நல்வரவு

வணக்கம் !

Friday, 22 July 2022

பூதம் காக்கும் புதையல் – இளையோர் நாவல்

 

12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக, நான் எழுதிய 'பூதம் காக்கும் புதையல்' என்ற நாவலின் அச்சுப் பிரதியை, வானம் பதிப்பகம், சென்னை-89 அண்மையில் வெளியிட்டுள்ளது. 


ஏற்கெனவே அமேசான் கிண்டிலில், இது மின்னூலாக வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  வாசித்தவர்கள் சிறந்த பின்னூட்டங்களையும், நல்ல ஸ்டார் ரேட்டிங்குகளையும் அமேசான் தளத்தில் அளித்துள்ளனர். சிறுவர்க்குத் தமிழ் மொழியில் ஆர்வம் ஏற்பட இக்கதை உதவும்.  நட்பு, பகிர்தல், இயற்கை, சூழலியல்,அறிவியல் உள்ளிட்ட ஏராளமான கருத்துக்களைக் கதையின் வாயிலாகச் சுவாரசியமாக அறிந்து கொள்ள உதவும்.  

மின்னூலுக்கான இணைப்பு

கோயம்புத்தூர் புத்தகக்காட்சி நடைபெறும் கொடிசியா வளாகத்தில், யாவரும் பதிப்பகம் அரங்கில், 24/07/2022 அன்று மாலை 7 மணிக்கு, ‘பூதம் காக்கும் புதையல்’ இளையோர் நாவலை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட, எழுத்தாளர் கே.மோகனரங்கன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

நூலை வெளியிட்ட திரு எஸ்.ரா அவர்களுக்கும், பெற்றுக்கொண்ட கே.மோகனரங்கன் அவர்களுக்கும், நூலைப் பதிப்பித்த சென்னை வானம் பதிப்பக உரிமையாளர் எம்.மணிகண்டன் அவர்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றி. 

கோயம்புத்தூரில் இன்று துவங்கும் புத்தகக் காட்சியில், ‘யாவரும் பதிப்பகம்’' அரங்கு எண் 6 ல், ஜூலை 24 முதல் இந்நாவல் விற்பனைக்குக் கிடைக்கும். வாய்ப்புள்ளோர் வாங்கிச் சிறுவர்க்கு வாசிக்கக் கொடுங்கள். வாசித்தவுடன் இந்நாவலைப் பற்றிய அவர்களின் கருத்துகளை நான் அறிய தாருங்கள்.

நன்றியுடன்,

ஞா.கலையரசி.

 

பதிப்பக முகவரி:-

வானம்

M/22, 6 வது அவென்யூ,

அழகாபுரி நகர், ராமாபுரம்

சென்னை – 600089,

செல்:- +91 91765 49991

விலை ரூ 80/-.

 

2 comments:

  1. வாழ்த்துகளும், .பாராட்டுகளும்.

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம்! வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete