நல்வரவு

வணக்கம் !

Tuesday, 12 January 2021

பூதம் காக்கும் புதையல் - சிறுவர் நாவல்


 அமேசானின்  #pentopublish4 போட்டிக்காகப் 'பூதம் காக்கும் புதையல்' எனும் சிறுவர் நாவலை, கிண்டிலில் 02/01/2021 அன்று வெளியிட்டேன்.    

இது பலரிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  இந்நாவல் பற்றிச் சிறார் எழுத்தாளர் விழியன் (இயற்பெயர் உமாநாத் செல்வன்) அவர்கள் மிகவும் பாராட்டித் தம் முகநூல் பக்கத்தில், இவ்வாறு எழுதியுள்ளார்:-

கிண்டிலில் ஓர் அற்புதமான சிறார் நாவல் வாசித்தேன். (இன்று இலவசமும் கூட) விறுவிறு நடை. தொய்வே இல்லை. பன்முகத்தன்மை கொண்ட எழுத்து. கலையரசி அவர்கள் மேலும் மேலும் பல படைப்புகள் படைக்க வேண்டும்.  சமீபத்தில் மிகவும் ரசித்த நூல். Evening was so thrilled. எங்க இருந்தாங்க, இத்தனை நாள்னு, தெரியல 

பிரபல சிறார் எழுத்தாளரிடமிருந்து, கிடைத்த இந்தப் பாராட்டு, என்னை மேலும் எழுத, ஊக்குவித்துள்ளது. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!


ந்நாவல் 12 முதல் 15 வயதினருக்கானது.  சிறுவர்களின் சாகசம் நிரம்பிய, சுவாரசியமான கதை.   திப்பு சுல்தான் ஆகாய கோட்டையில் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் காப்பதாகவும், அதை எடுக்கப் போகிறவர்களைப் பூதம் கொன்று விடுவதாகவும், வேலு எனும் ஆடு மேய்க்கும் சிறுவன் மூலமாக, நான்கு பேர் கொண்ட சிறுவர் கூட்டணியினர் கேள்விப் படுகின்றனர்.

வேலுவின் வழிகாட்டுதலோடு,  துடிப்பும், உற்சாகமும் மிக்க அச்சிறுவர்கள், அப்புதையலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுடன், அம்மலைக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.  அவர்கள் புதிர்களை விடுவித்துப் புதையலைக் கண்டுபிடித்தார்களா?  பூதத்தை எதிர்கொண்டு, வெற்றி பெற்றார்களா? வழியில்  சந்திக்கும் சவால்கள் என்னென்ன? என்பதை விறுவிறுப்பாகவும், எளிய நடையிலும் சொல்லும் கதை. அறிவியல்,  இயற்கை & சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது அறிவு, தமிழ்மொழி அறிவு, என பல தளங்களில் விரியும் கதை.  

வாய்ப்புள்ளோர் வாசித்துக் கருத்து சொல்லுங்கள்; நன்றி.

நூலுக்கான இணைப்பு:-


6 comments:

 1. Replies
  1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

   Delete
 2. Replies
  1. வணக்கம் வெங்கட்ஜி! வாழ்த்துக்கு மிக்க நன்றி! தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

   Delete
 3. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி! தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete