நல்வரவு

வணக்கம் !

Thursday 1 March 2012

காலங் கடந்த பின்பு…                                                        (படம்:- நன்றி உயிரோசை)
                                                  

மழலையின் பிறந்த நாளுக்குப்
பரிசாய்க் கிடைத்த பொம்மை
அழுக்காகி விடுமென்று பயந்து
குழவியிடமிருந்து பிடுங்கிக்
காட்சிக்கு வைத்த அம்மாக்களில்
நானும் ஒருத்தி.


புத்தம்புது, வெள்ளை வெளேர்
நாய்க்குட்டிப் பொம்மையைக்
காணும் போதெல்லாம்
குழந்தையின் இன்பத்தைக்
கெடுத்த நிகழ்வு
நினைவுக்கு வந்து
குற்றவாளிக் கூண்டில் நான்...

அன்பைப் பொழிந்த தோழியிடமிருந்து
வலுக்கட்டாயமாய் எனைப் பிரித்து
வாழ்நாட் முழுக்க அலமாரியில்
சிறை வைத்தது முறையோ என
நாய்க்குட்டி புலம்புவது போலவும்
ஒரு பிரமை!

குற்றவுணர்விலிருந்து விடுபட விரும்பி
இந்தா, நீ விரும்பிய பொம்மை;
இனி இது உனக்கேயுனக்,கென்று
ஆசை மகளிடம் கொடுத்தேன்;
ஆசைப்பட்ட போது கிடைக்காதது
இப்போது எனக்கெதற்,கென்று 
என்னிடமே தூக்கி யெறிந்தாள்,
குழந்தைப் பருவத்தைக்
கடந்து விட்டிருந்த என் பெண்!.. (20/02/2012 உயிரோசை இணைய இதழில் எழுதியது)

10 comments:

 1. காலத்தினாற் செய்த உதவி கோடி நன்மை பெறும் என்பது போல் காலத்தில் அளிக்கப்பட்ட பரிசும் கோடி இன்பம் தரும். குழந்தைப்பருவம் கடந்தபின் அளிக்கப்பட்ட பொம்மை, உதாசீனப்படுத்தப்பட்டதில் தெரிகிறது, இத்தனைநாள் அதன்பால் கொண்டிருந்த ஏக்கமும் அது கையில் கிட்டாத ஆதங்கமும்.

  அழுக்குப் படாது, அலமாரியில் இருக்கும் நாய்க்குட்டி பொம்மை இனியும் காயம் உண்டாக்கலாம் முன்பே குற்றவுணர்வில் குமைந்துகொண்டிருக்கும் மனத்தில். நல்ல கருத்துச் சொல்லும் கவிதைக்கும் அது உயிரோசையில் வெளிவெந்தமைக்கும் பாராட்டுகள் அக்கா.

  ReplyDelete
 2. ஆம். உரிய நேரத்தில் கிடைக்காமல் காலங் கடந்த பிறகு கிடைக்கும் எதுவுமே நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில்லை என்பதுடன் அது கிடைக்காத வருத்தம் கோபமாகவும் வெளிப்படும். கருத்தாழமிக்க பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி கீதா!

  ReplyDelete
 3. குழந்தை பருவத்திலிருந்த ஆசை மாறுகிறதல்லவா?ஞாயமானதுதான் அவளது கோபம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விமலன் சார்!

   Delete
 4. தாமதமாய்க் கண்டேன் செல்ல நாய்க்குட்டியை..
  நியாயமான கோபம்
  நியாயமான வருத்தம்
  வாழ்த்துக்கள் கலா மேடம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி உமா மேடம்.

   Delete
 5. அருமையான் இந்த கவிதை இன்றைய வலைச்சரத்தில்
  வாழ்த்துக்கள்.

  http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html#comment-form

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரத்தில் என் கவிதையை அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.

   Delete
 6. வணக்கம்

  இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete