'கொண்டு கரிச்சானி'ன் குரல் இனிமை என்ற சென்ற பதிவில் சொன்னேன் அல்லவா? அதை நீங்களும் கேட்டு இன்புற இங்கே கொடுத்துள்ளேன். அலைபேசியில் ஒலிப்பதிவு செய்தது தான். இடையிடையே வேறு சத்தங்கள் இருப்பதால், அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனாலும் குருவியின் குரலை ஓரளவுக்கு உங்களால் இனங்காண முடியும் . கேட்டு விட்டு உங்கள் எண்ணத்தைப் பகிருங்கள்.
(இதனைத் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவைப் பார்த்துக் கீதமஞ்சரி கீதா மதிவாணன் இணைத்துக் கொடுத்தார். இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மூன்றாவதாக நான்
அறிமுகப்படுத்துவது கொண்டைக்குருவி (RED VENTED BUL BUL) (Pycnonotus cafer)
இதையும் பெயர்
தெரியாமல் புல் புல் என்றே சொல்லிவந்தேன்.
பறவைகள் கையேட்டின் மூலம் இந்தப் பெயர் தெரிந்து கொண்டேன். இதற்குச் சின்னான் என்ற பெயரும் உண்டாம்.
தலை கறுப்பாகவும், வாலுக்கடியில் சிவப்பாகவும் இருக்கும். உடலும்
இறகுகளும் பழுப்பு நிறமாகவும், செதில் செதிலாகவும் தோற்றமளிக்கும். வாலுக்கடியில்
இருக்கும் சிவப்பு தான், இதன் முக்கிய அடையாளம்.
பழங்கள், தேன்,
பூச்சிகள் முதலியவற்றை உணவாகக் கொள்ளும். .
,
சிறுசிறுகுச்சிகளையும், சிலசமயம் உலோகக் கம்பிகளையும் கொண்டு கிண்ண வடிவில் கூடு கட்டும்.
ஆண், பெண் இரண்டுமே
குஞ்சுக்கு உணவூட்டும். தெற்காசிய பறவையான
இதை நியூசிலாந்து, ஹவாய், பிஜி, யுனையெட் அரேபிய எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினர்.
மூர்க்க குணம்
கொண்டது. வெளியூரிலிருந்து அறிமுகப்படுத்தப்படும்
பறவைகளுள், உள்ளூர் இனங்களை ஒரேயடியாக அமுக்கி விட்டு வெகுவேகமாகப் படையெடுத்துப் பரவக்கூடிய,
இனமாக இப்பறவை இனங்காணப்பட்டுள்ளது. (worst
alien invasive species)
சென்ற ஆண்டு, ஒரு
நாள் எங்கள் வீட்டு வாசல் கதவுக்கும், கிரில் கேட்டுக்கும் நடுவில் தொங்கவிட்டிருந்த
மின்விசிறியின் மண்டையின் மேல் கூடு கட்ட இடம் பார்த்தது, இக்குருவி.
மின் விசிறியின்
மேற்பகுதி வெட்ட வெளியாக இருப்பதால், கூடு கட்டினால் குஞ்சு தவறிக் கீழே விழுந்து விடுமே
எனப் பயந்து நான் அட்டைபெட்டியின் நடுவில்
ஓட்டை போட்டு, அதனை மின்விசிறியின் இறக்கையில் தொங்கவிட்டேன்.
நான் முக்காலியில்
ஏறி அதைத் தொங்க விடுவதைக் கண்ட இது, அதன் கூட்டை எடுக்க முயல்கிறேன் என்று எண்ணிப்
பயந்து ஓடிவிட்டது. அதற்குப் பிறகு எங்கள் வீட்டுப்பக்கமே காணோம்.
அதன் பின் காலியாகத்
தொங்கிய அக்கூட்டில், சில நாட்கள் கழித்து முதன்முறையாகச் சிட்டுக்குருவி வந்து குடித்தனம்
நடத்தியது தனிக்கதை.
போன மாதம் வீட்டின்
குளிர் சாதனக்கருவியின் வெளிப்பக்க பெட்டியின் பக்கவாட்டில் இருக்கும் மிகச் சிறிய
இடத்தில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்தது. இதன் குரல் கேட்கச் சகிக்கவில்லை.
எங்கள் காரின்
ஆன்டெனா மேல் தம்பதி சமேதரராகக் காட்சி தரும் கொண்டைக் குருவி, கைபேசியில் எடுத்த படம்:-
(முதல் படம் - நன்றி இணையம்) நன்றி: - பறவைகள் அறிமுகக்கையேடு (ப.ஜெகநாதன் & ஆசை) மற்றும் இணையம். (தொடர்வேன்)
குருவியை வைத்து இவ்வளவு விடயங்களா அருமை சகோ... ஆடியோ கேட்டேன்
ReplyDeleteகில்லர்ஜி
தமிழ் மணம் 1
பதிவை வெளியிட்டவுடன் சுடச்சுட பின்னூட்டம் கொடுத்து வியக்க வைத்து விட்டீர்கள். ஆடியோ கேட்டது அறிந்து மகிழ்ச்சி. குருவியின் குரல் எப்படியிருக்கிறது என்று சொல்லவில்லையே? முதல் கருத்துரைக்கும் த.ம.வாக்குக்கும் மிக்க நன்றி சகோ!
ReplyDeleteபடித்து விட்டேன். ரசித்தேன். தொடர்கிறேன்.
ReplyDeleteபடித்து ரசித்தமைக்கும் தொடர்வதற்கும் நன்றி ஸ்ரீராம்!
Deleteதொடர்ந்து பார்த்து (படித்து) வருகிறோம். வியக்க வைக்கும் செய்திகள். நன்றி.
ReplyDeleteதொடர்ந்து வந்து படித்து ரசிப்பதற்கு மிகவும் நன்றி சார்!
Deleteகாற்றொலி அதிகமாக இருந்தாலும் சில இடங்களில் கேட்க முடிகிறது... இனிமை...
ReplyDeleteஅந்த தனிக்கதையையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
காற்றொலியை எடிட் பண்ணிக் குறைக்க ஏதும் வழியிருக்கா சார்! என்னைப் போன்று கணிணி தொழில் நுட்பம் தெரியாதவர்களுக்காகவே கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் தாங்கள் வெளியிட்டு இருக்கும் பல பதிவுகள் மிகவும் பயனுள்ளவை. சிட்டுக்குருவி கதையைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வேன். நன்றி தனபாலன் சார்!
Deleteபதிவுகளைத் தொடர்கிறேன் சகோ.
ReplyDeleteத ம 4
பதிவுகளைத் தொடர்வதற்கும் த ம வாக்குக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteசின்னான்.. - நன்றாக இருக்கின்றதே!..
ReplyDeleteநிறைய புதிய செய்திகள்.. கொஞ்சம் கரகரப்பு இருந்தாலும் - ஏனைய சத்தங்களுடன் கொண்டைக் குருவியின் சங்கீத சம்மேளனம் அருமை..
இந்த கொண்டைக் குருவி - இங்கே - குவைத்தில் - ஆங்காங்கே காணப்படுகின்றன. ஆனால், வளர் இயல்பினால் - மனிதர்களை நெருங்குவதில்லை!..
குருவியின் சங்கீதத்தைச் செவிமடுத்தது அறிந்து மகிழ்ச்சி துரை சார்! இது குவைத்தில் இருப்பதை அறிந்தேன். கருத்துரைக்கு மிகவும் நன்றி சார்!
Deleteஅருமையாக உள்ளது தங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள்.. நன்றி
ReplyDeleteதொடர்ந்து வந்து பாராட்டி ஊக்கமளிப்பதற்கு மிகவும் நன்றி மகேஸ்வரி!
Deleteஇந்தப்பதிவினை வெளியிட்ட முதல் நாள், நான் பலமுறை முயற்சித்தும் அது திறக்கப்படாமல் இருந்தது. வீடியோ/ஆடியோ பதிவேற்றுவதில்தான் ஏதாவது சிக்கலாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.
ReplyDelete>>>>>
ஆமாம் சார்! குரலைப் பதிவேற்றுவதில் பிரச்சினை இருந்தது. பாதிக்க்கு மேல் என்னால் செய்ய முடியவில்லை. ஏற்கெனவே கீதா அவர் பதிவில் பறவைகளின் இன்னிசையை ஒலிக்கச் செய்திருப்பதால் அவர் உதவியை நாடினேன். அவரும் தனபாலன் சார் பதிவின் உதவியோடு பதிவேற்றிவீட்டார். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு புத்துணர்ச்சி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பது உங்களது வரிசையான பின்னூட்டங்களால் அறியப் பெறுகிறேன். முழு ஓய்வு எடுத்த பிறகு உங்கள் தளத்தில் பதிவிடத் துவங்குங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்!
Delete//ஆனாலும் குருவியின் குரலை ஓரளவுக்கு உங்களால் இனங்காண முடியும் . கேட்டு விட்டு உங்கள் எண்ணத்தைப் பகிருங்கள். //
ReplyDeleteமிக நன்றாகவே இனம் கண்டு கேட்டு ரஸிக்க முடிந்தது. விசில் அடிப்பதுபோலவும் இருந்தது. :) ஒன்றுக்கு இரண்டாகக்கொடுத்துள்ளது நல்லது. இரண்டுக்கும் வித்யாசம் நன்கு தெரிகிறது.
>>>>>
இரண்டும் ஒரே குருவி ஆனால் வெவ்வேறு நாட்களில் பதிவு செய்யப்பட்டவை. ஒன்றுக்கு ஒன்று வித்தியாசம் இருப்பது தெரியவேண்டும் என்பதற்காகவே இரண்டையும் பதிந்தேன். ஏற்கெனவே என் பதிவில் சொன்னபடி தனித்துவமான தன் பாடல் மூலம் அவை தம் இனத்துக்குச் செய்தி சொல்கின்றன. கரகரப்பு இருந்தாலும் அதன் ஒலி எப்படியிருக்கும் என நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதாலேயே பதிந்தேன். கேட்டு ரசித்தமைக்கு மிகவும் நன்றி சார்!
Delete//இதனைத் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவைப் பார்த்துக் கீதமஞ்சரி கீதா மதிவாணன் இணைத்துக் கொடுத்தார். இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.//
ReplyDeleteஎனக்கும் இந்த தொழில்நுட்பங்கள் தெரிவது இல்லை. புரிவதும் இல்லை. ஒரேயொரு முறை நம் வெங்கட் நாகராஜ் ஜீ அன்று என் இல்லத்திற்கு தன் மனைவி+மகளுடன் வருகை தந்திருந்ததால், அவர் உதவியால் ஒரு ஆடியோ இணைக்கப்பட்டது.
http://gopu1949.blogspot.in/2013/03/4.html
>>>>>
இருவரும் இல்லையென்றால் நான் குரலை இணைத்திருப்பேனா என்பது சந்தேகம் தான். ஆனால் வழிமுறைகளை ஒரு முறை அவர்களைப் பக்கத்தில் வைத்துச் செய்து விட்டீர்கள் என்றால் சுலபம் தான். நன்றி சார்!
Deleteகொண்டைக்குருவி (RED VENTED BUL BUL) யின் படமும், குறிப்பாக கறுப்பு நிறத் தலையும், சிகப்பு நிற வாலின் அடிப்பாகமும், பழுப்பு நிற செதில் செதிலான உடல்பகுதியும் மிகச்சிறப்பாக உள்ளன.
ReplyDelete>>>>>
கொண்டைக்குருவியையும் அதன் படத்தையும் ரசித்தமைக்கு மிகவும் நன்றி சார்.
Delete//போன மாதம் வீட்டின் குளிர் சாதனக்கருவியின் வெளிப்பக்க பெட்டியின் பக்கவாட்டில் இருக்கும் மிகச் சிறிய இடத்தில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்தது. இதன் குரல் கேட்கச் சகிக்கவில்லை.//
ReplyDelete:)))))
>>>>>
//எங்கள் காரின் ஆன்டெனா மேல் தம்பதி சமேதரராகக் காட்சி தரும் கொண்டைக் குருவி, கைபேசியில் எடுத்த படம்:-//
ReplyDeleteஅவை பறப்பதற்குள் எடுத்துள்ளது சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்!
Deleteராபின் பறவையின் குரல் விசில் ஒலியில் ஏதோ பேசுவதைப் போலவே இருக்கிறது. எவ்வளவு அழகான இனிய ஒலி. எப்படியோ கேட்கமுடிந்ததே.. அதுவே மகிழ்ச்சி.
ReplyDeleteகொண்டைக்குருவி என்பது எவ்வளவு அழகான பெயர். புல்புல் என்றுதான் நானும் இதுவரை அறிந்திருக்கிறேன். அதன் வாலுக்கடியில் இருக்கும் சிவப்பைப் பார்த்தே எளிதில் அடையாளங்கண்டுகொள்ள முடியும். உண்மைதான். worst alien invasive species இல் இதுவும் ஒன்று என்று அறிய வியப்பாக உள்ளது. ஜோடிகளை அழகாக படமெடுத்திருக்கிறீர்கள். தொடர்வதற்கு இனிய பாராட்டுகள் அக்கா.
ஆம் கீதா! இரண்டு நாட்களில் ஒரே குருவியின் இசை வெவ்வேறு விதமாக இருப்பதை அறிந்து எனக்கு வியப்பு. நாம் நினைப்பது போல எல்லா நேரங்களிலும் அவை ஒரே மாதிரியாகப் பாடுவதில்லை. இணைத்துக்கொடுத்து எல்லோரும் கேட்க வாய்ப்பளித்தமைக்கு மிகவும் நன்றி கீதா! பிளாஷ் இல்லாமல் ஜோடிகளைப் படமெடுத்து விட்டேன். அதனால் சரியான வெளிச்சம் இல்லை. இருந்தாலும் இரண்டும் ஜோடியாக உள்ள படத்தை வெளியிட வேண்டும் என நினைத்தேன். பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா!
Deleteபறவைகளை பற்றி வியக்க வைக்கும் செய்திகளை அறிய செய்ததற்கு நன்றி!
ReplyDelete