முன்னெப்போதும்
இல்லாத அளவில், தற்போது ஏ.டி.எம் கார்டு மோசடிகள் அதிகரித்து விட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், காவல் துறை உயர் அதிகாரிகள் கூட இம்மோசடிப் பேர்வழிகளிடம்
ஏமாந்து, பணத்தைப் பறி கொடுத்திருப்பது தான்.
கடந்த ஏப்ரல் மாதம்
கர்நாடகா டி.ஜி.பி, ஓம் பிரகாஷ் அவருக்கு வந்த கைபேசி அழைப்பு, வங்கியிலிருந்து வந்ததாக
நம்பி, ஏ.டி.எம். கார்டு மற்றும் அதன் ‘பின்’ (PIN – PERSONAL IDENTIFICATION
NUMBER) எண்களைச் சொல்லி, ரூபாய் பன்னிரண்டாயிரத்தை இழந்தார். அதே போல் திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளரும்,
பதினான்காயிரம் ரூபாயைப் பறிகொடுத்தார்.
‘ஏ.டி.எம் கார்டு
மற்றும் ‘பின்’ எண்களை நாங்கள் ஒரு போதும் கேட்க மாட்டோம்; யாரிடமும் கொடுக்காதீர்கள்,’’
என்று அனைத்து வங்கிகளும் கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போலத் திரும்பத் திரும்ப எச்சரித்தாலும் மக்கள் ஏமாறுவது தொடர்கதையாகவே இருக்கின்றது.
இது எப்படி நடக்கிறது? பணத்தைப் பறிகொடுத்தோர் சொல்வது என்ன?
நம் கைபேசி எண்ணுக்குப்
புது எண்ணிலிருந்து அழைப்பு வரும். பேசும்
நபர் நம் வங்கியிலிருந்து அழைப்பதாகச் சொல்வார் . ஏ.டி.எம் கார்டு தேதி முடிந்துவிட்டது
என்றும், அதனைப் புதுப்பித்துப் புது கார்டு வழங்கக் கார்டின் 16 இலக்க எண்களையும்,
அதற்கான ‘பின்’ எண்ணையும் கேட்பார்.
நாம் எல்லாவற்றையும்
சொல்லிமுடித்த சிறிது நேரத்தில், நம் கணக்கிலிருந்து பணம் எடுப்பதாக நம் கைபேசிக்கு
OTP எண் (ONE TIME PASSWORD) வரும்.
திரும்பவும் அதே
நபர் நம்மைத் தொடர்பு கொண்டு அந்த OTP பாஸ்வேர்டை கேட்பார். நாங்கள் தான் அதை அனுப்பியிருக்கிறோம்; அதைச் சொன்னால்
தான் கார்டைப் புதுப்பிக்க முடியும் என்பார்.
நாம் சொன்ன அடுத்த நிமிடம், நம் கணக்கிலிருக்கும்
பணம் முழுவதையும் எளிதாக எடுத்துவிடுவார். .
இம்மோசடிப் பேர்வழிகளிடம்
ஏமாறாமல், விழிப்புடன் இருப்பது எப்படி?
1.
யாரிடமும்,
எச்சமயத்திலும் உங்கள் ஏ.டி.எம் கார்டு எண்களையோ அதன் ‘பின்’ எண்ணையோ சொல்லாதீர்கள்.
2.
வங்கியிலிருந்து
அழைக்கிறோம் என்று எவ்வளவு தான் நம்பும்படியாகச் சொன்னாலும் ஏமாறாதீர்கள். எந்த வங்கியும் தொலைபேசியில் உங்கள் ஏடிஎம் கார்டு
& பின் எண்களைக் கேட்காது.
3.
உங்கள்
கைபேசியில் பணம் எடுப்பதாகச் செய்தி வரும் நிமிடத்திலாவது விழித்துக் கொள்ள வேண்டும். அச்சமயத்தில் வரும் OTP என்று சொல்லப்படும் ONE
TIME PASSWORD ஐ சொல்லக் கூடாது; சொல்லவே கூடாது.
இது மிக மிக முக்கியம்.
4.
திரும்பத்
திரும்ப போன் செய்து தொந்திரவு செய்தால், நானே
வங்கிக்கு நேரில் வந்து கார்டை மாற்றிக்கொள்கிறேன் என்று கூறவும். அதற்கு மேலும் தொடர்ந்தால், காவல் துறை சைபர் கிரைமுக்கு
உன் எண்ணைக் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்; மறு நிமிடம் போன் ‘கட்’ ஆகிவிடும்.
சிலர் ஏ.டி.எம்
பின்னட்டையில், அதன் ‘பின்’ (PIN) எண்ணை எழுதி வைத்திருப்பார்கள். அது மிகவும் ஆபத்து. ஒரு வேளை உங்கள் கார்டு தொலைய நேர்ந்தால், கார்டு
யாரிடம் கிடைக்கிறதோ அவர் எளிதாக அந்த எண்ணைப் போட்டு, பணம் மொத்தத்தையும் உருவி விடுவார். அது போல் ஏடிஎம் கார்டையும், பின் நம்பர் எழுதிய
தாளையும் ஒரு போதும் சேர்த்து வைக்கக் கூடாது.
பின் நம்பரை நினைவு
வைத்துக்கொள்ள முடியாதவர்கள், வீட்டில் ஏதாவது ஒரு டைரியிலோ, சுவரிலோ யாருக்கும் தெரியாமல்
எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
(நான்கு பெண்கள் தளத்தில் 07/07/2015 அன்று வெளியான என் கட்டுரை)
படம் நன்றி - இணையம்
கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள்... நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு...
ReplyDeleteமுதல் பின்னூட்டத்துக்கும், நல்ல விழிப்புணர்வு பகி்ர்வு என்று பாராட்டியமைக்கும் நன்றி தனபாலன் சார்! த.ம வாக்குக்கு மீண்டும் என் நன்றி!
Deleteநல்ல விழிப்புணர்வுப் பதிவு தோழி. எங்கும் அபாயம் தான். நிறைய கேள்விப் படுகிறோம் இப்போ எல்லாம் அருமை ! நன்றி ! வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க இனியா! அருமை எனப்பாராட்டியதற்கும் வாழ்த்துக்கும் த ம வாக்குக்கும் நன்றி தோழி!
Deleteமனதில் இருத்திக்கொள்ள வேண்டிய செய்தி. நன்றி.
ReplyDeleteவருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteசகோதரி அவர்களின் விவரமான ஏ.டி.எம் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைக்கு நன்றி. எனக்கும் ஒரு ஆசாமி லட்சக் கணக்கில் எனக்கு பரிசு விழுந்து இருப்பதாக SMS அனுப்பிக் கொண்டே இருந்தான். நான் சட்டை செய்யவில்லை. இப்போது அவனிடமிருந்து எதுவும் காணோம்.
ReplyDeleteஒரு சின்ன ஆலோசனை. பதிவின் முடிவில் ” நான்கு பெண்கள் தளத்தில் 07/07/2015 அன்று வெளியானது – என்பதனை “” நான்கு பெண்கள் தளத்தில் 07/07/2015 அன்று வெளியான எனது கட்டுரை” என்பது போல இருந்தால் யார் எழுதியது என்பதில் குழப்பம் வராது.
த.ம.4
வாங்க இளங்கோ சார்! உங்கள் வருகைக்கு என் முதல் நன்றி! நீங்களும் வங்கியில் வேலை செய்து பணி விருப்ப ஓய்வு பெற்றீர்கள் என்றறிந்தேன். நீங்கள் வங்கியில் இருந்ததால், இது மாதிரி வரும் SMS பற்றி நன்கு தெரிந்திருக்கும். இது உண்மை என்று நம்பி பணம் பறிகொடுக்கும் நபர்கள் இருக்கிறார்கள். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் சொன்ன ஆலோசனைப்படி திருத்திவிட்டேன். ஆலோசனைக்கு மிகவும் நன்றி சார்!
Deleteவணக்கம் சகோ.
ReplyDeleteஇது குறித்து அறிந்திருக்கிறேன்.
இணையம் மூலம் பணப்பரிமாற்றம், புத்தகம் வாங்குதல், சந்தா, வணிகத்தளங்களில் நமது வங்கி அட்டை எண்கள், கடவுச்சொல், இன்னபிற விவரங்களைப் பகிர்வதை அவர்களோ வேறெவரோ தெரிந்து பயன்படுத்த வாய்ப்புண்டா.?
ஆரம்பத்தில் இச்சேவையைப் பயன்படுத்தினேன்.
ஆனால் ஒருமுறை உங்கள் கணக்கைப் பயன்படுத்த தவறான முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.
உடனே வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று குறுந்தகவல் வந்தது.
நானும் அலறிப்புடைத்துக் கொண்டு ஓடி வங்கியை அணுகியதும், அகமதாபாத்திலிருந்து இதுபோன்ற முயற்சி செய்யப்பட்டிருக்கிறது, கடவுச்சொல்லை மாற்றிவிடுங்கள் என்றார்கள்.
இனி இச்சேவையே வேண்டாம் என்று முடக்கச் சொன்னேன்.
பதிவு இதனோடு தொடர்புடையதால் ஏற்பட்ட சந்தேகம்.
நன்றி.
வாங்க சகோ!
Deleteஇணையம் Net banking or Online Banking மூலம் பணப்பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதே.
1. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் Login User Id & Login Password கொடுக்கப்போவதற்கு முன் உங்கள் வங்கியின் ஆன் லைன் பக்கம் தானா என ஒரு தடவைக்கு இரு தடவை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
காட்டுக்கு ஸ்டேட் வங்கியின் ONLINESBI.COM என்ற பக்கத்துக்குப் பதிலாக நாம் அவசரத்தில் தவறாகத் தட்டச்சு செய்யும் போது ONELINESBI.COM என்ற பக்கம் வந்துவிட வாய்ப்புண்டு. இது போல் ஒரே ஒரு எழுத்தை மாற்றி நம் வங்கியின் பெயர் போலவே நம் கண்களை ஏமாற்றும் பக்கங்களில் நம் பாஸ்வேர்டைக் கொடுத்துவிட்டால் அவர்கள் அதை Hack செய்து உள்ளே நுழைந்து விடுவார்கள்.
எனவே நுழைவதற்கு முன் உங்கள் வங்கியின் ஆன் லைன் பக்கம் தானா என ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டால் பிரச்சினை வர வாய்ப்பில்லை. மேலும் நீங்கள் பணப்பரிமாற்றம் பண்ணும் போது உடனுக்குடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் வந்துவிடும். OTP நம் மொபைல் எண்ணுக்குத் தான் வரும். அந்த OTP ஐ யார் போன் பண்ணிக் கேட்டாலும் சொல்லவே கூடாது.
2. உங்கள் கணிணி அல்லது உங்கள் லேப் டாப்பில் மட்டும் ஆன்லைன் பணப்பரிமாற்றமோ, இணைய வர்த்தகமோ பண்ணுங்கள். வெளியில் இன்டர்நெட் சென்டர்களில் ஒரு போதும் செய்ய வேண்டாம். அது பாதுகாப்பானது அல்ல.
3. குறிப்பிட்ட இடைவெளிகளில் உங்கள் பாஸ் வேர்டை மாற்றிக்கொள்ளுங்கள்.
4. எவ்வளவு தான் அவசரம் என்றாலும் கார்டை நண்பர்களிடமோ தெரிந்தவர்களிடமோ கொடுத்து பாஸ்வேர்டு சொல்லி ஏ டி எம் சென்டருக்குப் போய் பணம் எடுத்து வரச் சொல்லாதீர்கள்.
5. உங்கள் கணிணியில் ஆன்டி வைரஸ் மென்பொருள் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
வணிகத்தளங்களில் நம் அட்டையை வைத்து ஏமாற்றுவதற்கு வழியில்லை. ஏனெனில் அவர்கள் நம் கார்டை நம் கண்ணெதிரில் ஓர் இழுப்பு இழுத்துவிட்டு நம்மை பாஸ் வேர்டு போடச்சொல்வார்கள். அட்டையை அவர்களிடம் கொடுத்து நம் கண்ணுக்கு மறைவாக உள்ளுக்குள் எடுத்துச்சென்று swipe செய்ய அனுமதிக்கக் கூடாது.
புத்தகம் வாங்குதல். இணைய வர்த்தகம் போன்றவை செய்யும் போது நல்ல நம்பகமான தளங்களிலிருந்து வாங்குங்கள்.
இப்படி முன் ஜாக்கிரதையாகச் செயல்படும்போது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு தான்.
இது பற்றிய உங்கள் சந்தேகம் எதுவென்றாலும் தயங்காமல் கேளுங்கள்.
இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் இருக்கும் உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
Deleteமிகப் பயன்படும்.
கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்.
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்!
Deleteபயனுள்ள செய்திகள்.. கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய பதிவு!..
ReplyDeleteவாழ்க நலம்..
வாங்க துரை சார்! பயனுள்ள செய்திகள் என அறிந்து மகிழ்ச்சி. மிகவும் நன்றி!
Deleteமிக பயனுள்ள தகவல்
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும், பயனுள்ள தகவல் என்ற கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteநல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு.
ReplyDeleteநல்ல விழிப்புணர்வு பகிர்வு எனப்பாராட்டியமைக்கு மிகவும் நன்றி குமார்!
Delete