நல்வரவு

வணக்கம் !

Thursday, 23 February 2017

என் பார்வையில்- தாயுமானவள் (சிறுகதைத் தொகுப்பு)


ஆசிரியர்திரு வை.கோபாலகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்சென்னை
விலை ரூ 45/-

கோபு சார் என்றழைக்கப்படும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வலையுலகில் மிகவும் பிரபலமானவர்பத்து மாதங்கள், வெற்றிகரமாக சிறுகதை விமர்சனப் போட்டி நடத்திப் பரிசு என்ற பெயரில், ஓய்வூதியப் பணத்தை வாரியிறைத்துப் பதிவர்களின், விமர்சனத் திறமையை வெளிக் கொணர்ந்து, பட்டை தீட்டியவர். 


இப்போட்டிக்கு நடுவர் பணியைத் திறம்படச் செய்தவர், பூவனம் திரு ஜீவி சார் அவர்கள்.  'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா,' வரை என்ற சிறந்த நூலின் ஆசிரியர். இந்நூல் பற்றிய என் பார்வை:- http://unjal.blogspot.com/2016/03/blog-post.html

கோபு சார் தம் புத்தகங்களை எனக்குப் பரிசளித்து, இரு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டனஇவ்வளவு தாமதமாக, இவர் புத்தகங்கள் பற்றியெழுதுவதற்கு, மிகவும் வருந்துகிறேன்ஏற்கெனவே போட்டியின் போதே, சில கதைகளை நான் வாசித்து விட்டது தான், இத்தாமதத்துக்குக்  காரணம்.  

இத்தொகுப்பில் மொத்தம் 13 கதைகள் உள்ளனஇவற்றுள் சிலவற்றைப் பற்றி மட்டும் சொல்லி, ஆசிரியரின் கதை சொல்லும் பாங்கினை விவரிப்பது என் நோக்கம்:-

நூலில் முதலாவதாக இருக்கும் தாயுமானவள்’, எனக்கு மிகவும் பிடித்த கதை.
சுனாமியில் திடீரென்று பெற்றோரை இழந்து, அன்பு செலுத்த யாருமின்றி, அனாதையான குழந்தைக்கு, இயற்கையாக இருக்கக் கூடிய பயவுணர்வு, அன்புக்கும், பாசத்துக்கும் ஏங்கும் இயல்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, மிகவும் யதார்த்தமாக இக்குழந்தை பாத்திரத்தைப் படைத்து, இரத்தமும், சதையுமாக, நம்முன் நடமாட விட்டிருக்கிறார் ஆசிரியர்   

குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்பவள், தாயுமானவர் அருளால், ஒரே நாளில் தாயும் ஆனவள் என்பதால், தலைப்பு மிகப் பொருத்தம்! 

கதைகளுக்கு மிகப் பொருத்தமாய்த் தலைப்பு வைப்பது, ஆசிரியருக்குக் கை வந்த கலை!  அடுக்கு மாடிக்குடியிருப்பில், எலிகளால் படும் அவதிகளைச் சொல்லும் கதையின் பெயர்,எலிசபெத் டவர்ஸ்!’

தள்ளாத வயதிலும், கண்பார்வை மங்கிய நிலையிலும், உழைத்துச் சம்பாதித்துக் குடும்பத்துக்குதவ நினைக்கும், உயரிய எண்ணம் படைத்த முதியவளை ஏமாற்றி எடுத்து வந்த தேங்காய், அழுகலாகி விடுவது நல்ல திருப்பம்இக்கதையின் தலைப்பு என்ன தெரியுமா?
ஏமாற்றாதே, ஏமாறாதே!
இதைத் தவிர, வேறு எதுவும், இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்க முடியுமா

இக்கதையில் தேங்காயைத் தட்டித் தட்டிப் பார்ப்பதை, மிருதங்கம் வாசிப்பதற்கு ஒப்பிட்டிருப்பது, நல்ல தமாஷ்நகைச்சுவை மிளிரக் கதை சொல்வது, ஆசிரியரின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி!

பொடி விஷயம்,’ என்ற கதை முழுக்க, முழுக்க நகைச்சுவை வெடியால் நிரம்பியதுமூக்குப் பொடி போடும், வழுவட்டை ஸ்ரீனிவாசன் பற்றிப் படிப்பவர் அனைவருக்கும், சிரித்துச் சிரித்து வயிற்று வலி வருவது நிச்சயம்! இக்கதையின் இணைப்பு:-வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ! புதிய கட்சி 'மூ.பொ.மு.க,' உதயம்!
  
எலி'சபெத் டவர்ஸ்,’ கதையிலும், இடையிடையே நகைச்சுவை மிளிர்கிறது.

இந்நூலில் என்னைக் கவர்ந்த இன்னொரு கதை:- 'டம்பெல்லாம் உப்புச்சீடை':-
சக மனிதர்களின் புறத்தோற்றம் கண்டு, எள்ளி நகையாடி, வெறுத்து ஒதுக்கும் நாம், அக அழகைத் தரிசிக்காமல், கண்ணிருந்தும் குருடராகி விடுகிறோம். தவறு செய்வது மனித இயல்பு,  மன்னிப்பது தெய்வீக குணம்’ ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’, போன்ற நீதிகள் பலவற்றை வாசிப்பவர், மனதில் அலையலையாக ஏற்படுத்திச் சிந்திக்கத் தூண்டும் அருமையான கதையிது. 
இதற்கு நான் எழுதிய விமர்சனத்தின் இணைப்பு:- http://unjal.blogspot.com/2014/11/2.html

விஷ சாராயம் அருந்தி, தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியின் கணவன் இறந்து போக, அவள் குழந்தையைத் தத்து எடுப்பதைச் சொல்வதுஅஞ்சலை,’ கதைதாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேலைக்காரியின் குழந்தையைத் தத்து எடுப்பதாகக் காட்டியிருப்பது, வரவேற்க வேண்டிய, முற்போக்கு சிந்தனை!
இதற்கு நான் எழுதிய விமர்சன இணைப்பு:- http://unjal.blogspot.com/2014/11/3.html

நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்’, மனதைத் தொட்ட கதை.
ஆசிரியர் தம் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், தாம் சந்தித்த ஏழை எளியவர்களையும், வேடிக்கை மனிதர்களையும் கதை மாந்தர்களாக்கி உலவ விட்டிருப்பதால், கதை வாசிக்கின்ற உணர்வை விடவும், யதார்த்தம் மேலோங்கி இருக்கின்றது.  .

பாராட்டுக்கள் கோபு சார்!


(தொடரும்)  

68 comments:

 1. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறீர்கள்.

  சரியாகச் சொல்லப் போனால் எறிந்தது ஒரே கல் தான். ஆனால் விழுந்தது என்னவோ ஒரு மாங்காயும், முழுசாக ஒரு மாங்குலையும். என் புத்தகத்திற்கான உங்கள் விமரிசன லிங்க் மாங்காய் என்றால் கோபு சாரின் சிறுகதைத் தொகுப்பின் கதைகளுக்கான விமரிசனம் மாங்குலை.

  கோபு சார் நடத்திக் காட்டிய அந்த விமரிசனப் போட்டிக் காலம் பசுமையாக மறக்கமுடியாமல் நினைவில் இருக்கிறது. எதிலும் முதன்மை பெறும் எடுத்துக்காட்டாளராய் கோபு சார் இருப்பதை இப்பொழுதும் நினைத்து வியக்கிறேன். ஒன்றை செய்ய வேண்டும் என்று முயன்று விட்டாரென்றால் மனிதர் எந்த இக்கட்டைக் கண்டும் மயங்கிச் சோர்வதில்லை. அந்த விஷயத்தில் கோபு சாரின் அயராத உழைப்பு எனக்கும் ஒரு பாடம் தான்.

  நல்ல எழுத்துக்களுக்கு வயதும் மூப்புமில்லை. உங்கள் விமர்சனங்களுக்கும் தான்.

  மிக்க நன்றி, சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், முதல் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி ஜீ.வி. சார். உங்கள் புத்தகத்தைப் பற்றிய என் பதிவு வெளியிட்ட போது திரு கோபு சார் தான் முதல் பின்னூட்டம் கொடுத்தார். அவர் நூலுக்கு உங்கள் முதல் பின்னூட்டம் கண்டு வியக்கிறேன்! நல்ல எழுத்துக்களுக்கு வயதும் மூப்புமில்லை. உங்கள் விமர்சனங்களுக்கும் தான். என்ற உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்று ஜீ.வி.சார்!

   Delete
 2. 1)

  ’என் பார்வையில் - தாயுமானவள் - பகுதி - 1’ என்ற தங்களின் இந்தப்பதிவு என் பார்வையில் இன்று மட்டுமே பட்டு, என்னால் பார்க்கவும் படிக்கவும் நேர்ந்துள்ளது. அதற்காகத் தங்களுக்கு என் முதற்கண் நன்றிகள்.

  இன்று மஹா சிவராத்திரியும், பிரதோஷமும் சேர்ந்துள்ள, மிகச்சிறப்பான அழகான வெள்ளிக்கிழமையாக உள்ளது. ‘தாயுமானவர்’ ஆகிய திருச்சி சிவனுக்கு உகந்த நாளில் இதனை படிக்க வாய்ப்புக்கிடைத்துள்ளதில் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு சார். வணக்கம். பதிவு வெளியிட்டவுடன் உங்களுக்குத் தனி மெயிலில் விபரம் சொல்ல நினைத்தேன். அதற்குள் அவசர வேலை குறுக்கிட்டு விட்டது. நீங்கள் எப்படியும் பார்த்துவிடுவீர்கள் என்ற நினைப்பில் விட்டுவிட்டேன். சிவராத்திரி வெள்ளிக்கிழமையில் தாயுமானவர் பற்றிப் படிக்க, பார்க்க நேர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. நன்றி சார்!

   Delete
  2. //பதிவு வெளியிட்டவுடன் உங்களுக்குத் தனி மெயிலில் விபரம் சொல்ல நினைத்தேன். அதற்குள் அவசர வேலை குறுக்கிட்டு விட்டது.//

   அதனால் பரவாயில்லை மேடம். நானும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஓய்வு ஏதும் இல்லாமல் இங்குமங்கும் ’ஹனிமூன்’ போக வேண்டியதாகிப் போய் விட்டது.

   ‘ஹனிமூன்’ = LOCAL AUTO TRIPS FOR PERIODICAL HEALTH CHECK-UP, HOSPITAL VISITS, LAB TEST, TEST REPORT COLLECTIONS, CONSULTING WITH DOCTORS, COLLECTION OF TABLETS, MEDICINES, INJECTIONS etc., etc., FOR MYSELF & MY WIFE. :)

   Delete
  3. Check up, lab test result எல்லாம் நார்மல் தானே கோபு சார்!

   Delete
  4. ஞா. கலையரசி 25 February 2017 at 03:48

   //Check up, lab test result எல்லாம் நார்மல் தானே கோபு சார்!//

   ஒரேயடியாக நார்மல் என்றோ அல்லது அப்-நார்மல் என்றோ சொல்லிவிட முடியாது.

   எனக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ஷுகர் உள்ளது. இதுவரை மாத்திரைகள் மட்டுமே மறக்காமல் தினமும் எடுத்துக்கொள்கிறேன்.

   பெரும்பாலும் காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் ஷுகர் லெவல் 150-ஐத் தாண்டாமலும், சாப்பிட்டுவிட்டு அதிலிருந்து 2 மணி நேரங்கள் கழித்து எடுக்கும் டெஸ்டில் 300-ஐத் தாண்டாமலும் பார்த்துக்கொள்ள மட்டுமே முடிகிறது. இந்த லெவல் ஒவ்வொரு மாதமும் சற்றே கூடவோ-குறையவோ வித்யாசப்படும். மாதம் இருமுறை டெஸ்ட் செய்து கொள்வேன் + குறித்து வைத்துக்கொள்வேன். அதாவது வீட்டிலேயே அதற்காக வாங்கி வைக்கப்பட்டுள்ள உபகரணங்களுடன் ஒரு முறையும், எங்கள் BHEL Hospital இல் ஒரு முறையுமாக.

   கடந்த 12 மாதங்களில், எனக்குள்ள FBS/PPBS Level முறையே இங்கு கொடுத்துள்ளேன்.

   Latest one during February 2017:- 124/225

   January 2017 to March 2016 (11 Months)

   108/228; 125/215; 101/185; 107/176; 167/285; 139/298; 132/292; 185/272; 105/241; 143/281; 138/259

   தினமும் நான்கு முறை காஃபி குடித்தாலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜீனி இல்லாமல் காஃபி குடிக்கப் பழகிக் கொண்டு விட்டேன். ஸ்வீட்ஸ் + ஐஸ் கிரீம் சாப்பிடுவதையும் முற்றிலுமாக நிறுத்துக்கொண்டு விட்டேன். இருப்பினும் மற்ற பிடித்தமான ROUTINE ஆகாரங்களில் கட்டுப்பாடு + நேரத்திற்கு கரெக்டாகவும் மிகக்குறைவாகவும் மட்டுமே ஆகாரம் எடுத்துக்கொள்வது + உடற்பயிற்சிகள் மேற்கொள்வது என்பதெல்லாம் என்னிடம் சுத்தமாக இல்லை. என்னால் அவற்றையெல்லாம் ஸ்ட்ரிக்டாக கடைபிடிக்கவும் முடியவில்லை.

   என் மனைவிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஷுகர் உள்ளது. தினசரி மாத்திரைகளைத் தவிர இன்சுலின் இன் ஜெக்‌ஷனும் இருவேளையும் 20+20 யூனிட்ஸ் அவளுக்கு நானே போட்டு விடும்படியாகவும் உள்ளது.

   With all these things அவளுக்கு இந்த மாதம் எடுத்த Latest FBS/PPBS = 167/194. அவள் என்னைப் போல கண்ட நேரத்தில் கண்ட தீனிகளை சாப்பிடுபவளும் இல்லை. Very Very Poor Eater மட்டுமே.

   எங்களுக்கு இவை எல்லாமே மிகவும் பழகிப்போய் சகஜமாகி விட்டதால், சீனியர் சிடிஸன்ஸ் ஆகிய நாங்கள் இருவரும் டென்ஷன் ஏதும் ஆகாமலும், பயமில்லாமலும் ஜாலியாக, அடிக்கடி ஹனிமூன் போல நினைத்துக்கொண்டு, ஆட்டோவிலோ, டாக்ஸியிலோ ஆஸ்பத்தரிக்குச் சென்று வந்துகொண்டு இருக்கிறோம். :)

   ஆங்கில மருத்துவம் தவிர வேறு எந்த மருத்துவமும் எடுத்துக்கொள்ள நாங்கள் இருவருமே விரும்புவது இல்லை. பலரும் பல பாட்டி வைத்தியங்கள் சொல்லுகிறார்கள். (சிலர் தங்களின் பதிவுகளிலும் கூட எழுதி வருகிறார்கள்) அவற்றில் எதை எடுத்துக்கொண்டாலும் எங்கள் இருவருக்கும் ஷுகர் லெவல் மேலும் எகிறி விடுகிறது என்பது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மையாகும். :))

   Delete
  5. இதையும் நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள் கோபு சார். கல்லூரில, நான் விடுமுறை (பங்க்) எடுக்கும்போது, எனக்கு அடுத்துள்ளவனுக்கு தவறுதலா பெரும்பான்மையான சமயத்துல ஆப்சென்ட் போட்டுவிடுவார்கள். அதுபோல, நீங்க ஜாலியா சாப்பிட சாப்பிட, அவ்விடத்தில் ஷுகர் ஏறிவிட்டது போலிருக்கு.

   Delete
  6. 'நெல்லைத் தமிழன் 6 March 2017 at 04:07

   //இதையும் நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள் கோபு சார்.//

   ஆமாம். நாம் எதையும் ஜாலியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் இதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட கவலைப்பட டென்ஷன் அதிகம் ஆகி ஷுகர் + BP Level மேலும் அதிகரித்து விடும். வியாதிகள் எதையும் நம்மால் தடுத்து நிறுத்திவிடவும் முடியாது. ஏதோ கொஞ்சத்துக்கொஞ்சம் ஜாக்கிரதையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க முயற்சிக்கலாம். அவ்வளவுதான்.

   //கல்லூரில, நான் விடுமுறை (பங்க்) எடுக்கும்போது, எனக்கு அடுத்துள்ளவனுக்கு தவறுதலா பெரும்பான்மையான சமயத்துல ஆப்சென்ட் போட்டுவிடுவார்கள். அதுபோல, நீங்க ஜாலியா சாப்பிட சாப்பிட, அவ்விடத்தில் ஷுகர் ஏறிவிட்டது போலிருக்கு.//

   ஓஹோ .... அப்படியா?

   மிகவும் இனிப்பானவளான என் மேலிடத்திடமிருந்தே எனக்கு ஷுகர் வந்துள்ளதாக நான் நினைத்து எனக்குள் மகிழ்ந்துகொண்டு வருகிறேன்.

   அதையேதான் என் இந்தப்பதிவினிலும் ஓர் கதையாகவே எழுதியுள்ளேன்:

   http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html

   Delete
  7. ஏற்கனவே மேலே எங்களின் ‘ஹனிமூன்’ பற்றி ஏதோ கொஞ்சமாக எழுதியிருந்தேன். அதைத் தவிர மேலே சில விபரங்கள் சொல்ல வேண்டியதாகவும் உள்ளது.

   டயாபடிஸில், டயாபடீஸ் டைப்-1, டயாபடீஸ் டைப்-2 என்று இருப்பது போலவே எங்களின் இப்போதைய ஹனிமூன்களில் நான்கு வகைகள் உள்ளன.

   ஹனிமூன் டைப்-1

   திருச்சி டவுன் தில்லைநகர் 7-வது கிராஸில் தற்போது செயல்பட்டு வரும் BHEL Hospital Branch க்கு அவ்வப்போது Periodical Check-up & Free Treatments க்காகச் சென்று வருவது.

   ஹனிமூன் டைப்-2

   Eye Specialist, ENT Specialist, Skin Specialist போன்றவர்களை சந்திக்க BHEL Main Hospital லுக்கு மட்டுமே செல்ல வேண்டும். வெகு தூரத்தில் உள்ள அங்கு போய் வர எங்களுக்குக் கொஞ்சம் சோம்பல். மேலும் அங்கு போனால் எப்போதும் ஒரே கூட்டமாக இருக்கும்.

   அதனால் இதுபோன்ற PERIODICAL EYE CHECK-UP க்கு நாங்கள் இருவரும் இங்கு திருச்சி டவுனிலேயே தென்னூர் என்ற இடத்தில் உள்ள மிகப்பிரபலமான ‘மஹாத்மா காந்தி மருத்துவ மனைக்கு (தனியார் மருத்துவ மனைக்கு) மட்டுமே செல்வது உண்டு. என் மனைவிக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறையும் எனக்கு 9 மாதங்களுக்கு ஒரு முறையும் இங்கு செல்ல வேண்டியது உள்ளது. இந்த ஸ்பெஷலிஸ்ட்களிடமெல்லாம் பணம் கொடுத்து மட்டுமே நாங்கள் சிகிச்சை பெறுவது வழக்கம்.

   நான் என் இரு கண்களுக்கும் மிகவும் உயர்தரமான CATARACT OPERATIONS 2014 ஜனவரியிலும் 2015 ஜனவரியிலுமாக இங்குதான் செய்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு கண்ணுக்கும் ரூ. 75000 வீதம், ஆக மொத்தம் ரூ. 150000 செலவானது. இப்போதும் என்னால் கண்ணாடி ஏதும் அணியாமல் கிட்டத்திலோ தூரத்திலோ உள்ள பொடிப்பொடி எழுத்துக்களையும் நன்கு படிக்க முடிகிறது. இங்கு எனக்கு அளிக்கப்பட்டுள்ள மிகத்தரமான கண் சிகிச்சை பற்றி ஏற்கனவே ஓர் பதிவினில் நான் எழுதியுள்ளேன்.

   http://gopu1949.blogspot.in/2014/01/blog-post_24.html

   Skin Problems ஏதும் ஏற்பட்டால், தில்லைநகரில் 10th Cross இல் உள்ள திருமதி. நர்மதா ஸ்ரீனிவாசன் என்ற மிகப் பிரபலமான லேடி ஸ்பெஷலிஸ்ட் அவர்களிடமும், Severe ENT Problems if any ஏற்பட்டால் அதே தில்லைநகரில் 5th Cross இல் உள்ள மிகப்பிரபலமான Dr. ஜானகிராமன் என்பவரிடமும் செல்வது உண்டு. கடந்த வாரம்கூட இங்கெல்லாம் நாங்கள் ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தோம்.

   ஹனிமூன் டைப்-3

   உள்ளூரில் அல்லது வெளியூரில் உள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருதல்.

   (அதாவது கிருஹ பிரவேசம், கல்யாணம், வலைகாப்பு, சீமந்தம், குழந்தைகளைத்தொட்டிலில் போடுதல், ஆயுஷ்ஹோமம் Very First Birth Day, பூணூல் கல்யாணம், பூப்பு நீராட்டு விழா, சஷ்டியப்த பூர்த்தி 60th Birth Day, பீமரத சாந்தி 70th Birth Day, ஸதாபிஷேகம் 80th Birth Day etc., etc.,)

   ஹனிமூன் டைப்-4

   உள்ளூரில் அல்லது வெளியூரில் உள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் நிகழும் துயரச் சம்பவங்களில் கலந்துகொள்ள வேண்டிய நிர்பந்தங்கள்.

   இதெல்லாம் ஜஸ்ட் உங்களின் கூடுதல் தகவலுக்காக மட்டுமே. மிகவும் போரடித்து விட்டேன் எனவும் நினைக்கிறேன். :)

   Delete
  8. ஹா ஹா ஹா! எல்லாவற்றையும் ஹனிமூன் தலைப்புக்களில் அடக்கிவிட்டீர்கள். துயரச்சம்பவங்களில் கலந்து கொள்வதும் கூட ஹனிமூன் டைப்பா? உங்களைப் போலவே வாழ்க்கையில் ஏற்படும் இன்பங்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் அதனதன் போக்கில் எடுத்துக்கொண்டு வாழப்பழகினால், மன அழுத்தம் ஏற்பட வழியே இல்லை. விலாவாரியாக உங்கள் ஹனிமூன் டைப்புகளை இங்குப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கோபு சார்!

   Delete
  9. Some spelling mistake in my above Comment:
   ============================================

   In the Very First Paragraph:

   அதைத் தவிர மேலே சில விபரங்கள் =
   அதைத் தவிர மேற்கொண்டு சில விபரங்கள்

   In Honeymoon Type-3 .... Second Paragraph:

   வலைகாப்பு = வளைகாப்பு

   Delete
 3. 2)

  //பத்து மாதங்கள், வெற்றிகரமாக சிறுகதை விமர்சனப்போட்டி நடத்திப் பரிசு என்ற பெயரில், ஓய்வூதியப் பணத்தை வாரியிறைத்துப்பதிவர்களின், விமர்சனத் திறமையை வெளிக் கொணர்ந்து, பட்டை தீட்டி.......... //

  நான் வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றது மத்திய அரசின் ஓர் பொதுத்துறை 'மஹாரத்னா' நிறுவனம் என்றாலும்கூட, எனக்கு ஓய்வூதியம் என்று சொல்லிக்கொள்வது போல ஏதும் கிடையாது, மேடம்.

  Provident Fund Pension Scheme and SBI Life Insurance போன்றவற்றில் நானாகவே என் Contribution மூலம் volunteer ஆக சேர்ந்திருந்ததால் ஏதோவொரு Consolidated தொகையாக மாதா மாதம் (1544+2722) ரூ. 4266 மட்டுமே கிடைத்து வருகின்றது.

  விலைவாசி உயர்வுகளால் அவ்வப்போது பிறருக்குக் கிடைக்கக்கூடிய பஞ்சப்படி போன்ற உயர்வுகள் ஏதும் இதில் கிடையாது. இந்த ஒரு சிறிய தொகையில் இனி எந்தவொரு மாற்றமும் இருக்கப்போவதும் இல்லை.

  இருப்பினும் அவ்வாறு கிடைக்கும் தொகையினில் சுமார் ஒரு ஆறு மாதங்களுக்கு எனக்கு என்ன கிடைத்திருக்குமோ அதனை மட்டும் இந்த ஒரு போட்டிக்காக நான் செலவழித்துள்ளேன்.

  இன்னும் பெரிய அளவில் செய்யணும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஏதோ என்னால் அப்போது 2014-ம் ஆண்டில் இந்த என் முதல் கன்னி முயற்சிக்காக என்னால் ஒதுக்கீடு செய்ய முடிந்தது இந்த சுமார் ரூ. 25000 to 26000 மட்டுமே என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஓய்வூதியம் ஏதுமின்றிச் சொந்த சேமிப்புப் பணத்தில் ரூ 25000/- செலவு செய்தது பிரமிப்பாக இருக்கிறது. நடுத்தர வர்க்கமான நமக்கு இது மிகப்பெரும் தொகையே. பரிசுப் பணம் மட்டுமின்றி, புதிது புதிதாக விருதுகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பெரிய மனது வேண்டும். இதுவே மிகப் பெரிய அளவு! இதற்கு மேல் பெரிது ஏது! உங்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்பதறிந்து வருத்தமே. அவ்வளவு பெரிய மத்திய அரசு கம்பெனியில் ஓய்வூதியம் இல்லை என்பது எனக்குப் புதிய செய்தியே.

   Delete
  2. //ஓய்வூதியம் ஏதுமின்றிச் சொந்த சேமிப்புப் பணத்தில் ரூ 25000/- செலவு செய்தது பிரமிப்பாக இருக்கிறது. நடுத்தர வர்க்கமான நமக்கு இது மிகப்பெரும் தொகையே. பரிசுப் பணம் மட்டுமின்றி, புதிது புதிதாக விருதுகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பெரிய மனது வேண்டும். இதுவே மிகப் பெரிய அளவு! இதற்கு மேல் பெரிது ஏது!//

   ஏற்கனவே மூன்று நூல்கள் வெளியிட்டபோது, ஒவ்வொன்றிலும் 300 பிரதிகள் வீதம் நானே விலைக்கு வாங்கி என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குக் கொடுத்துள்ள வகையில் சுமார் ரூ. 41000 வரை செலவானது. 2014 சிறுகதை விமர்சனப்போட்டிக்காக நான் செய்துள்ள மொத்தச்செலவுகள் [Including all overheads] சுமார் ரூ. 26000 வரை இருக்கலாம். பிறகு 2015-ம் ஆண்டு நடத்திய 100% பின்னூட்டப் போட்டிக்கான செலவு ரூ. 8000 மட்டுமே (அதிலும் இரண்டு சண்டிக்குதிரைகளுக்கு மட்டும் நான் தர வேண்டிய பரிசுத்தொகைகள் இன்னும் Un-disbursed ஆக ரூ. 2000 என்னிடமே Pending இல் உள்ளது).

   ஏதோ நம் வாழ்க்கையில் இலக்கியத்திற்காக மட்டும் இவ்வாறு ஒரு முக்கால் லக்ஷங்கள் செலவழித்துள்ளதில் எனக்கும் ஏதோவொரு சந்தோஷம் மட்டுமே. இதனால் தாங்கள் உள்பட பலரின் நட்புகள் எனக்குக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி மட்டுமே.

   //உங்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்பதறிந்து வருத்தமே.//

   எனக்கு இதில் மிகப்பெரிய வருத்தங்கள் ஏதும் கிடையாது மேடம். நியாயமாக உழைத்து, நேர்மையாக சம்பாதித்து, ஓரளவு திட்டமிட்டு வரவுக்குள் செலவினை அடக்கி, சிக்கனமாக வாழ்ந்து எனக்குக் கிடைத்த Final Settlement of PF, Gratuity, Leave Encashment Salary முதலியவற்றை பாதுகாப்பான இடங்களான Post Office & Banks இல் Deposit செய்து, சொற்பமானாலும் அதில் கிடைக்கும் வட்டித்தொகையில் எங்கள் இல்லத்தில் இதை மட்டுமே நம்பி உள்ள நால்வர் ஓரளவு செளகர்யமாக, மன நிம்மதியுடன், எந்தக்குறைவும் இல்லாமல் வாழ இதுவரை வழி கிடைத்துள்ளது.

   நாளுக்கு நாள் டெபாஸிட்களுக்கான வட்டி வீதங்கள் குறைந்து வருவதும், விலைவாசிகள் ஏறி வருவதும் கொஞ்சம் கவலை அளிப்பதாகத்தான் உள்ளது என்றாலும்கூட, எப்படியும் என்னால் சமாளித்து விடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உள்ளது.

   //அவ்வளவு பெரிய மத்திய அரசு கம்பெனியில் ஓய்வூதியம் இல்லை என்பது எனக்குப் புதிய செய்தியே.//

   Compulsory Provident Fund என்று எங்கள் சம்பளத்தில் பிடிக்கும் போதே, அதற்கு சமமானதொரு தொகை கம்பெனியால் [Equal Company Contribution against Member's Contribution in PF Account) நம் PF கணக்கினில் போடப்பட்டு, வரவு வைக்கப்பட்டு விடுவதால், தனியாக ஓய்வு ஊதியம் என்று ஏதும் கிடையாது எனச் சொல்லுகிறார்கள்.

   இருப்பினும் RECHS (Retired Employees Contributory Health Scheme) என்று ஒன்று உள்ளதால் எனக்கும் என் மனைவிக்கும் Even after retirement, BHEL Hospital இல் High Quality Treatment இப்போதும் தரப்பட்டு வருகிறது.

   போகவர ஆட்டோ அல்லது டாக்ஸிக்கும், சாப்பாட்டுக்கும் மட்டும் நாம் செலவழித்தால் போதும். மற்ற எல்லாவற்றிற்கும் அங்கு தரமான சிகிச்சைகள் தரப்பட்டு வருகின்றன. (Both Out Patient Treatment & In Patient Bed Treatment in Special wards for Officers and Ordinary wards for others)

   இந்த மருத்துவ வசதிகளைப் பெற்று பயனடைய விரும்புவோர் மட்டும், ஓய்வு அடையும் போது நாம் வாங்கும் கடைசி சம்பளத்தில் சரிபாதியைக் கட்டி விட்டு வரணும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மட்டும் ரூ. 500 மட்டும் கட்டி (Renewal) புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பென்ஷன் இல்லாவிட்டாலும், ஏதோ இந்த ஒரு சலுகையாவது கிடைத்துள்ளதே என எங்களுக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

   Delete
  3. இருப்பினும் RECHS (Retired Employees Contributory Health Scheme) என்று ஒன்று உள்ளதால் எனக்கும் என் மனைவிக்கும் Even after retirement, BHEL Hospital இல் High Quality Treatment இப்போதும் தரப்பட்டு வருகிறது.
   நல்ல வேளை, மருத்துவ வசதியும், தரமான சிகிச்சையும் உங்களிருவருக்கும் கிடைப்பதறிந்து நிம்மதி சார்! திட்டமிட்டு வரவுக்குள் செலவை அடக்கிப் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நிம்மதியுடன் வாழும் உங்களிடமிருந்து இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. மனந்திறந்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!

   Delete
  4. //நல்ல வேளை, மருத்துவ வசதியும், தரமான சிகிச்சையும் உங்களிருவருக்கும் கிடைப்பதறிந்து நிம்மதி சார்! //

   ஆமாம் மேடம். இது ஏதோ எங்களுக்கு இன்றுவரை இவ்வாறு கிடைத்துக்கொண்டு இருப்பது ஓர் அதிர்ஷ்டம் மட்டுமே. ஏதோ எங்கள் முன்னோர்கள் செய்துள்ள புண்ணியத்தால் மட்டுமே.

   என் மனைவிக்கு, தினமும் 20+20 யூனிட்ஸ் வீதம், ஒரு மாதத்திற்கு போடப்படும், இன்சுலின் மருந்தின் விலை மட்டுமே ரூ. 2430 என அதில் போடப்பட்டுள்ளது. Name: HUMALOG MIX 25 - 3mL, 100 IU/mL - 5 cartridges in one Pack - Insulin Lispro Biphasic Injection I.P. - 25% Insulin Lispro And 75% Insulin Lispro Protamine Suspension.

   இதைத் தவிர மாதாந்திர மளிகை சாமான்கள் போல, பல்வேறு கலர் கலர் ஜிகினாக்களில், பல்வேறு மாத்திரைகளும் தருகிறார்கள். அவையெல்லாம் எப்படியும் மாதம் ரூ. 1600 க்கு குறையாது என்பது என் மதிப்பீடாகும். சிலவற்றில் விலை போடப்படாமல் BHEL FREE SUPPLY எனப் போடப் பட்டிருக்கும். அதனால் சரிவர துல்லியமாக கணக்கிட இயலவில்லை.

   BHEL ஆரம்பத்திலிருந்து இன்று வரை, தொடர்ச்சியாக, மிகவும் இலாபகரமாக இயங்கி வருவதற்குக் காரணமே (1) அங்கு மிக மிகக் குறைந்த விலையில், கேண்டீனில் ஊழியர்களுக்கு, தினமும் வேளாவேளைக்கு, மிகப்பெரிய அளவில் செய்து வரப்படும் மிகத் தரமான ‘அன்னதானம்’ என்ற புண்ணியமும் (2) இதுபோன்று எங்களுக்குத் தரப்பட்டு வரும் மிகச் சிறந்த இலவச மருத்துவ வசதிகள் என்ற கூடுதல் புண்ணியமும் மட்டுமே என நான் எனக்குள் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். என்னைப் போன்ற பலரிடம் இதனைச் சொல்லி பகிர்ந்தும் கொள்வேன்.

   எங்கள் BHEL கேண்டீன் விலைவாசிகள் + மிகத்தரமான சர்வீஸ் பற்றி ஏற்கனவே இந்தக் கீழ்க்கண்ட பதிவினில் பின்னூட்டப்பகுதியில் விரிவாக நான் எடுத்துச் சொல்லியுள்ளேன்.

   http://gopu1949.blogspot.in/2013/03/4.html

   திருமதி. ராதா ராணி மேடத்திற்கு நான் கொடுத்துள்ள நான்கு பதில்களை மட்டுமாவது தயவுசெய்து படித்துப் பார்க்கவும்.

   //திட்டமிட்டு வரவுக்குள் செலவை அடக்கிப் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நிம்மதியுடன் வாழும் உங்களிடமிருந்து இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.//

   இளமையில் வறுமையால், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மிகவும் கஷ்டப்பட்டு விட்ட எனக்கு, என் வாழ்க்கையில் படிப்படியாகக் கிடைத்த முன்னேற்றங்கள் எல்லாமே மகிழ்ச்சிகளை மட்டுமே அள்ளித்தந்ததுடன், போதும் என்ற மனதையும் ஆட்டோமேடிக் ஆகவே கொடுத்து விட்டது. எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொண்டும் விட்டேன். வேறு வழியும் இல்லையே. :)

   //மனந்திறந்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!//

   என் பழங்கதைகளில் சிலவற்றையும், இன்றைய புதுக்கதைகளையும், பொறுமையாகக் கேட்டுக்கொண்டதற்கு உங்களுக்குத்தான் நான் என் நன்றிகளைச் சொல்லிக்கொள்ள வேண்டும். மிக்க நன்றி, மேடம். :)

   Delete
  5. திருமதி. ராதா ராணி மேடத்திற்கு நான் கொடுத்துள்ள நான்கு பதில்களை மட்டுமாவது தயவுசெய்து படித்துப் பார்க்கவும். கண்டிப்பாக விரைவில் வாசிக்கிறேன் கோபு சார்! தங்களின் நீண்ட பதிலுக்கு நன்றி!

   Delete
 4. 3)

  //இவ்வளவு தாமதமாக, இவர் புத்தகங்கள் பற்றியெழுதுவதற்கு, மிகவும் வருந்துகிறேன்.//

  அதனால் பரவாயில்லை மேடம். இந்த என் புத்தக வெளியீட்டினால் எனக்கு எந்தவொரு வியாபார விளம்பரமும் தேவையில்லை. மேலும் இந்தப் புத்தக வெளியீடுகளால் எனக்கு எந்த இலாபமும் கிடையாது. இவை இலாப நோக்கத்துடன் என்னால் வெளியிடப்பட்டவைகளும் கிடையாது.

  என் பிள்ளைகள் + பேத்தி, பேரன்கள் ஆகிய சந்ததியினருக்கு பிற்காலத்தில் படிக்கும் ஆர்வம் இருந்தால் பயன்படட்டும் என்றே இவற்றை நான் வெளியிட்டுள்ளேன்.

  அவைகள் பதிப்பகத்தாரிடம் இனி கிடைக்குமோ கிடைக்காதோ.

  நான் இதுவரை வெளியிட்டுள்ள மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களிலும் தலா 300 பிரதிகள் வீதம் நானே காசு கொடுத்து, பதிப்பகத்தாரிடம் வாங்கி, என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அன்பளிப்பாக மட்டுமே கொடுத்துள்ளேன்.

  மேலும் இதில் உள்ள அனைத்து சிறுகதைகளையும் மேலும் மெருகேற்றி என் வலைப்பதிவினில் தகுந்த பொருத்தமான படங்களுடன் வெளியிட்டுள்ளேன்.

  அவற்றை 2011-இல் நான் முதன் முதலாக என் வலைத்தளத்தினில் வெளியிட்ட போதும், அவற்றில் நாற்பது கதைகளை மட்டும் 2014-இல் மறு வெளியீடாக ‘சிறுகதை விமர்சனப் போட்டி’க்காக நான் வெளியிட்ட போதும், பலரும் படித்து மகிழ்ந்து ஏராளமான பாராட்டுகளை பின்னூடங்கள் வாயிலாகக் கொடுத்து ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளார்கள். அதில் எனக்கு மிகவும் ஆத்ம திருப்தி கிடைத்துள்ளது. இதைவிட வேறு எதையும் நான் எதிர்பார்க்கவும் இல்லை.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் கோபு சார்! இதில் உங்களுக்கு இலாப நோக்கு சிறிதும் இல்லை என்பது உண்மையே.
   போட்டிகளின் போது விமர்சன சக்ரவர்த்தி திரு ரமணி சார், விமர்சன வித்தகர்கள் கீதா மதிவாணன், திருமதி ராஜேஸ்வரி மேடம் ஆகியோர் செய்த விமர்சனங்களைப் படித்தேன்.
   விரிவாகவும், அருமையாகவும் கதைகளை வரிக்கு வரி அலசி ஆய்ந்து அவர்கள் எழுதியவற்றைப் படித்த பிறகு, இனி இவற்றில் புதிதாக நான் என்ன சொல்வது என்று ஏற்பட்ட எண்ணமே, இதனைத் தாமதமாக எழுதுவதற்கு முக்கிய காரணம் என்பேன்.
   இருந்தாலும் விடுபட்ட கதைகளை வாசித்து, ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசையின் காரணமாகவே, இப்போது இதனை எழுதுகின்றேன். அத்னால் தான் எல்லாக்கதைகளையும் பற்றி விரிவாக எழுதாமல், சுருக்கமாக சிலவற்றைப் பற்றி மட்டுமே, சொல்லிச் சென்றேன்.
   உங்கள் மூன்று புத்தகங்களையும் இ புத்தகமாக மாற்றிவிட்டால், இணையத்தில் எப்போதும், இதே அட்டைப்படத்துடன் தொகுப்பாகக் கிடைக்கும். இ புத்தகமாக வெளியிடுவதற்கு செலவு ஏதுமில்லை. உலகமுழுதும் பரவலாக வாசகர்களைச் சென்று சேர, இது மிகவும் பயன்படும். நான் வலைப்பூவில் எழுதியவற்றை அப்படித்தான் இப்போது தொகுப்பு நூல்களாக வெளியிட்டிருக்கிறேன். இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.
   “அவைகள் பதிப்பகத்தாரிடம் இனி கிடைக்குமோ கிடைக்காதோ,” என்ற கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.
   புத்தகங்களை மின்னூலாக மாற்றுவது பற்றி வளரும் கவிதையில் வெளியான பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்.
   மின்னூல் முகாம் – நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற பதிவின் இணைப்பு:- http://valarumkavithai.blogspot.com/2017/01/blog-post_15.html
   மின்னூல் முகாமில் நூறு புத்தகங்கள் வழங்கப்பட்டன. http://valarumkavithai.blogspot.com/2017/01/blog-post_19.html
   இதனை பெங்களூரைச் சேர்ந்த புஸ்தகா மின்னூல் நிறுவனம் வெளியிடுகிறார்கள். உங்கள் வலைப்பூவில் கதைகள் தனித்தனியாகக் கிடைத்தாலும், மின்னூலாக்கிவிட்டால், சிறுகதை தொகுப்பு புஸ்தகமாகவே கிடைக்கும்.
   புத்தகங்களை யாரும் வாங்கினாலோ, வாடகைக்கு எடுத்தாலோ ராயல்டியும் உங்களுக்குக் கிடைக்கும்.
   நன்றி கோபு சார்!

   Delete
  2. //உங்கள் மூன்று புத்தகங்களையும் இ புத்தகமாக மாற்றிவிட்டால், இணையத்தில் எப்போதும், இதே அட்டைப்படத்துடன் தொகுப்பாகக் கிடைக்கும். இ புத்தகமாக வெளியிடுவதற்கு செலவு ஏதுமில்லை. உலகமுழுதும் பரவலாக வாசகர்களைச் சென்று சேர, இது மிகவும் பயன்படும்.//

   இதுபற்றி நானும் ஓரளவு கேள்விப்பட்டுள்ளேன். தங்களின் இந்த மிக நல்ல ஆலோசனைகளுக்கு என் நன்றிகள்.

   //நான் வலைப்பூவில் எழுதியவற்றை அப்படித்தான் இப்போது தொகுப்பு நூல்களாக வெளியிட்டிருக்கிறேன்.//

   தெரியும். அதையும் புஸ்தகா மின்னூல் நிறுவனத்தில் உள்ள ஒருவர் என்னிடம் இன்று போனில் பேசியபோது, விசாரித்துக் கேட்டு உறுதி செய்துகொண்டு விட்டேன்.

   //இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். //

   மிகவும் சந்தோஷம்.

   //இதனை பெங்களூரைச் சேர்ந்த புஸ்தகா மின்னூல் நிறுவனம் வெளியிடுகிறார்கள்.//

   தெரியும் .... தெரியும். அதில் உள்ள மிக முக்கியமான நபர் ஒருவரின் தந்தையும் திருச்சி BHEL இல் பணியாற்றி எனக்கு முன்பாகவே பணி ஓய்வு பெற்றவர்தான். நான் BHEL டவுன்ஷிப் குவார்டர்ஸில் 'A' Sector இல் குடியிருந்தபோது அவர்கள் 'C' Sector இல் வசித்துள்ளனர். எல்லாக் கதைகளையும் இன்று என்னுடன் அவர் போனில் பேசும்போது சொன்னார். என்னை அவர் மிகவும் நெருங்கி வந்துவிட்டார். :)

   Delete
  3. மிகவும் மகிழ்ச்சி சார்! உங்களுடைய மூன்று புத்தகங்கள் மட்டுமின்றி, பழைய பள்ளி நினைவலைகள், துபாய் பயண அனுபவங்கள் போன்றவற்றையும் தொகுத்து புத்தகமாகப் போடுங்கள்! மீள்வருகைக்கு மீண்டும் நன்றி சார்!

   Delete
  4. //மிகவும் மகிழ்ச்சி சார்! உங்களுடைய மூன்று புத்தகங்கள் மட்டுமின்றி, பழைய பள்ளி நினைவலைகள், துபாய் பயண அனுபவங்கள் போன்றவற்றையும் தொகுத்து புத்தகமாகப் போடுங்கள்!//

   :) நான் என் மனதில் நினைத்துக்கொண்டுள்ளவற்றை, நீங்களும் அப்படியே இங்கு சொல்லியுள்ளது ஆச்சர்யமாக உள்ளது, மேடம். :)

   DRAFT AGREEMENT என்பதை அடுத்த வாரம் எனக்கு அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். பார்ப்போம்.

   எதை எதை எப்படி எப்படி வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்ற சிந்தனைகளுடன் தான் நானும் இப்போது இருந்து வருகிறேன்.

   தங்களின் இன்றைய இந்த மிகச்சிறிய தூண்டுகோல் நன்கு என்னை சிந்தித்து செயல்படவும் வைத்து விட்டது. இனி இதில் வெற்றியை எட்டுவது சுலபமே என்ற நம்பிக்கை என்னுள் துளிர்த்து விட்டது. :)

   Delete
  5. புஸ்தகா நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் உங்களுக்குத் தெரிந்தவர் என்பதில் மகிழ்ச்சி. விரைவில் உங்கள் தொகுப்புகளை எதிர்பார்க்கிறேன். நன்றி சார்!

   Delete
  6. //புஸ்தகா நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் உங்களுக்குத் தெரிந்தவர் என்பதில் மகிழ்ச்சி.//

   நாங்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தது இல்லை. நான் யார் என்று அவருக்கோ, அவர் யார் என்று எனக்கோ இன்னும் சரிவரத் தெரியாமலும் புரியாமலும் மட்டுமே உள்ளது. இருப்பினும் நேற்று ஒரே நாள் மட்டும் என்னிடம் மிக நீண்ட நேரம் தொலைபேசியில் பல்வேறு விஷயங்களைப் பேசியதில், எனக்கும் அவர் மிகவும் நெருக்கமானவராக ஆகிவிட்டார் போல என்னால் உணர முடிகிறது. போகப்போகப் பார்ப்போம், மேடம்.

   Delete
  7. என் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் + அனைத்துப் படைப்புக்களையும் மின்னூலாக மாற்றச் சொல்லி, இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பே ’மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் என்னிடம் அன்புக் கட்டளை இட்டிருந்தார்கள்.

   ஏனோ அப்போது, இப்போதுள்ள இந்த ‘புஸ்தகா நிறுவனம்’ போன்ற அமைப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை. அதனால் அப்போது அவர்களின் விருப்பப்படி என்னால் அதில் ஆர்வம் காட்டி செயல்படவும் இயலவில்லை.

   இப்போது எனது படைப்புகள் மின்னூலாக மாறும் காலம் மிகவும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இதனைக்காண அவர்கள் இன்று இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

   ’புஸ்தகா மின்னூல் நிறுவனம்’ எனக்கு இன்று அனுப்பி வைத்திருந்த ஒப்பந்தப்பத்திரங்களில் நான் கையொப்பம் இட்டு, இன்றைக்கே கொரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளேன்.

   இது தங்களின் தகவலுக்காக மட்டுமே, மேடம்.

   Delete
  8. வணக்கம் கோபு சார்!மூன்று ஆண்டுகளுக்கு முன்னமேயே, மின்னூலாக்கத் திருமதி ராஜேஸ்வரி மேடம் சொன்னார்கள் என்றறிந்து வியந்தேன். இன்றிருந்தால் அவர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்துப்போட்டுவிட்டீர்கள் என்பதையறிய மிகவும் மகிழ்ச்சி சார்! மின்னூல்களை விரைவில் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தகவலுக்கு மிகவும் நன்றி சார்!

   Delete
 5. 4)

  இந்த என் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களும் வெவ்வேறு இலக்கிய அமைப்புகளால் பாராட்டி கெளரவிக்கப்பட்டு எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதே எனக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளன. குறிப்பாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் (TIRUCHI DISTRICT COLLECTOR) அவர்களால் 2009-ம் ஆண்டில் ‘சிந்தனைப் பேரொளி’ என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  அவற்றிற்கான பட இணைப்புகள் இதில் உள்ளன:

  http://gopu1949.blogspot.in/2011/07/4.html

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இந்நூல் விழுப்புரம் மாவட்டம், தியாகதுருவம், பழனியம்மாள் அரங்கநாதன் தமிழிலக்கிய அறக்கட்டளை, பாரதியார் தமிழ்ச்சங்கம் & திருக்குறள் பேரவையினால், முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற விபரமறிந்து மகிழ்ந்தேன். முதல் நூலே பரிசுச்க்குரியதாகத் தேர்வு பெற்றது வியப்புக்குரிய விஷயம். 28/02/2010 அன்று பொன்னாடையும், பொற்கிழியும் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டமைக்குப் பாராட்டுகள் சார்!

   Delete
  2. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)

   Delete
 6. 5)

  இந்த 13 கதைகளில், தங்களுக்கு மிகவும் பிடித்தமான ஆறு கதைகளைத் தேர்ந்தெடுத்து, தாங்கள் தங்கள் பாணியில் இங்கு மிகப் பிரமாதமாகச் சொல்லியுள்ளது கேட்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்?. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. போட்டியில் உங்கள் கதைகளைப் பலரும் திறம்பட விமர்சித்து விட்டபடியால், சில கதைகளை மட்டும் என் பார்வைக்கு எடுத்துக்கொண்டேன். எல்லாவற்றையும் சொன்னால், மிகவும் நீண்டுவிடும் என்பதும் ஒரு காரணம். நம் படைப்பைப் பற்றிப் பிறர் சொல்லக்கேட்பதை விட எழுத்தாளனுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும் என்பது மிகச் சரி. நன்றி கோபு சார்!

   Delete
  2. தாங்கள் இங்கு சொல்லியுள்ளது எல்லாமே மிகவும் சரியே. சுருக்கமாகவும் சுவையாகவும் தாங்கள் எழுதியுள்ளது அழகாகத்தான் இருக்கிறது.

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)

   Delete
 7. 7)

  மேலே உள்ள 13 கதைகளில் Sl. Nos: 03 (உடம்பெல்லாம் உப்புச்சீடை) and Sl. No. 05 (அஞ்சலை) ஆகிய இரண்டிலும், தாங்கள் விமர்சனப் போட்டிகளில் கலந்துகொண்டு எழுதியனுப்பிய விமர்சனங்கள் பரிசுக்குத் தேர்வாகியிருந்தன என்பதை மகிழ்ச்சியுடன் நினைவு படுத்திக்கொண்டு மகிழ்ந்தேன்.

  அதற்கான வெற்றி அறிவிப்புக்கான இணைப்புகள் இதோ:

  http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09-03-03-third-prize-winner.html

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்! அச்சமயம் நான் படு பிஸி என்பதால், சில போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது. கலந்து கொண்ட போட்டிகளில், சிலவற்றில் பரிசும் பெற்றது மிகவும் மகிழ்ச்சியே. அதற்கான இணைப்புக்களைத் தந்து உதவியதற்கு மிகவும் நன்றி சார்!

   Delete
  2. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)

   Delete
 8. 8)

  முழு நீள நகைச்சுவைக் கதைகளில் இரண்டையும், உருக்கமான கதைகளில் நான்கினையும் எடுத்துக்கொண்டு தங்களின் அரிய பெரிய கருத்துக்களை, தங்கள் பாணியில் இங்கு வெகு அழகாகச் சொல்லியிருப்பதற்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளை மீண்டும் தங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். மிக்க நன்றி மேடம்.

  நன்றியுடன் கோபு

  oooooo

  ReplyDelete
  Replies
  1. விமர்சனம் வெகு அழகாக இருக்கிறது என்பதை உங்கள் வாயால் கேட்பதில் பெரு மகிழ்ச்சி சார்! வரிசையான பின்னூட்டங்கள் கொடுத்து ஊக்கப்படுத்தியதற்கு மீண்டும் என் நன்றி சார்!

   Delete
  2. :)) மிகவும் சந்தோஷம் + மிக்க நன்றி, மேடம். :))

   Delete
 9. அழகான ரசனையுடன் அருமையான விமர்சனம்... திரு.கோபு ஐயாவிற்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

   Delete
 10. நூல் மதிப்பீடு என்பதானது எந்த வகையில் மதிப்பிடப்படுகிறதோ அந்த அளவில் ஈர்க்கப்படுகிறது. நன்கு படித்து ஐயாவின் தொகுப்பைப் பகிர்ந்துள்ள விதம் மிக அருமை. நூலாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா! பகிர்ந்த விதம் அருமை எனப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!

   Delete
 11. 9)

  தங்களின் இந்தப் பதிவினில் நான் வரிசையாக (1 to 8) எட்டு பின்னூட்டங்கள் கொடுத்திருந்தேன்.

  ஏனோ இடையில், பின்னூட்ட எண்: 6 மட்டும், வெளியான சிறிது நேரத்தில் மறைந்து போய்க்கொண்டே உள்ளது. நானும் இதுவரை சுமார் ஆறு முறைகள் மீண்டும் மீண்டும் அனுப்பியும் அவை உடனுக்குடன் வெளியாகி பின் மறைந்து போய் விடுகின்றன. எதனால் இவ்வாறு நிகழ்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னபடி இறுதியில் அந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டேன் சார்!

   Delete
  2. //நீங்கள் சொன்னபடி இறுதியில் அந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டேன் சார்!//

   மிக்க மகிழ்ச்சி. அது ஏனோ என்னை மிகவும் சோதித்துப் பார்த்து விட்டது. இப்போது மனதுக்குத் திருப்தியாக உள்ளது.

   Delete
 12. Replies
  1. தங்கள் வருகைக்கும். அருமை என்ற பாராட்டுக்கும் நன்றி பாரதி அவர்களே!

   Delete
 13. 6) திரு வை.கோபாலகிருஷ்ணன் -

  என் மேற்படி முதல் சிறுகதைத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள மொத்தக்கதைகள்: 13. அவற்றின் வலைப்பதிவு இணைப்புகளை இங்கு கீழே வரிசையாகக் காட்டியுள்ளேன் ..... ஆர்வத்துடன் படிக்க விரும்புவோரின் வசதிகளுக்காக மட்டுமே.

  -=-=-=-

  01. தாயுமானவள்
  http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html

  02. என் உயிர்த்தோழி
  http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html

  03. உடம்பெல்லாம் உப்புச்சீடை
  http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html

  04. பொடி விஷயம்
  [வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ - புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க” உதயம்]
  http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

  05. அஞ்சலை
  http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09.html

  06. தேடி வந்த தேவதை
  http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html

  07. சூழ்நிலை
  http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17.html

  08. ’எலி’ஸபத் டவர்ஸ்
  http://gopu1949.blogspot.in/2014/09/vgk-36.html

  09. ஏமாறாதே, ஏமாற்றாதே!
  http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html

  10. நன்றே செய், அதையும் இன்றே செய் !
  http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_9317.html

  11. சகுனம்
  http://gopu1949.blogspot.in/2014/08/vgk-32.html

  12. சுடிதார் வாங்கப்போறேன்!
  http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html

  13. நீ முன்னாலே போனா .. நான் பின்னாலே வாரேன்!
  http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html

  -=-=-=-

  மேலே சொல்லியுள்ள இவற்றில் Sl. No. 02 (என் உயிர்த் தோழி) மற்றும் Sl. No. 10 (நன்றே செய், அதையும் இன்றே செய் !) ஆகிய இரண்டு சிறுகதைகள் தவிர மற்ற 11 சிறுகதைகளும் 2014-ம் ஆண்டு நான் என் வலைத்தளத்தினில் நடத்திய ‘சிறுகதை விமர்சனப் போட்டி’யில் இடம்பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  ReplyDelete
  Replies
  1. சிரமத்தைப் பொருட்படுத்தாமல், 13 கதைகளின் இணைப்புக்களைத் தந்து உதவியதற்கு மிகவும் நன்றி சார்! வாசிக்க விரும்புவர்களுக்கு இது பெரிய உதவியே! தங்களுக்கு மீண்டும் என் நன்றி கோபு சார்!

   Delete
  2. //சிரமத்தைப் பொருட்படுத்தாமல், 13 கதைகளின் இணைப்புக்களைத் தந்து உதவியதற்கு மிகவும் நன்றி சார்! வாசிக்க விரும்புவர்களுக்கு இது பெரிய உதவியே! தங்களுக்கு மீண்டும் என் நன்றி கோபு சார்!//

   எனக்கே இவை பிற்காலத்தில் ஏதேனும் ஒரு EASY REFERENCE க்குத் தேவைப் படலாம் என்பதால் எல்லாவற்றின் இணைப்புகளையும் தேடிப்பிடித்து இங்கு கொண்டுவந்து போட்டு விட்டேன். இதில் சிரமமெல்லாம் ஒன்றுமே இல்லை. மீண்டும் தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
 14. அருமையான விமர்சனம்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், அருமை என்ற பாராட்டுக்கும் நன்றி சகோதரரே!

   Delete
 15. வணக்கம்
  கோபு ஐயா எழுதிய நூல் பற்றி சொல்லிய விதத்தைபடித்த போது நூல் என் கையில் இல்லை என்ற மனவேதனைதான் மிச்சம்.மிக இரசனையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரசனையாக உள்ளது என்ற உங்கள் கருத்தறிந்து மகிழ்ச்சி ரூபன்! மிகவும் நன்றி!

   Delete
 16. இவ்வளவு நாட்களாக இந்த பதிவு பத்தி தெரியல.யதேச்சையா இன்றுபார்த்தேன். கோபால்ஸார் படைப்புகள் என்றதும் ஆர்வமுடன் படித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! கோபு சார் படைப்பு என்றதும் ஆர்வமுடன் படித்தேன் என்றறிந்து மகிழ்ச்சி. அடுத்த பதிவும் அவர் படைப்பு பற்றித் தான். அவசியம் படித்துக் கருத்திட வேண்டுகிறேன்!

   Delete
  2. ஆல் இஸ் வெல்....... 26 February 2017 at 04:35

   //கோபால்ஸார் படைப்புகள் என்றதும் ஆர்வமுடன் படித்தேன்...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

   Delete
 17. பொதுவாகவே வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்கள் கதைகள் என்றாலே, திருச்சி நகர வீதிகள் , காட்சிகள் வந்து நிற்கும். இவரது தாயுமானவள் கதை எனக்கு, திருச்சி தெப்பக்குளம் அருகே இருக்கும் வாணப்பட்டறை மாரியம்மன் கோயிலையும், அந்த தெருவையும் மனக்கண்ணில் காட்டும்.

  உங்களுடைய நூல் விமர்சனம், உங்களுக்குள் இருக்கும் நூல்கள் மீதான வாசிப்பு ஆர்வத்தைக் காட்டுகிறது. தலைப்பில் பகுதி.1 என்பது தேவையில்லை. ஏனெனில் இந்த நூலுக்கான தொடர் விமர்சனம் அடுத்த பதிவில் இல்லை. அந்த அடுத்த பதிவும் வேறு நூலுக்கானது. அதிலும் தலைப்பில் பகுதி.2 என்பது எனது தாழ்மையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ 26 February 2017 at 17:45

   //பொதுவாகவே வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்கள் கதைகள் என்றாலே, திருச்சி நகர வீதிகள், காட்சிகள் வந்து நிற்கும்.//

   பிறந்து வளர்ந்து அன்று முதல் இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் அல்லவா. திருச்சியைத் தவிர அடியேன் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே !

   அந்த நம் ஊரின் அந்தத்தனி ருசி என் எழுத்துக்களில் இருக்கத்தானே இருக்கும். :)

   //இவரது தாயுமானவள் கதை எனக்கு, திருச்சி தெப்பக்குளம் அருகே இருக்கும் வாணப்பட்டறை மாரியம்மன் கோயிலையும், அந்த தெருவையும் மனக்கண்ணில் காட்டும்.//

   இவையெல்லாம் திருச்சியின் மையப்பகுதிகள் (ஹார்ட் ஆஃப் தி ஸிட்டி) அல்லவா!

   அந்தத் தெப்பக்குளம் அருகே நாம் சும்மா நின்று கொண்டிருந்தாலே போதுமே ..... நமக்கு மிகச் சுலபமாகப் பொழுது போய் விடுமே ..... ஆஹா, நம் மனதுக்கு எவ்வளவு ரம்யமானதொரு இடம் அது.

   உள்ளூரில் உள்ள இந்த இனிமையான பாரம்பர்யமான காட்சிகளைக் கண்டு களிக்காமல், உலக அதிசயங்களைக் காண்பதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது என நினைப்பவன் நான்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், நண்பரே. - அன்புடன் VGK

   Delete
  2. நீங்களிருவரும் எழுதியதைப் படிக்கும் போது, "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகின்றது. அனுபவித்து லயித்து எழுதியிருப்பதால், ஊரின் தனி ருசி எழுத்தில் பிரதி பலிக்கிறது.

   Delete
  3. @ தமிழ் இளங்கோ - “தலைப்பில் பகுதி.1 என்பது தேவையில்லை. ஏனெனில் இந்த நூலுக்கான தொடர் விமர்சனம் அடுத்த பதிவில் இல்லை. அந்த அடுத்த பதிவும் வேறு நூலுக்கானது. அதிலும் தலைப்பில் பகுதி.2 என்பது எனது தாழ்மையான கருத்து.”
   நீங்கள் சொல்வது மிகச்சரியே. முதலில் என் பார்வையில் கோபு சார் கதைகள் – பகுதி 1,2,3 என எழுதுவதாக இருந்தேன். பின்னர் ஒவ்வொன்றும் தனிப்புத்தகம் என்பதால், தலைப்பின் பெயரிலேயே இருக்கட்டும் என மாற்றினேன். தொடர்ச்சியாக அவர் நூல்கள் மூன்றைப் பற்றியும் எழுதப்போகிறேன் என்பதால், பகுதி 1,2 எனக் குறிப்பிட்டேன்.
   இப்போது பகுதி என்பதை நீக்கிவிட்டேன். தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி இளங்கோ சார்!

   Delete
 18. எல்லோரையும் கவரும் விதமாக கதைகள் எழுதுவது கடினம் என்றால் அந்த கதைகளை திறனாய்வு செய்வது மிக கடினம். அந்த வகையில் ‘சிறுகதை மன்னன்’ திரு வைகோபாலகிருஷ்ணன் அவர்களின் சிறுகதைகள் தொகுப்பை அருமையாய் திறனாய்வு செய்து, திரும்பவும் முன்பே படித்த அந்த கதைகளை படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டுள்ளீர்கள். அதற்காக தங்களுக்கு பாராட்டுகள்!

  கடித இலக்கியம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தும் இருக்கிறேன். ஆனால் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒவ்வொரு பதிவிற்கும் தரும் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது அவைகளை பின்னூட்ட இலக்கியம் என அழைக்கலாம் போலத் தோன்றுகிறது. தங்களுடைய பதிவிற்கு அவர் தந்திருக்கின்ற 8 பின்னூட்டங்கள் அவரைப் பற்றி மேலும் அறிய உதவியிருக்கிறது. அதற்காக தங்களுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி 27 February 2017 at 03:06

   //கடித இலக்கியம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தும் இருக்கிறேன். ஆனால் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒவ்வொரு பதிவிற்கும் தரும் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது அவைகளை பின்னூட்ட இலக்கியம் என அழைக்கலாம் போலத் தோன்றுகிறது. தங்களுடைய பதிவிற்கு அவர் தந்திருக்கின்ற 8 பின்னூட்டங்கள் அவரைப் பற்றி மேலும் அறிய உதவியிருக்கிறது.//

   “பின்னூட்ட இலக்கியம்” .....

   ஆஹா ! தன்யனானேன். :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   Delete
  2. வாருங்கள் நடன சபாபதி சார்! பின்னூட்ட நாயகர் என்று இவரை அழைக்கலாம். இவர் வலைப்பூவுக்குச் சென்றால். ஒவ்வொருவரும் கொடுக்கும் பின்னூட்டமும், அதற்கு இவர் கொடுக்கும் பதிலும் மிகவும் சுவையாக இருக்கும். பின்னூட்ட இலக்கியம் என்ற புதுவகை இலக்கிய வகை உருவாக இவர் முன்னோடியாய் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

   Delete
 19. தாயுமானவள் நூல் குறித்து அழகான விமர்சனம்.. இக்கதைகளை முன்பே வாசித்து சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதுப்புது வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. விமர்சனப் போட்டியிலேயே அதை நான் கண்கூடாகக் கண்டேன். ஒவ்வொருவரின் விமர்சனமும் ஒவ்வொரு விதமாகக் கதையை அணுகியிருப்பது கண்டு வியந்தேன். இப்போதும் அப்படியே... நூல் விமர்சனத்தில் கைதேர்ந்த தங்களால் விவரிக்கப்படும்போது இன்னும் வாசிக்கத் தூண்டப்படுகிறது. பின்னூட்டங்களில் கோபு சாரால் தரப்பட்டுள்ள மேலதிகத் தகவல்கள் இப்பதிவுக்குக் கூடுதல் பெருமை சேர்க்கின்றன. எப்படிதான் இவ்வளவு விவரங்களையும் விரல்நுனியில் வைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று மலைப்பாக உள்ளது. எனக்காக இரண்டு புத்தகங்களை அழகாக பேக் செய்து அவரது இல்லத்தில் அவர் வைத்திருப்பதாக சொல்லி அப்படத்தையும் அனுப்பியுள்ளார். நேரில் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் காலத்திற்காகக் காத்திருக்கிறேன். கோபு சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. சிறந்த நூல் விமர்சனத்துக்காக உங்களுக்கு என் நன்றி அக்கா.

  ReplyDelete
  Replies
  1. கோபு >>>>> ’கீத மஞ்சரி’ திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்.

   //எனக்காக இரண்டு புத்தகங்களை அழகாக பேக் செய்து அவரது இல்லத்தில் அவர் வைத்திருப்பதாக சொல்லி அப்படத்தையும் அனுப்பியுள்ளார். நேரில் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் காலத்திற்காகக் காத்திருக்கிறேன்.//

   இரண்டு அல்ல. மூன்று புத்தகங்களும் அழகாக பேக் செய்து எனது இல்லத்தின் முன் ஹாலில் உள்ள ஷோ கேஸின் முதல் தட்டில், இடதுபுற ஓரமாக, கண்ணைப்பறிக்கும் ஓர் நீலக்கலர் சுருக்குப்பையில் போடப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

   அந்த ஷோ-கேஸில் உள்ள அந்தப்பையின் படத்தைத்தான் நான் 14.04.2015 அன்று உங்களுக்கு என் மெயிலில் அனுப்பியிருந்தேன். ஒருவேளை நீங்கள் வரும்போது நான் வீட்டில் இல்லாவிட்டாலும்கூட, உரிமையுடன் நீங்களே அதனைக் கேட்டு வாங்கி, அந்த இடத்திலிருந்து எடுத்துச் செல்லலாம் எனவும் என் மெயிலில் உங்களுக்கு நான் சொல்லியிருந்தேன்.

   அந்தப் பேக்கிங்கின் மேல் உங்கள் பெயர், மெயில் ஐ.டி., பேக் செய்து வைத்த தேதி முதலிய அனைத்துமே உள்ளன. இப்போதும் போய் ஒருமுறை அதனை எடுத்து செக்-அப் செய்துவிட்டு, அதே இடத்தினில் அதை பத்திரமாக வைத்துவிட்டு, இந்தத் தகவலை நான் இங்கு டைப் செய்து கொண்டு இருக்கிறேன். :) :) :)

   தங்களின் மற்ற அனைத்துக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - பிரியமுள்ள கோபு.

   Delete
  2. கோபு சார் நடத்திய விமர்சனப்போட்டியில் முதலிடத்தைப் பிடித்த நீ என் விமர்சனத்தைப் பாராட்டும் போது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது கீதா! விரைவில் கோபு சாரின் அந்த பார்சலை நேரில் பெற்றுக்கொள்ளும் காலம் விரைவில் வரட்டும்! நன்றி கீதா!

   Delete