நல்வரவு

வணக்கம் !

Sunday, 5 March 2023

நீலமலைப் பயணம் - சிறார் நாவல்

 



அனைவருக்கும் வணக்கம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!  புத்தாண்டு பிறந்து மூன்றாம் மாதம் நடக்கும் இவ்வேளையில் வாழ்த்துச் சொல்வதற்குக் காரணம், இவ்வாண்டில் நானெழுதும் முதல் பதிவு இது என்பதால்!

2022 ஆம் ஆண்டு, சென்னை ‘வானம் பதிப்பகம்’ வெளியிட்ட ‘பூதம் காக்கும் புதையல்’ என்ற என் சிறார் நாவலைத் தொடர்ந்து, என் அடுத்த சிறார் நாவல் ‘நீலமலைப் பயணம்’ என்ற தலைப்பில், ஆகஸ்ட் 2022 ல் வெளியானது. 

Friday, 22 July 2022

பூதம் காக்கும் புதையல் – இளையோர் நாவல்

 





12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக, நான் எழுதிய 'பூதம் காக்கும் புதையல்' என்ற நாவலின் அச்சுப் பிரதியை, வானம் பதிப்பகம், சென்னை-89 அண்மையில் வெளியிட்டுள்ளது. 

Friday, 14 January 2022

சூரியன் எங்கே? - சிறார் நாவல் (மின்னூல்)


 ‘சூரியன் எங்கே?’ என்ற தலைப்பில், அமேசானில் ஒரு சிறுவர் நாவலை மின்னூலாக வெளியிட்டுள்ளேன்.  பொங்கலை முன்னிட்டு, அது இன்றும் நாளையும் இலவசமாகக் கிடைக்கும்.

இதை வயது 6 முதல் 12 வரையிலான சிறுவர்கள் வாசிக்கலாம்.  சுவாரசியமான இக்கதையை வாசிப்பதன் வழியாகச் சூரிய மண்டலத்தின் சில அறிவியல் செய்திகளையும், சூரியன் இல்லையென்றால், பூமியில் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் தெரிந்து கொள்ள முடியும்.    

தரவிறக்கிக் கொண்டு, முடிந்த போது வாசித்துக் கருத்திடுங்கள். 

அமேசானில் மின்னூலுக்கான இணைப்பு:-

https://www.amazon.in/dp/B09Q6MKJ3S



Sunday, 24 October 2021

மந்திரக்குடை – சிறுவர் குறுநாவல் வெளியீடு

 


என் சிறார் குறுநாவல் ‘மந்திரக்குடை’ சென்னை பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் அண்மையில் வெளியிட்டுள்ளது.  ஏற்கெனவே அமேசானில் சிறார் நூல்களை மின்னூல்களாக வெளியிட்டிருந்தாலும், என் சிறுவர் நூல் அச்சில் வருவது இதுவே முதல் முறை.

எழுத்தாளர் உதயசங்கர் அவர்களும் சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களும் நூலைக் குறித்து மதிப்புரை எழுதியுள்ளார்கள்.  அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Tuesday, 5 October 2021

சிறுவர்க்கான கதைப்போட்டி

 

சுட்டி உலகம் துவங்கப்பட்டதன்  முக்கிய நோக்கம், சிறுவர்களின் தமிழ் வாசிப்பை மேம்படுத்துவதே ஆகும்.  குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நவம்பர் 7 ஆம் தேதி துவங்குகிறது. 

அவரது நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சிறுவர்க்கான கதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என முடிவெடுத்துள்ளோம்..  வாசிக்க வாசிக்கத் தான் எழுத்து வசப்படும் என்பதால், பரிசுத் தொகையில் பாதி புத்தகமாகக் கொடுக்கப்படும்.

இப்போட்டியில் வயது 7 முதல் 15 வரையிலுள்ள குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  தமிழில் மட்டுமே கதை எழுத வேண்டும்.

சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்காற்றி வரும் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் ‘லாலிபாப் உலக’த்துடன் இணைந்து இப்போட்டியை நடத்தவுள்ளோம்.  கன்னிக்கோவில் இராஜா அவர்கள் ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ என்ற காணொளியைத் துவங்கிக் குழந்தைகளுக்குக் கதை எழுத சிறப்பான பயிற்சி கொடுத்து வருகிறார். 

இவரிடம் பயிற்சி பெற்ற ஹரிவர்த்தினி ராஜேஷ் என்ற நான்காம் வகுப்பு மாணவி, அண்மையில் தம் 9 வது பிறந்த நாளில், 9 கதைப்புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.  அவருக்கு எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்! சுட்டி உலகத்தில் அவருடைய ‘குகைக்குள் பூதம்’ என்ற புத்தக அறிமுகமும் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வாழ்த்துகிறோம்!  உங்கள் படைப்புகளை team@chuttiulagam.com   என்ற மெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.

மேலும் விபரங்களைச் சுட்டி உலகத்தில்  தெரிந்து கொள்ளலாம்:-


Tuesday, 7 September 2021

மந்திரக்குடை

மந்திரக்குடை: பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள்.

இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!

இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!: ஆங்கிலேயரின் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் ஓட்டிச் சாதனை படைத்த திரு வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் இன்று! நம்

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2020

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2020: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, ஆண்டுதோறும் மதிப்பு மிக்க சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறுவர்க்காக எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய படைப்புகளுக்குப் பால சாகித்ய

Saturday, 10 July 2021

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் உதயம்

 


சிறார் நலன் காக்க சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உதயமாகி, அதன் மாநாடு 13/06/2021 அன்று, இணையம் வழியாகச் சிறப்பாக நடைபெற்றது. சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்க, சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் அவர்களும், குழந்தைநல செயற்பாட்டாளர் சாலை செல்வம் அவர்களும் நிகழ்வை ஒருங்கிணைத்து வழங்கினர். 

மேலும் வாசிக்க...







கீழடி வைகை நாகரிகம் – உலக நாகரிக வரிசை-1


கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் விளைவாக வெளிச்சத்துக்கு வந்த தமிழரின் தொன்மை வாய்ந்த வைகை நாகரிகத்தின் சிறப்புகளைக் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள நூல். 

மேலும் வாசிக்க...

Thursday, 10 June 2021

சுட்டி உலகத்தில் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் பேட்டி



வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் எப்படி ஏற்படுத்துவது? தமிழ்ச்சிறார் இலக்கியச் சூழலுக்கும், மலையாளச் சிறார் இலக்கியச் சூழலுக்கும் உள்ள வேறுபாடுகள், எந்தெந்த விதத்தில் அவர்கள் நம்மை விட முன்னிலையில் இருக்கின்றார்கள்,  சிறார் நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் நூலக ஆணையைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் போன்ற பல கேள்விகளுக்குச் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் பதிலளித்துள்ளார்.  அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை, இன்றைய சுட்டி உலகத்தில்!

வாசிக்க இணைப்பு:-https://chuttiulagam.com/specials-udaishankar-interview/


 

Saturday, 15 May 2021

'சுட்டி உலகம்' சிறார் வாசிப்புக்கான வழிகாட்டி!


சுட்டி உலகம் சிறார் வாசிப்புக்கான வழிகாட்டி!   

என் 10 வயது குழந்தைக்கு, என்ன புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம் என்பது போன்ற கேள்வி, முகநூலில் அடிக்கடி கண்ணில் படுகின்றது.  இப்போது பெற்றோரிடம் வாங்கும் சக்தி இருக்கின்றது.  குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்பைப் பழக்க வேண்டும்  என்ற எண்ணமும் அதிகரித்திருக்கின்றது,

ஆனால் தமிழில் என்னென்ன சிறார் நூல்கள் சந்தையில் கிடைக்கின்றன?  எந்தெந்த பதிப்பகங்கள், சிறார் நூல்களை வெளியிடுகின்றன? என்பது போன்ற விபரங்கள் பலருக்கும் தெரியாததால், சிறுவர்களிடம் சரியான நூல்கள் சென்று சேர்வதில்லை. 



எனவே இதற்கு வழிகாட்டக்கூடிய இணையதளம் ஒன்று துவங்கிப் பெற்றோர், பதிப்பகங்கள், சிறார் எழுத்தாளர்கள் ஆகியோருக்கு உதவலாம் என்ற எண்ணத்தில், 2021 ஆம் துவக்கத்தில், நானும் கீதமஞ்சரி கீதா மதிவாணனும் சேர்ந்து, அதற்கான வேலைகளைச் செய்யத் துவங்கினோம்.  ஆனால் இடையில் குடும்பத்தில் ஏற்பட்ட இரண்டு நெருங்கிய உறவுகளின் இழப்புகளால், மனம் சோர்ந்து மூன்று மாதம், வேலை தள்ளிப்போயிற்று. 

இதோ, 10/05/2021 அன்று சுட்டி உலகம் வெற்றிகரமாகப் பிறந்து விட்டது.  இணைய தளத்துக்குச் சென்று பார்த்து, உங்கள் ஆக்கப்பூர்வ கருத்துக்களையும், ஆலோசனைகளையும்,  பதிவு செய்யுங்கள், நண்பர்களே! சுட்டி உலகம் சிறப்பாகச் செயல்பட, உங்கள் ஆதரவு என்றென்றும் தேவை.

உங்கள் ஆலோசனைகளைப் பதிவு செய்ய வேண்டிய மெயில் முகவரி:-

team@chuttiulagam.com

நன்றியுடன்,

ஞா.கலையரசி

 

 



Tuesday, 12 January 2021

பூதம் காக்கும் புதையல் - சிறுவர் நாவல்


 அமேசானின்  #pentopublish4 போட்டிக்காகப் 'பூதம் காக்கும் புதையல்' எனும் சிறுவர் நாவலை, கிண்டிலில் 02/01/2021 அன்று வெளியிட்டேன்.    

இது பலரிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  இந்நாவல் பற்றிச் சிறார் எழுத்தாளர் விழியன் (இயற்பெயர் உமாநாத் செல்வன்) அவர்கள் மிகவும் பாராட்டித் தம் முகநூல் பக்கத்தில், இவ்வாறு எழுதியுள்ளார்:-

“கிண்டிலில் ஓர் அற்புதமான சிறார் நாவல் வாசித்தேன். (இன்று இலவசமும் கூட) விறுவிறு நடை. தொய்வே இல்லை. பன்முகத்தன்மை கொண்ட எழுத்து. கலையரசி அவர்கள் மேலும் மேலும் பல படைப்புகள் படைக்க வேண்டும்.  சமீபத்தில் மிகவும் ரசித்த நூல். Evening was so thrilled. எங்க இருந்தாங்க, இத்தனை நாள்னு, தெரியல” 

பிரபல சிறார் எழுத்தாளரிடமிருந்து, கிடைத்த இந்தப் பாராட்டு, என்னை மேலும் எழுத, ஊக்குவித்துள்ளது. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

Sunday, 22 November 2020

அம்மாச்சியும் மகிழம்பூக்களும் – சிறுகதைத் தொகுப்பு

 


ஆசிரியர்: கீதா மதிவாணன்

கோதை பதிப்பகம், திருச்சி.  செல் 91-9080870936. விலை ரூ200/-

திருச்சியில் பிறந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசிக்கும் கீதா மதிவாணன் அவர்களின், முதல் சிறுகதைத் தொகுப்பு இது.  ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசனின் சிறுகதைகளை, ‘என்றாவது ஒரு நாள்,’ என்ற தலைப்பில், ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.

இத்தொகுப்பில் 28 சிறுகதைகள் உள்ளன.  பத்தாண்டுகளுக்கு முன்னரே  எழுதப்பட்ட இக்கதைகள், ஏற்கெனவே பெங்களூர் புஸ்தகாவில் மின்னூலாக வெளிவந்திருந்தாலும், அச்சில் இப்போது தான், தொகுப்பாக வெளியாகியுள்ளது.  இக்கதைகளில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பாத்திரங்கள்,  அக்கம்பக்கத்திலும், நம்மூரிலும் அடிக்கடி நாம் சந்திக்கும் மாந்தர்களே.  இது அவருடைய முதல் தொகுப்பு என்பதால், சிறு வயது முதல் தாம் கண்டு, கேட்டு வளர்ந்த மாந்தர்களின் வாழ்க்கையைக் கதைகளாகப் படைத்துள்ளார்.  

இத்தொகுப்பில் என் மனதைத் தொட்ட கதை, ‘அம்மாச்சியும் மகிழம்பூக்களும்’.  இதுவே இத்தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.

Sunday, 27 September 2020

Nara and Sara - Children story in amazon kindle




அன்புடையீர்! வணக்கம்.

26/09/2020 பேத்திக்கு முதல் பிறந்த நாள்!
என் பேத்தியின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு, அமேசான் கிண்டிலில் ஒரு சிறுவர் கதை NARA AND SARA என்று ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன். தமிழில் இது போல் முழுக்க முழுக்கப் படங்களுடன் கதை வெளியிடும் வசதி இன்னும் அமேசானில் கொண்டு வரப்படவில்லையென்பதால், ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன். நாளை 28/09/2020 பகல் 12.30 மணி வரை இலவசம்.
கதையை வாசிக்க இணைப்பு:-


Monday, 21 September 2020

சிறுவர் பாடல் - சிட்டுக்குருவி

 


                     பெண்                                                                      ஆண்

செப்டம்பர் 2020   வாசகசாலையில்  நானெழுதிய  சிறுவர் பாடல்  ... 
சிட்டுக்குருவி.


சிட்டுக்குருவி பட்டுக்குருவி

சிறகை விரித்திடும் அழகைப் பார்

கூம்பு அலகால் கொத்தித் தின்னும்

குட்டிக் குருவியின் அழகைப் பார்....



                                                       


Thursday, 17 September 2020

குழந்தைப் பாடல் - நிலா நிலா ஓடி வா

 

                                           (நன்றி படம் - செய்திப்புனல் - இணையம்)

செப்டம்பர் 2020   பூஞ்சிட்டு சிறார் மின்னிதழில்   எழுதிய குழந்தைப்பாடல்

நிலா நிலா ஓடி வா 

வெள்ளை நிலா ஓடி வா

பிள்ளை முகம் மலர வா

பால் அமுது ஊட்ட வா

தொடர்ந்து வாசிக்க..

Wednesday, 2 September 2020

சிறார் இலக்கியம் குறித்துக் கலந்துரையாடல்


அனைவருக்கும் வணக்கம்.

வட அமெரிக்காவிலிருந்து வெளியாகும், வலைத்தமிழ் மொட்டு எனும் சிறார் மின்னிதழுக்காக, அவர்களது வலைத்தமிழ் டிவியில், சிறார் இலக்கியம் குறித்து, நெறியாளர் பிரவீணாவுடன், 30/08/2020 மாலை மணி 6 முதல் 7 மணிவரை, கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. 

Sunday, 16 August 2020

கைவீசம்மா கைவீசு குழந்தைப்பாடல்

                                  படம் -  நன்றி அஜ்ஜிராஜ்.

ஆகஸ்ட் 2020 பூஞ்சிட்டு இதழில், நானெழுதிய 

கைவீசம்மா குழந்தைப்பாடல்..

"கைவீசம்மா கை  வீசு

கடலுக்குப் போகலாம் கை வீசு

கப்பல் பார்க்கலாம் கை வீசு..."

தொடர்ந்து வாசிக்க.....

https://www.poonchittu.com/2020/08/kuzhandhai-padalgal/kai-veesamma/

Friday, 31 July 2020

மியாவ் மியாவ் பூனைக்குட்டி - குழந்தைப் பாடல்

                                                     Thanks - Picture-Unsplash.com

பூஞ்சிட்டு மின்னிதழில் நானெழுதிய குழந்தைப்பாடல்.....

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
மீசைக்காரப் பூனைக்குட்டி -

மேலும் வாசிக்க.....






எழுத்து வடிவம் ஞா.கலையரசி &  ஒலி வடிவம் ப்ரீத்தி வசந்த்