நல்வரவு

வணக்கம் !

Sunday, 24 October 2021

மந்திரக்குடை – சிறுவர் குறுநாவல் வெளியீடு

 


என் சிறார் குறுநாவல் ‘மந்திரக்குடை’ சென்னை பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் அண்மையில் வெளியிட்டுள்ளது.  ஏற்கெனவே அமேசானில் சிறார் நூல்களை மின்னூல்களாக வெளியிட்டிருந்தாலும், என் சிறுவர் நூல் அச்சில் வருவது இதுவே முதல் முறை.

எழுத்தாளர் உதயசங்கர் அவர்களும் சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களும் நூலைக் குறித்து மதிப்புரை எழுதியுள்ளார்கள்.  அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Tuesday, 5 October 2021

சிறுவர்க்கான கதைப்போட்டி

 

சுட்டி உலகம் துவங்கப்பட்டதன்  முக்கிய நோக்கம், சிறுவர்களின் தமிழ் வாசிப்பை மேம்படுத்துவதே ஆகும்.  குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நவம்பர் 7 ஆம் தேதி துவங்குகிறது. 

அவரது நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சிறுவர்க்கான கதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என முடிவெடுத்துள்ளோம்..  வாசிக்க வாசிக்கத் தான் எழுத்து வசப்படும் என்பதால், பரிசுத் தொகையில் பாதி புத்தகமாகக் கொடுக்கப்படும்.

இப்போட்டியில் வயது 7 முதல் 15 வரையிலுள்ள குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  தமிழில் மட்டுமே கதை எழுத வேண்டும்.

சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்காற்றி வரும் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் ‘லாலிபாப் உலக’த்துடன் இணைந்து இப்போட்டியை நடத்தவுள்ளோம்.  கன்னிக்கோவில் இராஜா அவர்கள் ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ என்ற காணொளியைத் துவங்கிக் குழந்தைகளுக்குக் கதை எழுத சிறப்பான பயிற்சி கொடுத்து வருகிறார். 

இவரிடம் பயிற்சி பெற்ற ஹரிவர்த்தினி ராஜேஷ் என்ற நான்காம் வகுப்பு மாணவி, அண்மையில் தம் 9 வது பிறந்த நாளில், 9 கதைப்புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.  அவருக்கு எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்! சுட்டி உலகத்தில் அவருடைய ‘குகைக்குள் பூதம்’ என்ற புத்தக அறிமுகமும் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வாழ்த்துகிறோம்!  உங்கள் படைப்புகளை team@chuttiulagam.com   என்ற மெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.

மேலும் விபரங்களைச் சுட்டி உலகத்தில்  தெரிந்து கொள்ளலாம்:-


Tuesday, 7 September 2021

மந்திரக்குடை

மந்திரக்குடை: பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள்.

இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!

இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!: ஆங்கிலேயரின் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் ஓட்டிச் சாதனை படைத்த திரு வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் இன்று! நம்

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2020

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2020: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, ஆண்டுதோறும் மதிப்பு மிக்க சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறுவர்க்காக எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய படைப்புகளுக்குப் பால சாகித்ய

Saturday, 10 July 2021

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் உதயம்

 


சிறார் நலன் காக்க சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உதயமாகி, அதன் மாநாடு 13/06/2021 அன்று, இணையம் வழியாகச் சிறப்பாக நடைபெற்றது. சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்க, சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் அவர்களும், குழந்தைநல செயற்பாட்டாளர் சாலை செல்வம் அவர்களும் நிகழ்வை ஒருங்கிணைத்து வழங்கினர்

மேலும் வாசிக்க...







கீழடி வைகை நாகரிகம் – உலக நாகரிக வரிசை-1


கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் விளைவாக வெளிச்சத்துக்கு வந்த தமிழரின் தொன்மை வாய்ந்த வைகை நாகரிகத்தின் சிறப்புகளைக் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள நூல்

மேலும் வாசிக்க...

Thursday, 10 June 2021

சுட்டி உலகத்தில் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் பேட்டி



வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் எப்படி ஏற்படுத்துவது? தமிழ்ச்சிறார் இலக்கியச் சூழலுக்கும், மலையாளச் சிறார் இலக்கியச் சூழலுக்கும் உள்ள வேறுபாடுகள், எந்தெந்த விதத்தில் அவர்கள் நம்மை விட முன்னிலையில் இருக்கின்றார்கள்,  சிறார் நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் நூலக ஆணையைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் போன்ற பல கேள்விகளுக்குச் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் பதிலளித்துள்ளார்.  அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை, இன்றைய சுட்டி உலகத்தில்!

வாசிக்க இணைப்பு:-https://chuttiulagam.com/specials-udaishankar-interview/


 

Saturday, 15 May 2021

'சுட்டி உலகம்' சிறார் வாசிப்புக்கான வழிகாட்டி!


சுட்டி உலகம் சிறார் வாசிப்புக்கான வழிகாட்டி!   

என் 10 வயது குழந்தைக்கு, என்ன புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம் என்பது போன்ற கேள்வி, முகநூலில் அடிக்கடி கண்ணில் படுகின்றது.  இப்போது பெற்றோரிடம் வாங்கும் சக்தி இருக்கின்றது.  குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்பைப் பழக்க வேண்டும்  என்ற எண்ணமும் அதிகரித்திருக்கின்றது,

ஆனால் தமிழில் என்னென்ன சிறார் நூல்கள் சந்தையில் கிடைக்கின்றன?  எந்தெந்த பதிப்பகங்கள், சிறார் நூல்களை வெளியிடுகின்றன? என்பது போன்ற விபரங்கள் பலருக்கும் தெரியாததால், சிறுவர்களிடம் சரியான நூல்கள் சென்று சேர்வதில்லை. 



எனவே இதற்கு வழிகாட்டக்கூடிய இணையதளம் ஒன்று துவங்கிப் பெற்றோர், பதிப்பகங்கள், சிறார் எழுத்தாளர்கள் ஆகியோருக்கு உதவலாம் என்ற எண்ணத்தில், 2021 ஆம் துவக்கத்தில், நானும் கீதமஞ்சரி கீதா மதிவாணனும் சேர்ந்து, அதற்கான வேலைகளைச் செய்யத் துவங்கினோம்.  ஆனால் இடையில் குடும்பத்தில் ஏற்பட்ட இரண்டு நெருங்கிய உறவுகளின் இழப்புகளால், மனம் சோர்ந்து மூன்று மாதம், வேலை தள்ளிப்போயிற்று. 

இதோ, 10/05/2021 அன்று சுட்டி உலகம் வெற்றிகரமாகப் பிறந்து விட்டது.  இணைய தளத்துக்குச் சென்று பார்த்து, உங்கள் ஆக்கப்பூர்வ கருத்துக்களையும், ஆலோசனைகளையும்,  பதிவு செய்யுங்கள், நண்பர்களே! சுட்டி உலகம் சிறப்பாகச் செயல்பட, உங்கள் ஆதரவு என்றென்றும் தேவை.

உங்கள் ஆலோசனைகளைப் பதிவு செய்ய வேண்டிய மெயில் முகவரி:-

team@chuttiulagam.com

நன்றியுடன்,

ஞா.கலையரசி

 

 



Tuesday, 12 January 2021

பூதம் காக்கும் புதையல் - சிறுவர் நாவல்


 அமேசானின்  #pentopublish4 போட்டிக்காகப் 'பூதம் காக்கும் புதையல்' எனும் சிறுவர் நாவலை, கிண்டிலில் 02/01/2021 அன்று வெளியிட்டேன்.    

இது பலரிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  இந்நாவல் பற்றிச் சிறார் எழுத்தாளர் விழியன் (இயற்பெயர் உமாநாத் செல்வன்) அவர்கள் மிகவும் பாராட்டித் தம் முகநூல் பக்கத்தில், இவ்வாறு எழுதியுள்ளார்:-

கிண்டிலில் ஓர் அற்புதமான சிறார் நாவல் வாசித்தேன். (இன்று இலவசமும் கூட) விறுவிறு நடை. தொய்வே இல்லை. பன்முகத்தன்மை கொண்ட எழுத்து. கலையரசி அவர்கள் மேலும் மேலும் பல படைப்புகள் படைக்க வேண்டும்.  சமீபத்தில் மிகவும் ரசித்த நூல். Evening was so thrilled. எங்க இருந்தாங்க, இத்தனை நாள்னு, தெரியல 

பிரபல சிறார் எழுத்தாளரிடமிருந்து, கிடைத்த இந்தப் பாராட்டு, என்னை மேலும் எழுத, ஊக்குவித்துள்ளது. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!