எழுதுவேன் என்று என்மீது நம்பிக்கை வைத்து அழைத்த கீதாவுக்கு
என் நன்றி!
ஏற்கெனவே நிஷா ஒரு முறை தொடர்பதிவுக்கு என்னை அழைத்தார். நானும் எழுதுவதாக ஒப்புக்கொண்டேன். ஆனால் வேலைப்பளு காரணமாக இன்று வரை எழுதமுடியவில்லை.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையே என்ற குற்றவுணர்வு எனக்கு! நிஷா என்னை மன்னிப்பாராக!
இம்முறையும் அப்படி ஆகக்கூடாது என்பதால் இப்பொங்கல் விடுமுறையைப்
பயன்படுத்தித் தொடர்பதிவை எழுதத் தீர்மானித்துவிட்டேன்.
1. பயணங்களில்
ரயில் பயணம் எப்போதுமே அலாதி தான். உங்கள் முதல் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
நினைவில்லை.
2. மறக்க
முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
எல்லாப் பயணங்களுமே மகிழ்ச்சி நிறைந்தவை தாம்.
பயணத்தின் குறிக்கோள் அது தானே? ஆனால் ஒரே
ஒரு பயணம் மட்டுமே வழக்கத்துக்கு மாறாக அமைந்தது.
அதனால் அது தான்
என்னைப் பொறுத்தவரை மறக்கமுடியாப்
பயணம். ஆனால் அது மகிழ்ச்சியான பயணமல்ல.
(அது பற்றிச் சுற்றுலா அனுபவங்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே
எழுதியிருக்கிறேன். விருப்பமும், நேரமுமிருந்தால் வாசிக்கவும். இணைப்பு:-சுற்றுலா அனுபவங்கள்.
3. எப்படிப்
பயணிக்கப் பிடிக்கும்?
என் ரசனையோடு ஒத்துப்போகிறவர்களோடு
பயணிக்கப்
பிடிக்கும். அவர்கள் உறவுகளாகவுமிருக்கலாம்;
நண்பர்களாகவுமிருக்கலாம்.
4. பயணத்தில்
கேட்க விரும்பும் இசை?
பி.சுசீலா
& டி.எம். செளந்திரராஜன் பாடிய, பழைய தமிழ்த்
திரையிசைப்பாடல்கள்.
5. விருப்பமான
பயண நேரம்?
அதிகாலை மற்றும்
மாலைப் பொழுதுகள். என்ன தான் ஏசி
கார், பேருந்து
என்றாலும் வெயில் சுட்டெரிக்கும் பகல்
வேளையில் பயணம்
செய்யவே பிடிக்காது.
6. விருப்பமான
பயணத்துணை?
என் தங்கை. இயல்பிலேயே நகைச்சுவை கலந்து கலகலப்பாகப் பேசும்
அவளுடன் பயணம் செய்தால்
நேரம் போவதே தெரியாமல்
மணிக்கணக்காகப் பேசிக்கொண்டே
இருக்கலாம். பயணக்
களைப்பு போன இடம்
தெரியாது.
7. பயணத்தில்
படிக்க விரும்பும் புத்தகம்?
எதுவுமே படிக்க மாட்டேன். ஓடும் பேருந்தில் படிக்கக் கூடாது;
கண்ணுக்குக் கெடுதல்
என்பது சிறுவயதில் அப்பா இட்ட
கண்டிப்பான உத்தரவு. இளவயதிலேயே
பார்வை குறைபாடு
காரணமாகக் கண்ணாடியும் அணிய வேண்டி வந்ததால்,
எதுவும் படிப்பதில்லை.
8. விருப்பமான
ரைட் அல்லது டிரைவ்?
ரைட், டிரைவ் எல்லாம்
வேண்டாம். மலைப்பிரதேசங்களில்,
மிதமான குளிரில்,
இதமான வெயிலில் காலார நடந்து
இயற்கை எழிலை அணு
அணுவாக ரசிப்பது மிகவும் பிடிக்கும்.
எத்தனை விதமான செடி,கொடிகள்! இயற்கையின்
படைப்பில் தான்
எத்தனை விநோதங்கள்? கண்ணைப்
பறிக்கும் வண்ணங்களில்
இதுவரை பார்த்திராத வடிவங்களில்
எண்ணற்ற மலர்கள்! விண்ணை முட்டி நிற்கும் மரங்கள்!
ஹார்ன் அலறலைக்
கேட்டுக் கேட்டுச் செவிடாகிய
காதுகளுக்கு ஒத்தடம்
கொடுக்கும் புட்களின் இனிய சங்கீதம்!
வெண்மலையாக நம்மீது மோதுவது போல் வந்து கணநேரத்தில் புகையாக நம்மைத் தழுவிச்செல்லும்
முகில்கள்! கதிரில் ஒளிரும்
வெள்ளியருவிகள்!
சலசலத்து ஓடும் நீரோடைகள்! காணக்கண்
கோடி வேண்டும்!
9. பயணத்தில்
நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
குறிப்பிட்டுச்
சொல்லும்படியான பாடல் எதுவுமில்லை.
10. கனவுப்பயணம்
ஏதாவது?
கனவுப்பயணம் என்று
எதுவுமில்லை. எங்குச் சென்றாலும்
மனிதன் உருவாக்கிய
கான்கிரீட் காடுகளை விட, அவன் அழித்தது போக எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச இயற்கையே, எப்போதும் என்னை வெகுவாக ஈர்க்கிறது.
(படம் நன்றி இணையம்)
மனம் திறந்து உள்ளதை உள்ளபடி, மிகவும் அருமையாகவும், அழகாகவும், யதார்த்தமாகவும், இயற்கையாகவும் எழுதியுள்ள பயணப்பகிர்வு சூப்பர் ! பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteவாங்க கோபு சார்! வணக்கம். தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டி வாழ்த்தியமைக்கும் மிகவும் நன்றி!
Deleteதெளிந்த நடையில் - தங்களது பதிவு..
ReplyDeleteஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுடன்
என்றென்றும் வாழ்க நலம்!..
தெளிந்த நடை என்று பாராட்டியமைக்கும், பொங்கல் வாழ்த்துக்கும் நன்றி துரை சார்!
Deleteயதார்த்தமாய்...
ReplyDeleteநல்ல பகிர்வு...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வாங்க குமார்! நல்ல பகிர்வு என்று பாராட்டியமைக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!
Deleteபயணங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அருமை! நன்றி!
ReplyDeleteஅருமை என்ற பாராட்டிற்கு மிகவும் நன்றி சுரேஷ்!
Deleteவணக்கம் சகோ!
ReplyDelete“““““““மலைப்பிரதேசங்களில்,
மிதமான குளிரில், இதமான வெயிலில் காலார நடந்து
இயற்கை எழிலை அணு அணுவாக ரசிப்பது மிகவும் பிடிக்கும்.
எத்தனை விதமான செடி,கொடிகள்! இயற்கையின்
படைப்பில் தான் எத்தனை விநோதங்கள்? கண்ணைப்
பறிக்கும் வண்ணங்களில் இதுவரை பார்த்திராத வடிவங்களில்
எண்ணற்ற மலர்கள்! விண்ணை முட்டி நிற்கும் மரங்கள்!
ஹார்ன் அலறலைக் கேட்டுக் கேட்டுச் செவிடாகிய
காதுகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் புட்களின் இனிய சங்கீதம்!
வெண்மலையாக நம்மீது மோதுவது போல் வந்து கணநேரத்தில் புகையாக நம்மைத் தழுவிச்செல்லும் முகில்கள்! கதிரில் ஒளிரும்
வெள்ளியருவிகள்! சலசலத்து ஓடும் நீரோடைகள்! காணக்கண்
கோடி வேண்டும்! ““““““““ இப்பயணத் தொடர் பதிவின் ஒவ்வொருவரின் ஒவ்வோர் அனுபவம் எனதனுபவத்தோடு ஒத்துப் போகிறது. உங்கள் பதிவில் இவ்வரிகள்.
நான் வெளியிடாத தொடர் ஒன்று இருக்கிறது. ( வெளியிடப் போவதும் இல்லை ) அது வெளிவந்திருந்தால், அதில் இருக்கும் கருத்தினை நீங்கள் இங்குச் சொல்லியிருக்கிறீர்கள் என்றிருக்கலாம். :(
இருப்பினும் ஒத்த சிந்தனை உள்ளோரைக் காணும்போது ஏற்படும் மகிழ்ச்சி எனக்கு இப்பதிவினைக் காண்கையில் ஏற்படுகிறது.
வெகு இயல்பான பதில்கள்.
த ம
தொடர்கிறேன்.
நன்றி.
வாங்க சகோ! வணக்கம். ஒத்த சிந்தனை என்றறியும் போது மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கின்றது. வெகு இயல்பான பதில்கள் என்ற கருத்துக்கும் தொடர்வதற்கும் மிகவும் நன்றி!
Deleteமீதமிருக்கும் இயற்கையை ரசிப்போம்
ReplyDeleteஅருமை சகோரியாரே
நன்றி
வாங்க ஜெயக்குமார் அவர்களே! தங்கள் வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
Deleteஒப்பனை இல்லாத எழுத்து... நீங்கள் விரும்பும் இயற்கையை போலவே:) மிக அருமையான பதிவு. பயணத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி மேடம்:)
ReplyDeleteவாங்க மைதிலி! நீங்கள் துவக்கிய தொடர் தானே இது? உங்கள் தயவால் நீண்ட நாட்கள் கழித்துச் செலவில்லாமல் மலைப்பிரதேசம் பயணம் சென்று மீண்டேன். ஒப்பனை இல்லாத எழுத்து என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி மைதிலி!
Deleteவிருப்பமான ரைட் அல்லது டிரைவ்? என்ற கேள்விக்கு நீங்கள் சொல்லியிருக்கும் பதில் அப்படியே கட்டிப்போட்டுவிட்டது. நானும் அப்படித்தான் ரசிப்பேன்.. :-))
ReplyDeleteமனம் திறந்து யதார்த்தமான பதில்கள், வாழ்த்துகள்.
வாங்க கிரேஸ்! நீங்களும் இப்படித்தான் ரசிப்பீர்கள் என்றறிய மிகவும் மகிழ்ச்சி. யதார்த்தமான பதில்கள் என்ற கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கிரேஸ்!
Deleteபல்வேறு பணிகளுக்கு இடையிலும் பயணங்கள் முடிவதில்லை தொடர் பதிவினைத் தந்த சகோதரிக்கு நன்றி.
ReplyDeleteவாங்க இளங்கோ சார்! நலமா? எப்படியும் எழுதிவிட வேண்டும் என்று பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்டேன். கருத்துக்கு மிகவும் நன்றி!
Deleteஉங்களோடு சேர்ந்து நானும் பயணித்தேன் . நாள் பதிவு. வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க விசு சார்! தங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! என்னோடு சேர்ந்து நீங்களும் பயணித்தது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கு மிகவும் நன்றி! அட்டைப்பட விளம்பரத்தை வாங்கியதன் மூலம் புதுகையில் வெளியிட்ட பதிவர் கையேட்டு விற்பனைக்கு முக்கிய உதவி செய்தவர் நீங்கள் என்றறிவேன். தங்கள் வருகைக்கு மீண்டும் என் நன்றி!
Deleteஒத்துப் போகும், அழகிய நினைவுகள். ரசித்தேன்.
ReplyDeleteதம +1
வாங்க ஸ்ரீராம்! உங்கள் ரசனையோடு என் நினைவுகளும் ஒத்துப்போவதறிந்து மகிழ்ச்சி. ரசித்தமைக்கு மிகவும் நன்றி!
Deleteதொடர் பதிவினை ரசித்தேன். உங்களுடன் பயணித்த உணர்வு.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா! பதிவினை ரசித்தமைக்கு மிகவும் நன்றி!
Deleteசுருக்... நறுக்...
ReplyDelete10 : சிறப்பு...
வாங்க தனபாலன் சார்! பார்த்து நாளாயிற்று. சிறப்பு எனப்பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!
Deleteஇயல்பான
ReplyDeleteஇனிமையான
எளிமையான பதில்கள்
தங்கள் வருகைக்கும் இனிமையான பதில்கள் என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி!
Deleteஎன் அழைப்பினை ஏற்று தொடர்பதிவில் பங்கேற்றமைக்கு மிகவும் நன்றி அக்கா.. உங்களுடைய பயண அனுபவங்கள் பலவற்றையும் அறிவேன் என்றாலும் மும்பை அனுபவத்தை மறக்கவே முடியாது. பலருக்கும் எச்சரிக்கை தரும்படியான அனுபவம் அது. இங்கு கேட்கப்பட்டிருக்கும் பயணம் குறித்த கேள்விகளுக்கான பதில்கள் பலவும் மனம் தொட்டன. குறிப்பாய் எட்டாவது பதில். பயணம் குறித்த சிந்தனைகள் பலவும் நமக்குள் ஒத்திருப்பது மகிழ்வளிக்கிறது. உங்களுடன் பயணித்த சில பயண நினைவுகளை மீளவும் அசைபோட்டு மகிழ்கிறேன். மீண்டும் என் நன்றி தங்களுக்கு.
ReplyDeleteஆம் கீதா! மும்பை பயண அனுபவம் தான் மறக்கவே முடியாதது. நீண்ட இடைவெளிவிட்டு எதுவுமே எழுதாமலிருந்த என்னைத் தொடர்பதிவுக்கு அழைத்து எழுத வைத்தமைக்கு மிகவும் நன்றி!
Deleteஎளிமையான பதிவு, அதே நேரத்தில் மிக யதார்த்தமான பதிவு! எழுத்துக்களின் நடையும் வரிசையும் அருமை..கனவுப்பயணம் பற்றிக் குறிப்பிட்டது மிகவும் கவர்ந்தது, வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அருள்மொழி!
Delete