நல்வரவு

வணக்கம் !

Saturday, 1 April 2017

தட்டச்சு நினைவுகள்

                                                     (படம் - நன்றி இணையம்)

பிரபல பதிவரான திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள், சும்மா என்ற தம் வலைப்பூவில், சாட்டர்டே ஜாலி கார்னர் என்ற பகுதியில், தட்டச்சு நினைவுகள் பற்றிய  என் கட்டுரையை, இன்று வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார். அவருக்கு என் இதயங்கனிந்த நன்றி.  
மேலும் படிக்க..


19 comments:

  1. மிகவும் அருமையாகவும் நகைச்சுவையாகவும் எழுதியுள்ளீர்கள்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோபு சார்! தேனம்மையின் சும்மா தளத்தில் நீங்கள் விரிவாக எழுதியிருந்த பின்னூட்டங்களை ரசித்தேன். இங்கும் உங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  2. நான் எம் எஸ்.சி படித்தபிறகுதான் டைப் ரைட்டிங் போகலாம் என்று கிளம்பினேன். asdfgf :lkjhj -என்பதையே 15 நாட்கள் அடிக்கச்சொன்னார்கள். சரிதான் போடா என்று வந்துவிட்டேன். சிலநாட்களிலேயே KCUB இல் officer போஸ்ட் கிடைத்தது. அங்கு டைப் அடிக்க ஆள் இல்லை. மூன்றே நாளில் ஒற்றைவிரலில் அடித்தே கற்றுக்கொண்டுவிட்டேன். பில் கேட்ஸ் கூட ஒற்றைவிரல் டைப்பர் தான் ! அப்போதெல்லாம் டைப் ரைட்டிங் இருந்தால் தான் எல்லாம்- என்பதுபோல் ஒரு மாயை உண்டாகி இருந்தது. இன்று கணினி வந்துவிட்டபிறகு, பழங்கால முறைப்படி டைப் தெரிந்திருந்தால் அதுவே disadvantage என்று ஆகிவிட்டது. எல்லாம் நல்லதற்கே!
    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. மூன்றே நாட்களில் கற்றுக்கொண்டது பெரிய சாதனை தான். ஒற்றை விரலில் அடிக்கும் போது அந்த விரலுக்கு அதிகப்படியான வேலை காரணமாக வலி ஏற்படும். வேறு எந்தப் பிரச்சினையுமில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா!

      Delete
  3. அங்கே படித்து ரசித்துவிட்டேன். என் தட்டச்சுப் பழகிய காலத்தையும் நினைவூட்டிய பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! உங்கள் பின்னூட்டம் கண்டேன். மீண்டும் இங்குப் பின்னூட்டம் இட்டமைக்கு மிகவும் நன்றி!

      Delete
  4. நல்ல பதிவு. தேனம்மை சகோ தளத்தில் படித்து ரசித்தேன்.

    எனது அனுபவங்களையும் நினைக்க வைத்தது உங்கள் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நல்ல பதிவு என்ற பாராட்டுக்கு நன்றி வெங்கட்ஜி!

      Delete
  5. தளம சென்று வந்தேன்
    நான் முறையாக பயின்றதில்லை எனக்கு ஆசிரியரும் இலலை நானாகவே முயன்று பழகி கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. தானாகவே முயன்று கற்றுக்கொண்டது சாதனை தான். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி!

      Delete
  6. தங்களுக்கே உரித்தான நடையில் அருமையான பதிவு!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவு என்ற பாராட்டுக்கு நன்றி துரை சார்! உங்கள் மின்னூல் வேலையைத் துவக்கிவிட்டீர்களா?

      Delete
  7. எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவுடனேயே கல்லூரி போக அதிர்ஷ்டம் கிட்டாத பதினாறு வயசு காளைகளுக்கும், கன்னியர்க்கும் அந்தாளைய புகலிடம் தட்டச்சு மையங்கள் தாம். கையில் ஒரு ஏ4 சைஸ் பேப்பரைச் சுருட்டிக் கொண்டு வந்து விட்டோமானால், ASDF ;LKJ - யிலிருந்து ஆரம்பப் பாடம் ஆரம்பிக்கும்.

    ஒருவிதத்தில் பார்க்கப்போனால் அந்நாளைய காதலர் பூங்காக்களாகவும் பூத்துக் குலுங்கின பிரதேசங்கள் இந்த மையங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது மிகவும் சரி தான் ஜீவி சார்! தட்டச்சு மையங்கள் பற்றிய உங்கள் கருத்தையும், பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!

      Delete
  8. தங்களின் தட்டச்சு அனுபவத்தை அருமையாக வர்ணித்துள்ளீர்கள். நானும் புகுமுக வகுப்பு முடித்தபின் விடுமுறையில் ஒரு ‘பாடாவதி’ தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டவன். தங்களின் பதிவு என்னை நான் தட்டச்சு கற்றுக்கொண்ட நாட்களுக்கு அழைத்து சென்றுவிட்டது. பதிவை இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  9. சகோதரி அவர்களின் பதிவிலேயே ஏற்கனவே படித்துவிட்டேன்
    தங்களின் பதிவு என் கல்லூரிக்கால நினைவலைகளை மீண்டும்
    மனதில் வலம் வர வைத்துவிட்டது
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! அங்கும் உங்கள் பின்னூட்டம் கண்டேன். மீண்டும் இங்குப் பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி! உங்கள் கல்லூரிக்கால நினைவலைகளை மீட்டியது என்றறிந்து மகிழ்ச்சி சகோ!

      Delete
  10. உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்ந்த திருமதி தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கு நன்றி. இளநிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நான் பணிக்குச் செல்ல உதவியது நான் படித்த ஆங்கில மற்றும் தமிழ்த் தட்டச்சே. இரண்டிலும் உயர்நிலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் தட்டச்சு கற்கும் காலத்தில் பிழையேயின்றி (Nil mistake) தட்டச்சு செய்வேன். அப்போது நான் தட்டச்சு செய்த தாளை அறிவிப்புப் பலகையில் வைத்து எனக்கு வாழ்த்து கூறுவர். என்னைப் போல தட்டச்சு செய்யவேண்டும் என்று அறிவுரையும் கூறியிருப்பர். தட்டச்சிடும்போதே தவறாக எழுத்தினை தட்டச்சு செய்யும் நிலை ஏற்படும்போது அப்படியே கையை பின்னோக்கி எடுத்துவிடுவேன். அந்த உத்தியே என்னை சிறந்த தட்டச்சாளனாக்கியது என்பதை உணர்கிறேன். தட்டச்சு கற்போர் பல புதிய சொற்களை கற்கும் வாய்ப்பினைப் பெறுவர். வாய்ப்பு கிடைக்கும்போது என் தட்டச்சு அனுபவத்தை எழுத எண்ணியிருந்தேன். இப்பதிவு என் ஆசையை மேம்படுத்திவிட்டது.

    ReplyDelete