்கி விற்பனை செய்வதற்கு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் போடுகிறார்கள்.
ஏற்கெனவே நாம் அச்சிட்டு வெளியிட்டவைகளையும், மின்னூலாக்கலாம். அச்சுப்பிரதியை அவர்களுக்கு அனுப்பிய பிறகு, அவர்கள் தட்டச்சு செய்து, பிழை திருத்தம் செய்ய நம்மிடம் அனுப்புவார்கள். நாம் திருத்திக் கொடுத்த பிறகு, அந்நூலின் அட்டைப்படத்தையே வைத்து மின்னூல் வெளியிடுவார்கள். மின்னூலாக்குவதற்கு, எந்தக் கட்டணமும் இல்லை.
நாம் கணிணியில் SOFT COPY ஆக வைத்திருக்கும் படைப்புகளையும், மின்னூலாக்கலாம். இது மிகவும் எளிது. நாம் ஈ மெயிலில் நம் படைப்பை அனுப்பி விட்டால், அவர்களே அட்டைப்படம் தயார் செய்து வெளியிட்டுவிடுவார்கள். உங்கள் பூ வனம் தளத்தில், நீங்கள் எழுதியுள்ள சுய தேடல். அழகிய தமிழ் மொழி இது, நெடுந்தொடர், நெடுங்கதை இவற்றைத் தொகுத்து மின்னூலாக்கலாம்.
இப்படி மின்னூலாக்குவதற்கு, அச்சு நூல்கள் போல், இத்தனை பக்கங்கள் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. ஐந்து பக்கங்கள் கொண்ட நூல் கூட, அவர்களிடம் உண்டு. பக்கத்துக்கும் சப்ஜெக்ட்டுக்கும் தகுந்தாற் போல், அவர்களே விலை நிர்ணயம் செய்கிறார்கள்.
விலை மிகவும் மலிவாகத் தான் உள்ளது. வாடகைக்கு எடுத்துப் படிக்கும் வசதியும் உண்டு. அது இன்னும் மலிவு. அமேசான் மூலமும் விற்பனைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அச்சுப் பிரதிகளை மின்னூலாக்கி விற்பனை செய்வதற்கு 40 சதவீதமும், soft copy க்கு 50 சதவீதமும் ராயல்டி கொடுக்கிறார்கள். வெளியிடும் ஒவ்வொரு நூலுக்கும் பத்துக் காப்பிகள் நமக்கு இலவசம். அவற்றை நாம் யாருக்கும் பரிசாகக் கொடுக்கலாம்.
மேலதிக தகவல்கள் அறிய, புஸ்தகா நிறுவனத்தின் திரு பத்பநாபன் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர் நம் சந்தேகங்களுக்கு விளக்கமாகப் பதிலளிப்பார்.
கைபேசி எண்:- 9845234491
மெயில் ஐடி:- padmanaban@pustaka.co.in
விரைவில் உங்கள் மின்னூல்களையும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி ஜீவி சார்!
வாழ்த்துகள் மா! ரொம்ப மகிழ்ச்சிம்மா!
ReplyDelete“புதுகை கணினித் தமிழ்ச்சங்கம்” தந்த வழிகாட்டுதலில் மின்னூல் வடிவில் உன்னூல்கள் வந்ததில் “பேரப்பிள்ளைகளைப் பார்த்த மகிழ்ச்சி” எனக்கு! புஸ்தகா பத்மநாபனின் ஓர் அழைப்பு என்னை இங்கொரு “மின்னூல் முகாம்” நடத்த வைத்தது. கணினித் தமிழ்ச்சங்க நண்பர்களின் நூல்கள் பல இப்போது மின்னூலாகச் சிறகடித்துப் பறப்பது கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன் - இதுதானே நம் எதிர்பார்ப்பு. அதில் -உன்னைப்போல் - சிலரேனும் “கணினித் தமிழ்ச்சங்க” முகாம் தந்த வழிகாட்டுதல் பற்றிக் குறிப்பிட்டு நன்றி சொல்வது உங்கள் நாகரிகத்தைக் காட்டுவதாக உள்ளது. தொடர்ந்து எழுதவும் மின்னூல் வழி உலகளவில் உங்கள் படைப்புகள் செல்லவும் இந்த இலக்கிய அண்ணனின் வாழ்த்துகள் மா!
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அண்ணா. புஸ்தகா கம்பெனியுடன் இணைந்து மின்னூல் முகாம் நீங்கள் புதுகையில் நட்த்தியிருக்காவிட்டால், நான் மின்னூல்கள் வெளியிட்டிருப்பது சந்தேகமே. எனவே புதுகை கணிணித் தமிழ்ச்சங்கத்துக்கும், தங்களுக்கும் நன்றி சொல்வது என் தார்மீகக் கடமையல்லவா?
Deleteதமிழ்ப்பதிவர்களைக் காலத்திற்கேற்ப அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் தங்கள் பணி தொடர வேண்டும். மீண்டும் நன்றி அண்ணா
வாழ்த்துகள்
ReplyDeleteமேலும், பல நூல்களை வெளியிட முன்வாருங்கள்.
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி!
Deleteஅண்மையில் வெளியான தங்களுடைய மின்னூல்களுக்காக தங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்! இன்னும் பல நூல்கள் வெளியாக வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களின் வாழ்த்தும், பாராட்டும் கண்டு அகம் மிக மகிழ்கின்றேன். மிக்க நன்றி!
Deleteதங்களுடைய கடின உழைப்பு மின்னூல்களின் வழியாகப் புலப்படுகின்றது..
ReplyDeleteஇன்னும் பல நூல்கள் வெளியாக வேண்டும்!.. என,மனதார வாழ்த்துகின்றேன்..
வாழ்க நலம்!..
வாங்க துரை சார்! உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்கின்றேன். மிகவும் நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!
ReplyDeleteஅஹா அருமையான நூல்கள். வாழ்த்துக்கள் கலையரசி :)
ReplyDeleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தேனம்மை!
Delete