நல்வரவு

வணக்கம் !

Monday, 11 December 2017

எல்லோருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்து!

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!

பணிச்சுமை மற்றும் குடும்பச்சூழல் காரணமாக, இந்த ஆண்டில் என்னால் வலைப்பக்கம் அதிகம் வரவியலவில்லை.  

2018 ஆம் ஆண்டிலாவது தொடர்ந்து எழுத வேண்டும் என ஒவ்வொரு புத்தாண்டின் போதும், எடுக்கும் சபதம் போல், இப்போதும் எடுத்திருக்கிறேன்.

இடைப்பட்ட காலத்தில் சில சிறுகதைப்போட்டிகளில் கலந்து கொண்டேன்.  மறைந்த எழுத்தாளர் திரு.க.சீ..சிவக்குமார் நினைவுச் சிறுகதைப் போட்டியில் வளரும் எழுத்தாளர் பிரிவில் முதற் பரிசு கிடைத்தது.

நம் பதிவுலக நண்பர் திரு வே. நடனசபாபதி அவர்களின் அண்ணன் பெயரில் இளவேனில் பதிப்பகம் நடத்திய வே.சபாநாயகம் நினைவுச் சிறுகதைப்போட்டிக்காக நான் எழுதிய தப்புக்கணக்கு, என்ற கதை, நான்காவதாகத் தேர்வு பெற்று வசீரும் லீலாவதியும், என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கைச்சட்டம் பதிப்பகம் நடத்திய வானதி விருது சிறுகதைப்போட்டிக்காக எழுதிய பித்து என்ற கதை, இவளப் பிடிக்கல,’ என்ற தொகுப்பு நூலில் வெளியாகியுள்ளது.

அந்நியன், என்ற கதை, நவம்பர் 2017 கணையாழியில் வெளிவந்துள்ளது.

இனி ‘அந்நியன், கதை அடுத்த பதிவில்....

வழக்கம் போல், என் கதைகள் பற்றிய, உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து...


நன்றியுடன்,

ஞா.கலையரசி

12 comments:

  1. ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட நினைத்து இப்போதே வெளியிட்டு விட்டீர்களோ? புத்தாண்டுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். சிறுகதை சாதனைகளுக்கு எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! நீங்கள் நினைப்பது சரி தான். புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டுவிடுவோம் என நினைத்து எழுதினேன். ஏதாவது ஒரு காரணத்தால் வெளியிட இயலாமல் போய்விடுமோ என்று டிசம்பர் 11 வெளியிட்டுவிட்டேன். இந்நாளுக்குப் பெரும் சிறப்பிருக்கின்றது. இது பாரதியார் பிறந்த தினம். என் மகனின் பிறந்த தினமும் கூட. உங்கள் முதல் பின்னூட்டத்துக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  2. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! நலந்தானே? தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

      Delete
  3. வெகுநாட்களுக்குப் பிறகு நல்ல செய்தியுடன் பதிவு..

    மேலும் பல விருதுகளைப் பெறுதற்கு
    அன்பின் இனிய நல்வாழ்த்துகள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார்! எல்லோரிடமும் அளவளாவி, எட்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் அகமார்ந்த நன்றி!

      Delete
  4. தொடரட்டும் சாதனைகள் வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி சார்! நலந்தானே? உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி!

      Delete
  5. வாழ்த்துக்கள்....
    தொடரட்டும் சாதனைகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார்! எப்படியிருக்கிறீர்கள்! உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  6. செய்வன திருந்தச் செய் என்பது போல வதவதவென்று அர்த்தமில்லாமல் எழுதிக் குவிப்பதை விடவும் குறைந்த அளவே எழுதினாலும் எழுதும் அத்தனையும் முத்து முத்தாக எழுதிப் பரிசுகளைக் குவித்திருப்பதற்கு மனம் நிறைந்த பாராட்டுகள். கணையாழியில் கதை வெளிவந்ததற்கு கூடுதல் சிறப்பு பாராட்டுகள்.

    வரும் வருடமும் தங்கள் படைப்புகள் சிறப்பான அங்கீகாரங்களையும் பாராட்டுகளையும் அள்ளி வழங்குவதாய் அமையட்டும்.

    ReplyDelete
  7. வெறும் சடங்குக்காக எழுதும் வார்த்தைகளாக இல்லாமல் மனதின் ஆழத்திலிருந்து வரும் உன் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன் கீதா! உங்கள் எல்லோருடைய உண்மையான வாழ்த்தும், பாராட்டும் தான், இத்தனை வேலைகளுக்கிடையேயும் என் எழுத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது! மிகவும் நன்றி கீதா!

    ReplyDelete