கவிஞர் மு.கீதா
(தேவதா தமிழ்)
காகிதம் பதிப்பகம்
(மாற்றுத்திறன்
நண்பர்கள் நடத்துவது)
+91 8903279618
விலை ரூ100/-.
2015 ஆம் ஆண்டு
புதுக்கோட்டை பதிவர் விழா,
மிகச்சிறப்பாக நடந்தேற, முக்கிய பங்காற்றியவர்களுள், இந்நூலாசிரியர் மு.கீதாவும் ஒருவர். மனிதநேயமிக்க அரசுப்பள்ளி ஆசிரியையாகப்
பணியாற்றும் இவர், சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது தெருவில் இறங்கிப்
போராடும், களப்போராளியும் கூட. வாரா வாரம் புதுகையில் வீதி
இலக்கியச் சந்திப்பு நடத்துவதிலும், சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகிறார்.
இவருடைய இந்த மூன்றாவது
கவிதைத் தொகுப்புக்கு, அமெரிக்க
வாழ்கவிஞர், தங்கை கிரேஸ் பிரதிபா, அருமையான முன்னுரை எழுதியுள்ளார். அவருடைய ’பாட்டன் காட்டைத் தேடி,’ என்ற நூலுக்கு, நான் எழுதிய பதிவினைப் பார்க்க இணைப்பு:-http://unjal.blogspot.com/2017/03/blog-post_24.html
சாதி, மத, இன
பேதமற்ற, மனிதநேய சமுதாயம் மலர வேண்டும் என்ற உயரிய சிந்தனை, இவரின் பெரும்பாலான
கவிதைகளின் அடிநாதமாக ஒலிக்கின்றது.
அத்துடன் பெண்ணுரிமை, பாலியல் வன்கொடுமை, நஞ்சாகிவரும் சுற்றுப்புறச்சூழல்,
குழந்தை வளர்ப்பு, புரையோடிப் போயிருக்கும் லஞ்சஊழல் போன்ற,
நம் காலத்து முக்கியப் பிரச்சினைகளைக் கவிதைகளில் பாடுபொருளாகப் கையாண்டிருப்பது, இவர்
கொண்டிருக்கும், சமூக அக்கறையைப் பறைசாற்றுகின்றது.
”மதங்கடந்த மனித நேயத்தை
மனிதரிடையே வளர்த்து
இனங்கடந்த இனிமையை
இதயந்தோறும் விதைத்து
சாதியற்ற மனங்களைச்
சாதிக்க ஒன்றிணைத்து...” பக் 37
என்று இவர் காணும்
கனவு, மகத்தானது
சமூக அவலங்களைக்
கண்டு மனங்கொதித்து, இவர் எழுப்பும் கேள்விக்கணைகள்,
வாசிப்பவரின் மனதுக்குள் தோட்டாக்களாகச் சீறிப்பாய்ந்து, சிந்திக்க வைக்கின்றன.
”கேள்விகளால் துளைக்கவோ நானும்
ஊழலற்ற ஆட்சி
அமைப்போமென்று
ஊழலுக்குள்
புதைந்தவர்களைத்
தாழிக்குள் புதைக்கத்
தயாராய்...”
ஓசோனில் ஓட்டை, புவி
வெப்ப அதிகரிப்பு, அருகிவரும் நீர்வளம் என்று சுற்றுச்சூழல், பெருத்த
அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும், இன்றைய காலக்கட்டத்தில், தமிழகத்தின் நிலம்
மற்றும் நீர்வளங்களைக் காக்க வேண்டிய அரசே, பன்னாட்டு நிறுவனச் சுரண்டலுக்குத்
துணைபோவதை எதிர்த்து,
”நிலத்தடி நீரை உறிஞ்சி
நிலக்கரி மீதில்
படர்ந்த
மீத்தேன் வாயுவை
உறிஞ்ச
அரசின் துணையுடன்
அமைதியாய் நுழையுது
அரியானாவின்
நிறுவனமொன்று.
காவிரி மறந்த நிலமாய்
நீரற்று வெடித்து
விரிய
விலைநிலமானது
விளைநிலம்”. (பக் 56)
என்றும்
”மீத்தேன் நிலம்
நியூட்ரினோ மலை
அணுக்கதிர் கடல்
பணி அதிகம்,
தமிழகத்தில்
எமனுக்கு,” (பக் 48)
என்றும், தம் கண்டனத்தை,
வேதனையுடன் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.
முன்னெப்போதுமில்லாத
அளவுக்கு சகிப்புத்தன்மை, மிகவும் குறைந்து வரும் இக்காலத்தில், கருத்துச்
சுதந்திரத்துக்கெதிரான கல்புர்கி, கெள்ரி லங்கேஷ் கொலைகள், சாதித்திமிரில் நடத்தப்படும்
ஆணவக்கொலைகள், பாலியல் வன்புணர்வுக் கொலைகள் ஆகியவை, சர்வ சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. இன்றைய வாழ்வின் அச்சம் சூழ்ந்த அவல நிலையைப்
படம் பிடித்துக் காட்டும் வரிகள் இவை:-
”பிறத்தலை விட, இறத்தல் எளிதாயுள்ளது
கூலிகளால்..
வாழ்வு
அச்சங்களால்
நகர்த்தப்படுகின்றது..” (பக்
21)
வேற்றுமையில் ஒற்றுமை
காணும் இந்தியா என்று வாய்கிழிய ஒருபக்கம்
பெருமை பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் மாட்டுக்கறிக்காக எத்தனை கொலைகள்? நாம் என்ன
உண்ணவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார்?
”மரக்கறியோ மாட்டுக்கறியோ
மறுப்பதும், ஏற்பதும்
என் உரிமை!”
என்று பொட்டிற் அடித்துச்
சொல்லி, உணவுக்கான தம் உரிமையை நிலைநாட்டுகிறார்.
பெண்களின் வாழ்க்கைப்
பயணத்தில், வழியெங்கும் வீசப்படும் கணக்கில்லாத் தூண்டில்களில் பலர் எளிதாகச்
சிக்கி, இரையாகி மடிகிறார்கள். எனவே எந்நேரமும், விழிப்புடனிருந்து
முன்னெச்சரிக்கையுடன், இவற்றை எதிர்த்தும், தவிர்த்தும் பயணப்பட வேண்டிய
துர்ப்பாக்கிய நிலை மகளிருக்கு!
”எண்ணற்ற தூண்டில்களை
எதிர்த்தும்,
தவிர்த்துமே
பயணம்..” (பக் 22)
பால்மணம் மாறாப்
பச்சிளம் குழந்தைகளைக் கூடப் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யும் இந்நாளில்,
மகளிர்தினம் கொண்டாடுவது கேலிக்கூத்தல்லவா?
”அவசரமாய்ப் பணிமுடித்து
அள்ளிச் செருகிய
ஆடையுடன்
பயணத்தில் தற்காத்து
பருவமடையாக்
குழந்தைகளின்
பாலியல் கொடுமை
கண்டு செல்கின்றாள்
மகளிர் தினம் கொண்டாட” (பக் 59)
சில கவிதைகளில்
வெளிப்படும் கிண்டலையும், கேலியையும் வெகுவாக ரசித்தேன். அவற்றுள் இரண்டு மட்டும், உங்களுக்காக:-
”உலகைச் சுற்றிப் பார்க்க ஆசையா
வா
டீக்கடை வைக்கலாம்.” (பக்
43)
”நட்ட நடுஇரவு
பன்னிரண்டு மணி
உடல் நிறைய நகைகளுடன்
ஒற்றைப் பெண்
ஊர்வலமாய்
ஆண்கள் புடைசூழ,
இந்தியாவா இது!?
ஓ...!
மாரியம்மன்...!” (பக் 28)
(காந்திக்கனவு)
இறுதியாக,
”எனை அம்மம்மா ஆக்கி
இறுகிய மனதை அசைத்த
செல்ல வேர்,” என்றும்
”கொள்ளை மகிழ்வைக்
ஒத்தாய்க் கொடுக்க
இவளால் மட்டுமே
சாத்தியம்,”
என்றும்
சின்னக் கண்ணம்மாவின்
குறும்புகளைப் பட்டியலிடும் கவிதைகளும்,
படித்து இன்புறத் தக்கன.
எல்லாவற்றையும்
சொல்லிவிட்டால், வாசிப்பின்பம் போய்விடும் என்பதால், இன்னும் பல தலைப்புகளில்
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் சிறந்த கவிதைகள் பற்றிச் சொல்லாமல் விடுகின்றேன்.
வரவிருக்கும்
புத்தாண்டில், இன்னும் பல நூல்கள் வெளியிட கீதாவை வாழ்த்துகிறேன்!
ஞா.கலையரசி
எடுத்துக் காட்டிய கவிதைகள் வெகு சிறப்பு. பாராட்டுகள்.
ReplyDeleteசகோ மு. கீதா அவர்களுக்கும் வாழ்த்துகள்.
வாங்க வெங்கட்ஜி! முதல் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteமிக்க நன்றி சகோ
Deleteநல்ல அறிமுகம். நல்ல பகிர்வு.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! நல்ல பகிர்வு என்ற கருத்துக்கு மிகவும் நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteஅருமையான விமர்சனம்
ReplyDeleteவாங்க சகோ! அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கு மிக்க நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
ReplyDeleteவாங்க துரை சார்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteசிறந்த எடுத்துக்காட்டுகளுடன்
ReplyDeleteஅருமையான கண்ணோட்டம்
இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
அருமையான கண்ணோட்டம் என்ற தங்கள் பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteநல்ல விமர்சனம். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாங்க நினைத்த நூல்களில் இதுவும் ஒன்று. எப்படியோ விடுபட்டு விட்டது. வாங்கி படிக்க வேண்டும்.
ReplyDeleteவாங்க இளங்கோ சார்! கண்டிப்பாக வாங்கிப் படியுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteதோழி கீதாவின் சமூக அக்கறை சார்ந்த பதிவுகளை முன்பே வாசித்திருந்தாலும் இங்கு தங்கள் விமர்சனம் மூலம் அவருடைய படைப்புகளின் புதிய பரிணாமத்தைப் பார்க்கமுடிகிறது. சாட்டையடி போன்ற கவிதைகள் மூலம் எளிதாய் மனங்களைத் துளைக்கும் அவருடைய கவிவன்மைக்கு சபாஷ். சான்று காட்டிய கவிதைகள் அனைத்தும் நன்று. அதை விவரித்திருக்கும் விதமும் அருமை. அட்டைப்படம் மிகப்பொருத்தமாக உள்ளது. நல்லதொரு கவிதை நூலை அறியத்தந்த தங்களுக்கு நன்றி. தோழி கீதாவுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா.
ReplyDeleteஉங்கள் எல்லோருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteஅனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteஎனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்
நன்றியுடன்
சாமானியன்
வாருங்கள் சாம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteதிரு கோபு சார் இப்பதிவைப் படித்து விட்டுத் தம் பின்னூட்டங்களை என் மெயிலுக்கு அனுப்பியிருக்கின்றார். இப்புத்தாண்டில் திரு கோபு சார், தம் வலைப்பக்கத்தில் எழுத வேண்டும், நேரிடையாக மற்ற பதிவுகளுக்கு வந்து கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றேன். அவருடைய பின்னூட்டங்கள் கண்டால், நம்மை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். திரு இளங்கோ சாரும் கோபு சாரைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். கோபு சார் இனி வரும் பதிவுகளுக்கு நேரிடையாக வநது கருத்துக்களைத் தெரிவிப்பார் என்று நம்புவோம். நிற்க.
ReplyDeleteஎன் மெயிலுக்கு கோபு சார் அனுப்பியிருக்கும் பின்னூட்டங்களை, இங்கு வெளியிட்டுள்ளேன்.
கருத்து:-என் பார்வையில் - "மனம் சுடும் தோட்டாக்கள்," – கவிதைத் தொகுப்பு
என்ற தங்களின் பதிவினைப் படித்து மகிழ்ந்தேன்.
மிகவும் நன்றாகவும், நியாயமாகவும் திறனாய்வு செய்துள்ளீர்கள்.
- கோபு
கோபு சாரின் இரண்டாவது பின்னூட்டம்:-
ReplyDelete[ 2 ]
//எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், வாசிப்பின்பம் போய்விடும் என்பதால், இன்னும் பல தலைப்புகளில் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் சிறந்த கவிதைகள் பற்றிச் சொல்லாமல் விடுகின்றேன்.//
சொல்லாமல் விட்டுள்ள சிறந்த கவிதைகளைப் பற்றி, தாங்கள் சொல்லியுள்ள விதம் மிகவும் அழகோ அழகு. இன்னும் சொல்லப்போனால், இந்தத்தங்களின் வரிகளிலேயே கவிதைகளின் வாசிப்பின்பம் எனக்கு அதிகரித்துள்ளது என்றுதான் எனக்குச் சொல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது. :)
- கோபு
திரு கோபு சாரின் மூன்றாவது பின்னூட்டம்:-
ReplyDelete3 ]
தாங்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளவற்றில் ’மாரியம்மன்...!” (பக் 28) (காந்திக்கனவு)’ என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
- கோபு
@ வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDelete4)
கவிஞர் திருமதி. மு.கீதா அவர்களின் பதிவுகள் பலவற்றை நானும் அவ்வப்போது படித்ததுண்டு. அவை ஒவ்வொன்றிலும் அவருக்கு இருக்கும் சமூக அக்கறையுடன் கூடிய கோபம் கொப்பளிக்கும் வரிகளைப் படித்து வியந்ததும் உண்டு.
- கோபு
@ வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDelete.[ 5 ] முன்னெப்போதுமில்லாத அளவுக்கு சகிப்புத்தன்மை, மிகவும் குறைந்து வரும் இக்காலத்தில்’ ............ என்ற வரிகளைப்படித்ததும், இது சம்பந்தமாக நான் கேள்விப்பட்டுள்ள சில நிகழ்வுகளும், நகைச்சுவைக் கதைகளும் என் நினைவுக்கு வந்தன. இந்த சீரியஸ் விஷயங்களில் அவற்றை நான் இங்கு குறிப்பிட்டால், அது சரியாக இருக்காது.
கவிஞர் அவர்களின் திறமைகளுக்கும், அதனைத் தங்களின் இந்தப்பதிவின் மூலம் வெளிக்கொணர்ந்து அனைவருக்கும் புரியவைத்துள்ள தங்களின் திறமைகளுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
- கோபு
மனம் நிறைந்த நன்றி மா.தாமதமாக படித்தமைக்கு வருந்துகிறேன்.உங்கள் வார்த்தைகள் மேலும் எழுதும் உத்வேகத்தை தருகிறது.நன்றிநன்றி
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா!
Deleteதிறமைமிகு திறனாய்வு . கவிஞர் மேன்மேலும் எழுதிப் புகழுற வாழ்த்துகிறேன் . .
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
Deleteஅருமையான மதிப்பீட்டிற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா! தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி!
Deleteநல்ல பகிர்வு.
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!
Deleteதிறன்மிகு திறனாய்வு... மனதை மகிழ்வித்தது நன்றி !! சகோதரி !!!.
ReplyDeletehttps://www.scientificjudgment.com/
ReplyDeleteGreat article with excellent idea i appreciate your post thankyou so much and let keep on sharing your stuffs
Digital marketing agency in chennai
Best SEO Services in Chennai
seo specialist companies in chennai
Best seo analytics in chennai
Expert logo designers of chennai,
Brand makers in chennai