எல்லோருக்கும் வணக்கம்.
இந்நூற்றாண்டில் வயது வித்தியாசமின்றி, அனைவரையும் பாதிக்கும் ஒரு நோய் மனஅழுத்தமே.
இந்நோயால் மனநலமும், உடல்நலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, மனச்சோர்வு(Depression) ஏற்படுவதுடன், இதயத்தாக்கு, அதிக இரத்த அழுத்தம் போன்ற உயிருக்கு ஆபத்தான வியாதிகளும் உண்டாகின்றன.
கால் நூற்றாண்டுக்கு முன் மனஅழுத்தம், மனச்சோர்வு, மனச்சிதைவு போன்ற உளவியல் கோளாறுகளைப் பற்றிய விழிப்புணர்வு, நம்மிடம் அறவே இல்லை. அக்காலத்தில் மனநோய் என்றாலே பைத்தியம் தான். அதற்குச் சரியான வைத்தியமும் கிடையாது.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இன்று குழந்தைகள் முதல் முதியவர் வரை, அவர்களுக்கேற்படும் பல்வேறு மனக்கோளாறுகளுக்கு இத்துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை கேட்பதும், சிகிச்சை பெறுவதும் சாதாரண விஷயமாகிவிட்டது.
இன்றைய வாழ்க்கை சூழலில், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த மன அழுத்தத்துக்கும், மனத்தளர்ச்சிக்கும் ஆளாகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
போட்டிகள் நிறைந்து முற்றிலும் வணிகமயமாகிவிட்ட இக்காலச்சூழலில் தோல்வி, ஏமாற்றம், பயம், குறிப்பிட்ட கெடுவுக்குள் அளவுக்கதிகமான வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம், போதுமான ஓய்வின்மை, சரியான தூக்கமின்மை ஆகியவை மன அழுத்தம் ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இவை தவிர நெருங்கிய உறவினரின் திடீர் மரணம், முதுமையில் தனிமை, காதல் தோல்வி ஆகியவையும், மது, சிகரெட், போதை மருந்து போன்ற கெட்ட பழக்கங்களும், மனஅழுத்தத்தை அதிகப்படுத்துகின்றன.மேலும் வாசிக்க
No comments:
Post a Comment