நாய், பூனை போன்று பறவைகள் வீட்டில் மனிதனால் வளர்ப்பதற்கென்று பழக்கப்பட்டவை அல்ல. காட்டில் சுற்றித்திரியும் அதன் இனத்திடமிருந்து எந்த வகையிலும் வேறுபட்டவையல்ல.
பறவைகளிடமிருந்து டி.பி போன்ற நோய்கள் மனிதனுக்குப்
பரவக்கூடும்.பறவைகளின் சிறகுகளிடமிருந்து உதிரும் தூசியும் துகளும் ஆஸ்துமா
நோயாளிகளின் நோயை அதிகமாக்கும் அபாயமுண்டு.
|
|
கிளிகளின் ஆயுள் 20 லிருந்து 50 ஆண்டுகள் வரை. . எனவே கிளியை வளர்க்க விரும்புபவருக்கு ஆயுட்கால
பொறுப்புணர்ச்சி தேவை.
பறவைகள் சுறுசுறுப்பாக இயங்க அவை புழங்கும் இடம் ஓரளவு பெரியதாயும்
வசதியாயும் இருக்க வேண்டும். பூனை, நாய்
போன்றவை இருக்கக் கூடாது. சுழலும் மின்விசிறி
கூடவே கூடாது.
தானியம் போன்ற ஒரே வகையான உணவு வகை கூடாது. அவ்வப்போது பழம், காய்கறி போன்றவையும் உணவில்
இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பறவைகளுக்கு வைட்டமின் டி கிடைக்க தினமும் குறைந்தது நான்கு மணி நேரமாவது
சூரிய ஒளியில் நனைவது அவசியம்.
தினந்தோறும் பத்து மணி நேரம் தூக்கமும் அவசியம்.
|
|
மனிதனைப் போலன்றிப் பறவை ஓவ்வொரு முறை மூச்சு விடும் போதும், அதன்
நுரையீரலிலிருந்து முழுவதுமாக காற்றை வெளியேற்றி விடும். மூச்சை உள்ளிழுக்கும் போது வெளியிலிருந்து
அதிகளவு ஆக்சிஜனும் காற்று மண்டலத்திலுள்ள மாசும் உள்ளே புகுந்து நுரையீரலை நிரப்பும். எனவே சிகரெட் புகை, இரசாயன வண்ணங்களின் நெடி
போன்றவை பறவைகளுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். உடனடி மரணத்தை ஏற்படுத்தும்.
எச்சமும், கழிவும் நிறைந்த பறவை கூண்டை அடிக்கடி சுத்தப்படுத்தி
நோய்க்கிருமிகளிலிருந்து பறவைகளைக் காப்பாற்ற வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக பறவைகளை நோயிலிருந்து காக்க அவ்வப்போது விலங்கு மருத்துவரின்
ஆலோசனை தேவை.
இத்தனை விதிகளையும் வாசித்த பிறகு அச்சச்சோ! பறவை வளர்ப்பா? எனக்குச் சரிப்பட்டு வராது என்று
தோன்றுகிறதா? ‘இருக்கிற வேலையில் இதைக்
கவனிக்க எனக்கு எங்க நேரமிருக்கு?’ என்று புலம்புவரா நீங்கள்? என் உடம்புக்கு வைத்தியம் பார்த்துக்கவே
என்னால முடியல. இதுல பறவைக்கு வேற
வைத்தியம் பார்க்கணுமா என்று சலித்துக்
கொள்கிறீர்களா?
உங்களுக்கு இனிப்பான ஒரு செய்தி.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான். பறவை வளர்க்க வேண்டும் என்ற ஆசையை முளையிலேயே
கிள்ளி எறியுங்கள். உங்களது பொன்னான நேரமும்
பணமும் மிச்சம். அவைகளுக்கும் உங்களது இந்த முடிவால் நன்மை தானே தவிர, இழப்பு ஏதுமில்லை.
ஏற்கெனவே வளர்ப்பவராயிருந்தால், தவறு ஏதும் செய்யாமல் சிறைத் தண்டனை அனுபவிக்கும் பறவைகளுக்குக் கூண்டைத் திறந்து விடுதலை
கொடுத்து வாழ்த்தி அனுப்புங்கள்!
வானவெளியில் அவை உற்சாகத்துடன் சிறகடித்துப் பறப்பதைக் கண்டு ஆனந்தக்
கண்ணீர் விடுவீர்கள்!
|
|
சரியாகச் சொன்னீர்கள் முடிவில்...
ReplyDeleteதொடர்ந்து தாங்கள் தரும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்!
Deleteமிகவும் கவனத்துடன் பறவைகளை வளர்க்கும் வழிகளைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி அக்கா. வளர்க்க முடியவில்லையெனில் என்ன செய்யவேண்டும் என்று மாற்றுவழியையும் தந்துவிட்டமை சிறப்பு. கிளி மைனா லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகள் மட்டுமல்லாமல் கோழிப்பண்ணைகளில் இறைச்சிக்கென வளர்க்கப்படும் கோழிகள் உடம்பு இளைக்காதிருக்கும் பொருட்டு அங்கே இங்கே நகரமுடியாமல் சின்னஞ்சிறு கூண்டுகளில் அடைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது மிகவும் பாவமாக இருக்கும். நம் சுயநலத்துக்காக என்னவெல்லாம் செய்கிறோம்? வருத்தம் தரும் விஷயங்கள். பறவைகளை வீட்டில் வைத்து வளர்க்க விரும்புவோர் இந்தக் கட்டுரை மூலம் சரியான வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால் நன்மையே. பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா.
ReplyDeleteஆம் கீதா. கூண்டு கூட இல்லாமல் சைக்கிளில் கோழிகளின் கால்களைக் கட்டித் தலைகீழாகத் தொங்கவிட்டு விற்பனைக்கு எடுத்துச் செல்லும் காட்சியைக் காணும் போதெல்லாம் வாயில்லா அந்தப் பாவப்பட்ட ஜீவன்களைப் பார்த்து மனம் வருத்தப்படும். இறைச்சிக்காக பெரிய பெரிய பறவைகளைச் சட்ட விரோதமாக வேட்டையாடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம்மால் முடிந்ததெல்லாம் அப்பறவைகளுக்காக ஆண்டில் ஒரு தினத்தை ஒதுக்கி அவற்றின் வதை பற்றிப் புலம்புவது மட்டுமே.
ReplyDelete