தமிழின் பேச்சுவழக்கில் அறுபது சதவீதத்துக்கு மேல் பிற மொழிகளின் கலப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், உலகின் அழிவின் பாதையில் இருக்கக் கூடிய மொழிப் பட்டியலில் நம் தமிழும் இருப்பதாகவும், உலகின் மொழி ஆய்வு மையம் தெரிவிக்கும் கருத்தைஒப்புக்கொண்டே ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்.
என்ன ஆச்சரியம்! என் மனத்துயரை அப்படியே படம் பிடித்தாற் போல் வெளிப்படுத்துகிறதுஎனது மனவெளியில் வேதாவின் வலையில் இடம் பெற்றுள்ள நூலறுந்த பட்டமென ஆகுமோ? என்ற கவிதை. அதிலிருந்து சில வரிகள்:-
“நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்
பட்டுத் தமிழ் அழியுமோவென்று ஆய்வுகள்
ஒட்டிய கிலியால் மனவுளைச்சல்”
பாமரர்களின் பேச்சில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஆங்கிலக் கலப்பு மிக அதிகமாக உள்ளது. எங்கும் எதிலும் ஆங்கிலமே கோலோச்சுகிறது.
இன்று நாம் பேசும் தமிழ் எப்படியிருக்கிறது?
“அலார்ம் வைச்சு இயர்லி மார்னிங் ஏந்திரிச்சி பிரஷ் பண்ணிட்டு ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு பிரேக்பாஸ்ட் முடிச்சி பசங்களுக்கு லஞ்சிக்கு வெஜ் ரைஸ் செஞ்சி டிபன் பாக்ஸுல வைச்சிட்டேன். ஆட்டோக்காரன் டைமுக்கு வராம லேட் பண்ணிட்டான், சன்னுக்கு எக்ஸாம் வேற. ரொம்ப டென்ஷன் ஆயிட்டான். அப்புறம் ஹஸ்பண்ட் பைக்லகூட்டிட்டுப் போயி ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு வந்தாரு.
அதுக்கப்புறம் எனக்கும் லஞ்சி பாக் பண்ணிட்டு ஸ்கூட்டியை எடுத்தா ஸ்டாட்டிங் டிரபிள். ரோடு வரைக்கும் வாக் பண்ணி வந்து ஆட்டோ பிடிச்சேன். ரெண்டு சிக்னல்ல வெயிட்பண்ணி ரவுண்டானா வரும் போது ஹெவி டிராபிக். ஒன் அவர் லேட்டாயிடுச்சி.. அதுக்கப்புறம் தேர்டு புளோர்ல இருக்குற ஆபீசுக்கு ஓடி வந்து சிஸ்டம ஆன் பண்ணிசெட்டில் ஆறதுக்குள்ளாற போதும் போதும்னு ஆயிடுச்சி. லைஃபே ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு.”
பார்த்தீர்களா? இது தான் இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! ஆங்கிலத்துக்கு இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்! நம்மையும் அறியாமல் பேச்சு வழக்கில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டது.
“வண்டிக்காரன் கேட்டான், லெப்டா ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான், என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான், கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ், இப்படிக் கேட்டா?” (காசி ஆனந்தன்)தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment