என் வீட்டுத் தோட்டத்தில் எடுத்த படங்களின் தொகுப்பு....
|
இது என்ன பூ? கண்டுபிடியுங்க பார்க்கலாம்! |
|
இது தாமரை இலைத் தண்ணீர் இல்ல! சேப்பங்கிழங்கு இலைத்தண்ணீர்! |
|
அப்பப்பா! குளிர் தாங்க முடியல! விரியலாமா, வேணாமா? |
|
அப்பாடி! ஒரு வழியா விரிஞ்சுட்டேன்! |
|
வாகனங்கள் விடுற நச்சுப்புகையை நான் தான் கிரகிக்கிறேங்கிற உண்மை தெரியுமா ஒங்களுக்கு? |
|
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று! |
|
சமைக்க வேணாம்! அப்பிடியே சாப்பிடலாம்! |
|
ஒட்டுறவு! |
|
பூப்பூவாப் பறந்து போவும் பட்டாம்பூச்சி அக்கா! நீ பளபளன்னு போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா? |
|
தும்பி தம்பியைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு? |
|
கொஞ்ச நேரம் என்னை அமைதியா இருக்க விடறீங்களா? |
அழகான தோட்டம்! அழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமுதல் பின்னூட்டத்துக்கும் அழகான படங்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி தளிர் சுரேஷ்!
Deleteதலைப்புக்கு ஏற்றவாறு படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.
ReplyDelete>>>>>
வாங்க கோபு சார்! வணக்கம். அழகோ அழகு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்!
Deleteஒவ்வொரு படத்துக்கும் கீழேயுள்ள வாசகங்கள் பிரமாதமாகக் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
வாசகங்களும் பிரமாதம் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கோபு சார்!
Deleteகண்களுக்குக் குளிர்ச்சியான + மனதுக்கு மகிழ்ச்சியான பசுமையான பளபளப்பான பளிச்சிடும் பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
ReplyDelete>>>>>
கண்களுக்குக் குளிர்ச்சியாய் படங்கள் என்றறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கு நெஞ்சம் நிறை நன்றி சார்!
Deleteமிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteநேரில் வந்து ரசிக்க வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது...
ReplyDeleteவாங்க தனபாலன் சார்! படங்களை ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!
Deleteவாவ்.... அழகான படங்கள்...
ReplyDeleteதனபாலன் அண்ணன் சொன்னது போல் நேரில் வரவேண்டும் என்று தோன்றுகிறது.
மிகவும் நன்றி குமார்! அழகான படங்கள் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteமிக அழகு இரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தமைக்கும் அழகு என்று பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி ரூபன்!
Deleteஅந்த வெள்ளைப் பூ - புடலங்கொடி (புடலங்காய்..)
ReplyDeleteமற்றபடி - ரோஜாவுக்கு சின்ன தங்கச்சியின் பெயர் தெரியவில்லை..
தக்காளிக் காயைத் தின்ன்னும் போது தொண்டையில் எரிச்சல் ஏற்படும்..
கத்திரிப் பிஞ்சு பற்களில் கறையை உண்டாக்கும் என்பார்கள்.. அதனால் தின்று பார்த்ததே இல்லை..
நெற்றி வியர்வைவையைச் சிந்துவோர்க்கு - நிலமகள் வழங்கும் அருட்கொடை இவை..
இந்த அழகை எல்லாம் தினமும் பார்த்துக் கொண்டிருந்தாலே மனதிற்கு மகிழ்ச்சி.. நோய் நொடி இல்லை..
தவிரவும் - சமீபத்தில் தஞ்சைக்கு வந்திருந்த போது வெட்டுக்கிளியைக் காண இயலவில்லை.. தட்டான்களையும் தும்பிகளையும் நிறையவே கண்டேன்.
இவற்றையெல்லாம் - நம் சந்ததியினரிடம் பத்திரமாகச் சேர்க்கவேண்டிய கடமை நமக்குள்ளது..
வாழ்க நலம்...
வாங்க துரை சார்! சரியாகக் கண்டுபிடித்துச்சொல்லிவிட்டீர்கள்! உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா? ரோஜாவுக்குச் சின்ன தங்கச்சி(!) யின் பெயர் அரளி தான். இது அரளியின் வகையைச் சேர்ந்தது தான். வாகனங்கள் விடுகிற நச்சுப்புகையை அரளி கிரகிப்பதால் சாலையோரங்களில் இதனைப் பெருமளவு நடுகிறார்களாம். தக்காளி & கத்தரியைப் பச்சையாகத் தின்று பார்த்ததில்லை. இங்குத் தும்பியைப் பார்த்து வெகு நாளாயிற்று. தட்டான்களைப் பார்த்தேன். வெட்டுக்கிளியை எப்போதாவது பார்ப்பதுண்டு. ஓய்வு நேரங்களில் தோட்ட வேலை செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. விரிவான பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி துரை சார்!
Deleteதிரு. துரை செல்வராஜூ குறிப்பிட்டதுபோல் வெள்ளை புடலைப்பூ. சுமார் 50 வருடமாச்சு பார்த்து, மிக்க நன்றி!
ReplyDeleteஇது பட்டாம் பூச்சி - வண்ணத்துப் பூச்சி - பட்டுப் பூச்சியில்லை என நினைக்கிறேன். பட்டுப்பூச்சிக்கு இவ்வளவு பெரிய செட்டையில்லை.
அழகான படங்கள்! நீங்கள் கொடுத்து வைத்தவர்!
நீங்கள் சொல்வது சரிதான். இது புடலைப்பூ தான். ஐம்பது ஆண்டுகள் கழித்து இதனைப் பார்க்கிறீர்கள் என்றறியும் போது வியப்பு ஏற்படுகிறது. பட்டாம்பூச்சி என்பதற்குப் பதிலாகப் பட்டுப்பூச்சி என்று தட்டச்சு செய்துவிட்டேன். இப்போது திருத்திவிட்டேன். தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு மிகவும் நன்றி. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா! மிகவும் மகிழ்ச்சி.
Deleteஅழகிய படங்கள். ரோஜா கவர்ந்திழுக்கிறது.
ReplyDeleteநச்சுப்புகையை கிரகிப்பவர் யாரோ!
நானொரு கத்தரிக்காய் ரசிகன். எனவே அந்தக் கத்தரிக்காயின் படத்தில் மனதைப் பறிகொடுத்தேன்.
பட்டுப்பூச்சி இல்லை, வண்ணத்துப்பூச்சி என்பதால் பாட்டை மாற்றி விடுவோம்! "வண்ணத்துப்பூச்சி பறக்குது,, பல் வண்ணங்கள் காட்டி சிரிக்குது..."
தஞ்சையில் எடுத்த படங்களா?
வாங்க ஸ்ரீராம்! இது அரளி வகையைச் சேர்ந்தது தான். கஸ்தூரி என்றும் சிலர் சொல்வார்கள். பெட்ரோல் & டீசல் நச்சுப்புகையை அரளி பெருமளவு கிரகிக்கிறதாம். அதனால் தான் சாலையோரங்களில் நடுகிறார்களாம். பட்டாம்பூச்சி என்பதற்குப் பதிலாகப் பட்டுப்பூச்சி என்று தவறாகத் தட்டச்சு செய்துவிட்டேன். இப்போது சரிசெய்துவிட்டேன்.கத்தரிக்காய்ப் படம் அழகாயிருக்கிறது என்பதறிந்து மகிழ்ச்சி. இவை புதுவையில் எடுக்கப்பட்ட படங்கள். விரிவான பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!
Deleteதோட்டத்தின் பூக்களும் காய்களும் கனிகளும் அப்பூக்களை காய்கனியாக்கிய பூச்சிகளுமாய் என்னவொரு அழகான தொகுப்பு. படங்களோடு உரிய வாசகங்களும் அழகு. மிகவும் ரசித்தேன் அக்கா. அதிகம் கவர்ந்தது ஸ்ரீராம் சொன்னதுபோல் அந்தக் கத்தரிக்காய்கள்தாம்.. பார்க்கும்போதே பறித்து எண்ணெய்க்கத்தரிக்காய் குழம்பு செய்யவேண்டும்போல் கைகள் பரபரக்கின்றன. :))
ReplyDeleteரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கீதா!
Deleteதங்கள் வீட்டுத் தோட்டம் எவ்வளவு அழகாக இருக்கும் என்று தெரிகிறது. அழகிய படங்கள் அருமை,
ReplyDeleteபடங்கள் மிகவும் அழகாக உள்ளன. கீழே இடம் பெற்றுள்ள வாசகங்கள் அதனினும் அருமை. புடலைப் பூ ரொம்பவும் அழகாக உள்ளது
Deleteவருகைக்கும், ரசித்துப் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி குமுதா!
Deleteவாங்க மகி! படங்கள் அருமை எனப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!
Deleteமனதுக்கும் உடலுக்கும் நலமான பயனுள்ள பொழுது போக்கு!
ReplyDeleteபடங்கள் அருமை!
புடலைப் பூ மிக அழகு!
வாங்க யோகன்! வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி!
ReplyDeleteபடங்கள் மிக மிக அருமை..!!!
ReplyDelete