(நான்கு பெண்கள் தளத்தில் 09/03/2015 வெளியான என் கட்டுரை)
01/03/2015 முதல்
08/03/2015 வரை புதுவையில் ஷில்பதரு (Shilpataru) கலைஞர்கள் குழு ஏற்பாடு செய்திருந்த
கலைக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு எனக்குக்
கிட்டியது.
இந்நிகழ்ச்சிக்கு
இவர்கள் தேர்ந்தெடுத்த கரு, ‘மறுசுழற்சி கலை’ என்பதாகும்.
நாம் குப்பை என்று
தூக்கி வீசும் பொருட்கள், இவர்களின் படைப்புத் திறன் மூலம் கவின்மிகு கலைபடைப்புகளாக
உருமாற்றம் பெற்றிருந்தன.
வாசலில் எச்.சண்முகம்
என்பவர் அடுத்த அடி (Next step) என்ற தலைப்பில் உருவாக்கி வைத்திருந்த மிகப்பெரிய கலை
வடிவம், அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
குப்பை மேலாண்மையில்
(waste management) இனியும் நாம் கவனம் செலுத்தாவிட்டால், எதிர்கால பூமி எப்படியிருக்கும்,
நம் வருங்காலச் சந்ததிகளின் நிலை என்ன, சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை சிறிதுமின்றி எப்படிப்பட்ட
பரிதாபமான சூழ்நிலையில் நம் குழந்தைகளை விட்டுச் செல்கிறோம் என்று காண்போரைச் சிந்திக்க
வைத்தது அப்படைப்பு.
நாம் தினமும் தொட்டியில்
கொட்டும் மக்காத குப்பைகள், கழிவுப் பொருட்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நெகிழி
(Plastic) பொருட்கள், மறுசுழற்சி செய்யப்படாத பொருட்கள் எல்லாமுமாக சேர்ந்து பூமியைக்
குப்பை காடாக மாற்றி விட, நம் குழந்தை அதற்குள் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும்
காட்சி, மனதை மிகவும் பாதித்தது.
கண்ணெதிரே சில
அடி தூரத்தில் ஏணி இருந்தும், அதில் ஏற முடியாமல், குப்பை புதைகுழிக்குள் கால்களிரண்டும் அகப்பட்டுக்
கொண்டு ‘என்னைக் காப்பாற்றுங்கள்,’ ‘என்னைத் தூக்கிவிடுங்கள்,’ என்று குழந்தை அபயக்குரல்
எழுப்புவது போன்ற தத்ரூபமான காட்சி, படைப்பாளரின் சமூக சிந்தனையைப் பறைசாற்றியதுடன்,
காண்போருக்குச் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டுவதாக அமைந்திருந்தது.
தங்களுக்கும் அன்னை
பூமியின் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டிய பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை இக்கலைப் படைப்புகளின் மூலம் அருமையாக வெளிப்படுத்தியிருந்தனர்
இக்கைவினைஞர்கள்.
உடைக்கும், நாகரிகத்துக்கும்
மட்டும் மேல் நாடுகளை காப்பியடிக்கும் நம்மவர்கள், நல்லவிஷயமான குப்பை மேலாண்மையை அவர்களிட
மிருந்து கற்றுகொண்டால் என்ன? இன்னும் சுற்றுச்சூழல்
பற்றிய போதுமான விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.
காய்கறிக் கழிவு,
புல், பூண்டு போன்றவற்றிற்குப் பச்சைத் தொட்டி, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளைப்
போட நீலத் தொட்டி, மக்காத குப்பை, மறுசுழற்சி
செய்யமுடியாத குப்பைகளுக்குக் கறுப்புத் தொட்டி என்று கலர்வாரியாக ஒவ்வொரு வீட்டிலுமே
கழிவுகளைப் பிரித்துப் போட்டு விடுகிறார்கள்.
விற்கும் ஒவ்வொரு
பொருளிலும் குத்தப்படும் முத்திரையைக்கொண்டு இது மறுசுழற்சி பொருளா இல்லையா என்பதை
அறிந்து கொள்கின்றனர். செய்யக்கூடிய பொருள்
என்றால் எத்தனை முறை ஏற்கெனவே மறுசுழற்சிக்கு உட்பட்டிருக்கிறது; இன்னும் எத்தனை முறை செய்யமுடியும் என்பதை அதிலுள்ள எண்ணைப் பார்த்துத்
தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் வகை பிரித்து தொட்டியில் போட, குப்பை மேலாண்மை
எளிதாகிறது.
இக்காட்சியில்
வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்துமே, தென்னை நார், தேங்காய் மட்டை, குரும்பைகள்,
பனை ஓலை, ஒயர், விபத்தின் போது சிதறி விழும் கண்ணாடித்துண்டுகள், சவுக்கு காய்கள்,
நெகிழி குவளைகள் போன்றவைகளை வைத்தே செய்யப்பட்டிருந்தன.
நாம் வேண்டாம்
என்று எரியும் பொருட்களிலிருந்து, இப்படியும் செய்ய முடியுமா என வியப்படைய வைத்தது
ஒவ்வொரு படைப்பும். குப்பைகள் கலைப்பொருட்களாக
மாறுவதன் மூலம், நம் குழந்தைகளின் படைப்புத்திறனும் தூண்டப்படுகிறது; குப்பையின் அளவும்
குறைகிறது
நான் பார்த்து
வியந்த கலைப் பொருட்களை, நீங்களும் பார்த்து மகிழ:-
வணக்கம்
ReplyDeleteகழிவுப்பொருட்களை கொண்டு உருவங்கள் அமைத்தல் வேலைப்பாடுகளை ஒவ்வொரு தாயும் தந்தையும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தினால் பிள்ளைகளின் திறமை வெளியே வரும்
மிகஅருமையான விழிப்புணர் ஊட்டகூடிய வகையில் கட்டுரையில் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முதல் வருகைக்கும் அருமை எனப்பாராட்டியதற்கும் மிகவும் நன்றி ரூபன்!
Deleteசிந்தித்து செயல்பட நிறைய விஷயங்கள்..
ReplyDeleteமண்ணுலகைக் காப்பது நம் அனைவரின் கடமை!..
இனியதொரு பதிவு!.. வாழ்க நலம்!..
பாராட்டுக்கு மிகவும் நன்றி துரை சார்!
Deleteகரிக்குருவியின் அடுத்த பதிவினைக் காண வருக!..
ReplyDeleteஅடுத்த பதிவு வெளிவந்த விபரம் அறிந்தேன். விரைவில் வருகிறேன்.
Deleteகுப்பை மேலாண்மை கண்டிப்பாக நாம் செய்ய வேண்டியது..எளிதாக இருக்கிறது என்பதற்காக நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் குப்பையை அதிகரிக்கின்றன..
ReplyDeleteநல்ல முயற்சி, கலைப் பொருட்களை ரசிக்கப் பகிர்ந்தமைக்கு நன்றி.
முதல் வருகைக்கு மிகவும் நன்றி கிரேஸ்! கருத்துரைத்தமைக்கும் கலைப்பொருட்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கிரேஸ்!
Deleteகுப்பை மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை மிக நேர்த்தியாக கலைப்பொருட்கள் வழியே உணர்த்தும் ஷில்பதரு கலைக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். குப்பைகளால் சூழ்ந்த உலகில் வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை எவ்வளவு மூச்சுமுட்டக்கூடிய போராட்டமாக இருக்கப்போகிறது என்பதை அந்த புதையுண்ட குழந்தை காட்சி தெள்ளந்தெளிவாக உணர்த்துகிறது. மற்றக் கலைப்பொருட்களும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இவற்றையா நாம் குப்பையில் எறிந்தோம் என்று எண்ணவைக்கின்றன. விழிப்புணர்வூட்டும் பதிவுக்கும் கலைபொருட்களை நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கும் மிக்க நன்றி அக்கா.
ReplyDeleteமிகவும் ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கீதா!
Deleteநீண்ட காலமாகவே நாம் போடும் குப்பைகளைக் கண்டு பயம் மனதில் எனக்கும் வருகிறது. சரியான வழிகாட்டல், மேலாண்மை இல்லாத சூழல் நம் நாட்டில். பொது மக்களுக்கும் பொறுப்புணர்வு வரவேண்டும். எவரெஸ்ட் சிகரத்தை நாசம் செய்யும் யாத்ரீகர்கள், மலையேறிகள் மீது நேபால் அரசு கடுப்பாகி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக செய்தித்தாளில் படித்தேன். பல நிறங்களில் பை வாங்குவதும் பிரித்துப் போடுவதும் கூட எளிது. ஆனால் இவற்றைக் கலெக்ட் செய்ய ஆட்களை நியமிப்பதுதான் கடினம். இது போதாதென்று ஈ வேஸ்ட் எனப்படும் மின் கழிவுகள் வேறு. இதில் எந்த நாடும் சரியில்லை! தங்கள் குப்பைகளை ஏழை நாடுகள், வேறு நாடுகள் எல்லையில் கொட்டி வரும் ஆதிக்கச் சக்திகள்!
ReplyDeleteமனிதன் வாழ வேற்று கிரகத்தில் இடம் இருக்கிறதா என்று கண்டு பிடிப்பதை விட, இந்தக் குப்பைகளை ஏதாவது கிரகத்தில் டிஸ்போஸ் செய்ய முடியுமா என்று ஆராய்ச்சி செய்யலாம்!
நீங்கள் சொல்வது சரி தான் ஸ்ரீராம்! பொது மக்களுக்கும் பொறுப்புணர்வு வர வேண்டும். சகட்டு மேனிக்குக் கண்ட இடத்திலும் குப்பைகளைக் கொட்டுதல் நம் நாட்டில் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆங்காங்கே சாக்கடைகளை அடைத்துக்கொண்டு பிளாஸ்டிக் பைகள்! முழு கிரகம் கிடைத்தால் கூட நம் குப்பைகளுக்கு அது போதுமா எனத் தெரியவில்லை. நல்லதொரு கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!
Deleteகைபொருட்கள் அபாரம்...
ReplyDeleteசுயநல மனக் குப்பையை நீக்கினால் அனைத்தும் சரியாகி விடும்...
அபாரம் என்று பாராட்டியமைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி தனபாலன் சார்!
Deleteநான்கு பெண்கள் தளத்தில் 09/03/2015 வெளியான தங்களின் கட்டுரைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு சார்!
Deleteஇன்றைய மிக முக்கியத் தேவையானதும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமான நல்லதொரு பதிவு.
ReplyDelete>>>>>
விழிப்புணர்வூட்டும் நல்லதொரு பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்!
Deleteமுதல் படமும் மற்ற அனைத்தும் படங்களும் சிந்திக்க வைப்பதாகவே உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபடங்களைப் பார்த்து ரசித்துக் கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்றிசார்!
Deleteஅருமையான கலைப் படைப்புகளை அறியத் தந்தமைக்கு நன்றி . கண்ட இடத்தில் தாள் முதலியவற்றைத் தூக்கி எறிகிறவர்கள் படித்தவர்களுந்தான் . சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்ச்சி நம்மிடம் அறவே இல்லை .
ReplyDeleteஆம். சரியாகச் சொன்னீர்கள். இவ்விஷயத்தில் படித்தவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். தங்களது கருத்துரைக்கு மிகவும் நன்றி.
Deleteபலருடைய சிந்தனையைத் தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ள பதிவு. படங்கள் பதிவிற்கு அழகினைச் சேர்க்கின்றன. மனதில் பதியரவடாழ பயனுள்ளவற்றைச் செய்து சுற்றுச்சூழல் காப்போம்.
ReplyDeleteபதிவினைப் பாராட்டிய தஙகளது கருத்துரைக்கு மிகவும் நன்றி ஐயா!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியர் பயிற்சியில் இவையெல்லாம் படிக்கும் இளைய சமுதாயம் ஏனோ தான் ஆசிரியர் ஆன பின் செயல்படுத்துவதில்லை. தங்கள் படங்கள் ஒவ்வொன்றும் அருமை. நல்ல கருத்துள்ள செய்திகள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆம் மகேஸ்வரி! படங்களைப் பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி!
Delete
ReplyDeleteவணக்கம்!
குப்பையைக் கொண்டு குவித்த கலைவண்ணம்
இப்புவியைக் காக்கும் இசைந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தங்கள் வருகைக்கும் அருமையான பாடல் மூலம் பின்னூட்டம் கொடுத்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா!
Delete
ReplyDeleteதமிழ்மணம் 4
தமிழ்மணம் வாக்குக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி!
Deleteநான் உங்கள் தளத்திற்கு வருவது இதுவே முதல் தடவையாகும். மிக அருமையான பதிவு. எனது பதிவு சீனிக்கிழங்கு சிப்ஸ் ! எனது வலைப்பூவுக்கும் வருகை தரலாமே ! கண்டிப்பாக வாருங்கள்.
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சாரதா! அவசியம் உங்கள் வலைப்பக்கம் வருவேன்.
Deleteநல்ல பகிர்வு.
ReplyDeleteபெங்களூரில் குப்பைகளைப் பிரித்து வெளியேற்றும் முறை பலகாலமாகக் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
@ ஸ்ரீராம்,
/தங்கள் குப்பைகளை ஏழை நாடுகள், வேறு நாடுகள் எல்லையில் கொட்டி வரும் ஆதிக்கச் சக்திகள்! /
இதை குற்றச்சாட்டை நகரங்கள் மேல் வைக்கிறார்கள் கிராமத்தினர். நிலக்குழிகளை தங்கள் வாழ்விடத்துக்குப் பக்கம் அமைக்க வேண்டாமெனப் போராடி வருகிறார்கள்.
உண்மைதான். இவற்றை எப்படி தடுத்து நிறுத்துவது? சீக்கிரம் ஒரு நல்ல வழி பிறக்கவேண்டும்.
Deleteஉண்மைதான். இவற்றை எப்படி தடுத்து நிறுத்துவது? சீக்கிரம் ஒரு நல்ல வழி பிறக்கவேண்டும்.
Delete"பெங்களூரில் குப்பைகளைப் பிரித்து வெளியேற்றும் முறை பலகாலமாகக் கடைபிடிக்கப் பட்டு வருகிறது."
Deleteஅப்படியா? எனக்குத் தெரியாத செய்தி. பல விஷயங்களில் பெங்களூரு முன்மாதிரியாக விளங்குகிறது. நம்மவர்களும் அவர்களிடமிருந்து இதனைக் கற்றுக்கொண்டால் நல்லது.
தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி ராமலெஷ்மி!
தங்கள் மீள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்!
Delete