ஏழு
நாட்கள் கடுங்குளிரில், வெயிலில் கஷ்டப்பட்டு,
ஜல்லிக்கட்டுக்கு
நிரந்தரத் தீர்வுக்காகப் போராடிய, அத்தனைப்
போராளிகளுக்கும், வீரவணக்கம்!
பொதுப்
பிரச்சினைக்காக வீதியில் இறங்கிய ஒரு வாரத்துக்குள், அரசுக்குக் கடும் நெருக்குதல்
கொடுத்து,
நிரந்தரத் தீர்வு
கண்டது இமாலயச் சாதனை!
வெற்றியை
முழு மனதுடன் கொண்டாட முடியாமல், இறுதி
நாளில் வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டி, அறவழியில்
போராடிய மாணவர்களைத் தடியடி நடத்திக் கொடுமைப்படுத்தியது, கடும் கண்டனத்துக்குரியது.
வன்முறையை
முதலில் தூண்டியது யார் என்ற உண்மையை, அடுத்தடுத்து
வெளியாகும் (வேலியே
பயிரை மேயும்!) வீடியோ
காட்சிகள்,
அம்பலப் படுத்துகின்றன. வன்முறையில் ஈடுபட்டதாய்க்
கூறித் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளிலிருந்து, மாணவர்களை நிபந்தனையின்றி, அரசு
உடனே விடுவிக்க வேண்டும்.
கூட
இருந்தே குழிபறிக்கும் நண்பர்(!)களையும், காட்டிக்கொடுக்கும்
எட்டப்பர்களையும், முதுகில்
குத்தும் கருணாக்களையும், அரசு
உத்தரவின் பேரில் நிமிடத்துக்கு நிமிடம், நிறம்
மாறும் காவல்துறையையும் அடையாளங்கண்டு கொள்ளவும், புதிய படிப்பினையைப் பெறவும் இப்
போராட்டம்,
இவர்களுக்குக்
கற்றுக்கொடுத்திருக்கிறது. ஏட்டில் பெற முடியாப் படிப்பினை இது!
அடுத்தமுறை
களம் புகுமுன், இவர்களைக் களையெடுப்பது மிகவும் முக்கியம்! கண்ணுக்குத் தெரியும் எதிரிகளை விட, ஆபத்தானவர்கள்
இவர்கள்!
மலையாளிகள், பஞ்சாபியரைப் போல, இனவுணர்வு சிறிதும் இல்லாதவர்கள்
தமிழர்கள் என்ற வாதத்தைப் பொய்யாக்கும் விதத்தில், உலகத்தமிழர் அனைவரையும், தமிழன் என்ற அடிப்படையில்
ஒன்றிணைத்தது தான், இவர்கள் செய்த முதல் சாதனை!
காலங்காலமாகத்
தமிழகம் வஞ்சிக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும்
வந்ததன் விளைவாகத தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்தது தான், இந்த
இளைஞர் எழுச்சி. அதற்கு ஜல்லிக்கட்டு என்ற தீப்பொறி உதவியிருக்கிறது.
இவர்கள் தலைமையில், எதிர்காலத் தமிழகம் சிறப்பாகச்
செயல்படும் என்ற நம்பிக்கை, முதன்முறையாக
எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
(படம் நன்றி –
இணையம்)
போராட்டம் நடக்கும்போது வேண்டாத சிலர் சேர்ந்து கொள்வது வாடிக்கை. அவர்களை இனம் கண்டு பிரிப்பதை விட்டு, காவல் துறையே கல்லெறிவதும் தீ வைப்பதும், கண்மூடித்தனமாக சிறியோர் பெரியோர் அனைவர் மேலும் தடியடி நடத்துவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. நீதிமன்றம் குற்றம் இழைத்தோரை தண்டிக்கும் என நம்புவோம்.
ReplyDeleteஉணர்வு பூர்வமாக இணைந்து உலகிற்கு நமது எழுச்சியை காண்பித்த அனைவருக்கும் வாழ்த்துகளும் வணக்கங்களும் தெரிவிப்பதில் நானும் பங்குகொள்கிறேன்.
தங்களின் முதல் பின்னூட்டத்துக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteமாணவப் போராளிகளுக்குத் தலைவணங்குவோம்
ReplyDeleteமிகவும் நன்றி ஜெயக்குமார் சார்!
Deleteஅனைத்து போராளிக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...
ReplyDeleteகருத்துரைக்கு நன்றி தனபாலன் சார்!
Deleteநமது வாட்ஸ்-அப் திரட்டியில் இணைக்கும் போது http://unjal.blogspot.com<-- இவ்வாறு இணைக்காதீர்கள்... http://unjal.blogspot.com/2017/01/blog-post_24.html<-- இவ்வாறு இணையுங்கள்...
ReplyDeleteநன்றி சார்! இனிமேல் தாங்கள் சொல்லியுள்ளபடி இணைக்கிறேன்.
Delete//இளைஞர்களின் தலைமையில் எதிர்காலத் தமிழகம் சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கை, முதன்முறையாக எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.//
ReplyDeleteஇதனைக் கேட்கவே மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அப்படியே நடக்கட்டும்.
வாங்க கோபு சார்! வணக்கம். தங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி சார்!
Deleteஅனைவருடைய சார்பிலும் பாராட்டுகள்!
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்!
Deleteஇந்திய மத்திய அரசம்
ReplyDeleteதமிழ்நாடு் மாநில அரசும்
தோல்வியை ஒப்புக்கொண்டதால்
மாணவர் எழுச்சியை அடக்கினரோ!
மாணவர் எழுச்சி மறுவடிவம் எடுத்தால்
இந்திய மத்திய அரசம்
தமிழ்நாடு் மாநில அரசும்
என்ன தான் செய்ய முடியும்?
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteஇறுதியில் மனம் வேதனை....என்றாலும், இனி மக்களை ஏமாற்ற முடியாது, பொங்கிவிடுவார்கள் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியுள்ளது....வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் சகோ. தங்கள் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் மிகவும் நன்றி.
Deleteநல்லவை நடக்கட்டும். அல்லாதவை களையப்படட்டும்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! தங்கள்ல் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!.
Deleteமனதை மிகவும் பாதித்த நிகழ்வுகள்.. நாட்டு நலன் கருதி கூடியவர்களின் மத்தியில் நயவஞ்சகர்களும் புகுந்ததன் விளைவு இது..
ReplyDeleteகாவல் பணியில் இருந்தவர்கள் நடத்திய தாக்குதல் கண்ணீரை வரவழைத்தது..
பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்கள் நலமடைய வேண்டுவோம்..
வாங்க துரை சார்! வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteமாணவர்களும் பொதுமக்களும் தெருவிலிறங்கிப் போராடிய ஒரு போராட்டம் இன்று வெற்றியைப் பெற்றுத்தந்திருப்பது அவர்தம் விடாமுயற்சியையும், ஒற்றுமையையும், இனமான உணர்வையுமே பறைசாற்றுகிறது. மாநிலம் மட்டுமல்ல.. மத்தியில் மட்டுமல்ல.. உலக நாடுகள் பலவற்றின் கவனத்தையும் தன்பால் ஈர்த்த இப்போராட்டக் களத்தின் மையமாகிய இளைய தலைமுறையின் உள்ளாடும் எழுச்சிதீபம் என்றும் அணையாது கனன்றுகொண்டே இருக்கட்டும். அலசலும் ஆலோசனையுமாய் சிறப்பானதொரு பதிவு அக்கா.
ReplyDelete