நல்வரவு

வணக்கம் !

Wednesday 29 July 2020

EIA DRAFT 2020 - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020


                   (படம் நன்றி - PTEacademic.exam.com)    
                  

இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டுமானால், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப்படி (1986) அனுமதி பெற வேண்டும்.  அதன்படி சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்ட்த்தின் படி, அறிக்கை தயார் செய்ய வேண்டும்.  அரசு சார்பில் ஒரு குழு இந்த அறிக்கையை ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லையென்றால் மட்டுமே, தொழில் தொடங்க அனுமதி கொடுக்கும்.


ஆனால் இந்தப் புதிய வரைவு சட்டப்படி, தேசிய நலன் சார்ந்த திட்டங்களுக்குச் சூழலியல் மதிப்பீடு தேவையில்லையாம்.  எனவே அரசு நினைத்தால், எந்தப் பன்னாட்டு நிறுவனத்துக்கும், தேசிய நலன் சார்ந்தது என்ற காரணம் சொல்லி, மக்கள் கருத்தைக் கேட்காமல், சூழல் பாதிப்புக் குறித்த மதிப்பீடு செய்யாமல், அனுமதி வழங்கலாமாம். இது மிகவும் ஆபத்தானது.   

சுற்றுச்சூழல் மதிப்பீடு இல்லாமல், துவங்கப்படும் திட்டங்கள் குறித்துப் பிறகு ஒரு குழு அமைத்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களாம்!.  கிழித்தார்கள்! நடக்கின்ற கதையா இது? ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட, எத்தனை பேர் உயிர் துறக்க நேர்ந்தது என்று பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு சுந்தர்ராஜன் அவர்கள், கேட்கும் கேள்வி நியாயமானது.

சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து, குடிமை சமூகமோ, தனி நபர்களோ இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்கிறது, இந்த வரைவு. இது மோசமான ஆபத்தாக முடியும்," என்று எச்சரிக்கிறார் அவர்.
ஏற்கெனவே சுற்றுச்சூழல் சட்டம் அமலில் இருக்கும் போதே, சூழல் அனைத்தும் நஞ்சாகிக் கிடக்கின்றது.  இனி அதுவும் கிடையாதென்றால், என்ன ஆகும் எனக் கற்பனையே பண்ணமுடியவில்லை. 

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, வலுவாக எதிர்ப்போம்!  ஆகஸ்ட் 11 கடைசி நாள்!


2 comments:

  1. என்னதான் நாம் மின்னஞ்சல் அனுப்பினாலும், அவர்கள் மாறுவார்களா என்றால்...? ம்ஹிம்... புதிய கல்வி வரைவு திட்டம் போல...

    நாட்டை நாசமாக்காமல் விட மாட்டார்கள்... இதுவே கண் முன் தெரியும் உண்மை...

    நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு

    ReplyDelete
  2. நம் எதிர்ப்பைப் பதிவு செய்து வைப்போம். நம்மால் முடிந்தது அது ஒன்று தான். நன்றி தனபாலன் சார்!

    ReplyDelete