நல்வரவு

வணக்கம் !

Sunday 24 October 2021

மந்திரக்குடை – சிறுவர் குறுநாவல் வெளியீடு

 


என் சிறார் குறுநாவல் ‘மந்திரக்குடை’ சென்னை பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் அண்மையில் வெளியிட்டுள்ளது.  ஏற்கெனவே அமேசானில் சிறார் நூல்களை மின்னூல்களாக வெளியிட்டிருந்தாலும், என் சிறுவர் நூல் அச்சில் வருவது இதுவே முதல் முறை.

எழுத்தாளர் உதயசங்கர் அவர்களும் சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களும் நூலைக் குறித்து மதிப்புரை எழுதியுள்ளார்கள்.  அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் மகிழ்ச்சியாகப் பறக்கிறாள். மந்திரக்குடை பறக்க மட்டும் அல்ல, பேசவும் செய்கிறது. குடையைத் தவறவிட்டால் மீண்டும் பெறுவதற்கான மந்திரத்தையும் சொல்லித் தருகிறது.

உற்சாகமாய்ப் பறக்கும் தேவி, ஒரே ஒரு தும்மலில் பிடி தளர்ந்து கீழே விழுகிறாள். மந்திரமும் மறந்துபோகிறது. தேவி விழுந்த இடமோ வன விலங்குகள் வாழும் அடர்ந்த காடு. அக்காட்டில் அவளுக்குக் கிடைக்கும் அனுபவங்களே கதை.  

யானை போகும் வழியிலெல்லாம், கிளைகளை முறித்துப் போடுவது ஏன்? அணில் பழங்களை முழுதுமாகத் தின்னாமல், ஆங்காங்கே கொறித்துப் போடுவது ஏன்? ஆண் சிங்கம் வேட்டையாடுமா? ஆண் சிங்கத்துக்கும் பெண் சிங்கத்துக்கும் உருவத்தில் என்ன வேறுபாடு போன்று காடு குறித்தப் பல புதிய சுவாரசியமான தகவல்களைக் குழந்தைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு இந்நூலை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். அவசியம் இந்நூல் குறித்த அவர்களின் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.

வெளியீடு

 

புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18

  (+91 8778073949)

விலை

₹ 30/-

அமேசான் கிண்டிலில், வண்ணப் படங்களுடன் மின்னூலாகவும் கிடைக்கிறது. 

அதற்கான இணைப்பு:- https://www.amazon.in/dp/B09B3P9YFD


நன்றியுடன்

ஞா.கலையரசி

 


3 comments:

  1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்!

    ReplyDelete
  2. Replies
    1. மிக்க நன்றிம் மா கிரேஸ்!

      Delete