நல்வரவு

வணக்கம் !

Sunday 5 March 2023

நீலமலைப் பயணம் - சிறார் நாவல்

 அனைவருக்கும் வணக்கம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!  புத்தாண்டு பிறந்து மூன்றாம் மாதம் நடக்கும் இவ்வேளையில் வாழ்த்துச் சொல்வதற்குக் காரணம், இவ்வாண்டில் நானெழுதும் முதல் பதிவு இது என்பதால்!

2022 ஆம் ஆண்டு, சென்னை ‘வானம் பதிப்பகம்’ வெளியிட்ட ‘பூதம் காக்கும் புதையல்’ என்ற என் சிறார் நாவலைத் தொடர்ந்து, என் அடுத்த சிறார் நாவல் ‘நீலமலைப் பயணம்’ என்ற தலைப்பில், ஆகஸ்ட் 2022 ல் வெளியானது. 


ஏற்கெனவே ‘மந்திரக்குடை’ எனும் என் சிறுவர் நாவலை வெளியிட்ட சென்னை பாரதி புத்தகாலயத்தின், புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகமே, ‘நீலமலைப்பயணம்’ நாவலையும் வெளியிட்டுள்ளது. 

‘பூதம் காக்கும் புதையல்’ நாவலில் வரும் அதே பாத்திரங்களே இதிலும் வருகின்றார்கள்.  கூடுதலாக ஆதிரா எனும் சிறுமி. முந்தைய நாவலில் புதையலைக் கண்டுபிடிக்கச் செல்லும் சிறுவர்கள், இதில் உலகிலிருந்தே அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட அரிய வகை தாவரத்தைக் கண்டுபிடிக்கச் செல்கிறார்கள்.  தோடர் இனத்து இளைஞன் ஒருவன் உதவியுடன் நீலகிரிக்குச் சாகசப்பயணம் மேற்கொள்கின்றார்கள்.

அப்பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள், தோடர் பழங்குடியினர் வாழ்வு, நீலகிரியில் அந்நிய மரங்களால் ஏற்பட்ட சூழல் பாதிப்பு ஆகியவற்றை, இந்நாவலில் விவரித்துள்ளேன்.  12+ சிறுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் கதையினூடே இதில் கூறப்பட்டுள்ளன.

இந்நாவலைப் பாராட்டிப் பிரபல எழுத்தாளர்கள் எழுதியவற்றைக் கீழே எழுதியுள்ளேன். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!.

“சாகசங்களும், அறிவியல் உண்மைகளும், சமூகப் பார்வையும் கலந்த அற்புதமான நூல்.  சிறார்கள் கையில் எடுத்தால், கீழே வைக்க விடாத வேகமும், விறுவிறுப்பும் கொண்ட நாவல்.  தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் துப்பறியும் அறிவியல் புதினம் என்ற வகைமையில் வெளிவரும் முக்கியமான நூல் இது” என்று எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், இந்நாவலைப் பாராட்டியுள்ளார்.

எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் அவர்கள் ‘புத்தகம் பேசுது’ இதழில் ‘நீலமலைப் பயணம்’ குறித்து எழுதியிருப்பதாவது:-

கலையரசி அவர்களின் முதல் நாவலில் வந்த அதே சிறார்கள் இந்த நாவலிலும் வருவது, முதல் இன்ப அதிர்ச்சி.  பிறகு மாநில முதல்வர் அவர்களுக்குத் தரும் பணி, நீலகிரி மலையில் அழிந்து போனதாகக் கருதப்படும் ஒரு தாவரத்தைக் கண்டறிதல்!  அப்புறமென்ன செம சாகச கதை. வங்கிப்பணி செய்த நூலாசிரியர், ஒரு தேர்ந்த தாவர இயலாளாராய் கதைசொல்லியாய் மிளிர்கிறார்”.   


அண்மையில் (23/02/2023) சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் இந்நாவல் குறித்துத் தம் முகநூல் பக்கத்தில், இவ்வாறு எழுதியுள்ளார்:-

பூதம் காக்கும் புதையல்’ என்ற சிறார் நூலும், அதன் தொடர்ச்சியாகவே ‘நீலமலைப் பயணம்’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார் ஞா.கலையரசி.  முதல் நூலில் ஒரு புதையலைத் தேடிப் புறப்பட்ட சிறுவர்கள், இரண்டாவது நாவலில் ஓர் அரிய வகைத் தாவரத்தைத் தேடிப் புறப்படுகின்றனர்.

இதன் வழி Ceropegia Omissa என்கிற தாவரத்தைப் பற்றி நமக்கு அறியத் தருகிறார் ஆசிரியர்.  அத்துடன் ஆங்கிலத்தில் Dancing Plant என்றும், தமிழில் தொழுகண்ணி மூலிகை என்றும், வழங்கப்படும் மற்றொரு வகை தாவரம் பற்றியும் அறிய முடிகிறது.  இப்படித் தாவரங்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ளதால், நீலமலைப் பயணம் சிறார் நாவல் மனதுக்குப் பிடித்திருக்கிறது. ஆசிரியர் Kalayarassy Pandiyan அவர்களுக்கு வாழ்த்துகள்”

ஆன்லைனில் வாங்க இணைப்பு:-

அமேசானிலும் இது கிண்டில் நூலாகக் கிடைக்கின்றது. அதன் இணைப்பு:-

அமேசானில் வாங்க..  


நன்றியுடன்,

ஞா.கலையரசி.

 

 

6 comments:

 1. நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள் சகோ - கில்லர்ஜி

  ReplyDelete
 2. நல்லாயிருக்கீங்களா கில்லர்ஜி!வணக்கம்.வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 3. Replies
  1. வாங்க தனபாலன் சார்! உங்கள் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த
   நன்றி!

   Delete
 4. இயற்கை சார்ந்த தகவல்களோடு சிறுவர்களின் சாகசம் நிரம்பிய இந்நூல் சூழலியல் எழுத்தாளரான நக்கீரன் அவர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. தேர்ந்த எழுத்தாளர்களின் பாராட்டைப் பெற்ற நீலமலைப் பயணம் சிறார் இலக்கியத்தில் முக்கிய இடம் வகிப்பது பாராட்டுக்குரியது. மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.

  ReplyDelete
 5. பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா

  ReplyDelete