ஆசிரியர்:- திரு. வை. கோபாலகிருஷ்ணன்.
மணிமேகலைப் பிரசுரம்.
திரு கோபு சாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான
இந்நூலில், 15 கதைகள் உள்ளன. ஏற்கெனவே அவருடைய இரு நூல்கள் பற்றி, எழுதியிருக்கிறேன்.
அவற்றுக்கான இணைப்புகள்:-
‘எங்கெங்கும்..எப்போதும்…என்னோடு,’ என்ற கதையில்
உடல் எடையைக் குறைக்க, டாக்டரின் அறிவுரைப்படி நடைபயணம் மேற்கொள்பவரின் செய்கைகள், நகைச்சுவை இழையோட, நேர்முக வர்ணனையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
உடல் எடையைக் குறைக்க நடப்பவர், வழியில் நாக்கைக் கட்டுப்படுத்த
முடியாமல், நான்கு பஜ்ஜிகளையும், வடைகளையும் வாங்கி உள்ளே தள்ளுவது, நல்ல தமாஷ்! கதையின்
முடிவு, மனதை நெகிழச் செய்கிறது. இத்தொகுப்பில், எனக்கு மிகவும்
பிடித்த கதையிது.
இளமையும், அழகும், ஆரோக்கியமும்
என்றும் நிரந்தரமல்ல என்பதைக் கதை சொல்லியின் அனுபவத்தின் வாயிலாக விளக்கும் கதை, ‘இலவு காத்த
கிளிகள்.’ படித்து முடித்து
இரு நாட்களான பிறகும், மனதை என்னவோ செய்த கதை.
‘மூக்குத்தி,’ கதையில் கிராமத்திலிருந்து
மஞ்சள் பையுடன், வெள்ளந்தியான முதியவர், நகரத்தில்
கூட்டம் நிரம்பி வழியும் நகைக்கடைக்குச் சென்று விட்டுப் பத்திரமாக நகையுடன் வீட்டுக்குத்
திரும்ப வேண்டுமே என நமக்கு ஒரே பதட்டம் தான். இறுதி வரைக் கதையை நல்ல சஸ்பென்ஸூடன் நகர்த்திச் சென்று, முடிச்சவிழ்த்த
விதம், அருமை!
முதியவர்கள்பால் ஆசிரியர் கொண்டிருக்கும் அன்பும், அக்கறையும்,
அவர்களது பட்டறிவில் மேல் இவர் வைத்திருக்கும் நம்பிக்கையும், பல கதைகளில் வெளிப்படுகின்றன. ‘வடிகால்’, ‘முதிர்ந்த பார்வை.’ என்ற கதைகள், இதற்கு
நல்ல எடுத்துக்காட்டுகள்.
முதுமையில் தம் துணையை இழந்தவர்கள், தம் மனக்குமுறல்களைக்
கொட்ட ஆள் தேடி அலையும், சோகத்தைச் சொல்வது, ‘வடிகால்,’ சிறுகதை. வயதானவர்களின்
உளவியல் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகி, காலத்திற்கேற்றாற்
போல், அவர்களுக்கு ஒரு நல்ல தீர்வையும் சொல்வது, பாராட்டத்தக்கது.
முதிர்கன்னியின் பிரச்சினையைப் பேசும், ‘உண்மை சற்றே
வெண்மை,’ கதை, சற்றே மனதைச் சுடுகின்றது. தலைப்பும் மிகப் பொருத்தம்!
'காதல் ஓவியம்,' ஒருதலைக்காதலைச் சொல்கிறது. ஆனால் தான் விரும்பும் பெண்ணின் மனதில் தான் இல்லையென்றவுடன், வாஷ் பேசினில்
கைகழுவுவது போல், கதாநாயகன் அவளை மறக்க நினைப்பது வரவேற்கத்தக்க முடிவு. 'கிட்டாதாயின் வெட்டென மற,' என்பது நம் முன்னோர் வாக்கு அல்லவா?
பெண்ணுக்கும் ஒரு மனதிருக்கிறது; அவளுக்கும்
விருப்பு வெறுப்பு உண்டு என்று எண்ணாமல், காதலை ஏற்றுக்கொள்ள
மறுத்தால், உடனே அமிலம் வீசி அவளைக் கொல்ல நினைக்கும், இன்றைய
இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்லும் கதை.
மின்வெட்டுச் சமயங்களில் சாமான்ய மனிதனின் பிழைப்பைப் பேசும்
‘அமுதைப்
பொழியும் நிலவே,’ கதையின் முடிவு சிரிப்பை வரவழைத்தது.
வீடு வீடாகத் திருமணத்துக்குப் பத்திரிக்கை வைக்கும் போது
ஏற்படும் அனுபவங்களைச் சுவையாகவும், யதார்த்தமாகவும்
சொல்கிறது, ‘அழைப்பு’ என்ற கதை.
நீங்களும் சுவைக்க, அதிலிருந்து
கொஞ்சம்:-
“வேலை மெனக்கெட்டு, பத்திரிக்கை
அடித்து, வீடு தேடி வந்து, அதை உரியவரிடம்
சேர்த்தும், அதை வாங்கிப்
பிரிக்காமலேயே ஓரமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம், பெண்ணுக்கா? பிள்ளைக்கா? எந்த இடத்தில்
கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எத்தனை மணிக்கு முகூர்த்தம்? சம்பந்தி
யார்? எந்த ஊர்? எப்படி இந்த இடம்
அமைந்தது எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுப்பவர்களும், பிறகு வீட்டில்
வைத்த பத்திரிக்கையைப் பல இடங்களில் தேடி, அது கிடைத்தால், மூக்குக்கண்ணாடி
கிடைக்காமலும், மூக்குக்கண்ணாடி கிடைத்தால், பத்திரிக்கை
கிடைக்காமலும், அலுத்துப் போய், முகூர்த்த
தேதியையும் மறந்துவிட்டு, பேசாமல் விட்டு விடுபவர்களும் உண்டு.”
பெண்களின் அறிவும், திறமையும்
மதிக்கப்படவேண்டும்; வாய்ப்புக் கிடைத்தால் நாட்டையே ஆளக்கூடிய திறன் படைத்தவர்கள்
பெண்கள்; அவர்களைக்
கூண்டுக்கிளிகளைப் போல், வீட்டில் அடைத்து வைப்பது மகாபாவம் போன்ற பெண் முன்னேற்றக்
கருத்துக்களைச் சொல்வது 'மலரே குறிஞ்சி மலரே,' கதை.
இவருடைய மூன்று தொகுப்புகளில், பெண் முன்னேற்றக் கருத்துக்களைக்
கொண்ட கதை இது என்பதால், என்னை மிகவும் கவர்ந்தது.
எல்லாக் கதைகளையும் சொல்லிவிட்டால் படிப்பவர்க்குச் சுவாரசியம்
குறைந்துவிடும் என்பதால், சிலவற்றைச் சொல்லாமல் விடுகின்றேன்.
'உரத்த சிந்தனை,' எனும் தன்னம்பிக்கையூட்டும் மாத இதழ், இந்நூலை
முதற்பரிசுக்குத் தேர்வு செய்தது. பிரபல நடிகர்
டெல்லி கணேஷ் 15/05/2011 அன்று, பரிசை விழாவில் நூலாசிரியருக்கு வழங்கினார்.
விழா பற்றிய விபரங்கள் படங்களுடன் இங்கே:- http://gopu1949.blogspot.in/2011/07/4.html
திரு கோபு சார் தாம் வெளியிட்ட மூன்று நூல்களுக்காகவும்,
பரிசு வென்றமை வியந்து பாராட்டத்தக்கது. தரமான நடையில்,
நகைச்சுவை இழையோட சுவையாகவும், மனதில் நிற்கும்படியாகவும், நல்ல
சிறுகதைகள் பலவற்றைத் தந்து, தாய்மொழி தமிழுக்கு வளம் சேர்த்திருக்கும்,
திரு வை.கோபு சார் அவர்களுக்குப் பாராட்டுகள்!
தொடர்ந்து, நம் மொழிக்கு அவர் பங்களிப்பு இருக்க வேண்டும்
என்று வேண்டி முடிக்கிறேன்.
நன்றியுடன்,
ஞா.கலையரசி
நல்லதொரு நூல் விமர்சனம்.
ReplyDeleteஅருமை.
தங்கள் முதல் வருகைக்கும், அருமை என்ற பாராட்டுக்கும் நன்றி குமார்!
Deleteபல விஷயங்களைத் தொட்டுச் செல்வதாய் கோபு சாரின் கதைகள் அமைந்திருப்பதே அவற்றின் சிறப்பு.
ReplyDeleteகுறிப்புகளைப் போள அவற்றை நீங்கள் சொல்லிச் செல்லும் அழகே, அழகு!
தொடர்கிறேன்.
பல விஷயங்களைத் தொட்டுச் செல்வதாய் கோபு சாரின் கதைகள் அமைந்திருப்பதே அவற்றின் சிறப்பு.”
Deleteதங்களின் வருகைக்கும், கோபு சார் கதைகளின் தனிச்சிறப்பைப் பாராட்டிக் கருத்துரைத்திருப்பதற்கும் நன்றி ஜீவி சார்! தொடர்வதற்கு மீண்டும் என் நன்றி
ஜீவி 11 March 2017 at 04:17
Deleteபல விஷயங்களைத் தொட்டுச் செல்வதாய் கோபு சாரின் கதைகள் அமைந்திருப்பதே அவற்றின் சிறப்பு.//
நமஸ்காரங்கள் + வணக்கங்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.
- கோபு
அருமையான விமர்சனம் சகோதரியாரே
ReplyDeleteநன்றி
அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கு நன்றி சகோதரரே!
Deleteதங்கள் திறனாய்வுப் பார்வை
ReplyDeleteசிறப்பாக அமைந்திருக்கிறது
பாராட்டுகள்
தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
Deleteஅழகான விமர்சனம்... ரசித்தேன்...
ReplyDeleteஅழகான விமர்சனம் என்ற பாராட்டுக்கு நன்றி தனபாலன் சார்!
Delete(01)
ReplyDelete/ என் பார்வையில் – ‘எங்கெங்கும்.. எப்போதும்…என்னோடு,’ (சிறுகதைத் தொகுப்பு) / என்ற தலைப்பினில் என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலைப் பற்றிய தங்களின் தங்கமான கருத்துக்களைத் தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதைப் படித்து மகிழ்ந்தேன்.
தங்களுக்கு என் முதற்கண் நன்றிகள், மேடம்.
>>>>>
தங்கள் வருகைக்கும், தங்கமான கருத்துக்கள் என்ற பாராட்டுக்கும் நன்றி கோபு சார்!
Delete(02)
ReplyDelete//‘எங்கெங்கும்..எப்போதும்…என்னோடு,’ என்ற கதையில் உடல் எடையைக் குறைக்க நடப்பவர், வழியில் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாமல், நான்கு பஜ்ஜிகளையும், வடைகளையும் வாங்கி உள்ளே தள்ளுவது, நல்ல தமாஷ்!//
என் சொந்தக் கதையையே நான் இதில் கலந்து எழுதியிருப்பதால், அது உங்களுக்கு நல்ல தமாஷாகத்தான் இருந்திருக்கும். :)
//கதையின் முடிவு, மனதை நெகிழச் செய்கிறது.//
படிப்பவர் மனதை நெகிழ வைக்க வேண்டியே கதையின் முடிவினில் இந்தக் கற்பனையைக் கலக்க வேண்டி வந்தது.
//இத்தொகுப்பில், எனக்கு மிகவும் பிடித்த கதையிது.//
ஆஹா, நகைச்சுவை விரும்பியான, தங்களுக்கு மிகவும் பிடித்த கதையிது என்று கேட்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மேடம்.
>>>>>
“என் சொந்தக் கதையையே நான் இதில் கலந்து எழுதியிருப்பதால், அது உங்களுக்கு நல்ல தமாஷாகத்தான் இருந்திருக்கும். :)
Deleteபடிப்பவர் மனதை நெகிழ வைக்க வேண்டியே கதையின் முடிவினில் இந்தக் கற்பனையைக் கலக்க வேண்டி வந்தது.”
இதில் சொந்தக் கதை இதில் கலந்திருக்கிறது என்ற்றிய மகிழ்ச்சி. கற்பனையும் கலந்து கொடுத்ததால், கதை சிறப்பாக வந்திருக்கின்றது.
உங்கள் மீள்வருகைக்கு நன்றி கோபு சார்!
(03)
ReplyDelete//இளமையும், அழகும், ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதைக் கதை சொல்லியின் அனுபவத்தின் வாயிலாக விளக்கும் கதை, ‘இலவு காத்த கிளிகள்.’//
இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நான் நன்கு செதுக்கி சிலை போல வடித்துள்ளதாகப் பிரபல எழுத்தாளர்கள் பலரும், ஏற்கனவே என்னைப் பாராட்டியுள்ளனர்.
//படித்து முடித்து இரு நாட்களான பிறகும், மனதை என்னவோ செய்த கதை.//
கதை என்று ஒன்று எழுத ஆரம்பித்த பிறகு அதை எப்படியாவது கொண்டுபோய் முடித்துத்தானே ஆகணும். வேறு வழியே தெரியாமல் அப்படியொரு முடிவு கொடுக்கும்படி ஆனது எனக்கு.
படித்து முடித்து இரு நாட்களான பிறகும், தங்கள் மனதை என்னவோ செய்ததில் வியப்பில்லைதான்.
>>>>>
‘இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நான் நன்கு செதுக்கி சிலை போல வடித்துள்ளதாகப் பிரபல எழுத்தாளர்கள் பலரும், ஏற்கனவே என்னைப் பாராட்டியுள்ளனர்.’
Deleteஉண்மை தான் கோபு சார்! கதாபாத்திரங்களை மிகவும் யதார்த்தமாக உருவாக்கியுள்ளீர்கள். அதனால் அவர்கள் இரத்தமும், சதையுமாக உயிர் பெற்று நடமாடுகிறார்கள்.
இக்கதையின் பாத்திரப்படைப்புக்கு ஸ்பெஷல் பாராட்டுகள் சார்!
(04)
ReplyDelete//‘மூக்குத்தி,’ கதையில் கிராமத்திலிருந்து மஞ்சள் பையுடன், வெள்ளந்தியான முதியவர், நகரத்தில் கூட்டம் நிரம்பி வழியும் நகைக்கடைக்குச் சென்று விட்டுப் பத்திரமாக நகையுடன் வீட்டுக்குத் திரும்ப வேண்டுமே என நமக்கு ஒரே பதட்டம் தான். இறுதி வரைக் கதையை நல்ல சஸ்பென்ஸூடன் நகர்த்திச் சென்று, முடிச்சவிழ்த்த விதம், அருமை!//
கதையை கடைசிவரை நகர்த்திக்கொண்டே போய், ஒரு வழியாக எழுதி முடித்தபின் எனக்கே, அந்த சஸ்பென்ஸ் மிகவும் அருமையாகப்பட்டு, மனதுக்குத் திருப்தியாக இருந்தது.
எழுத ஆரம்பிக்கும்போது தோன்றாத பல விஷயங்கள் எழுதிக்கொண்டே வரும்போது அடுத்தடுத்து மனதுக்கு உதித்து எழுத வைத்ததில் எனக்கும் ஒரே வியப்பு மட்டுமே.
இறுதி வரைக் கதையை நல்ல சஸ்பென்ஸூடன் நகர்த்திச் சென்று, முடிச்சவிழ்த்த விதத்தை நன்கு ரஸித்து இங்கு எடுத்துச் சொல்லி பெருமைப்படுத்தியுள்ளீர்கள். :)
>>>>>
“ கதையை கடைசிவரை நகர்த்திக்கொண்டே போய், ஒரு வழியாக எழுதி முடித்தபின் எனக்கே, அந்த சஸ்பென்ஸ் மிகவும் அருமையாகப்பட்டு, மனதுக்குத் திருப்தியாக இருந்தது.
Deleteஎழுத ஆரம்பிக்கும்போது தோன்றாத பல விஷயங்கள் எழுதிக்கொண்டே வரும்போது அடுத்தடுத்து மனதுக்கு உதித்து எழுத வைத்ததில் எனக்கும் ஒரே வியப்பு மட்டுமே.”
எனக்கும் இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. கதையை எழுதத் துவங்கியபின்னர், அது தானாக நாம் சிறிதும் யோசித்திராத முடிவுக்கு இழுத்துச் சென்றுவிடும்.
கதை எழுதும் அனைவருக்குமே இந்த அனுபவம் வாய்க்கும் என நினைக்கிறேன். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!
(05)
ReplyDelete//முதியவர்கள்பால் ஆசிரியர் கொண்டிருக்கும் அன்பும், அக்கறையும், அவர்களது பட்டறிவில் மேல் இவர் வைத்திருக்கும் நம்பிக்கையும், பல கதைகளில் வெளிப்படுகின்றன. ‘வடிகால்’, ‘முதிர்ந்த பார்வை.’ என்ற கதைகள், இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.//
இந்தத் தொகுப்பு நூலில் உள்ள சரிபாதிக் கதைகளில் பட்டறிவு பெற்ற முதியவர்களை, நான் ஏதேவொரு கதாபாத்திரமாக நுழைத்துள்ளேன். அவற்றில் நல்ல எடுத்துக்காட்டுகளாக இங்கு இரண்டினைத் தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி, மேடம்.
>>>>>
“இந்தத் தொகுப்பு நூலில் உள்ள சரிபாதிக் கதைகளில் பட்டறிவு பெற்ற முதியவர்களை, நான் ஏதேவொரு கதாபாத்திரமாக நுழைத்துள்ளேன்.”
Deleteஉங்களுக்குத் தெரிந்த பட்டறிவு பெற்ற முதியவர்களைக் கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தியன் மூலம், அவர்களுக்குத் தமிழ் உள்ளளவும், சாகா வரம் கொடுத்துவிட்டீர்கள் கோபு சார்! இதைவிட அவர்களுக்கு வேறு என்ன பெருமை வேண்டும். மீண்டும் நன்றி கோபு சார்!
(06)
ReplyDelete//முதுமையில் தம் துணையை இழந்தவர்கள், தம் மனக்குமுறல்களைக் கொட்டஆள் தேடி அலையும், சோகத்தைச் சொல்வது, ‘வடிகால்,’ சிறுகதை. வயதானவர்களின் உளவியல் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகி, காலத்திற்கேற்றாற் போல், அவர்களுக்கு ஒரு நல்ல தீர்வையும் சொல்வது, பாராட்டத்தக்கது.//
முதுமையில் தம் துணையை இழந்த பெண்களாவது எப்படியாவது தங்களைச் சமாதானம் செய்துகொண்டு, பிறருடன் அனுசரித்து தன் வீட்டிலேயே உறவினர்களுடன் ஒட்டிக்கொண்டு வாழ முடிகிறது. ஆனால் ஆண்கள் நிலை அவ்வாறு இல்லாமல் மிகவும் கொடுமையாக உள்ளது என்பது எனது அபிப்ராயம் மேடம். அதைத்தான் நான் இந்த என் கதையினிலும் கொண்டு வந்துள்ளேன்.
>>>>>
முதுமையில் தம் துணையை இழந்த பெண்களாவது எப்படியாவது தங்களைச் சமாதானம் செய்துகொண்டு, பிறருடன் அனுசரித்து தன் வீட்டிலேயே உறவினர்களுடன் ஒட்டிக்கொண்டு வாழ முடிகிறது. ஆனால் ஆண்கள் நிலை அவ்வாறு இல்லாமல் மிகவும் கொடுமையாக உள்ளது என்பது எனது அபிப்ராயம் மேடம். அதைத்தான் நான் இந்த என் கதையினிலும் கொண்டு வந்துள்ளேன். “
Deleteநீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. ஆண்கள் தம் மனைவியரைச் சார்ந்தே வாழுகின்றனர். மனைவி இறந்துவிட்டால், அவர்கள் நிலைமை படுமோசமாகிவிடுகின்றது. அதற்கு நீங்கள் சொல்லும் முதியோர் இல்லம் நல்லதொரு தீர்வு தான். பணத்தைக் கொடுத்துவிட்டுச் சுயமரியாதையுடன் வாழலாம்.
உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்ட்தற்கு மிகவும் நன்றி கோபு சார்!
(07)
ReplyDelete//முதிர்கன்னியின் பிரச்சினையைப் பேசும், ‘உண்மை சற்றே வெண்மை,’ கதை, சற்றே மனதைச் சுடுகின்றது. தலைப்பும் மிகப் பொருத்தம்!//
பொருத்தமான தலைப்பு என்றும், மனதை சற்றே சுடும் கதை என்றும், தங்கள் மூலம் கேட்டதில் தன்யனானேன். மிக்க நன்றி, மேடம்.
>>>>>
உங்கள் மீள்வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி கோபு சார்!
Delete(08)
ReplyDeleteஒருதலைக்காதலைச் சொல்லும் 'காதல் ஓவியம், கதையைப் பற்றி, தாங்கள் எடுத்துச்சொல்லியுள்ள கருத்துகளான ......
‘பெண்ணுக்கும் ஒரு மனதிருக்கிறது; அவளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டு என்று எண்ணாமல், காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உடனே அமிலம் வீசி அவளைக் கொல்ல நினைக்கும், இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்லும் கதை’ என்பது எனக்கு மிகவும் திருப்தியளிப்பதாக உள்ளது. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.
>>>>>
“இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்லும் கதை’ என்பது எனக்கு மிகவும் திருப்தியளிப்பதாக உள்ளது”
Deleteஉங்களுக்கு மிகவும் திருப்தி என்ற்றிய மிகவும் மகிழ்ச்சி கோபு சார்! நன்றி!
(09)
ReplyDelete//மின்வெட்டுச் சமயங்களில் சாமான்ய மனிதனின் பிழைப்பைப் பேசும் ‘அமுதைப் பொழியும் நிலவே,’ கதையின் முடிவு சிரிப்பை வரவழைத்தது.//
கதையின் முடிவு தங்களுக்குச் சிரிப்பை வரவழைத்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.
இந்தக்கதையில் வாசகர்களிடம் என் எதிர்பார்ப்பும் அந்த ஒரு சிரிப்பு மட்டுமே. :)
>>>>>
“இந்தக்கதையில் வாசகர்களிடம் என் எதிர்பார்ப்பும் அந்த ஒரு சிரிப்பு மட்டுமே. :)”
Deleteவாசகரிடம் நீங்கள் எதிர்பார்த்த அந்தச் சிரிப்பு எனக்கு வந்த்தாகையால், உங்கள் முயற்சி வெற்றி பெற்றது என நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்.
நன்றி கோபு சார்!
(10)
ReplyDelete//வீடு வீடாகத் திருமணத்துக்குப் பத்திரிக்கை வைக்கும் போது ஏற்படும் அனுபவங்களைச் சுவையாகவும், யதார்த்தமாகவும் சொல்கிறது, ‘அழைப்பு’ என்ற கதை.//
இந்த ’அழைப்பு’ என்ற என் ஒரிஜினல் கதை அந்த என் நூலில் சோகமான முடிவுடன் நிறைவடைந்திருக்கும். என் வலைப் பதிவினில் வெளியிட்ட போது அதுவே சுகமான முடிவுடன் மாற்றப்பட்டு இருக்கும்.
2011-ம் ஆண்டு என் வலைப்பதிவினில் நான் கதைகள் வெளியிடும் முன்பாக அதனை நம் ’மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு முன்கூட்டியே மெயிலில் அனுப்பி வைத்து படிக்கக்கொடுப்பது வழக்கமாகும். அவர்கள் படித்தபின்பு, நானும் என் வலைப்பதிவினில் அப்படியே வெளியிட்டு விடுவேன். அவர்கள் தன் பதில் மெயிலில் ’கதை நல்லா இருக்குது’ என்று மட்டுமே, பொதுவாகத் தன் வழக்கமான பதிலாகச் சொல்லுவார்கள்.
இந்த ஒரு கதையை அவ்வாறே நான் அவர்களுக்கு அனுப்பி வைத்தபோது, அவர்கள் ”தனக்கு இந்தக் கதையின் சோக முடிவு பிடிக்கவில்லை” என என்னிடம் ஒரேயடியாக அடித்துச் சொல்லிவிட்டார்கள்.
உடனடியாக அன்றே இரவோடு இரவாக அந்த சோக முடிவினை சுகமான முடிவாக மாற்றி மறுநாளே நான் என் பதிவினில் வெளியிட்டு விட்டேன்.
http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_14.html
அதைப்பார்த்த அவர்களுக்கே ஒரே ஆச்சர்யமாகப் போய் விட்டது. :)
>>>>>
“2011-ம் ஆண்டு என் வலைப்பதிவினில் நான் கதைகள் வெளியிடும் முன்பாக அதனை நம் ’மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு முன்கூட்டியே மெயிலில் அனுப்பி வைத்து படிக்கக்கொடுப்பது வழக்கமாகும். அவர்கள் படித்தபின்பு, நானும் என் வலைப்பதிவினில் அப்படியே வெளியிட்டு விடுவேன். அவர்கள் தன் பதில் மெயிலில் ’கதை நல்லா இருக்குது’ என்று மட்டுமே, பொதுவாகத் தன் வழக்கமான பதிலாகச் சொல்லுவார்கள்.
Deleteஇந்த ஒரு கதையை அவ்வாறே நான் அவர்களுக்கு அனுப்பி வைத்தபோது, அவர்கள் ”தனக்கு இந்தக் கதையின் சோக முடிவு பிடிக்கவில்லை” என என்னிடம் ஒரேயடியாக அடித்துச் சொல்லிவிட்டார்கள்.
உடனடியாக அன்றே இரவோடு இரவாக அந்த சோக முடிவினை சுகமான முடிவாக மாற்றி மறுநாளே நான் என் பதிவினில் வெளியிட்டு விட்டேன். “
திருமதி இராஜேஸ்வரி மேடம் இக்கதையின் முடிவு மாறக் காரணமாயிருந்தார்கள் என்றறிந்து கொண்டேன்.
இன்று அவர்கள் இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாய் உள்ளது.
அவர்கள் நினைவலைகளை இங்குப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோபு சார்!
(11)
ReplyDelete’அழைப்பு’ கதையில் உள்ள ஓர் நகைச்சுவைப் பகுதியை தாங்களும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லி பெருமைப் படுத்தியுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
>>>>>
என் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்த போது எனக்கேற்பட்ட அனுபவங்கள் பல இக்கதையுடன் ஒத்துப் போனதையறிந்து எனக்கு வியப்பு. பலருக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கும் என்பதால் தான், அக்கதையிலிருந்து சிறு பகுதியை எடுத்துக்கொடுத்தேன்.
Deleteநன்றி கோபு சார்!
(12)
ReplyDelete//பெண்களின் அறிவும், திறமையும் மதிக்கப்படவேண்டும்; வாய்ப்புக் கிடைத்தால் நாட்டையே ஆளக்கூடிய திறன் படைத்தவர்கள் பெண்கள்; அவர்களைக் கூண்டுக்கிளிகளைப் போல், வீட்டில் அடைத்து வைப்பது மகாபாவம் போன்ற பெண் முன்னேற்றக் கருத்துக்களைச் சொல்வது 'மலரே குறிஞ்சி மலரே,' கதை.
இவருடைய மூன்று தொகுப்புகளில், பெண் முன்னேற்றக் கருத்துக்களைக் கொண்ட கதை இது என்பதால், என்னை மிகவும் கவர்ந்தது.//
உங்களைப்போன்ற அறிவாளியான + திறமைசாலியான + அலுவலகத்தில் முக்கிய பதவிகள் வகிக்கும் சில பெண்களை நானும் என் வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்திருப்பதன் தாக்கத்தால், என்னால் எழுதப்பட்ட கதை இது.
அது தங்களைக் கவர்ந்தது கேட்க எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.
>>>>>
நானும் ஒரு பெண் என்பதால் பெண் முன்னேற்றக் கருத்துகள் கொண்ட இக்கதை எனனை மிகவும் கவர்ந்தது. நன்றி கோபு சார்!
Delete(13)
ReplyDelete//எல்லாக் கதைகளையும் சொல்லிவிட்டால் படிப்பவர்க்குச் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால், சிலவற்றைச் சொல்லாமல் விடுகின்றேன்.//
அடாடா, இப்போ இதனால் நூலாசிரியரான எனக்கு சுவாரசியம் குறைந்து போச்சே, மேடம். எனினும் மொத்தக்கதைகளான 15-இல், 10 கதைகளைப்பற்றி (66.66%) அலசி ஆராய்ந்து, இங்கு எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியே.
>>>>>
உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்றறிய எனக்கும் மகிழ்ச்சி சார்! நன்றி!
Delete(14)
ReplyDeleteஇந்த மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ள கதைகளில் பலவும், பல்வேறு தமிழ் வார / மாத இதழ்களில் பிரசுரமாகி வெளிவந்திருந்தபோது, அந்தப் பத்திரிகை ஆசிரியர்களால் எடிட் செய்யப்பட்டு சுருக்கப்பட்டவைகள் மட்டுமேவாகும்.
அவற்றை மேலும் நன்கு விரிவாக்கி, மெருகூட்டி, தகுந்த படங்களையும் இணைத்து என் வலைத்தளத்தினில் நான் வெளியிட்டுள்ளேன். சில கதைகளின் தலைப்பையும் நான் என் வலைத்தளத்தினில் வெளியிடும்போது மாற்றியுள்ளேன்.
இந்த நூலில் படிப்பதை விட என் வலைத்தளத்தினில் படிப்பதே மேலும் சுவையாக இருக்கக்கூடும்.
>>>>>
அவற்றை மேலும் நன்கு விரிவாக்கி, மெருகூட்டி, தகுந்த படங்களையும் இணைத்து என் வலைத்தளத்தினில் நான் வெளியிட்டுள்ளேன். சில கதைகளின் தலைப்பையும் நான் என் வலைத்தளத்தினில் வெளியிடும்போது மாற்றியுள்ளேன்.
Deleteஇந்த நூலில் படிப்பதை விட என் வலைத்தளத்தினில் படிப்பதே மேலும் சுவையாக இருக்கக்கூடும்.
தகவலுக்கு நன்றி கோபு சார்! வலைத்தளத்தில் உள்ளவற்றையே மின்னூலாக்குங்கள். வாசிப்பவர்களுக்குச் சுவை கூடுதலாக இருக்கும். மீண்டும் நன்றி!
(15)
ReplyDeleteஇந்த என் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள அனைத்துப் பதினைந்து கதைகளும் 2014-இல் என் வலைத்தளத்தினில் நடத்தப்பட்ட ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் வெளியிடப்பட்டிருந்தன என்பது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.
அவற்றின் இணைப்புகளை கீழே நான் கடைசி பின்னூட்டமாக கொடுக்க நினைத்துள்ளேன். அதனால் இதுவரை படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், இப்போது முழுக்கதையையும் படிக்க விரும்புவோருக்கும் பயன்படக்கூடும்.
>>>>>
இணைப்புகளைக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்! கண்டிப்பாக வாசிக்க விரும்புவோர்க்குப் பயன்படும். நன்றி சார்!
Delete(16)
ReplyDeleteஇந்த என் மூன்றாம் தொகுப்பு நூலில் உள்ள பதினைந்து சிறுகதைகளுமே 2014-ம் ஆண்டு என் வலைத்தளத்தில் நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களிலும் வெளியானபோது, தாங்கள் கலந்து கொண்ட மூன்றே மூன்று போட்டிகளில் பங்குகொண்ட விமர்சனங்கள் மூன்றுமே பரிசுக்குத் தேர்வாகியிருந்தன. அவற்றின் பரிசு அறிவிப்புக்கான இணைப்புகள் இதோ:
01) எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-37-02-03-second-prize-winners.html
02) இலவு காத்த கிளிகள் as மறக்க மனம் கூடுதில்லையே !
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-03-04-third-prize-winner.html
10) மலரே ...... குறிஞ்சி மலரே !
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-38-01-03-first-prize-winners.html
>>>>>
நான் பரிசு வாங்கிய விபரத்தை எடுத்துச் சொல்லி அதற்கான இணைப்புகளையும் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!
Delete(17)
ReplyDelete//திரு. கோபு சார் தாம் வெளியிட்ட மூன்று நூல்களுக்காகவும், பரிசு வென்றமை வியந்து பாராட்டத்தக்கது.//
ஏதோ அதுபோல ஒரு பாக்யம் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. இந்த மூன்று நூல்களில் 1 and 3 ஆகிய இரண்டும் முதல் பரிசுக்குத் தேர்வாகியிருந்ததில் எனக்கும் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது.
என் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு நூலாகிய ‘வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்’ மட்டும் இரண்டாம் பரிசுக்கு மட்டுமே தேர்வாகியிருந்தது.
மணப்பாறையைச் சார்ந்த இந்திரஜித் என்ற பிரபல எழுத்தாளர் அதே ஆண்டு எழுதி வெளியிட்டிருந்த ‘செவளக்காளை’ என்ற நூல் முதல் பரிசுக்குத் தேர்வாகியிருந்தது.
கூரிய கொம்புகளுடன் சீறிப்பாய்ந்து முட்டக்கூடிய ’மணப்பாறை மாடு’ அல்லவா ! அதனால் அதனுடன் என்னால் போட்டியிட முடியவில்லை. :)
இருப்பினும் இதனால் அந்த முதல் பரிசுக்குத் தேர்வான ’இந்திரஜித்’ என்பவரும் நானும் ஒருவருக்கொருவர் நண்பராகி, நாங்கள் இருவரும் எங்களின் பரிசு பெற்ற நூல்களை ஒருவருக்கொருவர் கையொப்பமிட்டு அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்ந்து கொண்டோம்.
அவரின் நூலை அவர் மிகச்சிறப்பாகவே எழுதியிருந்தார். அந்த நூல் இன்னும் என்னிடம் பத்திரமாகத்தான் உள்ளது. நானே அந்தத் தேர்வுக்குழுவில் நடுவராக அமர்ந்திருப்பினும் அவரின் அந்த நூலுக்குத்தான் முதல் பரிசினை அளித்து மகிழ்ந்திருப்பேன்.
அவரின் அந்த நூல் முதல் பரிசுக்குத் தேர்வானது முற்றிலும் நியாயமே.
எழுதியவர் யாராக இருப்பினும், நல்ல எழுத்துக்கள் பாராட்டப்பட வேண்டும். பரிசு அளித்து உரிய அங்கீகாரம் அளித்து ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும்கூட.
>>>>>
மேலே நான் கொடுத்துள்ள பின்னூட்டத்தில் ஓர் எழுத்துப்பிழையாகி விட்டது.
Delete‘செவளக்காளை’ என்பதை ‘செவலக்காளை’ என மாற்றிப்படிக்கவும்.
I feel very sorry for this costly mistake. - Gopu
“எழுதியவர் யாராக இருப்பினும், நல்ல எழுத்துக்கள் பாராட்டப்பட வேண்டும். பரிசு அளித்து உரிய அங்கீகாரம் அளித்து ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும்கூட.”
Deleteஉங்கள் உயர்ந்த எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்! விமர்சனப்போட்டியில் பங்குப்பெற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த ஆக்கமும், ஊக்கமும் உங்களுடைய இந்த எண்ணத்தை உறுதி செய்வதாக அமைந்திருந்தது.
நன்றி கோபு சார்!
ஒவ்வொரு கதை பற்றியும் சிறு அறிமுகங்களோடு சொல்லியிருப்பது சிறப்பு. வாழ்வின் ஒவ்வொரு சிறு நிகழ்வுகள் குறித்தும் விவரங்களுடன் சுவாரஸ்யமான எழுத்தாக்கக் கூடியவர் வைகோ ஸார்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
Deleteஸ்ரீராம். 11 March 2017 at 17:06
Deleteவாழ்வின் ஒவ்வொரு சிறு நிகழ்வுகள் குறித்தும் விவரங்களுடன் சுவாரஸ்யமான எழுத்தாக்கக் கூடியவர் வைகோ ஸார்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ’ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்’ !
நல்லதொரு நூல் விமர்சனம். நானும் அவருடைய இத்தொகுப்பினை வாசித்து/ரசித்து இருக்கிறேன்.
ReplyDeleteவாங்க வெங்கட்ஜி! நல்ல விமர்சனம் என்ற பாராட்டுக்கு நன்றி. நீங்களும் வாசித்து ரசித்திருக்கிறீர்கள் என்றறிய மகிழ்ச்சி!
Deleteவெங்கட் நாகராஜ் 11 March 2017 at 20:11
Deleteநல்லதொரு நூல் விமர்சனம். நானும் அவருடைய இத்தொகுப்பினை வாசித்து/ரசித்து இருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வெங்கட்ஜி !
மேடம், வணக்கம்.
ReplyDeleteதங்களின் பதிவுக்கு நான் வரிசையாக 18 கமெண்ட்ஸ் (1 to 18) கொடுத்திருந்தேன். வழக்கம்போல என்னுடைய கீழ்க்கண்ட 18-வது கமெண்ட் மட்டும், வெளியானபின் உடனுக்குடன் மறைந்து போய் விடுகிறது. எனவே தாங்கள் முன்பு செய்தது போல இதை மட்டும் Copy & Paste போட்டு தங்கள் பதிவின் பின்னூட்டப்பகுதியில் சேர்த்துக் கொள்ளவும். This may help me for my future reference, if any.
VGK
(18)
வை. கோபாலகிருஷ்ணன் said .....
‘எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...’ என்ற என் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள பதினைந்து சிறு கதைகளும் மேலும் மெருகூட்டப்பட்டு, படங்களுடன் என் வலைப்பதிவினில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிற்கான இணைப்புகள் இதோ:
01) எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு
http://gopu1949.blogspot.in/2014/09/vgk-37.html
02) இலவு காத்த கிளிகள் as
மறக்க மனம் கூடுதில்லையே !
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html
03) மூக்குத்தி
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21.html
04) வடிகால்
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22.html
05) உண்மை சற்றே வெண்மை
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12.html
06) காதல் ஓவியம் as
ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்
http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html
07) அமுதைப் பொழியும் நிலவே
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html
08) அழைப்பு (சுபமான முடிவுடன் மாற்றப்பட்டது)
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html
09) முதிர்ந்த பார்வை
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31.html
10) மலரே .... குறிஞ்சி மலரே !
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-38.html
11) பஜ்ஜீன்னா பஜ்ஜி தான்
http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34.html
12) ‘நா’வினால் சுட்ட வடு
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-11.html
13) அவன் போட்ட கணக்கு
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html
14) மடிசார் புடவை
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30.html
15) யாதும் ஊரே .... யாவையும் கேளிர் !
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-23.html
அனைத்துக்கும் மீண்டும் என் நன்றிகள், மேடம்.
நன்றியுடன்
கோபு
வாங்க கோபு சார்! வணக்கம். அத்தனைக் கதைகளின் இணைப்புகளையும் சிரமம் பாராமல், தேடி எடுத்துக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி. வாசிக்க விரும்புவோர்க்கு வசதியாக இருக்கும். மீண்டும் நன்றி!
Deleteஇந்தப் பதிவில் 10 வரிகள் உள்ளன... ஒவ்வொரு பதிவிற்கு 2 / 4 வரிகளை (பதிவை குறித்து + முக்கியமாக வாசகர்களை இழுக்கும் வகையில்) எழுதுங்கள்... அதன் பின் பதிவிற்கேற்ப படத்தை இணையுங்கள்... பிறகு Click---> "Insert jump break"
ReplyDelete"Read more" என்பதை "மேலும் படிக்க" (பெரிதாகவும்) என்று மாற்றுவது குறித்து :-
1) முதலில் நம் தளத்தில் இடதுபுறம் உள்ள Layout என்பதை சொடுக்கவும்...
2) இடதுபுறம் சற்று கீழே main என்கிற தலைப்பின் கீழே உள்ள Blog Posts gadget என்பதில் edit என்பதை சொடுக்கவும்...
3) Post page link text: என்பதில் "Read more" என்பதை "மேலும் படிக்க" என்று மாற்றி விடவும்...
4) வலது புறம் Save arrangement என்பதை சொடுக்கவும்...
முடியவில்லை எனில்
email id and password அனுப்புங்கள்... உடனே சரிசெய்து கொடுக்கிறேன்...
(sms/whatsapp to 9944345233 or dindiguldhanabalan@yahoo.com
தங்களின் முகப்பு பகுதியில் (Home Page) தமிழ்மணம் திரட்டி அனைத்து பதிவுகளிலும் வருகிறது... அதையும் மாற்ற வேண்டும்... தலைப்பிற்கு கீழ் வந்தால் நல்லது...
மிகவும் நன்றி தனபாலன் சார்! நீங்கள் சொன்னபடி மாற்றிவிட்டேன். தமிழ்மணம் திரட்டி தலைப்பிற்குக் கீழ் வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை எப்படி மாற்ற வேண்டும் என்று சொல்லுங்களேன். மீண்டும் நன்றி!
DeleteVisit : http://dindiguldhanabalan.blogspot.com/2016/12/Blog-Tips-4-6.html
Delete1) முதலில் உங்கள் தளத்தின் இடதுபுறம் உள்ள "Theme" என்பதை சொடுக்கவும்...
Delete2) Live on Blog கீழுள்ள "Edit HTML" என்பதை சொடுக்கவும்...
3) வரும் HTML பெட்டியில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்யவும்...
4) அடுத்து தேடல் : Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, F என்கிற எழுத்தை அமுக்கவும்...
5) ஒரு சின்ன பேட்டி Search என்று வலது பக்கம் தோன்றும்...
6) thamizmanam என்று type செய்து enter தட்டவும்...
7) அந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்...
8) கீழ் உள்ளது போல் இருக்கும் script-யை சுட்டியால் தேர்வு செய்து நீக்கி விடுங்கள்...
<script language='javascript' src='http://services.thamizmanam.com/toolbar.php?date=23:23&posturl=http://unjal.blogspot.com/2017/03/blog-post.html&cmt=54&blogurl=http://unjal.blogspot.com/&photo=' type='text/javascript'>
</script>
9) மீண்டும் தேடல் : Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, F என்கிற எழுத்தை அமுக்கவும்...
10) <div class='post-outer'> என்று type செய்து enter தட்டவும்...
11) அந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்...
12) அந்த script முடிவில் click செய்து செய்து enter தட்டவும்... (ஒரு வரியை உருவாக்க)
13) கீழே உள்ள script முழுவதையும் copy செய்து கொண்டு அங்கே paste செய்யவும்...
<!-- Added-Start-Tamilmanam Vote button -->
<b:if cond='data:blog.pageType != "static_page"'>
<b:if cond='data:blog.pageType == "item"'>
<center><script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script><script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp + "&posturl=" + data:post.canonicalUrl + "&cmt=" + data:post.numComments + "&blogurl=" + "http://unjal.blogspot.com" + "&photo=" + data:photo.url' language='javascript' type='text/javascript'></script></center></b:if></b:if>
<!-- Added-End-Tamilmanam Vote button -->
14) முடிவாக "Save theme" என்பதை சொடுக்கி விடுங்கள்...
இப்போது உங்கள் தளத்தை பார்த்தால் (Home Page :-http://unjal.blogspot.com) தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வராது... ஏதேனும் ஒரு பதிவை சொடுக்கி பாருங்கள்... அந்த பதிவின் தலைப்பின் கீழ் தமிழ்மண ஓட்டுப்பட்டை வரும்...
இதையே http://dindiguldhanabalan.blogspot.com/2016/12/Blog-Tips-4-6.html என்கிற எனது முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்... நன்றி...
கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் மிக எளிதாகச் சொல்லிக்கொடுத்தீர்கள். அதன்படியே நீக்கிவிட்டேன். முதலில் நீங்கள் கொடுத்த இணைப்புக்குச் சென்று படிக்க வேண்டும் என்றிருந்தேன். வேலை மிகுதியால் இணையம் வர முடியவில்லை. அதற்குள்ளாகவே மீண்டும் என் தளத்தில் விரிவாக எழுதிவிட்டீர்கள். மிக மிக நன்றி தனபாலன் சார்!
Deleteகோபு சாரின் கதைகளை அங்குலம் அங்குலமாக ரசித்து விமர்சனப் போட்டிகளில் கலந்துகொண்ட அந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு கதை குறித்தும் சுருக்கமாகவும் அதே சமயம் வாசகர்க்கு ஆவலைத் தூண்டும் விதமாகவும் விமர்சித்திருப்பது நன்று. இந்நூலுக்காக பரிசு பெற்ற கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
ReplyDelete//கோபு சாரின் கதைகளை அங்குலம் அங்குலமாக ரசித்து விமர்சனப் போட்டிகளில் கலந்துகொண்ட அந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு கதை குறித்தும் சுருக்கமாகவும் அதே சமயம் வாசகர்க்கு ஆவலைத் தூண்டும் விதமாகவும் விமர்சித்திருப்பது நன்று. இந்நூலுக்காக பரிசு பெற்ற கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//
Deleteதங்களின் அன்பான வருகைக்கும், மிகச்சிறப்பான வெகு அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
- கோபு