வானம் பார்த்த
வறண்ட நம் மண்ணில், நம் குழந்தைகள் “ரெயின் ரெயின் கோ அவே,” என்று மழையைப் போகச் சொல்லிப்
பாடுவது, எவ்வளவு அபத்தம்?
மழையை வா வாவெனப்
வரவேற்றுப் பாடும் என்னுடைய இந்தப் பாடல் (14/07/2019 வாசகசாலை இணைய இதழில் வெளியானது..
வான் மழையே ஓடி வா!
விண்ணமுதைப் பொழிய வா!
முகிலின் கொடையே ஓடி வா!
மகிழ்ந்தே உலகம் சிரிக்க வா! (வான்)
அழகிய மயில்கள் ஆட வா!
உழவன் வாழ்வு சிறக்க வா!
கருகிய பயிர்கள் துளிர்க்க வா!
அருகிய உயிர்கள் பிழைக்க வா! (வான்)
மலையும் முகடும் குளிக்க வா!
நிலத்தடி நீரைப் பெருக்க வா!
பாலையில் பசும்புல் முளைக்க வா!
சோலையில் புள்ளினம் பாட வா! (வான்)
மண்ணின் வாசம் சுமந்து வா!
கண்மாய்க் குளங்கள் தளும்ப வா!
காய்ந்த நிலங்கள் செழிக்க வா!
நாய்க் குடைகள் பூக்க வா! (வான்)
புவியில் உயிரினம் நிலைக்க வா!
கவியின் சாரல் சிலிர்க்க வா!
கொதிக்கும் பூமி குளிர வா!
கூத்தாடும் குடம் நிரம்ப வா! (வான்)
நல்ல பாடல்.
ReplyDeleteவாழ்த்துகள்...
மிக்க நன்றி வெங்கட்ஜி!
Deleteஅழகான அருமையான வரிகள்...
ReplyDeleteபாராட்டுகள்... வாழ்த்துகள்...
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன் சார்!
Delete//மழையை வா வாவெனப் வரவேற்றுப் பாடும் என்னுடைய இந்தப் பாடல் (14/07/2019 வாசகசாலை இணைய இதழில் வெளியானது..//
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள்.
பாடல் வரிகள் புதுமையாகவும், அருமையாகவும், இயல்பாகவும், மனதுக்கு இன்பம் தருவதாகவும் அமைந்துள்ளன. :)
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபு சார்!
Delete