இளைஞர்களுக்கு நம் கலாச்சாரம் தெரியவில்லை; பாரம்பரிய உணவு
வகைகளைப் புறந்தள்ளி பீட்ஸா, பர்கர் தின்பவர்கள்; முகநூலில் முகம் தொலைப்பவர்கள், வார
இறுதியில் குடித்து விட்டுக் கூத்தடிப்பவர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களை,
முறியடிக்கும் விதமாக, நம் இளைய சமுதாயம், ஜல்லிக்கட்டு விஷயத்தில், பொறுத்தது போதும்
எனப் பொங்கி எழுந்திருக்கிறது.
ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என்ற வாதத்துக்குள், நான்
போக விரும்பவில்லை; ஆனால் அது தேவையில்லை என்ற மாற்றுக்கருத்துக் கொண்டோரும், மூக்கில்
விரல் வைக்கும் அளவுக்கு, இளைஞர்களின் இந்த மாபெரும் எழுச்சி, வரலாறு படைத்திருக்கிறது!
ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது
தமிழர்களாகிய நாம் தானே தவிர, பீட்டாவுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார் என்று
இவர்கள் கேட்பதில், நியாயம் இருக்கவே செய்கிறது.
வரலாறு காணாத இப்போராட்டத்தில், என்னைப் பெரிதும் கவர்ந்த
விஷயங்கள்:-
முதன்முறையாகப் பெருமளவில் பெண்களும், இதில் பங்கெடுத்திருப்பது;
ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, புரொபஷனல் கல்லூரி மாணவர்களும் களம் இறங்கியிருப்பது;
மாணவர்கள் மட்டுமில்லாமல், வேலையிருப்பவர்களும் இதில் கலந்து கொண்டிருப்பது;
தலைவன் என்று யாருமின்றி, இளைஞர்கள் தன்னிச்சையாக எழுச்சிப் பெற்றிருப்பது;
உணர்ச்சி மிகுந்த கூட்டம், வன்முறையில் ஈடுபடாமல், அமைதியான வழியில் இராணுவக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது;
பொதுச்சொத்துக்கு எந்தச் சேதமும் விளைவிக்காதது;
(சில சம்பவங்களைத் தவிர) இரயில் மறியல், போக்குவரத்து மறியல் என்று செய்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாதது;
பிரச்சினையில் மூக்கை நுழைத்து, அரசியல் இலாபம் காணத் துடிக்கும் அரசியல்வாதிகளை ஓரங்கட்டியிருப்பது;
நடிக, நடிகையருக்கு முக்கியத்துவம் கொடுக்காதது;
ஜாதி, சமய வேறுபாடின்றி, அனைவரும் தமிழன் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து போராடுவது;
நான்கு நாட்களுக்கு மேலாகியும், இடைக்காலத்தீர்வு தேவையில்லை, நிரந்தரத் தீர்வு வேண்டும் என்ற முடிவுடன் இறுதிவரைப் போராடும் குணம்;
ஏதாவது ஒரு முடிவு எடுத்தே தீர வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆட்சியாளர்களை உள்ளாக்கியிருப்பது;
போராடினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை அனைவர் மனதிலும் விதைத்திருப்பது;
உலகத் தமிழர் அனைவரும், ஒருமித்த குரலில் ஆங்காங்கே இணைந்து போராடித் தம் ஆதரவை நல்கியிருப்பது;
தேவையென்றால் வீதியில் இறங்கிப் போராடத் தயங்க மாட்டோம் என்ற எச்சரிக்கை மணியை, ஆட்சியாளர்களின் மனதில் அடித்திருப்பது.
இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். பொதுப் பிரச்சினைக்காக இளைஞர்கள் வீதியில் இறங்கிப்
போராடுவது, நம்பிக்கை தரும் நல்லதொரு துவக்கம்.
இம்மாபெரும் எழுச்சி இத்துடன் நின்றுவிடாமல், தொடர வேண்டும்
என்பதே என் வேண்டுகோள்!
(படம் நன்றி- இணையம்)
நடப்பது கனவா...? நிஜமா...? என்றே தோன்றுகிறது...!
ReplyDeleteஇந்த ஒற்றுமை அற்புதம்...!
வாங்க தனபாலன் சார்! வணக்கம்! ஆமாம் சார்! நம்பவே முடியவில்லை. இந்த ஒற்றுமையும் எழுச்சியும் கடைசி வரை நீடிக்க வேண்டும். முதல் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி சார்!
Deleteசொல்ல வேண்டிய செய்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வெகு அழகாகத் தங்கள் பாணியில் சொல்லியுள்ளது மேலும் அழகோ அழகாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது.
ReplyDeleteபடிக்கும் + வேலை பார்க்கும் (ஆண்கள் + பெண்கள்) இளைஞர்களின் இந்தப் பக்குவமும் உணர்வுகளும் நிச்சயமாக வெகு விரைவில் நல்லதொரு பலனைத் தரக்கூடும் என நம்புவோம்.
காலத்திற்கேற்ற மிக அருமையானதொரு பகிர்வுக்கு நன்றிகள்.
வாங்க கோபு சார்! அழகான, அருமையான பதிவு என்ற பின்னூட்டம் கண்டு மகிழ்கின்றேன். கட்டுப்பாட்டும் கண்ணியத்துடனும் கூடிய இப்போராட்டம் வெல்ல வேண்டும்! மிகவும் நன்றி கோபு சார்!
Deleteவணக்கம்
ReplyDeleteநாங்கள் நாடு கடந்து இருந்தாலும் இந்தியன் என்பதை விட தமிழன் என்பதை பெருமைப்படுகிறோம் உலக அரங்கு எங்கும் புரட்சி வெடிக்கிறது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் தமிழ் இனவுணர்வு கண்டு மகிழ்கின்றேன் ரூபன்! தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது! மிகவும் நன்றி ரூபன்!
Deleteபெரும்பாலும் அமைதியாகவும், கண்ணியத்துடனும் நடந்துள்ள போராட்டம். பெண்களும் தைரியமாக இரவில் கூட போராட்டத்தில் கலந்துகொண்ட சம்பவம் பற்றி டெல்லி வாழ் மக்களுக்கு இது ஒரு பாடம் என்று ஒரு வட இந்திய பெண் பிரபலம் ட்வீட் செய்திருந்ததை நேற்று வாட்ஸாப்பில் படித்தேன்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! நீங்கள் சொல்வது போல பெண்களும் தைரியமாக இரவில் கடற்கரையில் தங்கியிருக்கிறார்கள். நம் இளைஞர்களின் கண்ணியத்தைக் கண்டு பெருமையாக இருக்கின்றது. NDTv சோனியா சிங் டிவிட்டரில் தமிழகத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லியிருப்பதை நானும் பார்த்தேன். கருத்துரைக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!
Deleteநடப்பு நிகழ்வை மிக அருமையாக எடுத்து சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!
ReplyDeleteதங்கள் வேண்டுகோளே எங்களின் வேண்டுகோளும்.
வாங்க சார்! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து! அருமை எனப்பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்றி சார்!
DeleteHats off... போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க வெங்கட்ஜி! வாழ்த்துடன் கூடிய கருத்துக்கு மிகவும் நன்றி!
ReplyDeleteஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
ReplyDeleteதமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.
வாங்க காசிராஜலிங்கள் அவர்களே! கண்டிப்பாகப் பாராட்டியே தீர வேண்டும். கருத்துரைக்கு மிகவும் நன்றி!
Delete>>> இம்மாபெரும் எழுச்சி இத்துடன் நின்றுவிடாமல், தொடர வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!..<<<
ReplyDeleteஅனைவருடைய விருப்பமும் இதுவாகத் தானே இருக்கின்றது..
நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்..
வாங்க துரை சார்! வணக்கம். நல்லதொரு பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி!
Deleteஆம், இது வட இண்டியர்களையும், உலகையுமேவியக்க வைத்துள்ளது....அறப் போராட்டம் வெல்லும் என்பதை உறுதி செய்ததோடு அரசியல்வாதிகளையும் மிரட்டியுள்ளது.....
ReplyDeleteவாங்க சகோ! வணக்கம். தங்கல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteதங்கள் என்பது தங்கல் எனத் தவறாகத் தட்டச்சு ஆகிவிட்டது.
ReplyDelete